-
4th August 2014, 09:54 AM
#1421
Junior Member
Platinum Hubber
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....
உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.
இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!....
Thanks - thiru யாழ் சுதாகர்
-
4th August 2014 09:54 AM
# ADS
Circuit advertisement
-
4th August 2014, 11:46 AM
#1422
Junior Member
Diamond Hubber
THANKS TO BOOMINATHAN AANDAVAR FOR UPLOADING THIS IMAGE IN FACEBOOK

மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???
BOOMINATHAN AANDAVAR
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th August 2014, 11:47 AM
#1423
Junior Member
Regular Hubber
மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???
Last edited by boominathanandavar; 4th August 2014 at 11:50 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th August 2014, 11:53 AM
#1424
Junior Member
Regular Hubber
1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th August 2014, 11:55 AM
#1425
Junior Member
Regular Hubber
MGR with his ghost writer Vidwan V. Lakshmanan
-
4th August 2014, 11:59 AM
#1426
Junior Member
Diamond Hubber
not only reel super star he was real super star also
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th August 2014, 12:21 PM
#1427
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
Super video sir, thanks for the posting.
-
4th August 2014, 12:24 PM
#1428
Junior Member
Veteran Hubber
Boominathan sir that day is not far.
-
4th August 2014, 01:24 PM
#1429
Junior Member
Diamond Hubber
வாலியின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்: எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத அழைப்பு
ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.
வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.
மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.
ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.
"நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.
"பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''
"ஆமாம் சார்!''
"அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''
ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.
வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.
மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.
காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.
`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
-
4th August 2014, 01:46 PM
#1430
Junior Member
Veteran Hubber

Originally Posted by
boominathanandavar
மனிதப் புனிதர் ''பாரத் ரத்னா''எம்.ஜி .ஆர்.அவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் இப்படி படம் போடுமா ???

நாங்கள் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள். நன்றி. அருமை சகோதரர் பூமிநாதன் ஆண்டவர்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks