Page 298 of 400 FirstFirst ... 198248288296297298299300308348398 ... LastLast
Results 2,971 to 2,980 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2971
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2972
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (47)

    ம். இன்றைய ஸ்பெஷலில் வரும் இந்தப் பாடலை என்னவென்று சொல்வது?

    எந்த ரகத்தில் சேர்ப்பது?

    பாடல் வகையில் சேர்ப்பதா?
    வசன நடையில் சேர்ப்பதா?
    அல்லது இரண்டும் கலந்த புதுமையா?

    எப்படியோ தெரியாது. ஆனால் பாடல் முழுக்க முழுக்க வித்தியாசம்.

    அதுவும் அந்தக் காலத்திலேயே வேதாவின் புதிய முயற்சி.

    பாடலாக இல்லாத ஒரு பாடல். ஆனால் இனிமை இம்மியளவும் குறையாது.

    சிறு வயதில் இப்பாடலை வானொலியில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் வியந்து இருக்கிறேன். இப்படியெல்லாம் கூட பாடல்கள் வருமா! இன்று வரை இப்பாடலைப் பற்றி என் மனதில் ஆச்சரியங்கள் எழுந்த வண்ணம்தான் உள்ளன இதோ இப்போது கேட்டுக் கொண்டே எழுதும் போதும் கூட.

    ஒன்றுமே இல்லை. ஒரு தந்தை. காவல் அதிகாரி. அவர் மனைவி. அவர்களின் குழந்தை. இவர்கள் இன்பமாக இணைந்து பாடும் ஒரு பாடல். அவ்வளவே. அப்பா மனோகர். அம்மா மணிமாலா. சிறுவன் மாஸ்டர் பிரபாகரன்.


    இப்பாடலின் விஷேச சிறப்புகள்.

    முதல் விசேஷம் பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் தான்.

    மனிதர் என்ன பிறவி என்றே தெரியவில்லை. அப்படி ஒரு திறமை.

    நாயகன் மனோகருக்காக இவர் மாற்றித் தரும் குரல். அப்படியே நம்மை அசரச் செய்கிறது. அச்சு அசலாக அப்படியே மனோகர் பாடுவது போலவே. இரு திலகங்களுக்கும் சரி, ரவி, ஜெய்க்கும் சரி... மனோகருக்குமா இப்படி அவர் குரலிலேயே பாடி மனிதர் இப்படி அசத்துவார்!

    அதுவும் 'அம்மா முத்தம் தந்தா' என்று மாஸ்டர் பிரபாகரன் பாடியவுடன் 'சபாஷ்டா கண்ணு' என்று 'பாடகர் திலகம்'மனோகருக்காக குரல் கொடுப்பார். அந்த இடத்தை மட்டும் திரும்ப கொஞ்சம் கண்ணை மூடிக் கேளுங்கள். அப்படியே மனோகர் குரலையே கேட்பீர்கள். அதே போல பாடலினூடே' ஹொஹ்ஹஹ்ஹோ...ஹஹ்ஹஹஹா' என்று அவர் சிரிப்பதும் மனோகர் குரலில்தான்.

    அந்தந்த நடிகர்களுக்கேற்ப குரலை மாற்றுவதில் உன்னை விட வல்லவன் எவனடா எங்கள் பாடகர் திலகமே!


    அடுத்து சுசீலா. மிக அழகாக ஈடு கொடுப்பார். மிக மிக இனிமையாகப் பாடியிருப்பார். மணிமாலாவுக்கு மிக கச்சிதமாக இவர் குரல் பொருந்துவதை கவனிக்கலாம்.

    மாஸ்டர் பிரபாகரனுக்கு வசந்தா குரல் கொடுத்திருப்பார். மிக மிக இனிமை. 'அப்பா பக்கம் வந்தா அம்மா முத்தம் தந்தா' என்று அடிக்கடி இப்பாடலின் நடுவே இவ்வரிகள் வரும். ஒவ்வொரு முறையும் நம்மை அறியாமலேயே நாம் வசந்தாவுடன் இணைந்து அந்த வரிகளைப் பாடுவோம் அல்லது பேசுவோம். இது வசந்தாவின் வெற்றியல்லாமல் வேறென்ன? அதுவும் பாடலின் முடிவில் அப்பாவும் அம்மாவும் பாடிக் கொண்டிருக்க பிரபாகர் சிரித்துக் கொண்டே இருக்கும் குரல் பின்னணி சொல்ல வார்த்தைகள் இல்லை. அட்டகாசம்.

    மாஸ்டர் பிரபாகரன் பொடியன் ஒரு இடத்தில் ட்விஸ்ட் ஆடுவான். அப்படியே அச்சு அசலாக நாகேஷ் ஆடுவது போலவே இருக்கும்.

    மனோகர் சில படங்களில் சில டூயட்கள் பண்ணியிருந்தாலும் இது குடும்ப டூயட். மனைவி, பையனுடன் பாசப் பிணைப்பு. 'விஸ்வம்' வில்லனுக்கு மட்டுமல்ல நமக்கும் இது புதுமைதானே.

    அடுத்து வேதா.

    வெகு வித்தியாசமான முயற்சி. அதில் மாபெரும் வெற்றி. 'ஒ... மேரி சோனாரே சோனாரே' வை இந்தியிலிருந்து திருடி 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' என்று ஹிட்டடித்தது பெருமையல்ல.

    ஒரிஜினலாக இந்த வித்தியாசப் பாடலைத் தந்ததுதான் பெருமை.

    இப்படி ஒரு வித்தியாசமான பாடல் இதுவரை தமிழில் வந்ததாக எனக்குப் படவில்லை.

    சிறு வயது முதல் இப்பாடலைப் பற்றி என் மனதில் உள்ளவற்றையெல்லாம் உங்களிடம் கொட்டித் தீர்த்து விட்டேன். இப்போதெல்லாம் கேட்கவே முடியாத மிக அபூர்வப் பாடல் இது.
    கேட்டவர்கள் மீண்டும் கேளுங்கள். கேட்காதவர்கள் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தரம் கேளுங்கள்.

    நான் நினைத்ததைத்தான் நீங்களும் நினைப்பீர்கள்.

    இந்தப் பாடலுக்கு உங்கள் கருத்துக்களை வழக்கத்தை விட மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.




    படம்: எதிரிகள் ஜாக்கிரதை

    தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்

    நடிப்பு" மனோகர், ரவிச்சந்திரன், தேங்காய் ஸ்ரீனிவாசன், எல்.விஜயலஷ்மி, மணிமாலா.

    பாடல்கள்: கண்ணதாசன்

    இசை: வேதா

    இயக்கம்: ஆர்.சுந்தரம்.


    இப்போது பாடல் வரிகள்.



    லாலா லல்லல்லல்லா
    லாலா லல்லல்லல்லா

    லாலா லல்லல்லல்லா
    லாலா லல்லல்லல்லா

    ஒருநாள் இருந்தேன் தனியாக
    ஒரு பெண் நடந்தாள் அருகே
    சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
    சிவக்கும் ரோஜா மலரே

    அப்பா பக்கம் வந்தா
    அம்மா முத்தம் தந்தா
    (சபாஷ்டா கண்ணு)

    அப்பா... பக்கம் வந்தா (ம்ஹஹ்ஹஹஹா)
    அம்மா... முத்தம் தந்தா

    குலுங்கும் வசந்தம் அவளானாள்
    குவளை மலராய் மலர்ந்தாள்
    தவழும் தென்றல் அவளானாள்
    தழுவும் மலரை மலர்ந்தாள்

    அப்பா... பக்கம் வந்தா
    அம்மா... முத்தம் தந்தா (ஹொஹ்ஹஹ்ஹோ)
    அப்பா... பக்கம் வந்தா (ஹஹ்ஹஹஹா)
    அம்மா... முத்தம் தந்தா

    பழகும் காதல் பரிசாக
    பாவை கேட்டாள் உன்னை
    கேட்டேன் கொடுத்தார் துணையாக
    எடுத்தேன் அணைத்தேன் அன்னை

    அப்பா... பக்கம் வந்தா
    அம்மா... முத்தம் தந்தா (சிரிப்பு)
    அப்பா... பக்கம் வந்தா
    அம்மா... முத்தம் தந்தா

    லாலா லல்லல்லல்லா
    லாலா லல்லல்லல்லா
    லாலா லல்லல்லல்லா
    லாலா லல்லல்லல்லா


    Last edited by vasudevan31355; 5th August 2014 at 05:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, gkrishna liked this post
  5. #2973
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரியான நேரத்தில் சிந்து பைரவி பாடலை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா .இந்த பாடலில் வரும் "தொம்"கள் தானம் என்று வழங்க படும். பொதுவாக ராகம்,தானம்,பல்லவி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் நிறைய பேருக்கு ஒரு தெளிவு இருப்பதில்லை.



    ராகம் (Melodic Improvisation )என்பதை ஆலாபனை என்று கொள்ளலாம்.ஒரு ராகத்தை அதன் இசை தனமையோடு கற்பனை கலந்து மேம்படுத்தி இசைக்கும் முதல் அம்சம்.



    தானம் (Rhythmic Improvisation )என்பது மற்றொரு கற்பனை கலந்த கச்சேரியை கலை கட்ட வைக்கும் இரண்டாவது அம்சம்.வீணை கச்சேரிகளுக்காக உருவாக்க பட்டது எனினும் ,பாட்டு கச்சேரிகளின் முக்கிய அம்சமாகவும் மாறி விட்டது.ராகத்தை ,தாளத்தை ஒத்த ஒலிகுறிப்புகளுடன் (தா ,னம் ,தொம் ,ஆநொம் ,நானொம் )என்று ஆலாபனை பண்ணும் முறை.(மற்ற தாள ஒலிகளின் துணையின்றி.)



    பல்லவி- பாடல் (வார்த்தைகள்),லயம் (தாள லயம்),விந்நியாசம் (வித்யாசமான வேறு படும் விதங்களில் ) எல்லாம் சேர்ந்தது.ஒரு தாள சுழற்சிக்கு எழுத பட்ட ஒரு வரி. முதலில் வேகமாக முன்னேறி(Ascending ),ஒரு இதமான தேக்கம் கொடுத்து,(Pause )தாள நடையை மாற்றி மாற்றி விஸ்தாரமாக பாடும் முறை ரசிகர்களை குதூகல படுத்தும்.ஒரே தாளத்தில் சுரங்களை மட்டும் நடை பேதம் செய்யும் முறை,அல்லது தாளத்தை துல்லிய இடைவெளிகளில் சுழற்சி வேகம் மாற்றி பாடும் முறை என்று பாடகரின் கற்பனைக்கேற்ப விஸ்தார வீடு கட்டி விளையாட்டு.
    Last edited by Gopal.s; 5th August 2014 at 04:24 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2974
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சரியான நேரத்தில் சிந்து பைரவி பாடலை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா .இந்த பாடலில் வரும் "தொம்"கள் தானம் என்று வழங்க படும். பொதுவாக ராகம்,தானம்,பல்லவி பற்றி கேள்வி பட்டிருந்தாலும் நிறைய பேருக்கு ஒரு தெளிவு இருப்பதில்லை.



    ராகம் (Melodic Improvisation )என்பதை ஆலாபனை என்று கொள்ளலாம்.ஒரு ராகத்தை அதன் இசை தனமையோடு கற்பனை கலந்து மேம்படுத்தி இசைக்கும் முதல் அம்சம்.



    தானம் (Rhythmic Improvisation )என்பது மற்றொரு கற்பனை கலந்த கச்சேரியை கலை கட்ட வைக்கும் இரண்டாவது அம்சம்.வீணை கச்சேரிகளுக்காக உருவாக்க பட்டது எனினும் ,பாட்டு கச்சேரிகளின் முக்கிய அம்சமாகவும் மாறி விட்டது.ராகத்தை ,தாளத்தை ஒத்த ஒலிகுறிப்புகளுடன் (தா ,னம் ,தொம் ,ஆநொம் ,நானொம் )என்று ஆலாபனை பண்ணும் முறை.



    பல்லவி- பாடல் (வார்த்தைகள்),லயம் (தாள லயம்),விந்நியாசம் (வித்யாசமான வேறு படும் விதங்களில் ) எல்லாம் சேர்ந்தது.ஒரு தாள சுழற்சிக்கு எழுத பட்ட ஒரு வரி. முதலில் வேகமாக முன்னேறி(Ascending ),

    ஒரு இதமான தேக்கம் கொடுத்து,(Pause )தாள நடையை மாற்றி மாற்றி விஸ்தாரமாக பாடும் முறை ரசிகர்களை குதூகல படுத்தும்.ஒரே தாளத்தில் சுரங்களை மட்டும் நடை பேதம் செய்யும் முறை,அல்லது தாளத்தை துல்லிய இடைவெளிகளில் சுழற்சி வேகம் மாற்றி பாடும் முறை என்று பாடகரின் கற்பனைக்கேற்ப விஸ்தார வீடு கட்டி விளையாட்டு.
    அருமையான எளிமையான விளக்கம் கோபால் சார்
    தொடரட்டும் உங்கள் பணி

    என்றும் நட்புடன்
    கிருஷ்
    gkrishna

  7. #2975
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதுவும் 'அம்மா முத்தம் தந்தா' என்று மாஸ்டர் பிரபாகரன் பாடியவுடன் 'சபாஷ்டா கண்ணு' என்று 'பாடகர் திலகம்'மனோகருக்காக குரல் கொடுப்பார். அந்த இடத்தை மட்டும் திரும்ப கொஞ்சம் கண்ணை மூடிக் கேளுங்கள். அப்படியே மனோகர் குரலையே கேட்பீர்கள். அதே போல பாடலினூடே' ஹொஹ்ஹஹ்ஹோ...ஹஹ்ஹஹஹா' என்று அவர் சிரிப்பதும் மனோகர் குரலில்தான்// அழகிய பாடலை மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் வாசு சார்.. எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும்..வீட்டிற்குச் சென்று மறுபடி கேட்கிறேன்...

    மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்..
    ஆசையென்ற புயல் வீசிவிட்டதடி ஆணி வேர் வரையில் ஆடி விட்டதடி..

    ஓ அழகிய வரிகள் அண்ட் பாடல்..அதன் ராகம் பற்றி ச் சொல்லிய க்ருஷ்ணாஜி., கோபால் சார்.. மிக்க நன்றி..

    பாடக பாடகிகளின் தகவல்களுக்குமிக்க நன்றி எஸ்வி சார்.

    ம்ம் நிறையப் பிரபலங்கள் இனிக்கின்ற விஷத்துக்குள் இறங்கி வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது..(சுருளிராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, கிஷ்மூ, எம்.ஆர்.ராஜாமணி இந்த வரிசையில் வருவார்கள் என நினைக்கிறேன்)
    Last edited by chinnakkannan; 5th August 2014 at 04:22 PM.

  8. #2976
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    எஸ்வி சார்
    மிக அருமையான அபூர்வமான தேவையான தகவல்கள்
    நிறைய பாடகர்களை அறிமுகம் செய்விப்பதற்கு நன்றி

    என்றும் அன்புடன்
    கிருஷ்
    gkrishna

  9. #2977
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vasu sir

    எதிரிகள் ஜாக்கிரதை
    கலக்கல் பாடல்
    சிலோன் ரேடியோவில் போட்டு போட்டு தேய்த்த பாடல்
    வாசு சார்
    உங்கள் ரசிப்பு தன்மை 100 சதவிகிதம் என்றால் அதை வார்த்தையில் வடிப்பது 200 சதவிகிதம்

    நீண்ட நாட்களுக்கு நான் இது மனோஹரும் (மனோஹரின் ஒரிஜினல் குரல் சபாஷ் டா கண்ணா என்றே நினைத்து இருந்தேன் ) ஷீலாவும் பாடும் பாடல் என்று நினைத்து ரீ ரிலீஸ் போது பார்க்கும் போது
    தான் தெரிந்தது மனோஹரும் மனிமாலவும் பாடுவது என்றும்
    இபோது தான் ஆண் குரல் பாடகர் திலகம் என்றதும் அசந்து போனேன்

    உண்மை உழைப்பு நேர்மை வாய்மை பெருமை அருமை அர்பணிப்பு இதன் மறுபெயர் வாசுவோ
    gkrishna

  10. #2978
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    நன்றி!

    மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

    பாடலுக்கு நன்றி!

    அது போல குமுதம் தீராநதி 2007 இதழ் விவரங்கள் அரிதானவை.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2979
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அப்பா.. பக்கம் வந்தா.. அம்மா முத்தம் தந்தா... எப்போதும் இனிக்கும் பாடல்.

    ஆனால் இது ஒரு ஆங்கிலப் பாடலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன்.

    இதுதான் அது


  12. #2980
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    1963- cine dairy play back singers தொடர்ச்சிப் பதிவு அருமை. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். தேங்க்ஸ் எஸ்வி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •