Page 307 of 400 FirstFirst ... 207257297305306307308309317357 ... LastLast
Results 3,061 to 3,070 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3061
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசையமைப்பாளர்களின் பாடும் ஆசையும் ,இயக்குனர்களின் படத்தில் தலை நீட்டும் ஆசையும் ,தமிழும் -இனிமையும் போல பிரிக்க முடியாதவை.ஆனால் எந்த இசையமைப்பாளர்களுக்கும் (பாடகர் இசையமைப்பாளராவது வேறு ரகம்-ஏ.எம்.ராஜா) குரலோ, பாடும் ஒழுக்கமோ,சுருதியோ இருந்ததாக வரலாறே இல்லை.ஆனாலும் சில இசையமைப்பாளர்களின் ஒத்தையும் ,ரெட்டையுமான குரல் சில பாடல்களுக்கு மெருகேற்றி ,எங்கோ கொண்டு விடும் அதிசயத்தை என்ன சொல்ல? இத்தனைக்கும் reciting musically ரகம்தான். ஆனால் ஒழுங்கற்ற பேச்சு பாடல்கள் ,அபார அமரத்துவம் பெற்றதை எந்த ரகத்தில் வைக்க?

    எஸ்.டீ .பர்மன் -guide பட டைட்டில் பாடல்.தூக்கி நிறுத்தும்.



    உனக்கென்ன குறைச்சல் என்ற முதுமையின் தனிமை சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன் .



    சொந்தமுமில்லை பந்தமுமில்லை என்ற நகைச்சுவை கலந்த கிண்டல் தத்துவம் பாடிய ஜி.கே.வெங்கடேஷ்.



    ஜனனி ஜனனி என்று உருகி நம்மை பக்தியில் திளைக்க விட்ட சுருதி சேராத ராஜாவின் அதிசய பாடல்.



    தீயில் விழுந்த ஏ.ஆர் .ரகுமான் என்று அழைக்க படும் நம் திலீப் முதலியார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3062
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    300 பக்கங்களில் 30000 விஷ்யங்கள் அடேயப்பா .. இந்த திரி எவ்வளவு வளர்ந்துவிட்டது
    குறிப்பாக வாசு ஜி, கிருஷ்ணா ஜி, ராகவ் ஜி, கோபால் ஜி, எஸ்.வி ஜி,மது அண்ணா, சி.க என எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    வாழ்த்துக்கள் .. இந்த திரி மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அடியேனையும் இதில் இணைத்து என் பதிவுகளுக்கும்

    இதோ ஆர்.பார்த்தசாரதியின் இசையில் இசையரசியின் மிக இனிய கானம்

  4. Likes madhu liked this post
  5. #3063
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு சார்..

    பொருட்கள் மாறிப்போனாலும் நிலைமை என்னவோ அதேதான்.. அது என்றுமே மாறாது

    படத்தின் மற்ற பாடல்களின் வீடியோ எதுவுமே இணையத்தில் காணப்படவில்லை. "மறந்தே போச்சு" பாடலுக்கு "தெய்வச்செயல்" வீடியோவை ரீமிக்ஸ் செய்து போட்டிருந்தார்கள். அதுதான் ஒரிஜினல் என்று ஒருவர் சண்டையே போட்டார். ( பெரிய விக் வைத்துக் கொண்டு உஷா நந்தினி சுற்றி சுற்றி ஆடும்போது அது எப்போது கழன்று விழும் கண்கொத்தி பாம்பாக கவனித்தது எங்களுக்கில்ல தெரியும் ? )..

    "அத்தையா மாமியா அங்கியா இங்கியா.. அத்தை பெத்த அல்லியா.. மாமி பெத்த கள்ளியா" என்ற சுசீலா-ஈஸ்வரி பாட்டு அனேகமாக எல்லோரும் மறந்தே போயிருப்பாங்க.. வேறு ஏதாவது பாடல் நினைவுக்கு வருதா ? மைண்ட் ரொம்ப பிளாங்க் ஆகி போச்சு.

  6. #3064
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ராஜேஷ்.. அருமையா சொன்னீங்க..

    நம்ம கண்ணே பட்டுவிடக் கூடாது. முதல் முறையாக எல்லோரும் அன்பாக விஷயங்களை பரிமாறிக் கொண்டு ஜாலியாக கலாய்க்கும் திரியை இங்கேதான் பார்க்கிறேன்.

    நாளைக்கு ஆடி வெள்ளி. அத்தனை நண்பர்களுக்கும் அவர்களின் அன்பான மனங்களுக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.

  7. #3065
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rajesh,

    Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3066
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சி.எஸ்.ஜெயராமன்.

    சீர்காழியை பற்றி எழுதி விட்டு ,பக்கத்து நகரமான சிதம்பரத்தை எப்படி விடுவது?சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் பற்றித்தான் எழுத போகிறேன்.ஒன்றை சொல்லி விட்டே துவங்குகிறேன். கிழவன் வெற்றிலை பாக்கு போட்டு பாடுவது போல ,இதெல்லாம் குரலா என்று சிறு வயதில் உதாசீனம் செய்து எள்ளியுள்ளேன்.ஆனால் அதை மீறி இவர் பாடிய முறை,பாடல்களின் சுவை பல பாடல்களை இன்றும் மறக்க முடியாமல் அமர துவம் பெற வைத்திருப்பதை என்ன சொல்ல?(சுதர்ஷன்,ஜி.ராமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,டி.ஆர்.பாப்பா,சி.எஸ்.ஜெ யராமன்)

    ஆரம்பத்தில் சிவாஜியின் பிரிய பாடும் குரலாக இருந்தவர்,டி.எம்.எஸ் ஐ தூக்கு தூக்கியில் (1954) பாட வைக்கவே யோசிக்க செய்தவர்.நடிகர்(1934 கிருஷ்ண லீலா முதல் 1948 கிருஷ்ண பக்தி வரை ஆறேழு படங்கள்),பாடகர் ,இசையமைப்பாளர் (ரத்த கண்ணீர்)என்று பல்முனை கலை திறன்.

    கலைஞரின் மைத்துனர் என்பதை விட கலைத்துறையில் அவர் நுழைய காரணகர்த்தா.(1947 இல் அருள் சூசை ஆரோக்ய சாமி என்ற ஏ.எஸ்.ஏ.சாமியிடம் அறிமுக படுத்தி ராஜகுமாரியில் வாய்ப்பு தேடி தந்தவர்).கலைஞரின் மகன் மு.க.முத்துவின் மாமனார்.ஒரு தமிழிசை கலைஞரின் மகன்.

    இசை முறையாக கற்று தேர்ந்தவர்.இதற்கு உதாரணம் இன்று போய் நாளை வாராய் பாட்டில் எண்டிசை வென்றேனே என்று வீர புலம்பல் ,கையறு நிலை என்பதை உணர்த்தும் மெய் சிலிர்ப்பு கானம்.இவரால் ராவணனுக்கு கூடுதல் பெருமை .

    இவருடைய நல்ல பாடல்கள்.(மறக்க முடியாத)

    தேச ஞானம் கல்வி, கா கா கா , நெஞ்சு பொறுக்குதில்லையே-பராசக்தி.

    காலமெனும் சிற்பி செய்த - மனிதனும் மிருகமும்.

    குற்றம் புரிந்தவன் -ரத்த கண்ணீர்.

    மஞ்சள் வெயில் மாலையிலே-காவேரி.

    அன்பினாலே உண்டாகும்,உனக்கெது சொந்தம்,இதுதான் உலகமடா-பாசவலை.

    விண்ணோடும் முகிலோடும் -புதையல்.

    வீணை கொடி உடைய, இன்று போய் நாளை வாராய் -சம்பூர்ண ராமாயணம்.

    ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே - தங்க பதுமை.

    அன்பாலே தேடிய என் அறிவு செல்வம், தன்னை தானே நம்பாதது - தெய்வ பிறவி.

    ஆயிரம் கண் போதாது,வண்ண தமிழ் பெண்ணொருத்தி,காவியமா- பாவை விளக்கு.

    நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார்-குறவஞ்சி.

    சிரித்தாலும் அழுதாலும்- களத்தூர் கண்ணம்மா.

    வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சி தலைவன்.

    பெண்ணே உன்கதி இதுதானா- பூமாலை.





    Last edited by Gopal.s; 7th August 2014 at 08:47 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Russellmai liked this post
  10. #3067
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Rajesh,

    Raghav ji -I was scratching my head. Oh! Raghavendhar ji. You left out Karthik ji and rajesh ji. indeed great contributors.


    ஆம் கோபால் ஜி, மன்னிக்கவும் கார்த்திக் ஜியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    சமீப காலமாக அடிக்கடி வாகனத்தில் கேட்டு மகிழும் பாடல் தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே

    என்ன அருமையாக பாடியிருக்கிறார் இசையரசி, எல்.விஜயலக்*ஷ்மியும் அழகு..


  11. #3068
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.

    ராஜேஷ் சார்,

    'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.

    அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.

    ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #3069
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    தேடிப் பிடித்தீர்கள் பாருங்கள் 'தாயில்லாப் பிள்ளை'யை.

    'தொட்ட கைகள் தவழ்ந்ததடி பட்டுப்போலே' யப்பா! எவ்வளவு நாளாச்சு?!

    ஒடியும் என்று இடையை மட்டும் தொடாமலே விட்டாராம்.

    அடேயப்பா! அபாரம்.

    விஜி ஆரம்ப காலத்தில் கொள்ளை அழகு சார். பின்னாட்களில் 'கூடையிலே கருவாடு' மாதிரி தெரிய ஆரம்பித்து விட்டார்.

    அபூர்வ பாடலுக்கு மிக்க நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #3070
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ் சார்,

    காலை வணக்கங்கள். எங்கே சார் இரண்டு மூன்று நாட்களாக நம் மேட்ச் ஆகவே முடியவில்லை? எங்கள் ராஜேஷ் சாருடன் இசையரசியைப் பற்றிப் பேசாமால் இரவு தூங்க முடியலையே. எனக்குத் தெரியாது. என் தூக்கம் கேட்டதுக்கு நீங்கதான் பொறுப்பு.

    ராஜேஷ் சார்,

    'மல்லமனா பாவடா' படத்தின் அற்புதமான 'ஷரணம்பே நா சஷிபூஷனா' இசையரசியின் பாடலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஒரு பாங்கான குரல் சரோவுக்கு ஏற்றார்போல். நெற்றியில் திருநீர் அணிந்து சிவன் புகழ் பாடும் தெய்வீக சரோஜாதேவி. கொள்ளை அழகு. சைட் குளோஸ்-அப்பை விட நேரடி குளோஸ்-அப்பில் ரொம்ப அழகாகத் தெரிகிறார் சரோ. பக்தி பரவசமூட்டும் கண்கள். 'கெளரிப்ரியா... ஜகன்மோகனா' அமர்க்களம். தெளிந்த நீரோடை போல் செல்லும் பாடல். கேட்க கேட்க பக்தியும், இசையரசி மேல் அன்பு வெறியும் ஏறுகிறது. விஜயபாஸ்கர் இசை திகட்டாத விருந்து.

    அதுவும் 'ஷரணம்பே நா சஷிபூஷனா' வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் அந்த பக்தி 'டொக் டொக்கு டொக்கு' அருமையோ அருமையோ அருமை சார். அதிகாலையில் கேட்டால் சிவாலயம் நோக்கி ஓடுவது நிச்சயம்.

    ஆமாம்! தலைவர் ரோலுக்கு வஜ்ரமுனியா ராஜேஷ் சார்?
    வாசு ஜி .. அட அட நானும் நினைத்தேன்.. என்ன இரண்டு மூன்று நாட்களாக வாசுஜியுடன் அளவளாவமுடியவில்லையே என்று. நினைத்தேன் வந்தீர்கள் 100 வயது..

    உங்கள் தூக்கத்தை கெடுத்தது நானா .... வீட்டுல கேட்ட கோவிச்சுக்கபோறாங்க.. ஹ ஹா.

    ஆம் சார் சரோ அந்த ஷரணம்பே நா பாடலில் கொள்ளை அழகு. தெய்வீக களை.. கண்களே ஆயிரம் கதைகள் பேசுமே

    ஆம் தலைவர் வேடத்தில் வஜ்ரமுனி .. அம்மா வேடத்தில்(சாந்தகுமாரி வேடத்தில்) அத்வானி லெஷ்மி ...

    தாயில்லா பிள்ளை பாடல் என்னை என்னவோ செய்யும்.. குறிப்பாக பாடியிருக்கும் விதம் தான்..

    நீங்கள் சொன்ன வரியை அவர் பாடியிருக்கும் அழகு .என்ன சொல்வது நாளுக்கு நாள் வயதுக்கு வயது நான் இசையரசியின் அடிமையாகிக்கொண்டிருக்கிறேன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •