-
8th August 2014, 09:35 AM
#3161

Originally Posted by
rajeshkrv
சொன்னது நீ தானா , மாலை பொழுதின், நலந்தானா இது மூன்றுமே போதும் .. இவர் திறமை சொல்ல .. எனக்கு இந்த பூமியிலேயே இவரைப்போலவோ இவரை அடுத்தோ ஒரு பாடகியும் கிடையாது.
கடினாமான பாடல் வாசு ஜி .. அதை இசையரசி பாடி எவ்வளாவு எளிமையாக்கி விட்டார் .. நடுவில் வரும் பெண் பபிதா பெளர்ணமி பின்னாளில் சில வேடங்களில் தோன்றினார்.
rajesh சார் வாசு சார்
காலை வணக்கம்
சுசீலாவின் கானங்களை ரசித்து கொண்டு உள்ளீர்கள்
நேற்று இந்த பாட்டு கேட்டேன் சார்
கோயில் புறா படத்தில்
இளையராஜா இசை
ரசிகரஞ்சனி னு ஒரு ராகத்தின் அடிப்படையில் கிபோர்ட் இல் வாசிபதிற்கு எளிதானது என்று படித்த நினைவு
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
இந்த பாடலின் இசை நோட்ஸ் ரொம்ப சிம்பிள் சார்
- கீழே + மேல அக்டவேஸ்
அமுதே - தமிழே - அழகிய மொழியே
ச ரி1 க3 - ச ரி1 க3 - ச ரி1 க3 ப க3 ரி1 ச
எனதுயிரே
ச ரி1 ச த2- ச ...
சுகம் பல - தரும் தமிழ்ப் பா
ச ரி1 ச ரி1 - க3 ப ரி1 க3 ப ... ப
சுவையோடு - கவிதைகள் தா
ரி1 க ரி1 க - ப த2 க3 ப த2... த2
தமிழே - நாளும் - நீ பாடு
ப த2 ச+ ... - த2 ப - க3 ப ... க3 ரி1 ச
படத்தில் ராஜா பாதர் னு ஒரு நடிகர் வருவார்
பின்னாட்களில் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலும் வருவார்
p u சின்னப்பா புதல்வர்
-
8th August 2014 09:35 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 09:38 AM
#3162

Originally Posted by
esvee
ALL IN ONE
[
நோட் புக் வாங்கி உங்க label ஓட்டனும் எஸ்வி சார்
super idea
-
8th August 2014, 09:43 AM
#3163
கோபால் சார், சாரதி சார்
உங்கள் வாழ்த்திற்கு நன்றி (1000)
-
8th August 2014, 10:02 AM
#3164
thanks to dinamani kathir

1947-ஆம் ஆண்டு பாரதிதாசன் கதை, வசனம், பாடல்கள் எழுதிய "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' படம் வெளியானது. அந்தப் படத்தின் வெற்றி பகுத்தறிவு இயக்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புராண இதிகாசங்களை முழுமூச்சில் எதிர்க்கும் பாரதிதாசன் அம்மாதிரியான கதைகளுக்குப் பணியாற்றலாமா? என்ற கேள்வி எழுந்தது.
அதற்குப் பாரதிதாசன், ""மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத் துறையில் ஒரு நுழைவு ஏற்படுத்தியிருக்கிறேன். "பிராணநாதா', "ஸ்வாமி', "சஹியே', "தவசிரேஷ்டரே' போன்ற சொற்களை நீக்கி அருந்தமிழில் "அத்தான்', "தோழி', "குருவே' என்று அழைக்க வைக்கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டு வந்தவர்களைத் தமிழ் அறிந்த இரக்க சிந்தை உடையவராகப் படைத்திருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைத்தான் செய்ய முடியும். இன்னும் முன்னேறி முற்போக்குக் கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்க முடியும்'' என்று அவர்களுக்குப் பதிலளித்துத் தம் நிலையை விளக்கினார்.
ஆனால் பகுத்தறிவு இயக்கத்தினர், பாரதிதாசனின் கருத்துகளை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தாம் திரைக்கதை, வசனம் எழுதிய "சுபத்ரா', "சகுந்தலை' போன்ற படங்களுக்குத் தம் பெயரை இட வேண்டிய இடத்தில் சலகண்டபுரம் ப.கண்ணன் என்ற பெயரைப் போட்டுக் கொண்டார் என்ற செய்தியிலிருந்து "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யின் வெற்றியினால் ஏற்பட்ட விளைவுகளை அறியலாம்.
-
8th August 2014, 10:08 AM
#3165
Junior Member
Newbie Hubber
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)
என்னுடைய முதல் பத்து.(சோலோ)
1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)
2)என்னை எடுத்து தன்னை கொடுத்து
3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
4)பால் போலவே வான் மீதிலே
5)மாலை பொழுதின் மயக்கத்திலே
6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்
7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ
8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
10)உன்னை நான் சந்தித்தேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th August 2014, 10:08 AM
#3166
Junior Member
Platinum Hubber
ONE OF THE BEST SONG BY L.R.ESWARI

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th August 2014, 10:11 AM
#3167
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
rajesh சார் வாசு சார்
காலை வணக்கம்
சுசீலாவின் கானங்களை ரசித்து கொண்டு உள்ளீர்கள்
நேற்று இந்த பாட்டு கேட்டேன் சார்
கோயில் புறா படத்தில்
இளையராஜா இசை
ரசிகரஞ்சனி னு ஒரு ராகத்தின் அடிப்படையில் கிபோர்ட் இல் வாசிபதிற்கு எளிதானது என்று படித்த நினைவு
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
இந்த பாடலின் இசை நோட்ஸ் ரொம்ப சிம்பிள் சார்
- கீழே + மேல அக்டவேஸ்
அமுதே - தமிழே - அழகிய மொழியே
ச ரி1 க3 - ச ரி1 க3 - ச ரி1 க3 ப க3 ரி1 ச
எனதுயிரே
ச ரி1 ச த2- ச ...
சுகம் பல - தரும் தமிழ்ப் பா
ச ரி1 ச ரி1 - க3 ப ரி1 க3 ப ... ப
சுவையோடு - கவிதைகள் தா
ரி1 க ரி1 க - ப த2 க3 ப த2... த2
தமிழே - நாளும் - நீ பாடு
ப த2 ச+ ... - த2 ப - க3 ப ... க3 ரி1 ச
படத்தில் ராஜா பாதர் னு ஒரு நடிகர் வருவார்
பின்னாட்களில் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலும் வருவார்
p u சின்னப்பா புதல்வர்
Thamizhai thamizhaai paada isaiyarasiyai thavira veru yaar
-
8th August 2014, 10:13 AM
#3168
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th August 2014, 10:14 AM
#3169
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)
என்னுடைய முதல் பத்து.(சோலோ)
1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)
2)என்னை எடுத்து தன்னை கொடுத்து
3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
4)பால் போலவே வான் மீதிலே
5)மாலை பொழுதின் மயக்கத்திலே
6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்
7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ
8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
10)உன்னை நான் சந்தித்தேன்
Perfectly said Gopal ji
-
8th August 2014, 10:15 AM
#3170
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (49)
இன்று மனதை நெகிழ வைக்கும் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் இனம் புரியாக் கலவரம் வெடிக்கும். மனம் பாரமாகும்.
அந்த செல்வத் தம்பதிகளுக்கு இரு செல்ல,செல்வப் பெண்கள். மூத்தவள் சந்தர்ப்பம் காரணமாக அந்த வீட்டு வேலைக்கரனையே பிரியமில்லாமல் மணக்க நேரிடுகிறது. பின் அவன் நன்னடத்தையில் அவள் அவனைப் புரிந்து கொண்டு அவனுடனேயே குடிசையில் வாழ்கிறாள் தன் தந்தையின் உதாசீனத்தை எதிர்த்து. இவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.
இளையவளுக்கு பணக்காரத் தந்தை பெரிய இடமாகப் பார்த்து சம்பந்தம் செய்து வைக்கிறார். அந்த மாப்பிளையோ திமிர் பிடித்தவன். பணம், நகை என்று அலைபவன். இவர்களுக்கு ஒரு குழந்தை.
குழந்தையை தொட்டில் போடும் விழாவுக்கு வந்திருந்த மாமனாரையும், மாமியாரையும் சீர் சரியாகச் செய்யவில்லை என்று அவமானப் படுத்துகிறான் பணக்கார மாப்பிள்ளை. மாப்பிள்ளையின் மமதையிலே மரியாதை கெட்டு நிற்கின்றார் அந்த பணக்காரத் தந்தை. மனமொடிந்து குழந்தையின் தாய் இளையவளும், அவள் தாயும் நிற்க இளையவள் தொட்டிலில் குழந்தையைப் போடச் சொல்லி தாயைக் கெஞ்சுகிறாள். அதன் பின்னே அவள் ஒரு பாடலைப் பாடுகிறாள்.

தன் மன நிலையையும், தன் கணவனின் பேராசை மன நிலையையும் பாடலின் மூலம் உணர்த்துகிறாள். தன் தாயை தன் பாடலின் மூலம் சமாதானம் செய்கிறாள். தன் அக்கா இங்கு வந்து தன் குழந்தையை வாழ்த்த முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறாள்.
அதே சமயம் குடிசையில் யாருமில்லாத அனாதைகளாக தானும், தன் கணவனும், குழந்தையும் நிற்பதை மூத்தவள் பாடலால் பாடி சோகமாகிறாள். தன் தந்தையின் பிடிவாதம் தளர சொல்லி மழலையை வேண்டுகிறாள். அவள் கணவன் அவளை ஆதரவுடன் தாங்குகிறான்.
இதுதான் பாடலுக்கான காட்சி விளக்கம்.
என்ன ஒரு அருமையான பாடல்!
கடினமான வரிகள். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இப்பாடலில். ஏ.எம்.ராஜாவின் இசை அப்படியே நெஞ்சில் ஆழமாக ஊடுருவுகிறது.
மூத்தவள் பிரமிளாவுக்கு சுசீலாவும், இளையவள் குமாரி பத்மினிக்கு ஜிக்கியும் குரல் தந்து இப்பாடலை இமயத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்து விட்டார்கள். அர்த்தம் உணர்ந்த பாவங்கள் இருவர் குரலிலும். இனிமை அதைவிட அதிகம். நடிப்பவர்களும் ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர். அதுவும் பிரமிளாவின் அழுகை பரிதாபம். பிரமாதம். அர்த்தம் பொதிந்த பாடல்.
படம்: வீட்டு மாப்பிள்ளை
வருடம்: 1973
நடிகர்கள்: ஏ.வி.எம்.ராஜன், பிரமீளா, 'குமாரி' பத்மினி, மேஜர், சாவித்திரி, எம்.ஆர்.ஆர்.வாசு.
கதை வசனம்: பேராசிரியர் பிரகாசம்
இசை: ஏ.எம்.ராஜா
இயக்கம். ஏ.கே சுப்பிரமணியம்
இனி பாடலின் முழு வரிகளும்.

கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்கத் தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்
பட்டுத்தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னய்யா சுந்தரா.. ஆ....ஆ
(ஆஹாஹா அந்த அருமையான இழுவை)
கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
லல்ல லலலல்ல லலலல்ல (கோரஸ்)
அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு
அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு
என்னை சுமந்தவள் எண்ணத்திலே
நீ உன்னை நினைத்திட சொல்லு
குற்றம் நினைக்கையில் சுற்றம் இல்லை
தன் கண்ணைத் துடைத்திட சொல்லு
அவள் கண்ணைத் துடைத்திட சொல்லு
கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
சொந்தங்கள் வந்துன்னை சந்திக்கும் வேளை
நேர்ந்திடும் பார் அதைக் கண்ணா
காலம் நினைக்கின்ற நேரத்திலே
வந்து சேர்த்திடும் யாரையும் ஒண்ணா
இங்கு சேர்த்திடும் யாரையும் ஒண்ணா
கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்கத் தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்
பட்டுத்தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னய்யா சுந்தரா
கொஞ்சி அழைத்திட உன்னை
என் கூடப் பிறந்தவள் இல்லை
அள்ளி அணித்திட உன்னை
என் அன்னையும் தந்தையும் இல்லை
முத்துச் சிரிப்பினை தூது விடு
இந்த சேதியைக் கூறிடச் சொல்லு
பிள்ளை மழலையில் வாய் திறந்து
உன் பாட்டனைக் கூப்பிடு இங்கே
உன் பாட்டனைக் கூப்பிடு இங்கே
கண்ணா பேசும் கண்ணால்
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
இந்தப் படத்தின் இன்னும் இரண்டு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று பட்டை கிளப்பியவை.
'மலரே... ஓ... மலரே... நீ என் மலரல்ல நானும் வண்டல்ல'.
'ராசி... நல்ல ராசி... உன்னை மாலையிட்ட மங்கை மகராசி'.
மற்றும்
'ஒன்று... இரண்டு... என்று ஓடோடிப் பறக்குது வயசு' என்ற கேட்டறியாத ஏ.எல்.ராகவன், ராட்சஸி பாடல் ஒன்றும்,
ஏ.வி.எம்.ராஜன் கூர்க்கா வேலை பார்த்துக் கொண்டே இரவில் கோஷ்டியாருடன் பாடும்
'உலகம் உறங்கும் வேளை
கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை
பாரா உஷார்....
என்ற பாடகர் திலகம் பாடல் ஒன்றும் உண்டு.
இப்படத்திற்கு உதவி இயக்கம் எங்கள் 'கடலூர்' புருஷோத்தமன். ('நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' புகழ்)
Last edited by vasudevan31355; 8th August 2014 at 10:26 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks