-
8th August 2014, 11:48 AM
#3191
Junior Member
Newbie Hubber
எல்.ஆர் ஈஸ்வரியின் சிறந்த பத்து சோலோ.
1)அம்மம்மா கேளடி தோழி
2)பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
3)அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
4)கண்களுக்கென்ன காவலில்லையா
5)எலந்த பயம் எலந்த பயம்
6)மல்லிகை ஹோய் மான்விழி தேன்மொழி
7)பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனையா
8)கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்
9)நான் ரோமாபுரி ராணி புது ரோஜாமலர் மேனி
10)பளிங்கினால் ஒரு மாளிகை
-
8th August 2014 11:48 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 11:54 AM
#3192
Senior Member
Diamond Hubber
சோலோ சோலோ இல்லாமலும்
அடடா என்ன அழகு!
வரவேண்டும் ஒரு பொழுது
முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா
என் உள்ளம் உந்தன் ஆராதனை
ஆகட்டும் பார்க்கலாம்
வரவேண்டும் மகராஜா
ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக் கட்டோடு
முத்தமிடும் நேரமெப்போ
ஓடையிலே ஒரு தாமரை பூ
-
8th August 2014, 11:58 AM
#3193
ஒரு சிறு விண்ணப்பம்
இன்று காலை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசை கோர்வை (ஆல்பம்) ஒன்று கேட்டேன் 1970 கால கட்டத்தில் வெளி வந்து இருக்கும் என்று நினைக்கிறன்
இந்த தளத்தில் இணைப்பு உள்ளது
http://www.saavn.com/p/album/tamil/T...4/87Owb-SWIyM_
இதில் ராசலீலை 1970 என்று ஒரு தலைப்பில் உள்ள இசை கோர்வையில் நமது சிலோன் ரேடியோ பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் ஆரம்ப இசை என்று நினைவு
மேலும் Reminiscences என்ற தலைப்பில் உள்ள இசை கோர்வை நெல்லை பூர்ணகல திரை அரங்கில் திரை கீழ் இருந்து மேல் உயரும் போது 4 டிஸ்கோ விளக்குகள் இரண்டு பக்கமும் ஒளிர கேட்ட நினைவு.இன்னமும் அப்படி தான் உள்ளதா என்பதை திரு கோபு அவர்கள் உறுதி செய்தால் நன்றி
1972 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூர்ணகல திரை அரங்கு திறக்கப்பட்டது .அப்போது முதல் நாள் இந்த இசை கோர்வையுடன் (ஸ்ரீனிவாச கல்யாணம் திரைப்படம் மறு வெளியீடு இரண்டு தினங்கள் மட்டும் ) ஆரம்பம். அப்போது நெல்லைக்கு அது புதுமை . அல்லோகலப்பட்டது நெல்லை.
இரண்டாவது படம் ஆதி பராசக்தி மறு வெளியீடு (3 தினங்கள்)
மூன்றாவது படம் மக்கள் திலகத்தின் அன்னமிட்ட கை (15 செப்டம்பர் 1972) முதல் வெளியீடு . திரு எஸ்வி சார் இந்த தேதி சரியா என்பதை உறுதி
செய்தால் நன்றி
திரு எஸ்வி அவர்கள் நெல்லை ரத்னா திரை அரங்கு புகைப்படத்தை வெளி இட்டு இருந்தார்கள் நேற்று .அது போல் பூர்ணகல திரை அரங்கு புகை படம் வெளி இட்டால் நன்று
-
8th August 2014, 12:02 PM
#3194
Senior Member
Senior Hubber
அவன் முன்னேறத் துடிக்கும் இளம் பாடகன்.. ஏழை.
..அவளோ பெளர்ணமியைப் போலல்லாது நிஷ்களங்க முகம் கொண்ட இளம் யுவதி.. கண்களிலே நட்சத்திரங்கள்.. கொஞ்சம் திருஷ்டிப் பொட்டிற்குப் பதிலாக சிரிக்கும்போது அழகாக விழும் ஒற்றைக் கன்னக் குழி.. அவள் பணக்காரி..
சூழ் நிலையில் அவன் பாடும் பாடலை இவள் கேட்க நேரிட அவனுக்கு உதவி செய்கிறாள். தன் தந்தை தர்மகர்த்தாவாக இருக்கும் கோவிலில் பாட்டுக் கச்சேரி..பின் சில பல உதவிகள்..இறுதியாய்..டிவியில் பாட ஒரு வாய்ப்பு..
அவனோ அவளைப் பார்த்தது கூடக் கிடையாது..அவள் எழுதும் ஒரு கடிதம் தான் கிடைத்திருக்கிறது..தொலைக்காட்சி நிலையத்தில் யாரோ ஒரு பெண்ணாய் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் அமர்ந்திருக்க..அவன் தான் பாடவேண்டிய பாடல் எழுதிய காகிதங்களை எடுக்கிறான்..தொலைக்காட்சி நிலய மேலாளர் திட்டுகிறார்.. ஒரேபக்கத்தில் எழுதிக் கொண்டு வந்து படியுங்கள் என..
இவளும் அவனிடம் அந்தப் பேப்பரை வாங்கி பாடலை வேறு சில காகிதங்களில் முத்து முத்தாய் எழுதி அவனிடம் கொடுக்கிறாள்..
தொலைக்காட்சியில் பாடலைப் பதிவுபண்ண ஆயத்தங்கள் நடக்கின்றன.. அவன் அவளிடமிருந்து பெற்ற காகிதங்களைப் பார்க்கிறான்..அங்கு அவன் பாடவேண்டிய பாடல் தெரியவில்லை..அவள் கையெழுத்து..யெஸ் பெயர் போடாமல் ரசிகை என அவள் எழுதிய கடிதத்தின் கையெழுத்து..இரண்டும் ஒன்றெனப் பட, புதிர் விடுபட..அவளை – தனக்குப் பலவிதமாய் உதவி செய்த தேவதையை- தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாம்ல் தேமே என்று அமர்ந்திருப்பவளை ஒரு முறை பார்க்கிறான்..
மனதில் சந்தோஷ்ச் சூரியன் மலர, பாட்டுக் காகிதத்தைத் தூர் எறிந்து விட்டு தானாய் பாடுகிறான்.. அவளைப் பற்றி அவளது அழகைப் பற்றி..
*
ம்க்கும் தெரிந்திருக்குமே மேற்கண்ட காட்சி இடம்பெற்ற திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை.. பாடியவர் எஸ்.பி.பி.. எழுதிய கவிஞர் யாரென்று எனக்குத் தெரிந்த போது என் ஆச்சர்யம் பலமடங்காயின.. யா.. எழுதியவர் கங்கை அமரன்..வைகறையில் வைகைக்கரையில், மணியோசைகேட்டு எழுந்து எல்லாம் இவருடையது தான்..சாலையோரமும் இவருடையது என நினைக்கிறேன் (மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ பாட்டும் இவர் எழுதியது தான்)
அந்த பெளர்ணமி நிலவு பூர்ணிமா ஜெயராம்.. முகத்தில் இருமுறை ரஸ்ட் இருக்கும்.. நல்ல நடிப்பு கொண்ட நடிகை..மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என மலையாளத்தில் அறிமுகமானவர்.. அமோல் பலேகருடன் இவர் நடித்த ஓளங்கள்( பாலு மகேந்திராபடம்) நல்லபடம்..தேவிகாவிற்குஅப்புறம் நடிப்புடன் கூடிய அழகுடன் என்னைக் கவர்ந்தவர் இந்தப் பூர்ணிமை..இன்னும் சில படங்க்ளில் நடித்தபிறகு பாக்யராஜ் இவரைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம் – என இவருக்குக் கல்யாணம் ஆனபோது எனக்குத் தோன்றியது..என்னைப் போல் பலருக்கும்
அந்தப் பாட்டு இப்போது..
*
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமே இவளிடம் நடைபழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
பூமியெங்கும் பூந்தோட்டம்
நாம் பாட வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
-
8th August 2014, 12:05 PM
#3195

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
பார்த்தாச்சா?
அண்ணா
காலையில் இன்றைய ஸ்பெஷல் படித்து விட்டேன்
மன்னிக்கவும் உடனே பதில் எழுத மறந்து விட்டேன் . நல்ல பாடல் ஆனால் அதிகம் பிரபலம் ஆகாத பாடல்
வீட்டு மாப்பிள்ளை இயக்குனர் தான் ஏவிஎம் ராஜனை அடித்து விட்டு பின் நம் நடிகர் திலகம் அவர்களால் எச்சரிக்க பட்டதாக திரு ராஜநாயகம் வலை பதிவில் படித்த நினைவு . இந்த இயக்கனர் தான் கலைச்செல்வியின் 'உன்னை சுற்றும் உலகம்' திரை படத்தின் இயக்குனுர் என்று நினைவு
-
8th August 2014, 12:06 PM
#3196
Senior Member
Senior Hubber
அதில் ஒருவர் இன்னும் இன்னும் கொள்ளை அழகு. // யாராக்கும் அது வாசு சார்
-
8th August 2014, 12:19 PM
#3197
Junior Member
Platinum Hubber
ANNMITTA KAI RELEASED ON 15.9.1972. CORRECT KRISHNA SIR
NELLAI - POORNAKALA - PALLANDU VAZHGA - RELEASED .
POORNAKALA - IMAGE NOT FOUND .
ONLY LATEST VIDEO UPDATED.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th August 2014, 12:27 PM
#3198
-
8th August 2014, 12:37 PM
#3199
Junior Member
Platinum Hubber
எல் .ஆர் .ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே சூப்பர் .
எனக்கு என்றென்றும் பிடித்த மூன்று பாடல்கள் . தினமும் பார்த்து மகிழ்கிறேன் .
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
அம்மம்மா கேளடி தோழி ....
இருந்தாலும் என்னுடைய முதலிடம் அன்றும் - இன்றும் - என்றும்
-
8th August 2014, 12:38 PM
#3200

வாசு சார்
ஈகரை.நெட் வலைப்பூவில் இந்த 'உன்னை சுற்றும் உலகம்' பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் .அதை படித்தேன் மிகவும் சுவையான தகவல்
இந்த படத்தில் கூட பாலாவின் ஒரு பாடல் famous சங்கர் கணேஷ் இசை
Last edited by gkrishna; 8th August 2014 at 12:54 PM.
gkrishna
Bookmarks