-
8th August 2014, 09:30 AM
#771
Junior Member
Diamond Hubber
Sir
I think Prabhu Chinnathambi film only ran 100 days tiruvotriyur venkateshwara because i am live in tiruvotriyur past 40 years when i born

Originally Posted by
SPCHOWTHRYRAM
FROM AUG 15 TH ONWARDS TRICHY - GAIETY - DAILY 4 SHOWS
SIVAJI'S VELLAI ROJA UN BREAKABLE RECORD
--MEGA WINNER OF 1983 DEEWALI RELEASE
-- TRICHY - RAMBA A/C -FIRST 100 DAYS FILM
--ALSO TANJORE - JUPITER -84 DAYS --KUMBAKONAM - KARPAGAM -56 DAYS
-- THIRUVOTTIYUR -VENKATESWARA - FIRST 100 DAYS FILM
--ALL OVER TAMIL NADU VELLAI ROJA GOT HIGHEST COLLECTION AS WELL AS MORE NO OF SCREENS 100 DAYS IN 1983 DEEWALI RELEASE
--
-
8th August 2014 09:30 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 09:45 AM
#772
Senior Member
Devoted Hubber
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.2.1984

அட திருவெற்றியூர் அங்க இருக்கிறமாதிரி தெரியுது
Last edited by sivaa; 8th August 2014 at 09:49 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th August 2014, 09:51 AM
#773
"பராசக்தி' வெளிவந்து சிவாஜி கணேசன் ஓகோவென்று புகழ்பெற்ற நேரம். அப்போது வெளிவந்த படத்தில் நடித்த ஒரு நடிகையின் நடிப்பை பார்த்துவிட்டு இவ்வளவு, அற்புதமாக நடிப்பதோடு நடனமும் ஆடும் நடிகையோடு நடிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று சிவாஜி சந்தேகத்தில் இருந்தார்.
அதன் பின்னர் அந்த நடிகையோடு 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அந்த நடிகை; பத்மினி
(திரை உலக சிகரங்கள்' என்ற நூலில் இருந்து)
வி.ந.ஸ்ரீதரன்.
நன்றி தினமணி கதிர்
-
8th August 2014, 09:53 AM
#774
நடிகர் திலகம் முதன் முதலில் சினிமாவில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனை பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம். 1952-ஆம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த "பராசக்தி'யில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியை கதாநாயகனாக்க தயாரிப்பாளர் பி.ஏ.
பெருமாள் முடிவு செய்த போது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளையே சாரும். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குதான். அந்த படத்தின் பெயர் "வணங்கா முடி'. சிவாஜி நடித்த மொத்த படங்கள் 301. இதில் தமிழ் படங்கள் மட்டும் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2. மலையாளம் 1. கௌரவத் தோற்ற படங்கள் 19. அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. அது கடைசி வரையில் நிறைவேறவே இல்லை. "தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் நீங்கள்தான் ரோல் மாடல்' என்று ஒரு முறை பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி சொன்ன போது, "டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் நான் மூன்றாவதுதான்' என சிவாஜி சொல்லியது அவரின் தன்னடக்கத்துக்கு உதாரணம் என்பார்கள்.
thanks to dinamani kathir
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th August 2014, 10:39 AM
#775
Junior Member
Newbie Hubber
முரளி,
அவர்கள் நடிகர்திலகத்தை இகழ்வதன் மூலம் ,ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் உமிழ்கிறார்கள். நீங்கள் எங்களை அமைதி காக்க சொல்கிறீர்கள்.இந்த மனிதர்களுக்கு,இவர்கள் பதிவை எடுத்து விட,சந்தர்ப்பம் கொடுத்தும் செய்வதாக தெரியவில்லை.களத்தில் இறங்கலாமா?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th August 2014, 11:27 AM
#776
Junior Member
Diamond Hubber
Thanks for confirmation

Originally Posted by
sivaa
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.2.1984
அட திருவெற்றியூர் அங்க இருக்கிறமாதிரி தெரியுது
-
8th August 2014, 12:33 PM
#777
Junior Member
Senior Hubber

Originally Posted by
Yukesh Babu
Thanks for confirmation
Dear Yukesh babu Sir
Thanks for your acceptance. We expect persons like you only.
Also tell your friends not to give false information to the public
For eg- we know very much AYIRATHIL ORUVAN HAS RAN 100 DAYS IN ONLY ONE THEATRE AT CHENNAI (GAIETY) whereas your friends published in magazines and flex boards that it has run 100 DAYS IN 3 THEATRES AT CHENNAI
ALWAYS TRUTH ONLY WILL ENTER INTO PEOPLE'S HEART
THANKS TO MR.SIVA for timely help
C. Ramachandran
Last edited by SPCHOWTHRYRAM; 8th August 2014 at 01:08 PM.
-
8th August 2014, 12:44 PM
#778
Senior Member
Seasoned Hubber
செலுலாய்ட் சோழன் – 29
சுதாங்கன்
1955ம் வருடம் சிவாஜி கணேசன் சினிமாவிற்குள் நுழைந்த 3 வது வருடம். இந்த வருடம் தான் இந்தத் தொடரில் ஏற்கெனவே சொன்னதைப் போல அவர் திருப்ப்தி சென்றதால் தி.மு.கழகத்தின் அவருக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
அவரை திமுகவை விட்டு கிளம்ப்ப அங்கே ஒரு கூட்டம் ஏற்கெனவே ஏதோ வேலையெல்லாம் செய்து வைத்திருந்தது. இந்த நேரத்தில் சிவாஜி இயக்குனர் பீம்சிங்குடம் திருப்பதி போய் வந்ததுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
`திருப்பதி கணேசா, கோவிந்தா’ என்றெல்லாம் அவருக்கு எதிராக கோஷங்களும், சுவரொட்டிகளும் கிளம்பியது. கட்சியின் உறுப்பினராகக் கூட சிவாஜி இருந்ததில்லை. பெரியார் அண்ணா கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு இருந்தது அவ்வளவுதான்.
இந்த நிகச்சியை தன் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக தான் எடுத்துக்கொண்டார் சிவாஜி கணேசன். ஆனாலும் அவருக்கு ஆறுதலான ஒரு புகலிடம் தேவைப்பட்டது. அந்த ஆறுதலும், புகலிடமும் அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் மூலமாக கிடைத்தது.
சிவாஜி திமுகவை விட்ட வெளியேறிய பின் தான் அவருக்கு பல வெற்றிப் படங்கள். மேலும் அவர் திமுகவிலேயே இருந்திருந்தால், பல புராணப் படங்கள் நமக்கு கிடைத்திருக்காது!
இந்த அரசியல் திருப்பத்திற்கு பிறகு 24 மணி நேரமும் உழைக்க ஆரம்பித்தார். படங்களை பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
இந்த வருடம் அவருக்கு 6 படங்கள். `காவேரி’ `முதல் தேதி, `உலகம் பலவிதம்’ `மங்கையர் திலகம்’ `கள்வனின் காதலி’
இதில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு சித்தியாக நடித்தார் பத்மினி. சிவாஜி, பத்மினி இருவர் போட்டி போட்டு நடித்தனர். தான் மிகச்சிறந்த குணசித்திர நடிகையும் கூட என்பதை நீருபித்துக் காட்டினார் பத்மினி.!
`கள்வனின் காதலி’ இது அமரர் கல்கியில் மிகப் பிரபலமான நாவல்! இதில் சிவாஜிக்கு ஜோடி பானுமதி! சிவாஜியும், பானுமதியும் இணைந்த முதல் படம். வெற்றிப் படம்!
எந்த வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை சிவாஜி நீருபித்துக்கொண்டிருந்த காலம் இது!
அடுத்த வருடம் இன்னொரு சாதனையை செய்தார்கள் சிவாஜி. ஏ.பி.நாகராஜன் ஜோடி! தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக வாட்டாரத் தமிழி ஒலித்த படம் ` மக்களைப் பெற்ற மகராசி’ அதில் சிவாஜி கொங்கு நாட்டுத் தமிழில் பேசி, ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த இடத்தில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனை பற்றி பதிவு செய்தே ஆகவேண்டும். இல்லையேல் பின்னால் வரப்போகும் பல சாதனைப் படங்களின் அருமை நமக்கு புரியாமலே போய்விடும்! சிவாஜி பீம்சிங்கை போலவே ஏ.பி.நாகராஜனும் ஒரு முக்கியமான இயக்குனர்!
ஏ.பி. நாகராஜன், டி.கே சண்முகம் அண்ணாச்சி நடித்த நாடகங்களிலெல்லாம் கதாநாயகியாக நடித்தவர். மிகவும் அழகானவர். கூந்தல் அழகும், கொவ்வை இதழ் சிரிப்பின் தனி அழகும், மயில் போல ஒயிலான நடையழகும் காணும் ஆண்களை பித்துப் பிடிக்க வைத்தது. !
ராமனுக்கும் சீதையாக, அர்ச்சுனனுக்கு, திரெளபதியாக, பாண்டியனுக்கு ராணியாக, அஸ்வபாலனுக்குக் காதலியாக நடித்தவரைக் கண்டு மயங்காத ஆண்களை அந்தக் காலத்தில் இல்லை!
சண்முகம் அண்ணாச்சியின் துணைவியார் நாடகம் பார்க்க வரும்பொதெல்லாம் தன் கணவருடம் நடிக்கும் பெண் யார் என்று தெரிந்து கொள்ளத் துடிப்பார்!
நாடகம் முடிந்து வீடு திரும்பியதும் தன் கணவரிடம் ஒரு நாள், ` யார் அந்தப் பெண் ?’ என்று கேட்டார்.
``எந்தப் பெண் ?’ தெரியாததைப் போல கேட்டார் அண்ணாச்சி!
`` என்ன தெரியாததைப் போல கேட்கீறீர்கள் ? உங்களுக்கு கதாநாயகியாக நடித்தாளே அந்தப் பெண்ணைத்தான் கேட்கிறேன் ?’’ துணைவியார் துருவித் துருவி கேட்டார்.
`ஒஹோ! அந்தப் பெண்ணா ? எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார்த்தியா ? அவள் பார்வை தன் மீது படாதா என்று ஏங்காத வாலிபர்களே கிடையாது. ஆனால்… அவளுக்கு என்னமோ என் மீதுதான் அலாதி பிரியம் …’’ என்று சொல்லிக்கொண்டே போனார்.
அண்ணாச்சியின் துணைவியாருக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. பல வித சந்தேகங்கள்! கற்பனைகள் !
ஆத்திரம் கரை புரண்டு ஒடியது. மனைவியின் நிலையை புரிந்து கொண்டார் அண்ணாச்சி1 மறுநாளே அந்தப் பெண்ணை வீட்டுக்கு வரச் சொல்வதாகவு, நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணாச்சி சொல்லிவிட்டார்
வரட்டும் அந்தப் பெண் என்று கோபத்தோடு காத்துக்கொண்டிருந்தார் துணைவியார் !
காலையில் அந்த பெண்ணுக்காக காத்திருந்த துணைவியாருக்கும் ஏமாற்றம்! காலையில் அண்ணாச்சியை பார்க்க ஒருவர் வந்தார். ஏமாற்றத்தோடு உள்ளே சென்ற துணைவியார்!
``யாரோ, ஏ.பி. நாகராஜனாம், உங்களைத் தேடி வந்திருக்கிறார் ‘’ என்று தன் கணவரிடம் சொன்னார் அண்ணாச்சியின் துணைவியார்.
துணைவியாரை தன்னுடம் அழைத்துக்கொண்டு அண்ணாச்சி கூடத்தில் அமர்ந்திருந்த ஏ.பி.என். முன்னால் வந்து நின்றார்.
தனது குருவைக் கண்டதும் ஏ.பி.என் எழுந்த மரியாதையுடன் நின்றார்.
`யார்… அந்தப் பெண் ? உங்கள் கதாநாயகி யார் என்று கேட்டுக்கொண்டிருந்தாயே.. இதோ இந்த நாகராஜன் தான் என் நாடகக் கதாநாயகி! நன்றாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான கலகல சிரிப்பொலியை உதிர்த்தார்.
`` நாகராஜா, நீ என்னோடு கதாநாயகியாக நாடகத்தில் நடித்தாய். என் ஒரிஜினல் கதாநாயகிக்கு பெரிய சந்தேகம் வந்திவிட்டதப்பா ! உன்னால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை! நீ என்னை மயக்கிவிடுவாய் ! என்று பயந்துவிட்டாள் ‘’ என்று ஏ.பி.என்னிடம் புன்முறுவலுடம் தொடர்ந்தார் !
சண்முக அண்ணாச்சியின் துணைவியாருக்கு முதலில் இதை நம்பவே முடியவில்லை. நேரில் பார்த்த பிறகு வியப்பு ஒரு புறம்! வெட்கம் ஒரு புறம்!
நாடகத் துறையில் ஒன்றியிருந்த ஒரு பெண்மணியாலேயே ஏ.பி.என் தான் பெண் வேடம் தாங்கிய நடித்தார் என்பதை நம்ப முடியாமல் போனதென்றால், அவரது வேடப் பொருத்தம் எப்படி இருந்திருக்கும்!
`குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தில் ஏ.பி.என். தான் கதாநாயகி. அருமையாக நடிப்பார். இதே நாடகம் பின்பு திரைப்படமானது. படத்தில் இந்த பாத்திரத்தை எம்.வி.ராஜம்மா செய்தார். ஏ.பி.என் நடிப்பை பார்த்து படத்தில் நடிக்கும் ராஜம்மா அதைப் போல நடிக்க வேண்டுமென்பதற்காக அவரை அடிக்கடி நாடகம் பார்க்க அழைத்துச் சென்றுவிடுவார் என்று பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பஞ்சு.
சேலம் தந்தது முக்கனியில் ஒரு கணியான மாங்கனியை மட்டுமல்ல்; அருட்செல்வர் ஏ.பி. என் என்கிற முத்தமிழ்க் கனியையும் தான் !

(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th August 2014, 01:10 PM
#779
From Tamil Hindu -today

எனது படங்களில் நான் பாடி வருவதற்கு காரணம் யேசுதாஸ் தான் என்று 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் கூறினார்.
விக்ரம் பிரபு, மோனல் காஜர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்ப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிகரம் தொடு', இப்படத்தை ’தூங்காநகரம்’ படத்தின் இயக்குநர் கௌரவ் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இப்படத்தின் இசையினை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட யேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் லிங்குசாமி, பிரபுசாலமன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பேசியது, "என்னை விடவும் பிரபுவை விடவும் அதிகமாக சிவாஜி கணேசன் மடியில் தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபு. முயற்சி தான் திருவினையாக்கும், அவர், அவரது முழு உழைப்பினால் தான் இன்று இந்தளவிற்கு வளர்ந்துள்ளார். அதற்கு சிவாஜியின் ஆசிர்வாதம் உள்ளது.
நாங்கள் வெவ்வேறு வீடுகளிலிருந்து வந்தாலும் ‘அன்னை இல்லம்’ எங்கள் எல்லோருக்கும் ஒரே வீடு தான். இப்படம் வெற்றியடைவது விக்ரம் பிரபுவிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல் எனக்கும் முக்கியம்.
என்னுடைய சிறு வயதில் நான் சினிமா நட்சத்திரம் ஆகிவிட்ட பொழுது, யேசுதாஸ் ஆகவில்லை. அன்று அவர்களை பாட சொல்லி கேட்ட அதே குரல் எந்தளவிற்கு இனிமையாய் இருந்ததோ இன்றும் அந்தளவிற்கு இனிமையாய் உள்ளது. வெண்கலத்தை உருக்கி உருக்கி பாடிய மாதிரி உள்ளது உங்களது குரல் யேசுதாஸ் அண்ணா. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நான் பாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் யேசுதாஸ் அண்ணா தான். உன் குரல் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார். பிறகு தனியாகச் சென்று 'நம்பிட்டான்' என்று சிரித்திருப்பார். அன்று அவர் சொன்னதால் தொடர்ச்சியாக பாடி வருகிறேன்" என்றார்.
-
8th August 2014, 02:17 PM
#780
Junior Member
Newbie Hubber
Bookmarks