Page 341 of 400 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3401
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear madhu sir

    your post on sankar ganesh music in both malayalayam (lasharchanai kandu) and tamil (ponnoviyum ondru - kumari pennin ullathile) excellant

    dear rajesh sir

    your post on kunguma thumbigal song is also good .enjoyed both the songs

    thanks

    regards

    gk
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வீ.குமார்.

    வரதராஜுலு குமார் 1934 இல் பிறந்தவர்(1996 இல் மறைவு).முதலில் இசையில் நாட்டமில்லாமல் இருந்தவர்,பிறகு ஆர்மோனியம் கற்று சிறிதே கர்நாடக இசை கற்று ,எங்கோ குமாஸ்தாவாக பணியாற்றியவர்,பிறகு நாடகங்களுக்கு இசையமைக்க தொடங்கி, இன்னொரு குமாஸ்தா கே.பாலச்சந்தரின் ,ராகினி creations நாடகங்களுக்கு இசையமைத்தது வாழ்வின் திருப்பு முனை.அவரோடு சேர்ந்தே நீர்க்குமிழி அறிமுகம்,.

    நீர்க்குமிழியில் அனுபவம் இல்லை என்பதால் அனுபவஸ்தர் ஆர்.குலசேகர முதலியார் என்கிற ஆர்.கே.சேகரை(திலீப் என்ற ரகுமானின் அப்பா) இணை சேர்த்து ,இறங்கி வெற்றி கண்டார். தொடர்ந்து நாணல்,மேஜர் சந்திரகாந்த்,எதிர் நீச்சல்,இரு கோடுகள் என்ற தொடர் வெற்றிகள்.

    இவரை ஆதரித்தவர்கள் கே.பாலசந்தர் வீ. ஸ்ரீனிவாசன் (முக்தா),என்.எஸ்.மணியம்.(கே.பீ.சிஷ்யர்).அப்போத ு உச்சத்தில் இருந்த கே.வீ.மகாதேவன்,எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்களுடன் பட உலகில் இணையாக தனக்கென ஒரு பாணி ஏற்படுத்தி வெற்றி பெற்றார்.

    ஓரளவு ஹிந்துஸ்தானி,மேற்கத்திய இசை இவற்றிலும் பரிச்சயம் கொண்டு ,அழகாக படங்களில் பயன் படுத்தினார். இவரது நேர்மையும் ,வாய்மையும் இவரை கை விட்டு ,மாயவ நாதன் என்ன கதியானாரோ ,அங்கேயே கொண்டு நிறுத்தியது. அரங்கேற்றம் என்ற மெகா வெற்றி படத்துடன் கே.பீ யை மன கசப்புடன் பிரிந்தவர்,பிறகு பார்க்கவே இல்லை என்று கேள்வி.பட உலகம் ,இவருக்கு செய்த ஒரே பிரதி பலன் ,நிறைய சம்பள பாக்கி.உதாசீனம்.

    எனது பிரிய இசையமைப்பாளர்களில் ஒருவர்.

    இவரின் மறக்க முடியாத பாடல்கள்.


    ஆடி அடங்கும் வாழ்க்கையடா , நீரில் நீந்திடும், கன்னி நதியோரம்- நீர்க்குமிழி.

    குயில் கூவி துயில் எழுப்ப, என்னதான் பாடுவது,விண்ணுக்கு மேலாடை- நாணல்.

    நேற்று நீ சின்ன பப்பா , கல்யாண சாப்பாடு போடவா, ஒரு நாள் யாரோ -மேஜர் சந்திரகாந்த்.

    வெற்றி வேண்டுமா, அடுத்தாத்து அம்புஜத்தை, சேதி கேட்டோ , தாமரை கன்னங்கள் -எதிர் நீச்சல் .

    தம்பி வாடா அடிச்சது, தொட்டதா தொடாததா,பறவைகள் சிறகினால்,நந்தன் வந்தான்-நினைவில் நின்றவள்.

    முந்துங்கள் இடத்துக்கு, புன்னகை மன்னன் - இரு கோடுகள்.

    மயக்கத்தை தந்தவன்,நீ ஆட ஆட அழகு,நல்ல நாள் பார்க்கவோ,வா வாத்யாரே- பொம்மலாட்டம் .

    அத்தான் நிறம் சிகப்பு,கண்ணொரு பக்கம் , விளக்கே நீ கொண்ட -நிறை குடம்.

    கண்ணான கண்ணுறங்கு, முள்ளுக்கு ரோஜா சொந்தம், எங்கெல்லாம் வளையோசை, தித்திக்கின்றதா முத்தமிட்டது- வெகுளி பெண் .

    நான் உன்னை வாழ்த்தி, நித்தம் நித்தம் ஒரு - நூற்றுக்கு நூறு.

    காதோடுதான், உனக்கென்ன குறைச்சல் - வெள்ளி விழா.

    ஆண்டவனின் தோட்டத்திலே ,மூத்தவள் நீ கொடுத்தாய்,ஆரம்ப காலத்தில் -அரங்கேற்றம்.

    புன்னகையோ பூ மழையோ - டெல்லி டு மெட்ராஸ்.

    கண்ணெல்லாம் உன் வண்ணம் - ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு .

    நான் ரோமாபுரி ராணி, பாடாத பாட்டு- சவாலுக்கு சவால்.

    ஆள தொட்டு தோள தொட்டு - மாப்பிள்ளை அழைப்பு.

    தாகம் அது பருவத்தில் ஒரு வகை,பட்டெடுத்து விரிக்கவா - உனக்கும் எனக்கும்.

    பனி மலரோ குளிர் நிலவோ - பொன் வண்டு.

    உன்னிடம் மயங்குகிறேன் ,எழுதாத பாடல் ஒன்று- தேன் சிந்தும் வானம்.

    வாழ்வில் சௌபாக்கியம் ,என்னோடு என்னன்னவோ - தூண்டில் மீன்.

    இனங்களிலே என்ன இனம் - நல்ல பெண்மணி.

    நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.

    தேவன் ஏசுவின் வேதம், மாணவன் நினைத்தால் - ராஜ நாகம்.

    மதனோத்சவம் ரதியோடுதான்,ஐயராத்து பொண்ணு சொன்னா- சதுரங்கம்.
    Last edited by Gopal.s; 11th August 2014 at 10:38 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3403
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கே.சொர்ணா.

    அதிர்ஷ்டக்கட்டை இசையமைப்பாளரின் (வீ.குமார்) அதிர்ஷ்டக்கட்டை மனைவி கே.சொர்ணா. (சொர்ணலதா அளவு ,இவர் புண்ணியம் செய்யவில்லை) . வாய்ப்பு தேடும் பாடகியாக அறிமுகமாகி குமாரின் மனைவியானவர். open Voice ,Husky Voice என்று எல்லாவற்றிலும் பாடும் திறமையிருந்தும் , வாய்ப்பு மறுக்க பட்டவர் .இவர் கணவரே ,இவருக்கு சில வாய்ப்புகளே கொடுத்தார்.ஆனாலும் ,அத்தனை வாய்ப்பையும் பயன் படுத்தி இவர் வெற்றி கண்டார்.

    மறக்க முடியாத பாடல்கள் .

    சேதி கேட்டோ - எதிர் நீச்சல்.

    கண்ணெல்லாம் உன் வண்ணம் - ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு .

    இனங்களிலே என்ன இனம்- நல்ல பெண்மணி.

    நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.

    தாகம் அது பருவத்தில் - உனக்கும் எனக்கும்.

    என்னோடு என்னென்னவோ ரகசியம்- தூண்டில் மீன்.

    ஒரு பார்வை பார்க்கும் போது - நங்கூரம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3404
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாதநாமகிரியா.

    இந்த ராகம் அப்படியே கம்பீர ஓட்டம். இந்த ராகத்தை கேட்கும் போது ,பக்தி,உருக்கம், வீரம்,தன்னம்பிக்கை நிறைந்த கேள்விகள் மனதில் உருவாகும்.

    இது மாயா மாளவ கௌளை ராகத்தின் ஜன்யமே என்றாலும், பல பாடல்களில் விற்பன்னர்களுக்கே இது மாயாவா, நாதமா என்று சந்தேகம் கிளப்பும் வகையில் உறவு.(மதுரை மரிகொழுந்து).இசையமைப்பாளர்கள் அபூர்வமாகவே கையாண்ட ராகம். ஆனால் கர்நாடக composer களுக்கு அல்வா போல.ஹிந்துஸ்தானியில் பைரவ் இன இணை.

    அந்த படத்தில் ,புராண பட மேதை, ஒரு இளம் நடிகரை வைத்து பரீக்ஷித்தார்.ஆனாலும்,இதே வேடத்தில் முன்பே நடித்திருந்த ,நடிக மேதை தேவரை ,வீரபாகு தேவர் என்ற முருகனின் அண்ணனாக போட்டு ,அவர் பாத்திரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்த பின்பே,விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைத்து படம் வெற்றியானது. (சம்பந்தமில்லாமல் மாற்றணி நண்பர்களால் தொல்லைக்குள்ளான படங்களில் ஒன்று. ).அந்த படத்தில் வெற்றியின் மிதப்பில் யானை கம்பீரத்துடன் civilian march ஒத்த வீர நடை போடும் வீரபாகுவால் ,மனதில் என்றும் நின்ற பாடல் "வெற்றி வேல் வீர வேல்".

    அந்த படம் இயக்குனர்திலகம், அருட்செல்வர் பாதையில் பயணித்து, திரை இசை திலகம் துணையுடன் வெற்றி கண்டு, இரு திலகங்களையும் முந்திய வசூல் கண்டார் 1971 இல். (இதற்கு முன்பே 1963 கற்பகம்,1968 பணமா பாசமா வில் இந்த சாதனைகள் செய்தவர்)அந்த படத்தில் ,இந்த குறிப்பிட்ட பாடல் ஆதி பராசக்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையான மறக்க முடியாத ஒன்று. (மற்றது மாயி மகமாயி).அபிராம பட்டரின் நிலா வரும் போடா சவாலில் "சொல்லடி அபிராமி ".

    இது ஒரு முக்கிய நடிகருக்கு திருப்பு முனை படம். நடிகர்திலகத்தின் பெருந்தன்மை ஊரறிந்த ஒன்று. சுலபமாக நற்பெயர் வாங்கி புகழ் பெற வேண்டிய பாத்திரத்தில் ,அவரையே இரட்டை வேடம் ஏற்க சொல்லி நண்பர்கள் வலியுறித்திய போதும் ,அப்போது வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு இந்த பாத்திரத்தை விட்டு கொடுத்தார்.நான் வாழ வைப்பேன் என்று சொல்லி சூப்பர் ஸ்டார் ஐ வாழ வைத்து,ரசிகர் கூட்டத்தை பரவலாக்க துணையானார். அந்த படத்தில் கால் ஊனமான தங்கைக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்த இசைஞானி-பாடகர்திலகத்தின் அபூர்வ முத்து ."எந்தன் பொன் வண்ணமே".

    http://www.ragasurabhi.com/carnatic-...namakriya.html
    Last edited by Gopal.s; 10th August 2014 at 07:42 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #3405
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    2000 பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த வாசு ஜி, கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, சி.கா எல்லோருக்கும் நன்றிகள்..

  7. #3406
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வி.குமார் அடேயப்பா மெலோடி கிங் என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்.. எப்படிப்பட்ட பாடல்கள் ..

    எப்பவுமே ஓப்பனிங் பாடல் இசையரசிக்குத்தான்...

    இதோ புன்னகை மன்னன் பூவிழி கன்னன் பாடல் தெலுங்கில் ...

    செளகாரின் வேடத்தில் ஜமுனா .. ஜெயந்தி தன் வேடத்தை தெலுங்கிலும் செய்தார்
    இசையரசியும் ஜமுனாராணி அங்கேயும்




    கன்னடத்தில் இதோ இசையரசியும் வாணிஜெயராமும்


  8. #3407
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கே.சொர்ணா.

    மறக்க முடியாத பாடல்கள் .
    நாள் நல்ல நாள் - பணக்கார பெண்.
    கோபால் ஜி...

    "நாள் நல்ல நாள்" பாடலை டி.எம்.எஸ்ஸுடன் பாடியது வாணி ஜெயராம் என்று நினைவு.

  9. #3408
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நேற்றே நிலாவை நம்ம SSS தயவில் பார்த்து ரசித்தாகி விட்டது..

    அடுத்த ரிக்வெஸ்டை மெதுவாக வைக்கலாம் என்று வரலக்ஷ்மி.. வரலக்ஷ்மி

    ( சிக்கா.. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியில் எஸ்.வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடும் "காதலாகினேன்.. எவர் ஏது சொன்ன போதும் நான்... காத..லாகினேன்" பாட்டு கேட்டதுண்டா ? )

    இருக்கட்டும்.. வரலக்ஷ்மி விரதம் அன்றைக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன் என் அடுத்த ரிக்வெஸ்டை.

    ஜெய்சங்கர் நடித்து வெளிவராமல் போன "கதா நாயகன்" என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடும் ஒரு அருமையான பாட்டு..

    "சில நேரங்களில் சில மனிதர்களை
    சிந்தித்து பார்த்தால் சிரிப்பு வரும்
    என்ன கோலமோ என்ன கொள்கையோ
    இதயம் சிலருக்கு இரண்டல்லவோ"

    என்று ஆரம்பித்து

    "சந்திரனுக்கு செல்பவனுக்கு சாம்பார் சாதம் இல்லை.. அங்கு இல்லை
    சந்ததி என்று ஒன்பது பிள்ளை இனிமேல் பிறந்தால் தொல்லை.. என்றும் தொல்லை
    சோழன் காலக் குடுமி... இதில் காரில் என்ன பவனி
    அடி பெண்ணே கொஞ்சம் கவனி
    நீயும் ஆண்பாதி பெண் பாதி அவதாரமோ"

    என்றெல்லாம் stanzas வரும்..

    சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலுக்கான படம் தெரியாமல் நான் தேடிக்கொண்டு இருந்த சமயம் நம்ம ராகவ்ஜிதான் கண்டு பிடித்து சொன்னார்.

    இந்தப் பாட்டு எங்கேயாச்சும் கிடைச்சா மதுர கானங்கள் திரிக்கு மடக்கி இழுத்துக் கொண்டு வாருங்கள்.
    மது சார்,

    இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்

    'சில நேரங்களில் சில மனிதர்களை'
    சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.

    நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.

    http://www.mediafire.com/download/3y...Nerangalil.mp3

    (இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)
    Last edited by vasudevan31355; 12th August 2014 at 10:52 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3409
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வி.குமாரின் இசையில் அர்த்தமுள்ள இனிமையான பாடல்கள் நிறைந்த படம் அதிர்ஷ்டம் அழைக்கிறது.
    பாவம்.. படத்துக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை.. வெகு நாட்கள் ஓடி வசூலைக் குவிக்காமல் போனது..

    Eternal beauty ஸ்ரீவித்யா அய்யராத்து பெண்ணாக வந்து முத்துராமனை எண்ணிப்பாட அவரோ
    ஏசுவின் வழி செல்லும் ஜெயசுதாவைக் காதலிக்கிறார். சுசீலா, டி.எம்.எஸ்ஸின் இனிய குரல்களைக்
    கேட்க என்ன தவம் செய்தேன் ?



    வாலியின் படத்தில் கண்ணதாசனின் புத்தகத் தலைப்பு.. அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
    என்று டி.எம்.எஸ் குரலில் கேட்கும் தேங்காய் சீனிவாசன்



    பாடகர் ஜேசுதாஸும் பாடகி சுவர்ணாவும் திரையிலே தோன்றிப் பாடிய பாடல்

    ஆனந்த திருமணம்



    அப்புறம்.. சுசீலாவின் குரலில் " இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை"

    ஒரு குடும்பம் இங்கே கோவிலானது


  11. #3410
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது சார்,

    உங்கள் மூலம் எங்களுக்கு 'அதிர்ஷ்டம் அழைக்கிறது'. அற்புதம். இப்போதுதான் சொர்ணா பாடலை எடுத்தேன். எனக்கு சிரமமில்லாமல் செய்து விட்டீர்கள். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •