-
11th August 2014, 11:53 AM
#3481
Senior Member
Senior Hubber
பிரசன்னா
1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.
லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.
ஏழைபடும்பாடு
இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.
பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.
படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.
காஞ்சனா
லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)
இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.
பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.
கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.
"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.
காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.
படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.
பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.
இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th August 2014 11:53 AM
# ADS
Circuit advertisement
-
11th August 2014, 11:55 AM
#3482
Senior Member
Senior Hubber
1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்
வாசு சார்..இதில் தானே துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..பாட்டு..?
-
11th August 2014, 11:57 AM
#3483
Senior Member
Senior Hubber
லலிதா ராகினி இருவரும் பத்மினிக்கு முன்னாலேயே இயற்கை எய்தினார்கள் தானே..பத்மினி அமெரிக்கா தெரியும்..மற்றவர்கள்..?
-
11th August 2014, 11:59 AM
#3484
Senior Member
Senior Hubber
தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.
"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.
//தேவ தாஸ் நான் பார்த்ததில்லை..//
-
11th August 2014, 12:18 PM
#3485
-
11th August 2014, 12:32 PM
#3486

Originally Posted by
chinnakkannan
லலிதா ராகினி இருவரும் பத்மினிக்கு முன்னாலேயே இயற்கை எய்தினார்கள் தானே..பத்மினி அமெரிக்கா தெரியும்..மற்றவர்கள்..?
லலிதா – (பிறப்பு-1930- மறைவு-1982) வயது-52. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரில் மூத்தவர். இவர் நடித்த படங்கள் குறைவு தான் என்றாலும் ஒவ்வொன்றும் பேசப்பட்ட படங்கள். இவர் அறிமுகமான படம் ஆதித்தன் கனவு (1938). தூக்குத்தூக்கி, ஓர் இரவு, மருமகள், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி,திகம்பர சாமியார் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் வெள்ளி நக்ஷத்திரம்(1943) அம்மா (1952), காஞ்சனா (1952) பூங்கதிர் (1953), மின்னல் படையாளி (1959), அத்யாபிகா (1968) போன்ற மலையாளப் படங்களிலும் இந்தி மற்றும் தேவதாஸ் போன்ற பல தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
ராகினி- (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். இவர் தனது 36-ஆவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 30.12.1976-ஆம் ஆண்டு இறந்தார்.இவரது கணவர் பெயர் மாதவன் தம்பி. லக்ஷ்மி, பிரியா என இரு மகள்கள்.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்குத் தூக்கி, மாங்கல்ய பாக்கியம், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி, பரிசு, கோடீஸ்வரன், ஏழைப்பங்காளன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்கள் இவர் நடித்து வெளிவந்தவற்றில் சில.
பத்மினி (ஜூன் 12, 1932 – செப்டம்பர் 24, 2006) வயது-74.பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
-
11th August 2014, 12:37 PM
#3487
Junior Member
Newbie Hubber

Originally Posted by
ravi200101
I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.
This is what exactly I am trying to prove. Ilayaraja ,by plan, sidelined Suseela as she had reprimanded him during early 1970s during one of the concerts ,which was not forgotten by Raja, as he always act like a snake under the grass.(his own Philosophy). So,Audience had no other choice except go along with Janaki to listen to I.R's exemplary music. My close circle of 20 Friends ,atleast 18 of them referred her as mimicry kezhavi. I know well.(infact,Equal opportunity was not given to both to choose.Though Suseela songs with IR were equally popular,she was not in IR's preferred list).Anycase,I hate your comparison of Suseela with others. If you make anymore post in this regard ,then you will see my full vigour.(Calling Janaki voice sexy????!!!! Don't get on my nerves. Pl.Dont call yourself a Suseela Fan.)
Last edited by Gopal.s; 11th August 2014 at 01:00 PM.
-
11th August 2014, 12:54 PM
#3488

Originally Posted by
Gopal,S.
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.
1963 வானம்பாடி.
1968 பூவும் போட்டும்.
1970 எதிரொலி.
'பின் பரிமாணங்கள்' - அருமையான தமிழ் வார்த்தை
அகத்தியத்திலும் தொல்காப்பியத்திலும் மற்றும் பல இலக்கிய இலக்கண நூற்களில் தேடி பார்த்தேன்
இந்த வார்த்தைக்கு கிடைத்த சரியான அர்த்தம் 'ஏதும் இல்லை'
-
11th August 2014, 12:57 PM
#3489
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி.. ராகினி லலிதா பற்றிய விரிவான செய்திகளுக்கு நன்றி.. ராகினி வெகு சின்ன வயதிலா இறந்தார்..ம்ம்..எனக்குத் தூக்குத் தூக்கி ம்ட்டும் நினைவு.. அந்தக் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் இருவரும் அபாரமான நாட்டியம் (பத்மினி ராகினி)
லலிதா - ஓர் இரவு மர்மப்படமா என்ன..
-
11th August 2014, 01:08 PM
#3490
Senior Member
Diamond Hubber
Bookmarks