-
9th August 2014, 08:14 AM
#91
Junior Member
Devoted Hubber
இசைஞானி அவரின் குலதெய்வ கோயிலில் - இரு நாட்கள் முன் !
https://pbs.twimg.com/media/BtOE3-xCAAA76jw.jpg
-
9th August 2014 08:14 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 09:28 AM
#92
Senior Member
Regular Hubber

Originally Posted by
rajaramsgi
ஆஹா... மலரும் நினைவுகள். 1983ல் நடந்த நிதி திரட்டு விழா நினைவில் இல்லை என்றாலும்,
1987ல் , +1 படிக்கும் போது ஸ்ரீ ரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. பழைய கரூர் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கி கொண்டு, நான் தெப்பகுளம் பிஷப் ஹீபரில் படித்துகொண்டிருந்தேன்.
விழாவை முன்னிட்டு ராஜா சார் கச்சேரி என்று விளம்பர படுத்தி இருந்ததால், மதத்தின் பால் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், ராஜா சார் மீதிருந்த பற்றுதலால் அவரை பார்க்க இரவு கச்சேரிக்கு நானும் சில நண்பர்களும் காவேரி பாலத்தின் வழியாய் நடந்தே சென்று விட்டோம். கங்கை அமரன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கடைசி வரை மேடையில் ராஜா சாரை பார்க்க முடிய வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், மறுநாள் காலைஎப்படியும் அவரை பார்த்து விடலாம் என்று நினைத்து ஸ்ரீரங்கம் சென்ற நாங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை பார்த்தோம், கோபுர கலச நீர் துளி என் தலையிலும் விழுந்தது. இந்த புண்ணியம் ராஜா சாரையே சேரும், அவர் இல்லை என்றால் நிச்சயம் நான் ஸ்ரீரங்கம் போயிருக்கமாட்டேன். என்னை போல் எத்தனை ஆயிரம் பேர் அவருக்காக ஸ்ரீரங்கம் வந்தார்களோ..
ஸ்ரீரங்கம் விழா முடிந்த சில மாதங்களிலேயே , மறுபடியும் திருச்சி கண்டோன்மெண்டில் ஒரு கச்சேரி நடந்தது. சினி மியுசசியன்ஸ் அசோசியஷன் கட்டிட நிதிக்காக எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் வந்திருந்த கச்சேரி அது (யேசுதாஸ் மட்டும் வரவில்லை). நிகழ்ச்சிக்கு என் தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் சென்ற போது தான் எனக்கு முதன் முதலில் ராஜா சார் தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியையும் கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்சியில் ராஜா சார் அதிகம் பாடவோ பேசவோ இல்லை. இப்போது போல் அப்போதும் வெள்ளை உடையில், தோளின் இருபுறமும் சால்வை மடித்து போட்டிருந்தார். TMS உடன் அதிகம் பேசி கொண்டிருந்தார். தென் பாண்டி சீமையிலே பாடலும், இறுதியில் எல்லோரும் சேர்ந்து பாடிய மெட்லி பாடல்களில் துப்பாக்கி கையிலெடுத்து பாடலை பாடியதும் , MSV யின் எங்கே நிம்மதி பாடலில் வரும் ஆண்கள் கோரஸில் ராஜா சாரும் சேர்ந்து பாடியது எல்லாம் இப்போது நினைத்தாலும் கண் கலங்கும்.
10th, 11th 12th படித்த அந்த காலகட்டங்களில்(1985 - 1988) ராஜா சார் இசை அமைத்து வெளிவந்த அத்தனை படங்களையும் மாரிஸ், சோனா மீனா, ரம்பா ஊர்வசி, ஸ்டார், கலையரங்கம், காவேரி திரை அரங்குகளில் பார்த்த சுகம் இன்று வரை வேறெங்கும் கிடைத்ததில்லை. அப்போது பார்த்த படங்களையும், கேட்ட பாடல்களையும் பட்டியலிட்டால், படிக்க யாருக்கும் நேரமிருக்காது.
ராஜா சாரை என் ஆழ் மனதில் பதித்த இலங்கை மற்றும் விவித்பாரதி ரேடியோவும், பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்த ஒரு ஆசிரியரின் டேப் ரிக்கார்டரும், டி கடையில் ஓசியில் படித்த தினதந்தியில் ராஜா சார் வேலை செய்த திரைபட விளம்பரங்கள், செய்திகள் மற்றும் தேவி வார இதழில் ராஜா சார் பற்றிய வாழ்கை கதை - எதுவும் மறக்கவில்லை.
அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள். நான் வளர்ந்தும் பக்குவ படாததால், மல்லுக்கு நிற்க தோன்றுகிறது.
ஒரு 30 வயது குறைந்து போய் மறுபடியும் டீன் பருவத்தில் காலடி வைத்து திருச்சி வீதிகளில் அலைந்து திரிந்து ராஜா சாரின் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு, இருட்டு கடைகளில் பரோட்டா சால்னா சாப்பிட ஆசையாய் இருக்கிறது..
rajaramsgi, Cant agree with you more. I studied in Campion,Trichy and was in the hostel from 6th to + 2 , from 1980 to 1988. My parents used to come once a month to see us and during each of this visits we would go to at least 3 movies during a weekend and more than 90% of these movies had IRs music. I had a sanyo pocket radio and used to listen to his songs with earphone keeping it under the pillow ( as the school was very strict).My memory of these movies some of them completely forgotten now is mainly due to his music.I even remember in which of these theatres i saw each movie , e.g. Mina - poove poochoodava , sona - payanangal mudivathillai etc. Ungal list il kohinoor , sippy vittuteengalae. Sippyil mostly english movies played but movies like my dear kuttichaathaan , manithanin marupakkam also released. We used to be so disappointed if we did not get tickets for a movie we wanted to watch. I also remember very well how we used to go around burma bazaar for audio cassettes( they used to have 3- 4 movies songs in a single cassette for 20 Rs) surprisingly the audio quality was good.Sometimes when I feel low i really wish , i could go back to those kavalai illaadha days, watch movies and eat in Guru , kanchana or kavitha ( around trichy bus stand)I was also in London until last year , moved to chennai now.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
K thanked for this post
K liked this post
-
9th August 2014, 01:53 PM
#93
Junior Member
Devoted Hubber
மகேஷ்,
கோஹிநூரையும், சிப்பியையும், சில பல சம்பவங்களையும் நினைவு படுத்தி என்னை பாடாக படுத்தி விட்டீர்கள்.
மை டியர் மார்த்தாண்டன் தஞ்சை ராணி பாரடைசில்.. (அப்போது தஞ்சை புனித அந்தோனியாரில் பள்ளி படிப்பு.)
கோஹிநூரில் ஏதோ கொலை நடந்து விட்டது என்று யாரோ ஊத்தி போட அந்த பக்கமே போவதில்லை நான்
அங்கு ரிலீசான ராஜா சார் படங்களை எல்லாம் அப்போதே திருட்டு vcrல் நல்ல பிரிண்டில் பார்ப்பது வழக்கம்
சிப்பியில் உங்களை போன்றே நானும் மனிதனின் மறுப்பக்கம் பார்த்தேன். ஜப்பானில் கல்யாணராமன் கூட அங்கு தான். மெயின் கார்ட் கேட் போய், அங்கிருந்து சிப்பி அரங்குக்கு மாரிஸ் பெரிய பாலம் மற்றும் தில்லை நகர் ரோடு வழியாக செல்லாமல் குறுக்கே ரயில்வே ட்ராக் தாண்டி போவது வழக்கம். சிப்பில் மட்டும் தான் அப்போது ஒழுங்காக படம் முடியும் வரை a/c போடுவார்கள்.
கால் நடையாகவே சிந்தாமணியிலிருந்து மார்கட் வழியாய் சோனா மீனா நடந்து சென்று பூவே பூச்சூடவா பார்த்ததை மட்டுமில்லாமல் உடன் வந்த நண்பர்களையும் நினைக்க வைத்துவிட்டீர்கள். முதல் மரியாதை மாரிஸ் திரை அரங்கில் முதல் நாள் முதல் ஆட்டமும், அதே நாள் மதியம் உயந்த உள்ளம் காவேரியில் பார்த்து விட்டு வந்து ஹாஸ்டல் வார்டனிடம் வாங்கி கட்டி கொண்டேனே..
காசட் வாங்கியது.. ஐயோ. தினத்தந்தியில் காசட் ரிலீஸ் என்று போட்டதும் அன்றே சிங்காரதோப்பு சென்று காசட் வாங்கிய நாட்களை என்ன சொல்ல? தேவை இல்லாமல் என் எண்ண அலைகளை தூண்டி விட்டு விட்டீர்கள். எங்கெங்கு சென்றாலும் ஏதோவது ஒரு மூலையிலிருந்து அப்போதெல்லாம் ராஜா சாரின் பாடல்கள் ஒழித்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பஸ் ஸ்டாண்டில், கிளாஸ் கட் அடித்து விட்டு மெல்ல திறந்தது கதவு பாடல்களை கேட்டு கொண்டே முதல் முறை அடித்த திருட்டு தம், ஆஹா....
ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட் எல்லாம் இந்த கால கட்டத்தில் தான் வந்தது. இன்று வெளியீடு என்று வந்த பேப்பர் விளம்பரங்கள் எல்லாம் ஊரில் பத்திரமாக வைத்திருக்கிறேன்
வேதம் புதிது அப்போது ரிலீஸ் டயம் . எம்.ஜி.ஆர் இறந்து விட்டதால் ரெண்டு மூன்று நாட்கள் தள்ளி மாரிசில் ரிலீஸ் செய்தார்கள். படத்தை பற்றி ஏக பில்ட் அப் . வைரமுத்துவால் பிரச்சனை ஏற்பட்டு பாரதிராஜாவும் ராஜா சாரும் பிரிந்து எல்லா தினசரி வார இதழ்களிலும் அசிங்க படுத்தி கொண்டார்கள். ராஜா சார் இசை இல்லை என்பதால் படம் பார்க்க விருப்பமே இல்லை.. ஆனால், எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் பற்றி தமிழ் நாடு அரசு செய்தி சுருள் வழியாய் வெளியிட்டிருந்தார்கள். வைரமுத்து எழுதி, பாரதிராஜா படம் பண்ணி ராஜா சார் இசை அமைத்து பாடி வெளியிடப்பட்ட அந்த செய்தி சுருள் வேதம் புதிதுக்கு முன்னர் காட்ட பட்டதால் தினந்தோறும் சென்றேன் பார்க்க. நான் பார்க்க கூடாது என்று நினைத்த வேதம் புதிது இதனால் பலமுறை பார்க்க நேரிட்டது.
என் சொந்த கதைகளை உங்களிடம் அளந்து விட்டதால். மன்னிக்கவும் . இப்போதெல்லாம் என் மனைவியிடம் ராஜா சார் பற்றி பேசினாலே டார்ச்சர் பண்ணாதீர்கள் என்று காதை மூடி கொள்கிறார். அதான் கொஞ்சம் எல்லை மீறி விட்டேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டால் ராஜா சார், ராஜா சார் என்று சட்டை பியித்து கொண்டு அலைவேணாம், மனைவி சொல்கிறார்.
-
10th August 2014, 09:39 PM
#94

rajaramsgi, I enjoyed reading this post . engal veetilum ennai ilayaraja paithiyam endruthaan solluvaarhal. Since I was in the hostel ungalipol veliyil nadakkum programmesukku pogamudiyaathu. Aanal yaarukkum theriyamal nanabargaludan cinemavukku pona anubavangal niraya. andha vayasil adhu oru bayam kalandha thrill . Maatikondal dharma adi thaan . Idhe timela vandha oru non film album , was it geethanjali?
-
11th August 2014, 02:50 AM
#95
Junior Member
Devoted Hubber
"அன்னக்கிளியின்" #கிளி
என்ன அசத்தலான ஆரம்பம்..!!
-
12th August 2014, 08:53 AM
#96
Junior Member
Devoted Hubber
மனம் ஒரு கோழி முட்டை
2013 ஆம் ஆண்டில் ஒரு நாள் லண்டனில் இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராஜா மேடைக்கு வருகிறார். எனது நண்பர் ஒருவருக்குப் பக்கத்தில் இருந்த சக நண்பர் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார் இப்படி,
"மச்சான்! உந்த மனுஷன் மட்டும் இல்லையென்றால் நான் சந்தித்த கஷ்ட நஷ்டங்களை நினைச்சு எப்பவோ எனக்கு விசர் பிடித்திருக்கும்"
வியாபாரத்தில் நொடித்துப் போன அந்த நண்பரின் மனதை ஆற்ற இங்கே இசை தான் துணை நின்றிருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்கிறர்கள் என்ற பிரமை எப்போதும் தாயகத்தில் உள்ளோருக்கு இருக்கும் ஒரு பார்வை. இன்னொரு பக்கத்தை யாரும் அறியவே தெரியவோ விரும்புவதில்லை. எனது நாளாந்த வேலைக்கான ரயில் பயணத்தில் மாதத்தில் ஒரு தடவையேனும் விநோதமான மனிதர்களைச் சந்திப்பது வழமை. நன்றாக உடை உடுத்தியவர்கள், இன்னும் சிலர் பார்ப்பதற்கு உயர் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனக்குத் தானே பேசிச் சிரிப்பதும், திடீரென வீதியில் நின்று உரக்கக் குரல் எழுப்புவதுமாகக் கண்டிருக்கிறேன். அதில் ஒரு சிலர் இலங்கையில் இருந்து பயணப்பட்டவர்கள் என்பதை வெள்ளிடை மலையாக உணர முடிந்தது.
ஒருமுறை சிட்னியில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் மதிய வேளை ஒரு சந்துக்குள்ளால் நடந்து வந்தேன். தன்னைச் சுற்றி நான்கைந்து பியர் போத்தல்களை அடுக்கிவிட்டு, தனக்குத் தானே உரக்கப் பேசிச் சிரிப்பதும் பின்னர் குடிப்பதுமாக இருந்தான் ஒரு தமிழ் இளைஞன். சமீபத்தில் இருந்து தான் இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான் என்பதை அவன் பேசிய பேச்சில் வந்து விழுந்த உரையாடல் பகுதி மூலம் உணர்ந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் அவனைப் பற்றி விசாரித்தேன் யாருக்கும் தெரியவில்லை. அவனை நானும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு வரவில்லை.
புலம்பெயர்ந்து பத்து, இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருபவர்களுக்கு வேறு விதமான சிக்கல் என்றால், சமீப ஆண்டுகளில் வந்தோர் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை 20 ஆண்டுகளாக வாழ்பவருடன் ஒப்பிட்டு வாழ முற்படும் போது தேவைகளும், நெருக்கடிகளும், மன அழுத்தங்களும் அதிகமாகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் வானொலி நிகழ்ச்சியை முடித்த பின்னர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர் நோக்கும் சிக்கலோடு வருபவர்கள் என்னுடைய ஆலோசனையைக் கேட்டு வந்ததும் உண்டு. என்னாலான ஒத்தடத்தை நான் கொடுத்துவிடுவேன். ஆனால் தம்முடைய மன ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வாக கவுன்சிலிங் எனப்படும் உள வள நிலையங்களின் ஆலோசனையைத் தேடிப் பெறும் போக்கு நம்மவரிடையே பெரும் தயக்கமான ஒன்றாகவே இருக்கிறது.
அங்கே போனால் எனக்கு விசர் பிடித்துவிட்டது என்று நினைப்பினம் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் வெளி நாடுகளில் இவற்றின் பங்கு வெகு அவசியமானது என்பதை நம்மவர் உணர்வதில்லை. ஒருவர் தன் பிரச்சனையை மற்றவரிடம் சொல்லும் போது பிரச்சனை கண், காது, மூக்கு வளர்த்து எல்லா இடமும் பரவிவிடுவதும் நம் சமூகத்தின் ஒரு கேடு அதனாலேயே பலர் பிரச்சனைகளைத் தமக்குள் பூட்டி வைக்கிறார்கள். அது வெடித்துக் கிளம்பும் போது தம் வசமிழந்து விடுகிறார்கள்.
யாருக்குத் தான் பிரச்சனையில்லை? ஆனால் அந்தப் பிரச்சனைகளோடு வாழ்வதற்குப் பதில் நம் மனதை வேறு திசைக்கு அனுப்ப வேண்டும். நல்ல இசையைக் கேட்க வேண்டும், மனதுக்கு உகந்த எழுத்துகளைப் படிக்க வேண்டும். மனம் ஒரு கோழி முட்டை போன்றது. அது உடைந்தால் உடைந்தது தான்.
இன்று காலை ஹாலிவூட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இன் அகால மரணச் செய்தியைக் கேட்ட போதுதான் இந்த வாரம் முழுதும் என்னுள் சுற்றிய மனவுணர்வின் வெளிப்பாடே மேற்கண்ட பத்தி.
-Kana Praba
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 08:55 AM
#97
Junior Member
Devoted Hubber
"பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!
thiruvannamalai.jpg
-
13th August 2014, 02:34 PM
#98
Junior Member
Devoted Hubber

Originally Posted by
poem
"பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!
ராஜா சாரை பாராட்டி பேசி எல்லோரையும் படுத்தி எடுக்காமல், இந்த நான்கு கவிஞர்களும், அவருடைய படைப்புகளை பற்றியும் சில பல சுவராசியமான தகவல்களையும் அள்ளி தந்தால் .சிறப்பாக இருக்கும். இல்லையேல் இது வெறும் நிகழ்ச்சியாக போய் விடும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 05:17 PM
#99
Senior Member
Seasoned Hubber
Yuvan's interview. He talks about IR as well. Mostly frank answers!
http://timesofindia.indiatimes.com/e...w/40121011.cms
thanks,
Krishnan
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 05:17 AM
#100
Junior Member
Devoted Hubber

Originally Posted by
rajaramsgi
ராஜா சாரை பாராட்டி பேசி எல்லோரையும் படுத்தி எடுக்காமல், இந்த நான்கு கவிஞர்களும், அவருடைய படைப்புகளை பற்றியும் சில பல சுவராசியமான தகவல்களையும் அள்ளி தந்தால் .சிறப்பாக இருக்கும். இல்லையேல் இது வெறும் நிகழ்ச்சியாக போய் விடும்.
You are very right on that !! Most of the time Raaja is not the problem, but the people who surrounded him...........mmm.sigh
Bookmarks