-
9th August 2014, 01:53 PM
#11
Junior Member
Devoted Hubber
மகேஷ்,
கோஹிநூரையும், சிப்பியையும், சில பல சம்பவங்களையும் நினைவு படுத்தி என்னை பாடாக படுத்தி விட்டீர்கள்.
மை டியர் மார்த்தாண்டன் தஞ்சை ராணி பாரடைசில்.. (அப்போது தஞ்சை புனித அந்தோனியாரில் பள்ளி படிப்பு.)
கோஹிநூரில் ஏதோ கொலை நடந்து விட்டது என்று யாரோ ஊத்தி போட அந்த பக்கமே போவதில்லை நான்
அங்கு ரிலீசான ராஜா சார் படங்களை எல்லாம் அப்போதே திருட்டு vcrல் நல்ல பிரிண்டில் பார்ப்பது வழக்கம்
சிப்பியில் உங்களை போன்றே நானும் மனிதனின் மறுப்பக்கம் பார்த்தேன். ஜப்பானில் கல்யாணராமன் கூட அங்கு தான். மெயின் கார்ட் கேட் போய், அங்கிருந்து சிப்பி அரங்குக்கு மாரிஸ் பெரிய பாலம் மற்றும் தில்லை நகர் ரோடு வழியாக செல்லாமல் குறுக்கே ரயில்வே ட்ராக் தாண்டி போவது வழக்கம். சிப்பில் மட்டும் தான் அப்போது ஒழுங்காக படம் முடியும் வரை a/c போடுவார்கள்.
கால் நடையாகவே சிந்தாமணியிலிருந்து மார்கட் வழியாய் சோனா மீனா நடந்து சென்று பூவே பூச்சூடவா பார்த்ததை மட்டுமில்லாமல் உடன் வந்த நண்பர்களையும் நினைக்க வைத்துவிட்டீர்கள். முதல் மரியாதை மாரிஸ் திரை அரங்கில் முதல் நாள் முதல் ஆட்டமும், அதே நாள் மதியம் உயந்த உள்ளம் காவேரியில் பார்த்து விட்டு வந்து ஹாஸ்டல் வார்டனிடம் வாங்கி கட்டி கொண்டேனே..
காசட் வாங்கியது.. ஐயோ. தினத்தந்தியில் காசட் ரிலீஸ் என்று போட்டதும் அன்றே சிங்காரதோப்பு சென்று காசட் வாங்கிய நாட்களை என்ன சொல்ல? தேவை இல்லாமல் என் எண்ண அலைகளை தூண்டி விட்டு விட்டீர்கள். எங்கெங்கு சென்றாலும் ஏதோவது ஒரு மூலையிலிருந்து அப்போதெல்லாம் ராஜா சாரின் பாடல்கள் ஒழித்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பஸ் ஸ்டாண்டில், கிளாஸ் கட் அடித்து விட்டு மெல்ல திறந்தது கதவு பாடல்களை கேட்டு கொண்டே முதல் முறை அடித்த திருட்டு தம், ஆஹா....
ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட் எல்லாம் இந்த கால கட்டத்தில் தான் வந்தது. இன்று வெளியீடு என்று வந்த பேப்பர் விளம்பரங்கள் எல்லாம் ஊரில் பத்திரமாக வைத்திருக்கிறேன்
வேதம் புதிது அப்போது ரிலீஸ் டயம் . எம்.ஜி.ஆர் இறந்து விட்டதால் ரெண்டு மூன்று நாட்கள் தள்ளி மாரிசில் ரிலீஸ் செய்தார்கள். படத்தை பற்றி ஏக பில்ட் அப் . வைரமுத்துவால் பிரச்சனை ஏற்பட்டு பாரதிராஜாவும் ராஜா சாரும் பிரிந்து எல்லா தினசரி வார இதழ்களிலும் அசிங்க படுத்தி கொண்டார்கள். ராஜா சார் இசை இல்லை என்பதால் படம் பார்க்க விருப்பமே இல்லை.. ஆனால், எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் பற்றி தமிழ் நாடு அரசு செய்தி சுருள் வழியாய் வெளியிட்டிருந்தார்கள். வைரமுத்து எழுதி, பாரதிராஜா படம் பண்ணி ராஜா சார் இசை அமைத்து பாடி வெளியிடப்பட்ட அந்த செய்தி சுருள் வேதம் புதிதுக்கு முன்னர் காட்ட பட்டதால் தினந்தோறும் சென்றேன் பார்க்க. நான் பார்க்க கூடாது என்று நினைத்த வேதம் புதிது இதனால் பலமுறை பார்க்க நேரிட்டது.
என் சொந்த கதைகளை உங்களிடம் அளந்து விட்டதால். மன்னிக்கவும் . இப்போதெல்லாம் என் மனைவியிடம் ராஜா சார் பற்றி பேசினாலே டார்ச்சர் பண்ணாதீர்கள் என்று காதை மூடி கொள்கிறார். அதான் கொஞ்சம் எல்லை மீறி விட்டேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டால் ராஜா சார், ராஜா சார் என்று சட்டை பியித்து கொண்டு அலைவேணாம், மனைவி சொல்கிறார்.
-
9th August 2014 01:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks