அய்யா வந்துட்டிங்களா மறுபடியும் சண்டை கட்ட? நான் மறுபடியும் மறுபடியும் சொல்வேன். இளையராஜா சொன்னதை தவறாகவே அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள். முன்பாவது ஒரளவு இசை சம்பந்தப் பட்ட விஷயத்தில் ( ராஜா ஒரு தன்னிகறறவர் என ஏன் நான் நினைக்கிறென் - திரியில் ) முரண்டு பிடித்தீர்கள்.. அப்போது இசை பற்றிய கருத்துக்களை/அபிப்ராயங்களை எடுத்து வைத்தும் எங்கும் உரையாட முன்வரவில்லை.. எனக்கு எல்லாமே தெரியும், ராஜா ரசிகர்களை விட என்ற ஒற்றைப் பரிமாணத்திலேயே உங்களது பதிவுகள் இருந்தது. இப்போது ராஜா அடுத்தவர்களை விமர்சித்து பேசியது என்பது உங்களுக்கு ஒரு தோதான கருத்துக்களம். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ராஜா மீதான உங்களது அபிப்ராயங்களுக்கு தீனி போடும்வகையில் / அல்லது எரியிற தீயில் எண்ணையை ஊற்றும் வகையில் வந்துள்ளது. வசமா சிக்கிட்டான்யா என வசைமாறி பொழியவேண்டியதுதான்!





Reply With Quote
Bookmarks