Page 92 of 400 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #911
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE][FONT=Tahoma]
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,


    [B]ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

    ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது

    1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    [/FONT
    ]
    Dear Murali Srinivas Sir

    Well said Sir. Superb and Tremendous Reply

    In Entire Tamil Cine Field NOBODY HAS GUTS TO RELEASE HIS TWO FILMS ON SAME DAY.

    THIS IS BOLDLY DONE BY GREAT SINGA TAMIZHAN SIVAJI AND NOT ONLY ONCE BUT ALSO SEVERAL TIMES

    DONT TRY TO COMPARE WITH NADIGAR THILAGAM

    Last edited by SPCHOWTHRYRAM; 14th August 2014 at 05:09 PM.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #912
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    A o = 23 வது housefull வாரம் . மயக்கமே வருது.
    நேற்று சென்னை வந்த பொது, மாலையில் ப்ரீயாக இருந்த பொது, ao செல்லாம் என்று முடிவு செய்து , சத்யம் சென்று, 15 பேர் கூட இல்லாலதால் ஜிகிர்தண்டாவை பருகி விட்டு வந்து விட்டேன்.
    Dear Sir

    POWER STAR IN LATHIKA - 100 DAYS at CHENNAI

    DEVAYANI RAJAKUMARAN IN THIRUMATHI THAMIZH - 110 DAYS at CHENNAI

    YOU KNOW VERY WELL BOTH THE FILMS NOT EVEN RUN 10 DAYS IN ANY OTHER CITI IN TAMILNADU BUT BOTH 100 DAYS IN CHENNAI

    LIKE THAT THIS FILM ALSO RUNNING AT CHENNAI AND ENJOYING BY THEM. WE DONT WANT THIS KIND OF 100 DAYS, 150 DAYS AND 175 DAYS
    Last edited by SPCHOWTHRYRAM; 14th August 2014 at 05:19 PM.

  5. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij liked this post
  6. #913
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    எங்கேயோ எப்பவோ படித்தது . அவர் நடித்த படங்கள் 136 (before dealth) அண்ட் 2 படங்கள் (after death). மொத்தம் 138 படங்கள்.
    12 வெள்ளி விழா படங்கள்
    74 நூறு நாட்கள் படங்கள்
    51 சராசரி வெற்றி படங்கள்
    1 தோல்வி படம்
    138 மொத்தம்

    என் தங்கை என்ற படம் 350 நாட்கள் மேல் ஓடிய படமாம்.

    பிரமிக்க வைக்கும் சாதனைகள்.

    அந்த 1 தோல்வி படம் எந்த படம் ?

    (காதல் வாகனம் என்ற ஒரு படம் தான் தோல்வி படம் என்று படித்ததுண்டு . இந்த படமும் 50 நாட்கள் மேலாக ஓடியதாம்). அப்படியானால் எந்த படமும் தோல்வி இல்லை. 138 படங்களும் வெற்றி படங்களே. ஒரு தோல்வி படமே 50 நாட்கள் மேல் ஓடியது என்றால் , மற்ற 137 படங்களை பற்றி கேட்கவே வேண்டாம்

    தலைவன், பட்டிகாட்டு பொன்னையா , நவரத்தினம் , நீரும் நெருப்பும், அன்னமிட்டகை, ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் எல்லாம் வெற்றி வசூலை வாரி வழங்கிய படங்களா ?

    அங்கே பதிவு செய்தால் , அந்த ஒரு படமும் வெற்றி படமே என்று தான் கூறுவார்கள்.
    ரிலீஸுக்கு முன்பாகவே 'மாபெரும் வெற்றிச்சித்திரம்' என்று விளம்பரம் செய்தவர்களாயிற்றே!!! இதெல்லாம் இவர்களுக்கு சர்வ சாதாரணம்.

  7. #914
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவன், பட்டிகாட்டு பொன்னையா , நவரத்தினம் , நீரும் நெருப்பும், அன்னமிட்டகை, ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் எல்லாம் வெற்றி வசூலை வாரி வழங்கிய படங்களா ?

    There was a period in Tamil Cinema when Graphics was at its very primitive stage due to the absence of computer technologies and Vittalaachaarya films (thanks to Ravikanth Nigaich and Babubai Mistry's special effects,I presume) were the centre of attraction! At that time the film 'Thalaivan' was released. It was really astonishing to see the 'innovative' titles of this film with two skeletons dancing.....claps for every frame till the titles ended with direction by Singamuthu. After that .... one by one continued to vacate the movie hall and after interval the movie hall was almost empty...such was the quality, content, story telling of that movie!! Particularly in one scene where the hero in a yoga posture flies up like a helicopter just by closing his eyes (divine concentration!)....the entire hall was burst into such a laughter in chorus, the world has never seen before!!
    Last edited by sivajisenthil; 14th August 2014 at 05:58 PM.

  8. #915
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

    எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

    வசூல் பற்றிய புள்ளி விவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் முதலிடம் என்பதை நாங்கள்சொல்கிறோம். எம்ஜிஆர் என்றுமே வசூலில் சக்கரவர்த்தி, என நாடும் ஏடுகளும் போற்றியுள்ளார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அந்த காலத்தில் வெளியான "பொம்மை" மற்றும் "பேசும் படம்" முதலான
    பத்திரிகைளில் செய்திகள் பிரசுரமாயின.

    நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை கூறினீர்கள் . சரி கடந்த காலத்தில் உங்கள் நண்பர்கள் பதிவில் தவறான தகவல்கள் இருந்ததை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

    1. பராசக்தி - அதிக நாட்கள் ஓடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

    2. இரும்பு திரை - வெள்ளிவிழா - எந்த ஆதாரமும் இல்லை .

    3. நூறு நாட்கள் ஓடாத பல படங்களை 100 நாட்கள் ஓடியதாக பட்டியல் போட்டு உள்ளார்கள் . உதாரணத்துக்கு சில .... (நீதி - ராஜ ராஜ சோழன் - திருடன் -
    விளையாட்டு பிள்ளை -ராஜபார்ட் ரங்கதுரை.) இது போன்று பல படங்களை குறிப்பிட முடியும்.

    4. எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு ஒரு போட்டியே இல்லை என்று உங்கள் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நாங்களும் அதைத்தானே கூறி வருகிறோம். எம். ஜி. ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த நடிகர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதே உண்மை. ஏன் என்றால், திரு., சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே மக்கள் திலகம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியதுமில்லாமல், அவருக்கு முன்பே "மதுரை வீரன்" வெள்ளிவிழா படத்தினை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர். பின்பு, ஜெமினி கணேசன் நடிப்பில் " கல்யாண பரிசு" வெள்ளி விழா கொண்டாடியது. அதற்கு பிறகுதான் "பாகப்பிரிவினை" வெள்ளி விழா கொண்டாடியது.

    5. பராசக்திக்கு பிறகு மனோகரா - வீரபாண்டிய கட்ட பொம்மன் - பாகப்பிரிவினை - பாசமலர் - பாவமன்னிப்பு - ஆலயமணி - படித்தால் மட்டும் போதுமா - நவராத்திரி - கைகொடுத்த தெய்வம் - திருவிளையாடல் - சரஸ்வதி சபதம், போன்ற படங்கள் வெற்றி பெற்றதை நாங்களும் அறிவோம் . ஆனால் உடனுக்குடன் எங்கள் நாயகன் எம்ஜிஆர் படங்கள் வந்து வசூலிலும், ஓட்டத்திலும் உங்கள படங்களின் சாதனைகளை வென்றதை மறுக்க முடியுமா ?

    6. 1965 முதல் 1977 வரை - 13 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் வசூல் - சாதனைகள் ஒப்பீடு செய்தால் எங்கள் எம்.ஜி.ஆர். எல்லா விதத்திலும் முதலிடம் பெற்று இருந்தார் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

    இரவு பகலாக பல படங்களில் சிவாஜி நடித்தார் . போதிய இடைவெளி இன்றி படங்களை வெளியிட்டார் .என்று நீங்கள் சொல்லலாம் . 1971ம் ஆண்டில் மட்டும் திரு. சிவாஜிகணேசன் அவர்களுக்கு 7 தோல்வி படங்கள் . சென்னை சாந்தி மற்றும் திருச்சி -பிரபாத், இரண்டும் உங்கள் திரை அரங்கம் என்பதை
    சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

    புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

    எவர் கிரீன் ஹீரோ - MATINEE IDOL என்று அழைக்கப்பட்டவர் - எங்கள் எம்.ஜி.ஆர். ஒருவரே !

    திரு. சிவாஜி கணேசன், சிறந்த நடிகர்களில் ஒருவர் என நாங்கள் மறுத்தது கிடையாது. ஏன் என்றால் .நாங்கள் ஏற்றுகொண்ட தலைவன் எம். ஜி. ஆர்.
    அவர்களே பல முறை இதனை கூறி இருக்கிறார். மேலும், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " தில்லானா மோகனாம்பாள் " திரைப்படத்தை அயல் நாட்டு
    கலைஞர்கள் மற்றும் மற்றும் குழுவினர் தமிழகம் வந்த போது அவர்களுக்கு திரையிட்டு காண்பித்த பெருந்தன்மை எங்கள் கலைவேந்தனுக்கு உண்டு. சில
    சாதனைகள் செய்து உள்ளார் .நம்புகிறோம் .

    தமிழகத்தின் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் :"எங்கள் வீட்டு பிள்ளை" புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். அவர்கள் 1977ம் ஆண்டில்,
    திரையுலகை விட்டு விலகும் வரை இந்த சாதனை முறியடிக்கப்பட வில்லை. அவ்வாறே 25 அரங்குகளில் (தமிழகம், கர்நாடகம், இலங்கை உட்பட) 100 நாட்கள் ஓடிய கலைவேந்தனின் காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

    சென்னை மாநகரில் குளிர் சாதன வசதி பொருந்திய சாந்தி அரங்கில் வெளியிடப்பட்ட பல படங்களின் அதிக நாட்கள் வசூலை மிக குறுகிய நாட்களிலேயே
    எங்கள் மக்கள் திலகத்தின் "ரிக்ஷாக்காரன்" படம் முறியடித்தது. அதே போன்று அந்த காலத்தில், சென்னை "சத்யம்" அரங்கில் வெளியான அனைத்து
    படங்களின் வசூலையும், புரட்சித்தலைவரின் "இதயக்கனி" திரைப்படம் முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.

    இவ்வளவு ஏன் ? திரு. சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்த திரு. முக்தா சீனிவாசனே, பல நடிகர்களின் பல வெற்றிப்படங்களை, மக்கள் திலகத்தின் சாதாரண படங்களே புறந்தள்ளிவிட்டதை "இதயக்கனி" வெற்றி விழாவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். இத்தனைக்கும், அவர் ஒரு கரை கண்ட மூத்த சினிமா தயாரிப்பாளர். (புரட்சித் தலைவர் அவர்களை வைத்து எந்த படமும் தயாரிக்காதவர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது)

    எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவருக்கு, ஆதரவான - சாதகமான சூழ்நிலைகள்
    என்று பார்த்தல் சொற்ப வருடங்களே ! (1967 - 1971 வரை) அரசியலில் அவர் தி.மு.க. வை சார்ந்திருந்த காரணத்தால் அன்றைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தொந்தரவுகளும் இருந்தன. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1976 வரை அவர் சந்திந்த இன்னல்களும், கொடுமைகளும் என்னென்று சொல்வது) (நேற்று-இன்று-நாளை மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த இரு படங்களையும் அவர் வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே ... அப்பப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தால், நமக்கு திரையுலகமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று அந்தர் பல்டி அடித்து ஓடியிருப்பார்கள் அல்லது சரணாகதி அடைந்திருப்பார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியது. )

    1972ம் ஆண்டு புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது, நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் இருந்தார். அவரது காலத்து நடிகர்கள் பலரும், சக நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளாரே என்று அவரை ஆதரிக்கவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து அல்லது பாராட்டி ஓர் அறிக்கையோ விட முன் வராதது துரதிர்ஷ்டமே. அன்றைய ஆட்சியாளர்களை தனி ஒருவராக, ரசிகர்களின் ஆதரவை மட்டுமே நம்பி, எதிர் கொண்டார் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். இந்த நிலைமை வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு ஏற்பட்டிருக்குமாயின், முதல் ஆதரவுக்குரல் எங்கள் புரட்சி தலைவரிடமிருந்து தான் வந்திருக்கும்.

    ஆனால், திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு இது போன்ற எந்த நெருக்கடியும் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பையே சமாளித்து, மீறி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் எங்கள் எம். ஜி. ஆர். என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

    நான் சிவாஜி கணேசன் அவர்கள் மடியில் தவழ்ந்தவன் என்று இன்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் திரு. கமலஹாசன் அவர்கள் தனது "ராஜ பார்வை" 100 வது நாள் விழாவில், முதல்வராக இருந்த எங்கள் புரட்சித் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவ்விழாவில் உரையாற்றிய எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், " நானும், தம்பி கணேசனும் ஒன்றிலிருந்து நூறு வரை வந்து விட்டோம். எனவே, திரு. கமலஹாசன் அவர்கள் 101லிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று" இதயந்திறந்து கூறினார். அந்த மேடையில் விழாவில் அழைக்கப்படாத திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழக முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவருக்கு.

    எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவர்.
    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

    உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி, இதுதான் உண்மை. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி. ஆர். சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது. .

    உங்கள் அபிமான நடிகரின் சாதனைகளை நீங்கள் பதிவிட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் சாதனைகளை தெரிவிக்கும் போது அதில் குறுக்கீடு செய்வது, விதண்டா வாதம் புரிவது போன்றவைகளால் தான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. எனவே இத்துடன் முடித்துக் கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

    தொடரலாம் என்று நீங்கள் கருதினால் நானும் பழைய விவகாரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதற்கு வாய்ப்பு வழங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    அடங்கொப்புரானே சத்தியமாய் எம். ஜி. ஆர். வசூல் சக்கரவர்த்தி தான். இதை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி !



    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் .

    கலைவேந்தன்
    ஒரு நடிகர்திலகம் படம் 100 நாட்கள் ஓடுது. அதை ஒரு மக்கள் திலகம் படம் 101 நாட்கள் ஓடி வெற்றி கொள்கிறது.

    அடுத்து ஒரு நடிகர்திலகம் படம் 102 நாட்கள் ஓடுது (இது 101 நாட்கள் ஓடிய மக்கள் திலகம் படத்தை வெற்றி கொள்வதாக எடுத்துக்கொள்ளவே கூடாது!!! தப்பு!!!) அடுத்து ஒரு மக்கள் திலகம் படம் 103 நாட்கள் ஓடி 102 நாட்கள் ஓடிய நடிகர்திலகம் படத்தை வெற்றி கொள்கிறது.

    இது இப்படியே தொடர்ந்து இருவரும் நடித்துக் கொண்டிருந்த காலத்தி்ல் நடிகர் திலகத்தின் படங்களை மக்கள் திலகத்தின் படங்கள் வெற்றி கண்டுள்ளன!!! என்ன ஒரு அற்புதமான லாஜிக்!!! இந்த லாஜிக் இம்மா நாளும் புரியாம இருந்தது!!! புரியவச்ச கலைவேந்தனுக்கு நன்றியோ நன்றி!!!

  9. #916
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.
    நடிப்பம்சத்தைப் பொறுத்தவரை உங்கள் கதாநாயகர் என்றுமே ஊர்க்குருவிதான்

  10. #917
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    There was a period in Tamil Cinema when Graphics was at its very primitive stage due to the absence of computer technologies and Vittalaachaarya films (thanks to Ravikanth Nigaich and Babubai Mistry's special effects,I presume) were the centre of attraction! At that time the film 'Thalaivan' was released. It was really astonishing to see the 'innovative' titles of this film with two skeletons dancing.....claps for every frame till the titles ended with direction by Singamuthu. After that .... one by one continued to vacate the movie hall and after interval the movie hall was almost empty...such was the quality, content, story telling of that movie!! Particularly in one scene where the hero in a yoga posture flies up like a helicopter just by closing his eyes (divine concentration!)....the entire hall was burst into such a laughter in chorus, the world has never seen before!!

    தலைவன் பாலசுப்ரமணியாவில் வெளியிட, தெய்வமகன் கிருஷ்ணாவில் வெளியிட (இரண்டும் மறு வெளியிடு) நண்பன் DM க்கு அழைக்க (அவன் ந.தி.தின் தீவிர ரசிகன்). நானோ என் தலைவன் படத்தை பார்க்க தலைவன் சென்று, அந்த படத்தினால் அந்த தலைவனை வெறுத்து, இந்த தலைவனை தெய்வ மகனாய் கண்டேன். ந .தி என் தலைவனாக மாற்றியது இந்த தலைவனும் ஒரு காரணம்.

    என்ன இருந்தாலும் , என்னுடைய சிறு வயது தலைவன். 70'இல் அவருடைய பல படங்களை முதல் நாளே பார்த்ததுண்டு. ஆனால் ந தி எந்த படத்தையும் முதல் நாள் பார்த்தது இல்லை. Dr .சிவா , பாபு படத்தை தவிர.

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  12. #918
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நன்றி ! நன்றி !! கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி !!!
    முரளியை முரட்டுக்காளை ஆக்கியதற்கு .. என்னா போஸ்ட்டு ..சும்மா அதிருதுல்ல !!

  13. #919
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    நன்றி ! நன்றி !! கலைவேந்தன் அவர்களுக்கு நன்றி !!!
    முரளியை முரட்டுக்காளை ஆக்கியதற்கு .. என்னா போஸ்ட்டு ..சும்மா அதிருதுல்ல !!
    அதுதானே,நானே அரண்டு விட்டேன். அந்நியன் போல ஒரு split personality ஆகி விட்டார்னா பாருங்கள். எங்கள் தங்க ராஜா, பைரவன் ஆகி விட்டார்.(இனி ஸ்கூட்டர் விட்டு விட்டு பைக் வாங்கி விடுங்கள்)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #920
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நீயா நானா - சில எண்ணங்கள்

    நடிகர் திலகம் பற்றி ஒரு நீயா நானா நிகழ்ச்சி என்றதும் கலந்து கொளவதற்கு நண்பர் ஜோ அவர்கள் கொடுத்த ஒரு அலைபேசி எண் உதவியாக இருந்தது. ஆனால் format பற்றி தெளிவான தகவல் இல்லை. .

    கலந்து கொள்ள பதிவு செய்த ஆயிரக்கணக்கான sms-களில் எப்படி ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் என்பது புரியாத புதிர். மொத்தம் 50 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் வராதவர்களுக்கு பதிலாக வேறு சிலர் உட்கார வைக்கப்பட்டனர். [தெரிவு செய்யப்பட்டு வராதவர்களில் நமது பார்த்தசாரதியும் அடங்கும்]. இதை தவிர மற்றொரு நெருடல் அவர்களே சிலரை participant ஆக plant செய்தது. அதில் ஒரு DFT course படித்த ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர், காட்சி பிழை இதழ் ஆசிரியர் மற்றும் நீயா நானாவில் ரெகுலராக இடம் பெறும் ஒருவர்.

    நிகழ்ச்சி எப்படி என்றால் mixed bag என்று சொல்வார்களே அது போல.

    Debate இல்லை என்றான பிறகு நிகழ்ச்சியின் வடிவம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒரு தெளிவின்மை

    நடிகர் திலகம் என்ற மகா கலைஞனை மாபெரும் ஆளுமையை எப்படி இந்த நிகழ்ச்சி முன் நிறுத்த வேண்டும் என்பதில் குழப்பம்

    கோபிநாத்தின் கேள்விகள் மூலமாகவேதான் நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அந்த கேள்விகளை தயாரிப்பதில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

    70-களின் மத்தியில் பிறந்த கோபிநாத் நடிகர் திலகத்தை பற்றி நேரிடையான அனுபவம் இல்லாதவர். முழுமையாக அறிந்தவர் அல்ல. அப்படி உள்ள ஒருவர்தான் வர வேண்டும் என்று சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் முன் வந்து கேள்விகளை தொடுத்திருக்கலாம். ஆனால் நிகழ்ச்சி நடத்த வருபவர் சற்று home work செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

    ஆனால் அவர்களைப் பொறுத்தவரை கலந்து கொள்பவர்களின் விஷயஞானத்தை விட வெகு ஜன ஈர்ப்பு என்பதற்கே முக்கியத்துவம் என்று தோன்றுகிறது.

    மேலும் பங்கு பெறும் அனைவரும் ஓரிரு வரிதான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் (மைக்கை அவர்கிட்டே கொடுங்க என்ற கோபியின் பதிவு instructions). ஆனால் அவர்கள் அழைத்து வந்தவர்களை இது போன்ற கட்டுப்பாடு இல்லாமல் பேச அனுமதிப்பது

    பங்கு பெறுவோர் மிக அழகாக பதில் சொல்லக்கூடிய கேள்விகளை கூட அழைத்து வருபவர்களிடம் கேட்பது [சிவாஜி படங்களில் உங்களுக்கு பிடித்த காட்சியை சொல்லுங்க]

    அதே போல் பங்கு பெற்றவர்களும் சில நேரங்களில் தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்று காண்பித்த துடிப்பு. ஒரு படத்தின் காட்சியைப் பற்றி பேச சொன்னால் மூன்று படங்களைப் பற்றி பேசுவது, இதன் காரணமாக பேச விரும்பும் சிலருக்கு மைக் கிடைக்காமல் போவது [நண்பர் ஜோ அவர்கள் கூட ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.At times you need to take over the mike forcefully என்று]. ஆனால் தொலைக்காட்சி காமிராக்கள் உங்களின் ஒவ்வொரு சலனத்தையும் பதிவு செய்துக் கொண்டிருக்கும்போது மைக்கிற்காக கையை கையை நீட்டுவது மற்றொருவர் கையிலிருந்து வலுக்கட்டாயமாக எடுப்பது போன்றவை எந்த விதத்திலும் நமக்கு பெருமை சேர்க்காது என்பதனால் அதற்கு நாங்கள் முற்படவில்லை. நண்பர் சந்திரசேகர் ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் அறிமுகமானவர் என்பதனால் அவருக்கு எங்களை விட சற்று கூடுதலாக பேச நேரம் கிடைத்தது.

    இவை மனதை உறுத்திய சில நெருடல்கள்.

    நெருடல்கள் மட்டும்தானா என்றால் இல்லை நிச்சயம் பல சுவையான முந்திரிகளும் திராட்சைகளும் கிடைத்தன.

    மதுரை மாவட்ட மலையோர கிராமத்தில் பிறந்து சிறு வயது முதலே சிவாஜியின் ஆளுமையை ரசித்து ரசித்து 15 வயதில் திருமணம் செய்விக்க முடிவு செய்யப்பட்டு [பெண்ணின் விருப்பத்தையோ அல்லது சம்மதத்தையோ பற்றி கவலையேபடாத ஒரு சமூக அமைப்பில்] பெண் பார்க்க வந்த மனிதரை இடுக்கு ஜன்னல் கம்பிகள் வழியாக மட்டுமே பார்க்க முயற்சி செய்து டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் கேசம் மட்டும் கண்ணுக்கு தெரிய அது நடிகர் திலகத்தின் இயல்பான கேசம் போலவே சுருள் சுருளாக அமைந்திருந்ததை பார்த்தவுடன் சிவாஜியின் ஏதோ ஓரம்சம் இவரிடம் இருக்கிறது என்று சந்தோஷமாக கல்யாணத்திற்கு தயாரானதை வெள்ளந்தியாக மனந்திறந்து சொன்ன இன்றைய பள்ளி ஆசிரியை.

    இளம் வயதில் நடிகர் திலகத்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நாட்டிய பேரொளியையும் புன்னகை அரசியையும் பார்த்து பொறாமைப்பட்டதையும் அதன் பின் கல்யாணத்திற்கு பிறகு தன் கணவரை சிவாஜியாகவும் தன்னை பத்மினியாகவும் கற்பனை செய்துக் கொண்டு மகிழ்ந்ததையும் வெளிப்படுத்திய இன்றைய வயது முதிர்ந்த பெண்மணி

    கேள்வி பதிலில் வந்து விழுந்த சில ரசமான கமன்ட்கள்

    பிடிச்ச படம் வசந்த மாளிகை. ஏன்னா லவ் பண்ண பொண்ணு பேரு லதா. ஆனா பெயிலியர் ஆயிடுச்சு. wife பேர் லலிதா உடனே கோபியின் கமன்ட் பேரை மாத்தி கூப்பிட்டா கூட பிரச்சனையில்லை. செல்லமா கூப்ட்டேனு தப்பிச்சுக்கலாம்

    படம் பார்க்க சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த நிகழ்ச்சி. இதற்கு மதுரையை சேர்ந்த இரண்டு பேர் [உண்மையிலே அடித்தள பொருளாதார சமூகத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்கள்.. அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது] பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் சங்கடமாகவும் சுவையாகவும் இருந்ததன. அதிலும் ஒருவருக்கு சிந்தாமணி திரையரங்கில் நடந்த ஒரு நிகழ்வு அதே போன்று எனக்கும் நிகழ்ந்திருக்கிறது என்பதனால் உடனே relate பண்ண முடிந்தது.

    சிவாஜி மேல் உள்ள அன்பினால் செய்த பைத்தியகாரத்தனங்கள் பற்றி ரசிகர்கள் சொன்ன ரசமான நிகழ்வுகள்

    ஒவ்வொரு படத்திலும் அவர் போட்டு வருவது போல் சட்டைகள் தைத்து போடுவேன்

    கூட்டு குடும்பமானதால் ஆண்கள் 10 பேர் சுமதி என் சுந்தரி பொட்டு வைத்த முகமோ pattern சட்டையை மொத்தமாக துணி வாங்கி தைத்து தீபாவளிக்கு போட்டுக் கொண்டது.

    மறு வீட்டிற்கு மாமியார் வீட்டிற்கு செல்லாமல் சிவாஜி படத்தின் முதல் நாள் விழா ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டு இரண்டு நாள் கழித்து மனைவி வீட்டிற்கு சென்றது.

    கடைசி கமண்ட் சூப்பர். " என் மகள் பெயர் சாந்தி. மகன் பெயர் ராம்குமார்"

    இதற்கிடையில் ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் 16 பக்க வசனத்தை மனப்பாடமாக சொன்ன ரசிகர்

    சிறப்பு விருந்தினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பல்கலைகழக பேராசிரியர் ராமசாமி மற்றும் முனைவர் பட்டத்திற்காக நடிகர் திலகத்தை பற்றி தீசிஸ் (Thesis) செய்துக் கொண்டிருக்கும் மருது மோகன் ஆகியோர்.

    பேராசிரியர் ராமசாமி School of Drama மற்றும் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி கொடுப்பவர். அவர் எப்படி stanlaviski school of acting மற்றும் அதிலிருந்து வேறுபட்ட schools என்று சொல்லப்படுகின்ற மேலை நாட்டு நடிகர்கள் கடை பிடிக்கக் கூடிய நடிப்பு மாதிரிகள் அவற்றை பற்றியெல்லாம் தெரியாமலே நமது நடிகர் திலகம் எப்படி அதை வெவேறு படங்களில் கையாண்டார் என்பதைத்தான் அங்கே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக குறிப்பிட்டார். உடல் மொழி எப்படி ஒரே படத்தில் வெவ்வேறு பாணியில் செய்வார் என்பதற்கு திருவிளையாடல் படத்தில் நான்கு விதமான நடைகளை [ஈசன், புலவர், மீனவன் மற்றும் விறகு வெட்டி] மாணவர்களுக்கு போட்டுக் காட்டுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

    மருது மோகன் மனோகரா தர்பார் வசனத்தை சொல்லிக் காண்பித்து அதில் நடிகர் திலகம் பேசுவதாக வரும் "தளுக்குகாரியின் குலுக்கு மொழியில் மயங்கி நீங்கள் கோழை ஆகி விட்டிருந்தால்" என்ற வரிகளை குறிப்பிட்டு தமிழ்க்கு சிகரம் லகரம். அதில் மூன்று லகரங்களையும் ஒரே வரியில் [தளுக்கு குலுக்கு கோழை] எப்படி உச்சரிக்க வேண்டுமோ அப்படி உச்சரித்தார் நடிகர் திலகம் என்ற மோகன் அதற்கு அடித்தளம் அமைத்த நடிகர் திலகத்தின் ஆரம்ப கால நாடக வாழ்க்கையை பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். அதில் எப்படி அவர் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனப்பாடமாக சொல்வார் என்பதையும் அதனால் நாடகத்தில் தீடிரென்று யாராவது நடிக்க முடியாமல் போனால் அதை நடிகர் திலகமே ஏற்று நடிப்பார் என்றும் ஒரே சினிமாவில் பல வேடங்களில் நடிப்பதற்கு முன்பே ஒரே நாடகத்தில் 3, 4 வேடங்கள் போட்ட நடிகன் சிவாஜி என்றார். அதனால் கணேசனுக்கு மட்டும் லீவ் கிடையாது என்றார்.

    திருச்சி சிவா இது சிவாஜி பற்றிய நிகழ்ச்சி என்பதனால்தான் வந்ததாகவும் இலையென்றால் வந்திருக்க மாட்டேன் என்றார் [காரணம் மூன்று நாட்களுக்கு பிறகு தெரிந்தது]. நடிகர் திலகம் அவரது வாழ்நாளில் உயரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதை வருத்ததுடன் பதிவு செய்த சிவா நடிகர் திலகத்தின் வெவ்வேறு நடைகளைப் பற்றி மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்றார். பாவை விளக்கு படத்தில் காவியமா இல்லை ஓவியமா பாடலில் தாஜ்மகாலில் ஷாஜஹான் வேடத்தில் அவர் நடந்து வரும் அந்த ராஜநடை உண்மையில் அந்த ஷாஜஹானிடம் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகமே என்றவர் ஆலயமணி எஜமான் நடையழகை பார்த்தாயா காட்சியையும் சிலாகித்தார். எனக்கு இது. இது போல் பலருக்கும் அவர்கள் favourite இருக்கும் என்றார். இனியாவது நடிகர் திலத்கதிற்கு சிறப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் நாம் பெரிதாக பங்களிப்பு செய்ய முடியவில்லை. அதில் நமக்கு வருத்தமில்லை. ஒன்றே ஒன்று. நடிகர் திலகம் என்ற யுக கலைஞனை அவர்தம் பெருமைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு சீரிய முயற்சியாகவே இணையத்தையும் இந்த மய்யத்தையும் திரியையும் நாம் பார்க்கிறோம்,பயன்படுத்துகிறோம். இது தெரியாத பலருக்கும் இந்த செய்தியை சொல்ல இந்த நீயா நானா மேடை பயன்படும் என்று நினைத்தோம். அது போன்றே சென்னை வாழ் மக்களுக்காக நாம் நடத்தும் NT FAnS அமைப்பு பற்றியும் பகிர்ந்து கொள்ள நினைத்தோம். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    மற்றபடி உலக தமிழ் தொலைக்கட்சிகளிலே அதிக popular ஆன ஒரு talk show-வில் சினிமா பற்றி பேசாத ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் பற்றி ஒரு நிகழ்ச்சி வருவது அவர் இன்றைக்கும் கூட எந்தளவிற்கு relevant என்பதற்கு ஒரு அழுத்தமான சான்று. காரணம் அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாள சின்னம் அவர் என்பதனால். இனி வரும் காலங்களில் நடிகர் திலகம் பற்றி இது போன்ற பல நிகழ்ச்சிகள் மின் ஊடகங்கள் மூலமாக வருவதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்.

    இப்படி ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்த நீயா நானா தயாரிப்பாளர் Antony அவர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் டிவி நிறுவனத்திற்கும் கோபிநாத மற்றும் அவர்தம் குழுவினருக்கும் மனங்கனிந்த நன்றிகள் பல!

    இது நிகழ்ச்சி பற்றிய ஒரு முன்னோட்டமே! முழுமையாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும்போது கண்டு மகிழுங்கள்.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 14th August 2014 at 07:12 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •