Page 96 of 400 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #951
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for the information Mr Jeev. Karnan rocks all over the world.


    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #952
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்திய விடுதலை நாளை முன்னிட்டு சிறப்புப் பாடல்...

    கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என அன்று கப்பலோட்டிய தமிழனில் பாடிய வரிகள் இன்றும் பாடும் படியான சூழ்நிலை, மறைய வேண்டும்.
    எண்ணற்ற தியாகியரின் வேர்வையாலும் ரத்தத்தாலும் பெற்ற விடுதலையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோமா...சரியான முறையில் அதை காப்பாற்றியிருக்கிறோமா..

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாத பதில் கிடைக்கும் போது,, அந்த விடையினால் உள்ளம் மகிழ்ச்சியடையும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமே இந்த விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு சரியான பொருள் தரும்.

    1977ல் நடிகர் திலகம் நாம் பிறந்த மண் திரைக்காவியத்தில் கேட்ட கேள்வி இன்றும் உயிருடன் உலவுகிறது.

    இந்த சூழ்நிலையெல்லாம் மாறி பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேறும் நாளை ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்து இன்று விடுதலை நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Russellmai liked this post
  5. #953
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    சாது மிரண்டால் காடு கொள்ளாது..
    தங்களுடைய பாய்ச்சல் .. இந்தப் பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது
    உண்மையும் நேர்மையும் என்னாளும் உறங்காது.
    தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #954
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    Respect Vairamuththu ..Respect .

    மறைந்த பிறகும் ,சராசரி மக்கள் மனதில் மட்டுமல்ல,பிரபலமான கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள், அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையே போற்றி வணங்க காரணம், சிவாஜி தன்னை உலகத்திலேயே தலை சிறந்த நடிகராக மட்டுமல்ல. சிறந்த மனிதர்களில் ஒருவராகவும் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளதை ,வைர முத்துவின் ,வைர வரிகள் எடுத்து காட்டுகின்றன.இத்தனைக்கும், எந்த காலத்திலும் பயமுறுத்தியோ,மிரட்டியோ, அரசியல் பலத்தாலோ,நிறுவன பலத்தாலோ,பணத்தால் விலைக்கு வாங்கியோ,பத்திரிகையாளர்களுக்கு இனாம் வழங்கியோ அவர் இதனை சாதிக்கவில்லை.இத்தனைக்கும் பட்டவர்தனமான வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்ற வெளிப்படை பேச்சு.



    அதனால்தான் எழுத்தாளர் சுஜாதா சொன்னார். "அவர் இறந்த போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Harrietlgy, Russellmai liked this post
  8. #955
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிகிரண் ,



    இந்த சுதந்திர நன்னாளில் நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ,தாங்கள் அவ்விடம் சென்று வீண் சர்ச்சை வளர்க்காமல் இருப்பது,உங்களுக்கு மட்டுமல்ல ,ஊருக்கே நல்லது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #956
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி என்ற மாமனிதர்.

    ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).

    அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

    நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ?நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று. நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து உண்மை பதிவுகள் .

    --செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

    --அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

    --வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

    --எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

    --கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

    --சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

    --பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

    --சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

    --நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

    --மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

    --கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

    --தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

    --பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

    --ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

    --இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

    --தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

    --அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

    --நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

    --படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

    --பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

    --யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

    --தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

    --உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

    --பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

    --நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

    --தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

    --தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
    Last edited by Gopal.s; 15th August 2014 at 08:50 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks eehaiupehazij, Russellbpw thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai, Russellbpw liked this post
  11. #957
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    ரவிகிரண் ,

    இந்த சுதந்திர நன்னாளில் நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ,தாங்கள் அவ்விடம் சென்று வீண் சர்ச்சை வளர்க்காமல் இருப்பது,உங்களுக்கு மட்டுமல்ல ,ஊருக்கே நல்லது.
    புரிகிறது சார்..!

    ஒரு தவறான பதிவு என்னைப்பற்றி வரும்போது நான் அவர்களை புரியவைக்க தான் எனது பதிவின் மூலம் முயற்சிக்கிறேன்..

    இனி அதுவும் நடைபெறாது சார் !

    Regards

  12. #958
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிமர் டீவீயில் சுதந்திர போராட்ட வீரன் பாரத்தின் பராக்கிரமம். கண்டு களியுங்கள்.



    சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்


    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

    சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

    எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

    எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

    சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

    ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

    ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #959
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ...சிம்ம குரலை கேட்க்க தயாராகுங்கள்...

    AUGUST 15TH today - இரவு 10.00 மணி...1974 அன்று ஒளிபரப்பான நடிகர் திலகத்தின் வெள்ளித்திரையில் விடுதலை

    Last edited by RavikiranSurya; 15th August 2014 at 11:03 AM.

  14. Thanks Russellmai thanked for this post
  15. #960
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy the NT song for the Independence Day Celebration.


  16. Thanks Russellmai thanked for this post
    Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •