Page 99 of 400 FirstFirst ... 4989979899100101109149199 ... LastLast
Results 981 to 990 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #981
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும்.

    நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

    monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

    Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

    ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

    பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

    Agecraft skills மற்றும் stamina .

    பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

    பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

    மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

    என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.

    larger than life பாத்திரங்களில் நடிக்க விசேஷ பயிற்சி, தேவையான உருவம், குரல், நடை பாவனை,உடைகள் பொருந்தும் உருவ அமைப்பு, கற்பனை , அதீத சக்தி இவையெல்லாம் தேவை என்றும் ,சராசரிகளால் அவை கனவு கூட காண முடியாத விஷயம் என்றும் பார்த்தோம்.

    ஆனால் நான் அதிசயிக்கும் அம்சம் ,இந்த கஷ்டமான territory யில் அவர் அதிக எண்ணிக்கையில் நடித்த வித விதமான பாத்திரங்கள் , உலக அளவில் சாதனையாகவே கருத பட வேண்டும். Stella Adler ,Oscar wild ,Shakspere School இது தவிர நம் கூத்து-நாடக கலை மரபு, மற்ற மாநில வீரர்கள் என்று 20 இலிருந்து 80 வயது வரை கி.மு வில் socretes ,அலெக்சாண்டர்,ஜூலியஸ் சீசர் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு சரித்திர நாயகர்கள், வீரர்கள்,புலவர்கள் அடியார்கள்,கற்பனை வீர பாத்திரங்கள் என்று வேறுபட்ட பாத்திரங்கள், கால அளவுக்கு அப்பாற்பட்ட கடவுள் பாத்திரங்கள், கர்ணன்,பரதன் போன்ற புராண பாத்திரங்கள் என அத்தனையிலும் நடிப்பில் காட்டிய மிக துல்லிய வேறுபாடு ராமனந்த் சாகர் போன்றவர்களை இவர் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்ததில் வியப்பென்ன?

    உள்ளே போகு முன் பட்டியலிட்டால் இது மிக தெளிவாகும்.

    மனோகரா, தூக்கு தூக்கி,காவேரி, தெனாலி ராமன் ,நானே ராஜா,வணங்காமுடி,தங்கமலை ரகசியம்,ராணி லலிதாங்கி ,அம்பிகாபதி,சம்பூர்ண ராமாயணம்,உத்தம புத்திரன்,சாரங்க தாரா,காத்தவராயன்,தங்க பதுமை,வீரபாண்டிய கட்டபொம்மன்,ராஜ பக்தி,மருத நாட்டு வீரன்,ஸ்ரீவள்ளி,சித்தூர் ராணி பத்மினி,கர்ணன்,மகாகவி காளிதாஸ்,கந்தன் கருணை ஹரிச்சந்திரா,ராஜ ராஜ சோழன்,தச்சோளி அம்பு,சந்திர குப்தா சாணக்யா, பக்த துக்காராம்,எமனுக்கு எமன்,ராஜரிஷி போன்ற முழு படங்களும் தோன்றும் பாத்திரங்களுடன் ஒரே படத்தில் பல்வேறு பாத்திரங்கள் திருவிளையாடல் (சிவன், புலவர், மீனவன், விறகு வெட்டி),சரஸ்வதி சபதம்(நாரதர்,புலவர்),திருவருட்செல்வர்(அரசன், சேக்கிழார்,சலவை தொழிலாளி,சுந்தரர்,அப்பர் ),திருமால் பெருமை (பெரியாழ்வார்,விஷ்ணு சித்தர்,தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,விபர நாராயணர்) என்றும் ,பல படங்களில் இடை செருகலான நாடக காட்சிகளிலும் தோன்றியுள்ளார். இல்லற ஜோதி (சலீம்),நான் பெற்ற செல்வம்(சிவன்,நக்கீரன்),ராஜா ராணி(சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் ),அன்னையின் ஆணை(சாம்ராட் அசோகன்)ரத்த திலகம் (ஒதெல்லோ ),ராமன் எத்தனை ராமனடி(வீர சிவாஜி),எங்கிருந்தோ வந்தாள் (துஷ்யந்த்),சொர்க்கம்(ஜூலியஸ் சீசர் )ராஜபார்ட் ரங்கதுரை (ஹாம்லெட்),அன்பை தேடி (புத்தர்),ரோஜாவின் ராஜா(சாம்ராட் அசோகன்) என்று விரியும்.

    larger than life நடிப்பு முறைகளில் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.

    shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.

    அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.

    உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.

    நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.

    உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.

    முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.

    ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.

    voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.

    இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ, ராஜபார்ட் ரங்கதுரை பட ஹாம்லெட் இவற்றை ஆராய்வோம்.

    அவர் shakespere நாடகம் (படத்துக்குள்ளே வரும் )நடித்த மூன்றுமே cult status கொண்ட காட்சிகள்.

    ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)

    Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)

    ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.

    மூன்றுமே சிக்கல் நிறைந்த அந்தந்த நாடகங்கள் சம்மந்த பட்ட Highlight காட்சிகள்.


    சத்ரபதி சிவாஜி மன்னன் (1627-1680) சரித்திரத்தில் வெற்றியின் குறியீடு, ஹிந்துத்துவத்தின் புனர்வாழ்வாக கருத படும் வீர மன்னன். உலக நடிகனுக்கு தனது பெயரை ஈந்தவன்.வெற்றிக்கு பிறகு முடிசூட்ட நாள் குறிக்க பட்டு (6 June 1674), பொறாமை கொண்டோர் பிறப்பின்(குலம்) பேரால் அதை தடுக்க முயல ,தான் அடைந்த வெற்றிகளை குறிப்பிட்டு (Phonda ,Purandhar ,Rajpuri ,Kalyan ) தன்னை விட தகுதி கொண்டவன் யார் என சிவாஜி ஆத்திரம்,ஆவேசம் கலந்து கொடுக்கும் பெருமித கொக்கரிப்பு சவால் காட்சி.

    ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

    முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

    ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.

    சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.

    ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.

    சத்ரபதி சிவாஜி காட்சி அவருடைய கனவு கதாபாத்திரம் ஆனதால் உச்சம் தொடும்.தன்னை தாழ்ந்தவன்,அரசியல் அறியாதவன் என்று மகுடம் சூட்ட மறுப்பவர்களை ,தன்னிலை விளக்கத்துடன் எள்ளும் முறை.Porna கோட்டை வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிடுவதும்,புரந்தர் கோட்டை வெற்றி தன்னை மீறிய எதிரியை எச்சரிக்கை மீறி வெற்றி பெற்ற சாதனை விளக்கமும்,ராஜகிரி கோட்டை எதிரி கொக்கரிப்பை எதிர் கொண்டு கைப்பற்ற பட்ட வீர்யம், கல்யாண் கோட்டையில் பகைவரிடம் அகப்பட்டு துன்புற்றவரை காத்த கருணை வீரம் ,இறுதியில் nihilist instinct கொண்டு அடையும் ஆவேசம் ...
    ஒவ்வொரு கோட்டைக்கும் நடை மாற்றம் மட்டுமன்றி, கை முக குறிப்புகளின் நுண்ணிய மாற்றங்கள்,வசன முறைகளில் ஏற்ற இறக்கம், தாள லய சுர மாற்றங்களும் ,reciting poetically என்ற முறையில் தமிழையும் அழகு படுத்தி நடிப்பிலும் ஒருங்கிணைவு படுத்தி ,அந்தந்த content க்கு ஏற்ப மாறு படுத்துவார்.

    Last edited by Gopal.s; 15th August 2014 at 10:13 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #982
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like


    TRICHY - GAIETY - VELLAI ROJA - TODAY MORNING -118 AUDIANCE
    TODAY MATINEE - 147 AUDIANCE
    TODAY EVENING - 249 AUDIANCE
    FIRST DAY IN THIS THEATRE NOBODY'S FILM HAD THIS RECORD FOR THE PAST 7 YEARS - FEEDBACK FROM THEATRE MANAGER

  4. #983
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks ifohadroziza thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij, Russellmai liked this post
  6. #984
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post




    TRICHY - GAIETY - VELLAI ROJA - DAILY 4 SHOWS FROM TODAY !

    MORNING SHOW - 118 AUDIENCE
    MATINEE SHOW - 147 AUDIENCE
    EVENING SHOW - 249 AUDIENCE

    FOR THE PAST 7 YEARS, FIRST DAY AUDIENCE TURN OUT IN THIS THEATER - VELLAI ROJA IS THE HIGHEST - FEEDBACK FROM THEATER MANAGER
    நடிகர் திலகத்தின் பழைய படங்கள் தான் திரயிடபடுகிறது. தைரியமிருந்தால் 1980களில் வந்த படங்களை திரையிட்டு பார்க்கட்டும் என்றெல்லாம் நம்மை ஏளனம் பேசியவர்கள் இதை பார்த்து தெரிந்துகொள்வார்கள், புரிந்துகொள்வார்கள், திருந்திகொள்வார்கள் என்று நம்புவோம்.

    நன்றி திரு சௌத்ரி அவர்களே !

  7. Thanks Subramaniam Ramajayam, ifohadroziza thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  8. #985
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    தங்க சுரங்கம் படம் அடாது மழையிலும் விடாது வசூல் மழை.மாலைக் காட்சியில்
    மட்டும கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 356. அதில் பெண்கள் மட்டும் 40.என்றுமே
    நடிகர் திலகம் தான் box office hero .

  9. Likes eehaiupehazij liked this post
  10. #986
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மறு வெளியீடுகளில் நடிகர் திலகம் தமிழகமெங்கும் மீண்டும் ஒரு கலக்கு கலக்குகிறார் என்பதை அனைத்து செய்திகளும் உறுதிப்படுத்துக்கின்றன.

    திருச்சி செய்திகளை நண்பர் ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார். அவர் இன்று திரையிடப்பட்டிருக்கும் வெள்ளை ரோஜா படத்திற்கு காலை, மதியம் மற்றும் மாலைக் காட்சிகளின் விவரங்களை பதிவிட்டிருந்தார். இரவுக் காட்சிக்கு 186 டிக்கெட்டுகள் போயிருக்கிறது. இன்று மொத்தத்தில் பார்த்த மக்களின் எண்ணிக்கை 697. கெயிட்டி திரையரங்கில் முதல் நாள் 700 பேர்கள் படம் பார்த்தது 7 வருடங்களுக்கு பிறகு இதுதான் முதல் முறை.

    மதுரை சென்ட்ரலில் தங்க சுரங்கம் செய்திகளை நண்பர் CS பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை வசூல் விவரங்களாக பார்த்தோமென்றால் மாலைக் காட்சியோடு ருபாய் 13 ஆயிரத்தை தாண்டிய படம் இரவுக் காட்சியோடு ரூபாய் 17 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. மழை நாளில் வந்த இந்த கூட்டம் (கிட்டத்தட்ட ஞாயிறுக்கிழமை போல) பெரிய சாதனை. பெண்கள் எண்ணிக்கையை பற்றி குறிப்பிட்டார். இன்று கடைசி ஆடி வெள்ளி. அப்படியிருந்தும் இப்படி பெண்கள் கூட்டம், அதுவும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு நாளில் இத்தனை கூட்டம்.

    சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இன்று முதல் Dr. ரமேஷ் விஜயம். மகாலட்சுமி அரங்கில் இப்போது மெயின் படம் மூன்று காட்சிகளுக்கு பதிலாக இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிறது. இரவுக் காட்சியில் வேறு படம். எத்தனை காட்சி இருந்தால் என்ன, நடிகர் திலகம் அதிலும் சாதனை படைப்பவர்தானே. இன்று அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தை இரண்டு காட்சிகளும் சேர்த்து கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 646.மொத்த வசூல் ரூபாய் 13 ஆயிரத்திற்கும் அதிகம் [more than Rs 13,000/-]. இது சாதனை என்று சொல்லவும் வேண்டுமோ!

    அரங்க உரிமையாளர் சற்று குழப்பம் அடையாமல் இருந்திருந்தால் கோவையிலும் நமது படம் கொடி நாட்டியிருக்கும். இந்த வாரம் போனால் என்ன? if all goes well, அடுத்த வெள்ளி ஆகஸ்ட் 22 முதல் கோவை ராயலில் சந்திப்பு திரையிடப்படும் என தகவல்.

    நாளை முதல் அருப்புக்கோட்டையில் சந்திப்பு திரையிடப்படுகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

    அன்புடன்

  11. Likes Russellbpw liked this post
  12. #987
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று கிருஷ்ண ஜெயந்தி.எந்த ஜெயந்தியானாலும் ,
    நடிகர்திலகத்தாலேயே களை கட்டும். அவரோடு கண்ணதாசன்-விஸ்வநாதன் இணைந்து ,ராகமும் சுபபந்துவராளியாக அமைந்து விட்டால்?நடிகர்திலகம் ஏதோ சிந்தனையில் இருக்கும் போது ,திடீரென்று கிருஷ்ணர் வேஷத்தில் வரும் குழந்தையை நினைவின் அடுக்கில் ,விடுபட்டு ,துல்லிய படும் நொடிகள். தன் பாரத்தை சிறிதே மறந்து கொள்ளும் தத்துவ ஆசுவாசம். "உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா ".

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  14. #988
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆல்பர்ட் மற்றும் பேபி ஆல்பர்ட் திரை அரங்கில் தலா 5 காட்சிகள் என்று நேற்று முதல் அதாவது AUGUST 15 முதல் வெளிவந்துள்ள சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் சில பட காட்சிகளை நினைவு படுத்தும்விததில் படமாக்கபட்டுள்ளதாம்.


    ஆல்பர்ட் திரை அரங்கின் ONLINE BOOKING www.alberttheaters.com


    TICKETS ARE AVAILABLE FOR TODAY AND TOMORROW......


    16th AUGUST



    17th AUGUST

    Last edited by RavikiranSurya; 16th August 2014 at 10:57 AM.

  15. #989
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    krishna jayanthi greetings to one and all
    Last edited by sivajisenthil; 16th August 2014 at 10:25 PM.

  16. #990
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதே போல பேபி ஆல்பர்ட் திரை அரங்கில் வெளிவந்துள்ள ச்நேஹவின் காதலர்கள் திரைப்படம்..நவராத்திரி கதையின் ஒரு கிளை சற்று மாற்றங்களுடன் வந்துள்ளது...தலைப்புக்கும் பட கதைக்கும் சம்பந்தம் இல்லை.

    படத்திற்கு நவராத்திரி கதை சாயல் உள்ளதால் ( சாவித்திரி சந்திப்பதை போல...இதில் நாயகி நான்கு வேறு வேறு ஆடவர்களை சந்திக்கிறார் தனது வாழ்கையில் ) நல்ல வரவேற்ப்பு உள்ளது..பேபி ஆல்பர்ட் இன்று HOUSEFUL



    TODAY MORNING SHOW



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •