Quote Originally Posted by Gopal,S. View Post
Hi KR,
This is for your kind information.I never came to this thread on my own but got dragged by three of your friends. But I am surprised the way people with differing views are treated here . Anyway ,Thanks to Rajaram,Venki&Poem . Bye.
ஒரு ஆளுமையின் குணாதியங்களை விமர்சனம் செய்வதாகட்டும், அவரது பங்களிப்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு தரம் பிரிப்பதலாகட்டும் .. இருமுனை கத்திபோன்றது. நான் முன்பே சொன்னதுதான். உங்களின் பதிவில் கலகத்தனமே மேலோங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் விளைவுகளுக்கு நீங்களும் சமபாதியில் பொறுப்பேற்க வேண்டியதுதான். ஜெயமோகன் விஷயத்தில் கூட, அக்கட்டுரைகளின் சாராம்சத்தைக் கூட நீங்கள் தொடவில்லை. ஆனால் ஏழாம் மனிதர்கள், விஷ்ணுபுரம் என உரையாடலின் எல்லைகளை விட்டு தாண்டிச் சென்று அடம்பிடிக்கிறீர்கள். என்ன செய்வது? நான் முன்பே சொன்னதுபோல ஒரு நூல் பிடித்தாற்போல உங்களால் ராஜா விஷயத்தில் உரையாடல் நிகழ்த்த முடிவதில்லை என மீண்டும் மீண்டும் சபையில் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ராஜா என வரும்போது ஒரு சாதாரண வெகுஜனப் பார்வைகளில் ஒன்றான "ராஜா வந்தார்-வென்றார்-சென்றார்" பாணியிலேயே ஒரு புரிதலை வைத்துக்கொண்டு அதையொட்டியே உங்களின் அபிப்ராயங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இங்குள்ள ராஜா ரசிகர்களோடு உங்களால் ஒரு அடி கூட உரையாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது என் பார்வை.