-
18th August 2014, 09:04 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kr
guys: Why waste time with this guy? He thinks rehman makes good music and is comparable and better than ilaiyaraja. We dont think so. I have never seen the same brilliance that i see in ir's compositions in others.
kr,
கோபாலுக்கு ராஜா சாரின் இசையை தவிர வேறொன்றும் அவரிடம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். அவர் ரஹ்மானை உயர்த்தி ராஜாவை மட்டம் தட்டி பேசவில்லை. - அப்படி பேசினாலும் தவறில்லை. இருவருமே தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அவர்கள் சரியாக பயணிக்கிறார்கள். ஒப்பிட்டு பேசுவதால் அவர்கள் இருவரும் குறைந்து விட போகிறார்களா என்ன?
கோபாலின் பதிவுகளை படிக்கும் போது அவருடைய தன்னம்பிக்கை தெரியும். நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய கோபம் எல்லாம் ராஜா சாரை கோபாலும் இன்னொருவரும் மதுரகீதங்கள் திரியில் (நிறைய ஓல்ட் கிளாசிக் பாடல்கள் அங்கு கிடைக்கும் ) சற்று மரியாதை குறைவாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டார்கள் என்பது தான். ஒரு முறை இரு முறை அல்ல.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். - அது நிச்சயம் தவறு, இதை சொன்னால் மறுபடியும் கோபால் ஏதாவது எழுதுவார். சொல்லி விட்டு போகட்டும்.
ஒரு மாறுதலுக்காக, யாரவது ராஜா சாரை பற்றிய துணுக்கு செய்தி இருந்தால் எழுதுங்களேன்... ஒரு ரேர் போட்டோ இருந்தாலும் ஓகே தான்.
போயம், வெங்கிராம்: நன்றி.
-
18th August 2014 09:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks