Page 92 of 401 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #911
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆமா.வீட்டுக்கு வீடு காமடிப் படமோன்னோ..ஏன் நிம்மி சீரியஸ்… நன்றி ஃபார் த நல்ல சாங்க்..
    முத்துராமன் முரடன். அதான் நிம்மி சீரியஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #912
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (60)

    இன்று ஒரு அரிய, மிக அருமையான பாடல். ஒரு folk டைப் சாங். ஆனால் அதிலேயே இது கிளாஸ் ரகம். அவ்வளவு ரம்மியம். தன் காதலை அழகாக சூசகமாக வெளிப்படுத்தும் காதலி. 'என்னைக் கைவிட்டு விடாதேடா' என்று காதலனுக்குக் கோரிக்கை விடுக்கிறாள். காதலனும் அவளுக்கு நம்பிக்கை கூறி அவளை அரவணைக்கிறான்.

    மிக மிக அழகாக எடுக்கப்பட்டதொரு பாடல் காட்சி.




    'மாதவி' என்ற படத்தில் ஏழைகளான மனோகரும், சௌகாரும் ஒருவரையொருவர் தங்களை மெய்மறந்து காதலிக்க, இவர்கள் காதலை நமக்கு உணர்த்த ஒரு கிரமாத்து காதல் ஜோடி பாடும் அழகானதொரு காதல் பாட்டை அந்த இடத்தில் மிகப் பொருத்தமாகப் புகுத்தி இயக்குனரும், இசையமைப்பாளரும், நடித்தவர்களும் ஒரு காவியம் படைத்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

    ரம்மியமான கிராமத்து சூழ்நிலையின் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல். தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க, ரசமான இரவு வேளையில், நிலா வெளிச்சத்தில் மாட்டு வண்டியின் அருகே கிராமத்துக் காதலர்களாக நடன மாஸ்டர் தங்கப்பனும், ஜெமினி சந்திராவும் மிக அழகாக, அமைதியாக ஆடிப்பாட, அந்தப் பாடல் நாயகன் மனோகருக்கும், நாயகி சௌகாருக்கும் அழகாகப் பொருந்த மனோகரும், சௌகாரும் மிக மிக நெருக்கம். இந்தக் காதல் காட்சியில் இவ்விருவரும் காட்டும் நெருக்கம் இன்றுவரை எனக்கு ஆச்சர்யம். அது மட்டுமல்ல. மனோகரும், சௌகாரும் கொள்ளை அழகு. அதுமட்டுமல்ல. இருவரும் சேர்ந்து அழகாகச் செய்யும் அந்த சின்ன சின்ன அன்புச் சீண்டல்கள் மனோகரமாய் இருக்கும்.(மனோகர் தலைமுடியை அழகாகத் தட்டி விடுவார் சௌகார்).




    பின்னாளில் வந்த பல படங்களில் சௌகாரின் ஜாக்கெட்டைப் பிடித்துக் கிழித்து 'தோரஹா' பண்ணிய வில்லன் மனோகருக்கு தன் இளம் வயதில் நாயகனாக சௌகாருக்கு இணை. என்னே காலத்தின் மாற்றம்!

    சௌகார் அப்படியே அச்சில் வார்த்த மாதிரி 'மண்வாசனை' ரேவதி போலவே இருப்பார். மனோகரின் மடியில் சாய்ந்து எந்த நேரத்திலும் அவருக்கு 'இச்' கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சும் அளவிற்கு நெருக்கம்.

    படம் நெடுக வரும் அந்த துள்ளல் போட வைக்கும் புல்லாங்குழல் இசை அற்புதத்திலும் அதியற்புதம். நம் கால்கள் நம்மையறியாமல் தாளம் போடும்.

    சீர்காழி கோவிந்தராஜனும், எம்.எஸ்.ராஜேஸ்வரியும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள். சீர்காழி தனது 'கணீர்'க் குரலை கொஞ்சம் கம்மி பண்ணி, தாழ்த்தி, மிருதுவாகப் பாடி இப்பாடலில் தூள் கிளப்பியிருப்பார். எம்.எஸ்.ராஜேஸ்வரி அன்று பிறந்த குழந்தையைப் போல் 'இளநீர்க் குரலி'ல் 'கிறீச்' என்று பாடி அசத்தியிருப்பார்.


    நடனம் ஆடும் தங்கப்பன் மாஸ்டர் 'அன்னை வேளாங்கண்ணி' படத்தைத் தயாரித்தவர். கமல் அவர்களின் நடன குரு. ஜெமினி சந்திரா சிறந்த நடன நடிகை. 'உத்தம புத்திரனி'ல் 'யாரடி நீ மோகினி' பாடலில் ஆடும் தலைவரின் ஏகப்பட்ட பிகர்களில் இவரும் ஒருத்தி. நிரம்ப அழகானவர்.

    'காட்டு மாடு மேய்ந்து பயிர் நாசமாகி தோட்டம் வீணாப் போனாலும் என்ன... இருவரும் காதலித்து சுகம் பெறலாம் அதுதான் இப்போதைக்கு முக்கியம்'

    எவ்வளவு அழகான எளிதில் புரியும்படியான வரிகள்! இப்போது என்ன காதலனை 'வாடா போடா' என்று இளசுகள் அழைப்பது? அப்போதே இந்தப் பாடல் பாடும் காதலி தன் காதலனை 'அடா புடா'
    என்று செல்லமாக விளிக்கிறாளே!. பாடலின் கவிஞர் அப்போதே எழுதி விட்டாரே.


    இனி பாடலின் வரிகள்



    தோட்டக்கார சின்ன மாமா
    தோப்புக்குள்ளே பாரு மாமா
    தோட்டக்கார சின்ன மாமா
    தோப்புக்குள்ளே பாரு மாமா
    காட்டு மாடு மேயுது பார் அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே

    தோப்பில் மாடும் மேய்ஞ்சால் என்ன
    தோட்டம் வீணா போனால் என்ன
    தோப்பில் மாடும் மேய்ஞ்சால் என்ன
    தோட்டம் வீணா போனால் என்ன
    தோகை மயிலே எந்தன் கிட்டே வா
    என் ஆசை மானே
    சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
    என் ஆசை மானே
    சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

    ஆசை கொண்ட மங்கையோடு
    ஆயுள் பூரா வாழ வேணும்
    ஆசை கொண்ட மங்கையோடு
    ஆயுள் பூரா வாழ வேணும்
    மோசம் நீயும் செய்திடாதேடா
    என் ஆசை மாமா
    வாழ்வில் என்னை மறந்திடாதேடா
    என் ஆசை மாமா
    வாழ்வில் என்னை மறந்திடாதேடா

    கவலை நீயும் அடையலாமோ
    கலக்கம் வீணே கொள்ளலாமோ
    கவலை நீயும் அடையலாமோ
    கலக்கம் வீணே கொள்ளலாமோ
    உன்னை நானே என்றும் மறவேனே
    என் ஆசை மானே
    ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே
    என் ஆசை மானே
    ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே

    தோட்டக்கார சின்ன மாமா
    தோப்புக்குள்ளே பாரு மாமா
    தோட்டக்கார சின்ன மாமா
    தோப்புக்குள்ளே பாரு மாமா
    காட்டு மாடு மேயுது பார் அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே

    தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
    தோட்டம் வீணா போனால் என்ன
    தோகை மயிலே எந்தன் கிட்டே வா
    என் ஆசை மானே
    சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
    என் ஆசை மானே
    சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
    என் ஆசை மானே
    சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

    தாயுமில்லை தந்தையில்லை
    வேறு எனக்கு கதியும் இல்லை.
    தாயுமில்லை தந்தையில்லை
    வேறு எனக்கு கதியும் இல்லை.
    நானும் உன்னை நம்பி வந்தேனே
    என் ஆசை மாமா
    நாளும் உனக்கே அடிமை ஆனேனே
    என் ஆசை மாமா
    நாளும் உனக்கே அடிமை ஆனேனே

    ஆசையாலே பாசத்தாலே
    அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
    ஆசையாலே பாசத்தாலே
    அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
    பேசிப் பேசி இன்பம் கண்டிடிடுதே
    என் ஆசை மானே
    பிறவிப் பயனை இன்று கண்டோமே
    என் ஆசை மானே
    பிறவிப் பயனை இன்று கண்டோமே

    தோட்டக்கார சின்ன மாமா
    தோப்புக்குள்ளே பாரு மாமா
    காட்டு மாடு மேயுது பார் அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே
    என் ஆசை மாமா
    காவல் அழகா நடக்குதே அங்கே


    Last edited by vasudevan31355; 23rd August 2014 at 12:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #913
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்த தோகா.சி.மாமா பாட்டுக் கேட்டதிலலை வாசுசார்.வீடியோ இல்லையா..அழகான ரைட் அப்..மனோகர் செளகார்.எங்கிட்டிருந்து தான் பிடிக்கறீங்களோ..அடுத்து பாலாஜி கே.ஆர்.விஜயாவா.. தாங்க்ஸ்

  6. #914
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ்.. த்ரிவேணி பாட்டு இப்ப தான் கேட்டேன் பார்த்தேன்.. அழகு.. தோணி இதிகே வா.. பாமரம் ப்ளிங்குகொண்டு..அதாவது படகு பளிங்குபோல ஆகிடுமாமா ஒரு பருவப் பெண்பாடறச்சே.. நல்ல பாட்டு..தாங்க்ஸ்.

  7. #915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இந்த தோகா.சி.மாமா பாட்டுக் கேட்டதிலலை வாசுசார்.வீடியோ இல்லையா..அழகான ரைட் அப்..மனோகர் செளகார்.எங்கிட்டிருந்து தான் பிடிக்கறீங்களோ..அடுத்து பாலாஜி கே.ஆர்.விஜயாவா.. தாங்க்ஸ்
    நன்றி சி.க. சார். இரண்டு மூன்றுமுறை கேளுங்கள். அப்புறம் அந்தப்பாடலை விடவே மாட்டீர்கள். என்னது பாலாஜி அண்ட் விஜயாவா? அதெல்லாம் ரொம்பப் பழசாச்சே!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #916
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    மலரும் நினைவுகள் (பாட்டுப் புத்தகங்கள்)

    கிருஷ்ணாஜி பதித்த குங்குமம் இதழில் வந்த பாட்டுப்புத்தக சேகரிப்பு மற்றும் அது தொடர்பான வாசு அவர்கள் பதிவிட்ட நிழற்படம் ஆகியவற்றை படித்தபோது, பாட்டுப்புத்தகங்களை ஆவலாய் சேகரித்த என் சிறுவயது நினைவுகள் மனதில் எழுந்தன...

    வானொலியில் மட்டுமே பாடல்களைக் கேட்க வாய்ப்பிருந்த அந்தக்காலத்தில் பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து, பள்ளிக்கு எடுத்துச்சென்று, இடைவேளைகளின்போது பாடி மகிழ்வது வழக்கம். அப்படி எடுத்துச்செல்லும்போது, பையில் வைத்து கசங்கி மடங்கி கிழிந்து போவதும் உண்டு. அப்போதுதான் ஒருமுறை மண்ணடி தம்புசெட்டித்தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு முனையில் இருந்த சாந்தி நூலகம் என்ற கடையில் ஒருவர் நிறைய பாட்டுப் புத்தகங்களை சேர்த்து பைண்டு செய்து வாங்கிப்போவதை பார்த்தேன். அப்போதுதான் தோன்றியது இது நல்ல ஐடியாவாக இருக்கே என்று என்னுடைய அனைத்து பாட்டுப்புத்தகங்களையும் இதே முறையில் பைண்டு செய்து பத்திரப்படுத்தலாம் என்று பரிசீலித்தால், அவை பாதிக்குமேல் கிழிந்து போயிருந்தன. சரி புதிதாகவே மீண்டும் வாங்கி பைண்டு செய்வோம் என்று கடைக்குப் போனால் அங்கும் பல படங்களின் பாட்டுப் புத்தகங்கள் மிகவும் பழையதாக இருந்தன.

    அப்போதுதான் என் நண்பனின் யோசனைப்படி பதிப்பகத்துக்கே சென்று வாங்கலாம் என்று ஏழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெருவிலிருந்த தனலக்ஷ்மி பதிப்பகத்துக்கு நானும் என் நண்பன் ராஜசேகரும் போனோம். இரண்டு அறைகள். ஒன்றில் பிரிண்டிங் மெஷினுடன் அச்சகம். அடுத்த அறையில் விற்பனைக்கூடம். ஒவ்வொன்றாக கேட்டு வாங்கவேண்டியதில்லை. சுற்றிலும் நான்கு அடுக்கு ராக்கைகளில் ஒவ்வொரு படத்தின் பாட்டுப்புத்தகமும் அடுக்கடுக்காக வைத்திருந்தார்கள். நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பார்த்ததுமே கண்ணைக்கவரும் வண்ணம் அனைத்தும் புத்தம்புதியதாக இருந்தன ஆனால் அனைத்துமே ஏதாவது ஒருவண்ண அட்டைதான். பெரும்பாலும் சந்தன நிறத்தில். கடைகளில் 10 பைசா விற்ற புத்தகங்கள் அங்கு 6 பைசா. அதுவும் கூடுதலாக வாங்கினால் 5 பைசா என்றார்கள்.

    நடிகர்திலகம், மக்கள்திலகம், மற்றும் ஜெமினியின் முக்கிய படங்கள், ஸ்ரீதர் படங்கள் என்று கிட்டத்தட்ட 100 படங்களின் பாட்டுப் புத்தகங்களை செலக்ட் செய்தோம். அப்போது அங்கிருந்த விற்பனையாளரிடம் "கலர் கலராக அட்டைப்படம் போட்டவை இல்லையா?" என்று கேட்க, அவர் "அதெல்லாம் படத்தயாரிபாளர்கள் வெளியிடுவது. படங்கள் ரிலீசாகும் நேரத்தில் தியேட்டர்களில்தான் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டார்.

    சரி, அப்படின்னா பழைய படங்களுக்கு அவை கிடைக்க சாத்தியமில்லை. இனிமேல் புதுப்படங்கள் ரிலீசாகும்போது வாங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். வாங்கிய பாட்டுப்புத்தகங்களை முதலில் சொன்ன கடையில், நடிகர்திலகம் படங்கள் ஒரு வால்யூமாகவும், எம்.ஜி.ஆர். மற்றும் மற்றவர்களின் படங்களின் பாடல்கள் இன்னொரு வால்யூமாகவும் பைண்ட் பண்ணச்சொல்ல, அவரோ 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. வரிசைப்படி நீயே அடுக்கிக்கொடு, அப்படியே பைண்ட் பண்ணித்தாரேன்' என்று சொல்ல அதுபோலவே செய்தேன். இரண்டு தடித்த அருமையான பாட்டுப்புத்தக தொகுப்பாக அமைந்து மனதுக்கு மகிழ்ச்சியூட்டியது.

    புதுப்படங்களுக்கு தியேட்டரில் கிடைக்கும் வண்ணமயமான பாட்டுப் புத்தகங்கள் வாங்குவது என்ற முடிவுப்படி முதலில் வாங்கிய படம் 'பதிலுக்கு பதில்' (கொடுமை) . சில படங்களுக்கு நான் போகாவிட்டாலும் (எல்லா படங்களையும் பார்க்க ஏது பணம்) படம்பார்க்க போகின்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச்சொல்வதுண்டு.

    இதுபோக வித்தியாசமான வடிவில் வந்த பாட்டுப் புத்தகங்களையும் தனியாக சேகரித்ததுண்டு. 'சிவந்த மண்' படத்துக்காக வெளியிடப்பட்ட பெரிய சைஸ் பாட்டுப்புத்தகம், 'அன்பே வா' படத்துக்காக கிராமபோன் ரிக்கார்ட் வடிவில் வெளியிடப்பட்ட புத்தகம், 'தங்கை' படத்துக்காக சீட்டுக்கட்டு வடிவில் வந்த புத்தகம், 'என்தம்பி' படத்தின் பேட் வடிவ புத்தகம் என்று பலவற்றை பல இடங்களில் இருந்தும் (அவற்றை வைத்திருந்த சிலரிடம் வெட்கப்படாமல் கேட்டும்) சேகரித்ததுண்டு. பட்டணத்தில் பூதம் படம் வெளியானபோது (பூதம் அடைபட்டிருந்த) ஜாடியின் வடிவத்தில் பாட்டுப்புத்தகம் வெளியானதாம். அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    ஆடியோ கேஸட் யுகம் துவங்கிய பின் பாட்டுப்புத்தகங்கள் சேகரிக்கும் ஆர்வம் படிப்படியாக குறைந்து போனது...
    Last edited by mr_karthik; 23rd August 2014 at 03:55 PM.

  10. #917
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  11. #918
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  12. #919
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  13. #920
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •