Page 93 of 401 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #921
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கார்த்திக் சார்..பா.பு நினைவலைகள் நன்று..அந்த பைண்ட் வால்யூம்கள் இன்றும் வைத்திருக்கிறீர்களா..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #922
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  4. #923
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  5. #924
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    விஜய பாஸ்கர் இசையில் (1975) வெளிவந்த " உறவுக்கு கை கொடுப்போம்" படத்தில் உள்ள ஒரு பஞ்சாபி பாடல்.

    இசை அரசியும் மென்குரல் மன்னன் ஸ்ரீநிவாசும் பாடியது....

    பஞ்சாபி பாடல் தமிழ் படத்தில் என்பது ஆச்சரியமே !!


    http://www.mediafire.com/listen/1pj8...i_Koduppom.mp3

    கேட்டு மகிழுங்கள்.
    Last edited by sss; 23rd August 2014 at 04:42 PM.

  6. #925
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. #926
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    என் விருப்பம் (5)

    'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)

    1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).

    ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

    இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.

    பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.

    பொன் அந்தி மாலைப்பொழுது
    பொங்கட்டும் இன்பநினைவு
    அன்னத்தின் தோகையென்ற மேனியோ
    அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
    கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
    கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

    (முதல் சரணம் ஒரு மெட்டில்)

    மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
    பனிவிழ முழுவதும் நனைந்தாள்
    வருகென அவள் நம்மை அழைத்தாள்
    தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
    இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
    இசை நம்மை மயக்கட்டுமே
    உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
    மலர்களும் சிரிக்கட்டுமே

    பொன் அந்தி மாலைப்பொழுது
    பொங்கட்டும் இன்ப நினைவு

    (அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)

    கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
    கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
    சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
    எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
    எந்நேரமும் உன்னோடு நான்
    ஒன்றாகி வாழும் உறவல்லவோ

    பொன் அந்தி மாலைப்பொழுது
    பொங்கட்டும் இன்ப நினைவு

    (மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)

    ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
    ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
    கண்ணோடு கண் பண்பாடுமோ
    என் மேனிதான் என்னாகுமோ
    அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
    ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்

    பொன் அந்தி மாலைப்பொழுது
    பொங்கட்டும் இன்பநினைவு
    அன்னத்தின் தோகையென்ற மேனியோ
    அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
    கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
    கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்

    இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.

    பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது'...

  8. Likes chinnakkannan liked this post
  9. #927
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பொன் அந்தி மாலைப் பொழுது..எனக்கும்பிடிக்கும் கார்த்திக் சார்.. நன்றி..அதை நாவலாகவும் படித்திருக்கிறேன்..பக்கத்து வீட்டு மாமி வீட்டில் பைண்ட் புத்தகமாக..
    Last edited by chinnakkannan; 23rd August 2014 at 05:10 PM.

  10. #928
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நதியைத்தேடி வந்த கடலில் தவிக்குது தயங்குது ஒரு மனது பாட்டு தெரியும்.. அழகான பாடல்..அதே போல் இந்தப் பாட்டும் அந்தப் படம் என எனக்குத் தெரியாது.. அழகான பாட்டு சுசீலாம்மா எஸ்பிபி..இந்தப் பாட்டும் ஜெயலலிதா சரத்பாபுவா தெரியவில்லை.

    *

    எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
    அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

    குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே

    பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது
    என் நெஞ்சம் தடுமாறுது

    நாளோடு நான் சாய்ந்தாடவா
    சொல்லாத சுவை கூறவா
    சூடான காதல் சொல்லவா

    பொன் மாலை நேரம் தேனாடுது

    பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது சொர்க்கத்தைக் கண்டேனம்மா


    தாயாகினேன் தாலாட்டினேன்
    கண்ணா என் ராஜாங்கமே
    நீ தான் என் ஆதராமே
    மணிப் பில்லைகள் மான் குட்டிகள்
    உறவாடும் தெய்வங்களே
    ஒளி வீசும் தீபங்களே

    வாடாதா முல்லைப் பூ மேனியே
    தேடாமல் வந்த செல்வங்களே
    என் ஜீவன் உன்னோடு தான்

    *
    நதியைத் தேடிவந்த கடல் – மகரிஷியின் கதை. அந்தக் கால ஆனந்த விகடனில் புல் அவுட் குறு நாவல் எனக் கொண்டு வந்தார்கள்..அதில் வெளியானது.. அதை அப்படியே படம் பிடித்திருந்தார்களா என்ன எனத்தெரியாது.அட.இதைத் தொடர்ந்து வாசு சார் போடாத பாடல் நினைவுக்கு வருதே..இருங்க தேடிப் பார்க்கறேன்..

  11. #929
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    அவன் ஒரு டாக்டர்.. நார்த் இண்டியாவில் ஒரு கிராமத்தில் வசிப்பவன்.. அந்தச்சமயம் மழைக்காலம்..ஊருக்கு வெளியில் இருந்த ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால் ஒரு பஸ் அடிக்கப் பட்டுச் சென்று விடுகிறது..அதில் இருந்த அனைவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு விட ஒரேஒரு இளம்பெண் கரை ஒதுங்குகிறாள்..ஊர் மக்கள் டாக்டரான இவனிடம் கொண்டு வருகிறார்கள்..

    ஆஹா..வெள்ளத்தில் கிடைத்த குறிஞ்சி மலரா..என்ன அழகு இந்தப் பெண்.என வியந்து வைத்தியம் பார்க்கிறான் (அவனுடைய வீட்டில் ஒரே ஒரு அம்மா இவன் பிரம்மச்சாரியாக இருக்கக் கூடாது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.)

    இவன் அந்தக் குறிஞ்சிக்கு மருத்துவம் செய்ய கண்விழிக்கிறாள்..ஆனால் அந்த மலர் மலங்க மலங்க முழிக்கிறது… தான் யாரெனக் கேட்கிறது..

    இது ஒரு வகை அம்னீஷியா எனப் புரிந்து கொள்கிறான்.. டாக்டரின் அம்மா அந்தப் பெண்ணிடம் குணமாகும் வரை இங்கேயே இரு அம்மா எனச் சொல்லிவிட அவளால் பாரமாக இருக்க விரும்பவில்லை..எனில் ஹாஸ்பிடலிலேயே வேலைபார்க்கிறாள்..அவளது ப்ரில்லியன்ஸ் மூலமாக டாக்டருக்கு அவள் நிறையப் படித்தவள், அதி புத்திசாலி வெகு நல்ல குணமுள்ளவள் எனத் தெரிகிறது…அழகாகவும் இருக்கிறாள்..எனில் அவளது பழைய வாழ்க்கையை மறந்து அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து முதலில் அம்மாவிடம் பர்மிஷன் கேட்டு ஓகே வாங்கி அவளிடம் கேட்கிறான்..அவளுக்கும் கொஞ்சம் குழப்பம் முதலில்..பின் கொஞ்சம் கொஞ்சமாய் க் கனிந்து சரி என்கிறாள்

    ஆனால் எல்லாமே ஸ்மூத் ஆகிவிட்டால் வாழ்க்கையில் எப்படி சுவாரஸ்யம் ஏற்படும்..

    ஒரு நாள் ஒரு மனிதன் வருகிறான்..தன் பெயர் ராகேஷ் என்கிறான் டாக்டரிடம்.. குறிஞ்சிப் பெண்ணின் போட்டோ காண்பித்து இது என் மனைவி லலிதா என்கிறான்.பார்த்தீர்களா என டாக்டரிடம் கேட்கிறான்..
    டாக்டர் திகைக்கிறார்..

    பின் அவனிடம் லலிதாவின் நிலைமையைச் சொல்லிக் காட்டுகிறார்..அவன் கொஞ்சம் லலிதாவிடம் பேச்சுக் கொடுக்க லலிதாவிற்கோ (இப்போது குறிஞ்சி) அவன் தன் கணவன் எனச் சிறிதும் நினைப்பே வரவில்லை..

    இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்துவிட்டு அந்தக் கணவன் டாக்டரிடம்- டாக்டர் நீங்கள் தான் இந்தப் பெண்ணிற்கு மறு ஜனனம் கொடுத்தீர்கள்..உங்களைப் பற்றி பேசும் போது அவளின் கண்களில் நாணம் மின்னல் எல்லாம் பார்க்கிறேன்..என் லலிதாவிடம் நான் பார்த்தறியாத ஒன்று.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் குறிஞ்சியை மணம் செய்துகொள்ளுங்கள்.. நான் விலகுகிறேன்” என ராகேஷ் விலகிச் செல்கிறான்..

    இதுவும் ஆனந்த விகடனில் வந்த தொடர்கதை தான்..ஜனனம் என்ற தலைப்பு என நினைக்கிறேன்..வாஸந்தியின் மென்னெழுத்துக்களில் மனதை வருடும் தொடர்..மாருதியின் உயிரோவியங்கள் மனதை அள்ளும்..

    சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)

    இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..

    ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..

    *

    பருவம் கனிந்து வந்த பாவை வருக
    புடவை அணிந்து வந்த பூவே வருக
    ஆஹா சொந்தம் ஆனந்தம்
    சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
    கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக

    பருவம் கனிந்து வந்த பாவை இவளே
    புடவை அணிந்து வந்த பூவும் இவளே
    யாரோ எழுதிய கவிதை மனப் பாடம் செய்தேன் வரிகளை

    காதல் பருவம்கனிந்து வந்த பாவை இவளே
    புடவை அணிந்து வந்த பூவை இவளே..

    அன்பே கண்ணால் பேசுங்கள் போதும்
    நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
    ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே
    நிலவொன்றுகண்ணீரில் மிதந்தது அப்போது
    கறைகளும் இல்லாமல் கரைவந்ததிப்போது
    தோளை சேர்த்து மாலை மாற்று..

    *
    அடுத்த பாட்டில் வரட்டா..

  12. #930
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் அம்மா கிட்டதட்ட தன்னுடைய சிறு வயது முதலான தனது ஸ்டாம்ப் ஆல்பத்தை என்னிடம் கொடுத்தார்.(கிட்டத்தட்ட 500 வேறு வேறு நாடுகளின் ).எங்களுடன் வளர்ந்த என் அக்கா போன்றவர் , நூலகம் செல்லும் வழக்கம், தொடர்களை கிழித்து ,சேர்த்து வைத்து ,நாங்களே தைத்து bind பண்ணும் கலையை கற்று கொடுத்தார்.(நான் முதலில் கிழிக்க ஆரம்பித்த தொடர்கள் ஒளிவதற்கு இடமில்லை,(குமுதம்),இரண்டு பேர் (கல்கண்டு),நினைத்தேன் வந்தாய் (ஆனந்த விகடன்),சுழி காற்று (கல்கி) ).அப்போதெல்லாம் ,வீட்டிலேயே பம்ப் வைத்து எங்கள் சைக்கிள் நாங்களே காற்றடிப்போம். பஞ்சர் ஓட்ட dunlop solution ,emery sheet (கட்டையில் சுற்றியது),சுத்தி,spanner ,screw டிரைவர் ,பழைய tube collection உண்டு. (பழைய tyre தூக்கி எரியாமல் வைத்து உருட்டி விளையாடுவோம்).பாட புத்தகத்தை நாங்களே bind செய்து ,அட்டை போட்டு label ஓட்டுவோம்.பெரிய தோட்டம். நாவல் மரம்,வாழை (மொந்தன்,ரஸ்தாளி,பூவன்),மாமரங்கள் (பெங்களுரா கிளி மூக்கு,பங்கன பல்லி ,தாடி பசந்த் என்ற ஜூஸ் மாம்பழம்,எலுமிச்சை மரங்கள், தக்காளி,வெண்டை,உருளை,வெங்காய செடிகள்.ஆப்பிள் ,பலா மரங்கள் எங்கள் நெய்வேலி தோட்டம். நாங்களே பாத்தி கட்டி ,களை வெட்டி ,தண்ணீர் விட்டு....(விடுங்கள் ரேடியோ காலம்)

    வெளி கேம்ஸ். செவென் ஸ்டோன்ஸ்,உப்பு,கல்பாரி,மர கவுண்டி,பாண்டி,பம்பரம்,கிட்டிபுள்,கபடி,பால் பாட்மிட்டன்,foot ball ,கிரிக்கெட்,கேரம்,சீட்டு, என்று மூட்,சீசன்,செட் பொறுத்து. அதை தவிர முக்கியமாய் கோலி .இந்த விளையாட்டிற்கு சிகரெட் அட்டை ரொம்ப முக்கியம். யானை படம் போட்டது 100. scissors 50.passion show (தொப்பி) 25 என்று இதுதான் exchange value .இதை பொறுக்க கடை கடையை தெரு தெருவாய் விஜயம்.இன்று சிகரெட் தொடாமல்,மற்றோரை மாற செய்யும் நான்,அன்று உலகத்தில் எல்லோரும் புகை பிடிக்க மாட்டார்களா என்று ஏங்கியது நகை முரண்.(அதுவும் costly யானை brand )

    அடடா...பாட்டு புஸ்தகம் மறந்தேனே? என்னுடைய சொந்த முயற்சியில் நான் சேர்த்த பழக்கம்.சினிமா நோட்டீஸ் மற்றும் பாட்டு புத்தகங்கள். புது படங்களுக்கு தியேட்டர் ஸ்டால் கிடைக்கும்.(10-15 பைசா). பழசுக்கு ,வடலூர் தை பூசம்,வேலுடையான் பட்டி பங்குனி உத்திரம் என்று நடை பாதை கடைகள். கிட்டத்தட்ட 200-250 புத்தகங்கள். சோக கதை என்னவென்றால்,கல்லூரி போகும் போது ,மூன்று பெரிய trunk பெட்டிகளில், bind கதைகள், சிவாஜி பாட்டு புத்தகங்கள்,notice ,சஞ்சிகைகள்(திரை கதிர்,குண்டூசி,சித்ராலயா ,சிவாஜி ரசிகன் ETC ), ஆவணங்கள் எல்லாமே அடக்கம். வீட்டில் இடம் போதாமல் ஷெட் போட்டு இவை சேகரம். ஐந்தாம் செமஸ்டர் விடுமுறை. எல்லாம் எடுத்து பார்க்கலாம் என்று தூக்கினால் செம கனம் . பூட்டை திறந்து (முப்பந்தைந்து பைசா பூட்டு ஒன்று)பார்த்தால் உள்ளே மண்ணுக்கு நடுவில் அரித்து போன காகித மிச்சங்கள்.இரண்டு நாள் தொடர்ந்து அழுதிருக்கிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •