-
25th August 2014, 03:11 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
rajsekar
It's been a year since I attended "Raaja The Raaja" London O2 concert - it was indeed a musical rain in London. I haven't seen the recording of the concert being posted anywhere. Maestro rendered 42 songs without any interruptions, except for Kamal's arrival.
இன்று காலை கிழக்கு லண்டனில் ரெட்ப்ரிட்ஜ் என்கிற ஊருக்கு ஒரு தேவைக்காக மனைவி மற்றும் மகனுடன் செல்ல நேர்ந்தது. வேலை முடிந்து மதியம் ரெட்டிங் கிளம்பலாம் என்று நினைத்த நேரத்தில், வெயில் உடம்பில் படவும், லண்டன் சென்று சுற்றி விட்டு மாலை ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.
ரெட்டிங் என்கிற ஊரில் நான் குடியிருந்தாலும் லண்டனிலிருந்து வெகு தூரம் இல்லை. நெரிசல், ஒரு வழி சாலைகள், ஸ்பீட் கேமரா என்று எனக்கு பிடிக்காதவை அங்கு அதிகம். அதனால், அந்த நகரம் அழகாய் இருந்தாலும், லண்டனுக்கு போவதை நான் அதிகம் விரும்புவதில்லை.
கிழக்கு லண்டனில் இருந்து கிளம்பிய நாங்கள் எதையுமே திட்டமிடாமல் நேராக O2 அரங்கத்தில் காரை நிறுத்திவிட்டு, பையனுக்கு பொழுது போகட்டுமே என்று புதியதாய் நிறுவப்பட்டிருக்கும் எமிரேட்ஸ் கேபிள்-காரில் ஒரு சுற்று போய் வரலாம் என்று அதிலும் போய் விட்டு O2 அரங்கத்துக்கு வந்தோம். இந்த நாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும் O2 அரங்கத்துக்கு வருவது இது இரண்டாம் முறை. சென்ற ஆண்டு அவருடைய நிகழ்ச்சிக்கு முதல் முறை.. மீண்டும் இன்று.
ராஜா சாரின் ராஜா ராஜா தான் நிகழ்ச்சியை பற்றி நான் பேசி கொண்டே வர.. விட்டால் போதும் என்று உடன் வந்த என் மனைவி போட்டோ எடுக்கும் சாக்கில் பையனை அழைத்து கொண்டு அங்கும் இங்கும் போய் கொண்டிருந்தார். நான் தனியே அமர்ந்து, ராஜா சார் இங்கு வந்த இடம், அவர் கால் பட்ட இடம், அவர் பேசியது பாடியது என்று எதை எதையோ நினைத்து உம்மென்றிருக்க, அருகே வந்த மனைவி, சம்மந்தமே இல்லாமல் ஹே, இன்னிக்கு என்ன தேதி என்றார்..
ஆகஸ்ட் 24 என்றேன்... இந்த தேதி பற்றி மண்டையில் ஏதோ பொறி தட்ட,
ராஜா ராஜா தான் நிகழ்ச்சி நடந்த அதே நாள் தான் இன்று. ஆகஸ்ட் 24.. அது நடந்து சரியாக ஓராண்டாகி விட்டது. என்னையும் அறியாமல் அதே தேதியில் இன்று நாங்கள் மீண்டும் O2 அரங்கத்தில்.. ராஜா சார் வந்து சென்ற ஒரு இடத்துக்கு, அதே தேதியில் மீண்டும் நான் ...
உங்களுக்கு இது என்னுடைய அறிவு கேட்ட மூடத்தனமாக தெரியும்.. ஆனால் எனக்கு புல்லரித்தது. பிறகு அதிகம் பேசி என் மனைவியை வெருபேற்றவில்லை. என் நினைவெல்லாம் அவர் தான் ஆக்கிரமித்திருந்தார்.
மறந்தால் தானே நினைக்க வேண்டும்?
நினைவே அவரென்றால்?
வீட்டுக்கு வந்ததும் இதுவரை கேட்டிராத ஏதாவது ஒரு ராஜா சார் பாடலை கேட்கலாம் என்று தேடியதில் ஒரு முத்து கிடைத்தது.. ஒ ப்ரேமி ஜெச
http://www.saavn.com/p/song/hindi/Ak...ni/Jl0bdSx7Y1w
Last edited by rajaramsgi; 25th August 2014 at 03:17 AM.
-
25th August 2014 03:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks