Scintillating Seventies - Folk
Scintillating Seventies - Light & Semi-Classical
Scintillating Seventies - Advent of WCM Technical Depth
Exhilirating Eighties - Early 80's fusion
Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration
Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)
New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)
New Age Nineties - The Malayalam Majesty
Maestro's Magic - 2000's
நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting
பொன்மேகலை!
Veena Vani--- Ilayaraja & Madurai.T.Srinivasan
![]()
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
என்னை என்னச் செய்தாய்!
--- சுதா ரகுநாதன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
தாய்மூகாம்பிமை - இசையரசி!
ராஜாவின் ஆக்கம் சிறப்பு. பாடலின் உச்சக்கட்டமாக "உணர்ச்சிகளின் அரசி" ஜானகியின் குரல் பிரமிப்பு. அதற்கு வாயசைத்த சரிதாவின் நடிப்பு விஸ்வரூபம்.
வரிகளுக்கு வாயசைக்கையில் முகபாவனைகளால் விஸ்வரூபம் எடுத்த நடிகைகளில் முதலிடம் சரிதாவிற்கு!
![]()
Last edited by venkkiram; 25th August 2014 at 11:22 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
கோரஸ் & ஹம்மிங் இரண்டும் ஒரு பாடல் முழுதும் ஆக்கிரமித்து இருப்பது இந்தப் பாடலில்தான்.
வேறு ஏதேனும் இந்த அளவுக்கு வியாபித்திருந்தால் குறிப்பிடலாம்.
அறிமுகமாகி ஐந்து வருடத்திலேயே தமிழ்த் திரையிசையின் மொழியை, போக்கினை பல மடங்கு நவீனப் படுத்திவிட்டார்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
உண்மை. இதே போன்ற எண்ணம் எனக்கு மற்றொரு பாடலிலும் வந்துள்ளது. பாடிய வாசுதேவன் ஜானகியை விட, இந்த பாடலில் பிசிரில்லாமல் அழகாய் கோரஸ் கொடுத்த பெண்மணிகளின் பங்கு அதிகம். எப்போது இதை கேட்டாலும் கோரஸ் மற்றும் வாத்தியகாரர்களை ஒரு சில மணி நேரங்களில் தயார் செய்து எப்படி பாட வைத்தார்கள் என்று மலைப்பாக இருக்கும்.
கரும்பு வில் படத்தில் மலர்களிலே.
Last edited by rajaramsgi; 26th August 2014 at 12:42 AM.
இந்த படம் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இதன் ஆடியோ வெளியான சமயத்தில் நான் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல் வீனா வாணி. (ts ராகவேந்தரின் மகள் கல்பனா பாடியது)
இதே படத்தில் பவதாரிணியும் சாதனா சர்கமும் பாடிய 'ஆலாபனை செய்யும் மாலை பொழுது' என்ற பாடலும் பிரமாதம்.
சிறந்த பாடலாக்கம்.
ரதிமடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனைகள் முடியாதது
யாருங்க இதை எழுதியது? கண்ணதாசனின் நடையை ஒத்ததாக இருக்கு. கிடைத்த கொஞ்ச நேரத்திலும் மலேசியாவின் குரல் மனம் முழுதும் ஊடுருவி பாய்கிறது.
எழுத்து வரிசையில் இந்தப் பாடலும், "மலர்களே நாதஸ்வரம்" பாடலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் எனது செல்பேசிப் பாடல் தொகுப்பில். இரண்டிலுமே ஜானகி, மலேசியா மற்றும் கோரஸ் பாடகர்கள். இரண்டுமே ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் சேமித்துக் கேட்கக் கூடிய பாடலாக்கங்கள்.
"மலர்களே நாதஸ்வரம்" - சரணங்களில் மலேசியாவின் குரலுக்கு இணையாக ஜானகியின் ஹம்மிங்.. விவரிக்க வார்த்தையே இல்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
ஆண்மக்கள் வலம்வரும் பாடல்காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கக்கூடிய பெண்குரல் ஆளுமை ஜானகிக்கே.![]()
பாடலின் ஆரம்பச் சொல்போலவே மந்திரம்தான். இசையும் குரலும் ஒரு மந்திரவாதிபோல நமது உணர்வு நரம்புகளை தட்டியெழுப்பும் சக்தியை இப்பாடலாக்கத்தில் உணரலாம். கங்கை அமரன் சொல்வது போல.. ராஜா பயன்படுத்தும் வாத்தியக்கருவிகள், வாத்தியக்காரர்கள் இன்னொரு இசையமைப்பாருக்கு சென்றாலும், ராஜா கட்டமைக்கும் ஒலிக்கு நிகராக வேறெந்த இசையமைப்பாளரும் வெளிக்கொணர முடியாது. வாத்தியங்கள் ஒவ்வொன்றுடனும், மெலடிக்கான குரலுடனும் தொடர்ந்து உரையாடும் போக்கினை ராஜாவின் இசையில் காணலாம். சிறப்பம்சங்களில் அது மிகமுக்கியமானதும் கூட.
இரவு நேரங்களில் கேட்டுப்பாருங்கள். பரந்த வானத்தை காரிருள் கவ்வுவதுபோல, உங்கள் மனதை ஒரு இனம்புரியாத சோகம் ஆக்கிரமிப்பதை உணரலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks