-
26th August 2014, 01:27 PM
#1141
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மதுஜி,
ராட்சஸி பாடிய ஒரு காபரே நடனப் பாடல். 'ஜல்சா ஜல்சா ஜல்சா' என்று தொடங்கும். அதற்கு மேல் நினைவில்லை. பழைய சிடியை தேடிப் பார்க்க பொறுமை இல்லை.
பாட்டாகவோ அல்லது படமாகவோ தர இயலுமா?
ஞாபகம் வ்ரவில்லையே ஜி.... இன்னும் ஏதாவது க்ளூ இருந்தா கொடுங்களேன்.
-
26th August 2014 01:27 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2014, 01:37 PM
#1142
Senior Member
Diamond Hubber
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி பாடலைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது...
அனேகமாக கதா நாயகிகளுக்கு எல்லாம் பி.சுசீலாதான் குரல் கொடுப்பார். ஒரு சில படங்களில் ( குமரிப்பெண் etc. ) ஈஸ்வரியின் சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைராக்கியம் என்று ஒரு படம். ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, ஜோதிலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வந்தது.
தெருவில் கூத்தாடிப் பிழைக்கும் எஸ்.எஸ்.ஆரையும் அவர் சகோதரி நிர்மலாவையும் சுற்றி ஓடும் கதை. நிர்மலாவின் ஜோடியாக படித்த வாலிபன் ஜெமினி.
கூத்தாட உடன் வந்து சேரும் ஜோதிலட்சுமி கடைசியில் கொலைக் குற்றம் செய்த எஸ்.எஸ்.ஆரைக் கண்டு பிடிக்க வந்த சி.ஐ.டி எனும் புதிய பறவைக் கதையில்.. அனேகமாக எல்லாப் பாடல்களுமே பெண் குரலுக்கு எல்.ஆர்.ஈஸ்வரியையே சார்ந்து இருந்தன.
ஆரம்பப்ப் பாடலான "தென் பாண்டிச் சீமையிலே நான் பிறந்தேன்.. தெம்மாங்கு பாட்டுப் பாடி ஆட வந்தேன்" என்று டி.எம்.எஸ் விருத்தம் பாட..
"தேருக்குச் சேலை கட்டி தெருவில் விட்டா.. யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா" என்று ஈஸ்வரி தேன் சொட்டப் பாடலைத் தொடர்வார்.
டி.எம்.எஸ், ஈஸ்வரி டூயட்டான "சொல்லத் துடிப்பது என்ன.. மெல்லச் சிரிப்பது என்னா.. மூடி மறைப்பது என்ன.. மோகம் பிறக்குது வா வா" என்ற பாடலும்..
"ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்" என்ற பாடலும் நினைவுக்குள் மீண்டும் இசைக்க... தேடோ தேடென்று தேடியதில் ஒன்றே ஒன்றுதான் வீடியோவாக சிக்கியது. மிச்சம் எல்லாம் ஆடியோ
தேருக்கு சேலை கட்டி
http://www.inbaminge.com/t/v/Vairakk...aatti.vid.html
சொல்லத் துடிப்பது என்ன
http://www.inbaminge.com/t/v/Vairakk...0Enna.vid.html
ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்
அந்த சர்ர்ர்.. சர்ர்.... என்ன அருமையாக ஒலிக்குது ?
Last edited by madhu; 26th August 2014 at 01:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2014, 01:44 PM
#1143
நண்பர் ஒருவர் இடம் இருந்து காலையில் ஒரு மெயில் வந்து இருந்தது
அதில் இரண்டு பாடல்களை அனுப்பி இருந்தார்
ஒன்று மாயா பஜார் படத்தில் இடம் பெற்று இருந்த தமிழ் பாடல் 'கல்யாண சமயல் சாதம் ' கண்டசால இசை அமைப்பு
மற்ற ஒன்று பிரெஞ்சு மொழி பாடல் என்று கூறி உள்ளார்
குமுதம் 6 வித்யாசங்கள்
-
26th August 2014, 02:03 PM
#1144
Senior Member
Diamond Hubber
மதுஜி,
நிஜமாகவே தூள். நானும் வைராக்கியத்துடன் தேடித் தேடி அலுத்து வைராக்கியம் இழந்து விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அட்டகாசமாகத் தேடிக் கண்டு பிடித்துத் தந்து விட்டீர்கள் இந்த ராட்சஸி ரசிகனுக்காகவே போலும்.
கொன்னுட்டீங்க பாஸ். தேங்க்ஸ்ஜி. ஆமாம். பானுமதி பாட்டு கேட்டாச்சா?
-
26th August 2014, 02:15 PM
#1145
Senior Member
Veteran Hubber
அறிவிப்பு
இன்றோ அல்லது நாளையோ அல்லது அடுத்த வாரமோ வாசுதேவன் அவர்களின் 'இன்றைய ஸ்பெஷல்' பாடலாக மலரவிருப்பது, கண்ணதாசனின் கருப்புப்பணம் படத்திலிருந்து (தப்பா எடுத்துக்காதீங்க... கண்ணதாசன் தயாரித்த கருப்புப்பணம்) மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையில், ஜி.ஆர்.நாதனின் அற்புத ஒளிப்பதிவில், சீர்காழி மற்றும் ராட்சசி அசத்தும் பாடல்
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது"
நடனக்குழு மங்கையரின் அழகான ஒருமித்த கைதட்டலுக்காகவே பார்த்துக் கொண்டிருக்கலாம்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2014, 02:20 PM
#1146
Senior Member
Diamond Hubber
மதுஜி!
பழைய ஞாபகத்தை கிண்டிக் கிளறி விட்டீர்கள். ஒரே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் இரு படங்கள். (சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள். 29.10.1970) கடலூரில் காலையில் நியூசினிமாவில் 'எங்கிருந்தோ வந்தாள்' பார்த்துவிட்டு, மதியம் பாடலியில் 'சொர்க்கம்' பார்த்துவிட்டு, ஈவினிங் ஷோ முத்தையா திரையரங்கில் 'வைராக்கியம்' பார்த்ததாக நினைவு. ('வைராக்கிய'த்தைப் பொறுத்த மட்டில் நினைவுதான். ஊர்ஜிதம் இல்லை. கார்த்திக் சார் மனது வைப்பாராக. 'வைராக்கியம்' ரிலீஸ் நான் சொன்னது சரியா இல்லையா என்று. சரியாய் இருந்தால் 'நல்ல ஞாபக சக்தி' என்று எனக்கு நானே 'ஷொட்டு' வைத்துக் கொள்வேன்
..)
நீங்கள் இரண்டு வரியில் 'வைராக்கியம்' கதையை எழுதப் போக, வாழை மட்டை மாதிரி இருந்த புத்தி கற்பூரமாய் மாறி பக்கென்று பிடித்துக்கொண்டது. அப்படியே மல்லாக்க சாய்ந்து எண்ண அலைகளில் மூழ்கி விட்டேன். (வீட்டுக்காரம்மா சாப்பிடக் குரல் கொடுப்பது அதையும் மீறிக் கேட்கிறது.
சாப்ட்டுட்டு வாரேன்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th August 2014, 02:23 PM
#1147
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
அறிவிப்பு
"தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது
எண்ணங்கள் மெல்லமெல்ல எங்கெங்கோ போகுது"
நடனக்குழு மங்கையரின் அழகான ஒருமித்த கைதட்டலுக்காகவே பார்த்துக் கொண்டிருக்கலாம்...
எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று. நன்றாக படமாக்க பட்டிருக்கும். ஜி.ஆர்.நாதன் படமாக்கம் எப்போதுமே அருமை. லட்சுமி கல்யாணம்தான் ரொம்ப சுமார். சிவாஜி நடனங்களில் கிளப்பி இருந்தாலும்.
Last edited by Gopal.s; 26th August 2014 at 02:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2014, 02:52 PM
#1148
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மதுஜி,
நிஜமாகவே தூள். நானும் வைராக்கியத்துடன் தேடித் தேடி அலுத்து வைராக்கியம் இழந்து விட்டு விட்டேன். ஆனால் நீங்கள் அட்டகாசமாகத் தேடிக் கண்டு பிடித்துத் தந்து விட்டீர்கள் இந்த ராட்சஸி ரசிகனுக்காகவே போலும்.
கொன்னுட்டீங்க பாஸ். தேங்க்ஸ்ஜி. ஆமாம். பானுமதி பாட்டு கேட்டாச்சா?
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு நாங்கள் உமக்குரைத்த நன்றியே !!!!
பானுமதி பாடல் அருமையோ அருமை.. மறந்து போன வரிகளை எல்லாம் பிரஷ் வச்சு தேச்சு கிளீன் செய்து கொண்டு இருக்கிறேன். !
-
26th August 2014, 03:10 PM
#1149
Senior Member
Senior Hubber
-
26th August 2014, 03:13 PM
#1150
Senior Member
Senior Hubber
//இந்த விமர்சனம் என்றில்லை. அன்றைய விமர்சனங்கள் எதிலும் இசையைப் பற்றி எழுதுவதேஇல்லை. என்னவொரு கொடுமை...// கார்த்திக் சார் அந்தக் கால ப் பட விமர்சனங்கள்ள ஜெனரலா கதை முதலில் தென் பாடல்கள்.. மற்ற விஷயமெல்லாம் அவ்வளவாகச் சொன்னதில்லை என நினைக்கிறேன்.. இந்த நிலை மாறியது எண்பதுகளில் விகடன் மார்க் வழங்கும் உத்தியை ஆரம்பித்ததற்கு அப்புறம் தான்..அப்போதுதான் எடிட்டிங்க் ஒளிப்பதிவு வசனம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன என நினைக்கிறேன்..
Bookmarks