Page 148 of 401 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1471
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி

    இன்று உங்களுக்காக அதி மனோகர அற்புத மலையாள பாடல்

    ஷீலாவின் நடிப்பு இந்த படத்தில் மிக பிரமாதமாக நடித்திருப்பார்

    அஸ்வமேதம் திரையில் தேவராஜன் மாஸ்டரின் இசையில், வயலார் அவர்களின் வரிகளுக்கு கன கச்சிதம்




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1472
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    This is a great honor AR Rahman
    Aug 28, 2014


    Behindwoods.com conducted its first annual Gold Summit on the 15th of June, 2014 at ITC Grand Chola. The event was graced by a galaxy of stars, including AR Rahman, Dhanush, Bharathiraja, Siva Karthikeyan, Anirudh, Pooja Umashankar, MS Viswanathan and many others.


    The 'Mozart of Madras' was presented the Behindwoods Gold Medal for Best Music Direction, for Kadal and Maryan. AR Rahman got his award from 'Mellisai Mannar' MS Viswanathan. Accepting the award, AR Rahman said, This is a great honor. Ella Pughazhum Iraivanukke


    About the evergreen melody king, MSV, Rahman said, Whenever I look at him, I see music. I see melody. His influence has definitely lasted as an extraordinary fragrance for four to five decades and will continue to be so.


    I am your fan too Rahman, please add me too in your fans list, said MSV after having honored ARR with the Behindwoods Gold Medal.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1473
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,
    சிறு வயதில் ஒவ்வொரு பள்ளி விடுமுறை நாட்களின் போதும் கேரளாவில்
    உள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது என் வழக்கம். அப்போது அங்கு அடிக்கடி
    கேட்டு மகிழ்ந்த அஸ்வமேதம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு சுந்தர ராத்திரிகள்
    பாடலைப் பதிவிட்டமைக்கு என் நன்றிகள்.
    கோபு

  5. #1474
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopu1954 View Post
    ராஜேஷ் சார்,
    சிறு வயதில் ஒவ்வொரு பள்ளி விடுமுறை நாட்களின் போதும் கேரளாவில்
    உள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது என் வழக்கம். அப்போது அங்கு அடிக்கடி
    கேட்டு மகிழ்ந்த அஸ்வமேதம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு சுந்தர ராத்திரிகள்
    பாடலைப் பதிவிட்டமைக்கு என் நன்றிகள்.
    கோபு
    கோபு ஜி , பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

  6. #1475
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 விநாயகர் படங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ள..

    http://www.mediafire.com/?ymdyjkzon3t#2

    நன்றி ஈகரை அன்பர் சிவா அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1476
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலை வணக்கம் ராஜேஷ் வாசு கோபு சி.க. கோபால் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
    இந்நாளில் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல அந்த கணேசனை வேண்டுவோம். அந்த கணேசன் அருளால் நல்லதே நடக்கும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1477
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (64)

    'இன்றைய ஸ்பெஷல்' பாடல் மிக, மிக அருமையான, அபூர்வமான, அடிக்கடி நாம் கேட்க முடியாத பாடல்.



    'ருத்ரதாண்டவம்' (1978) படத்திலிருந்து


    நடிகர்கள்: விஜயகுமார், சுமித்ரா, வி.கே.ஆர், நாகேஷ், எம்.ஆர்.ஆர்.வாசு, சுருளி, மனோரமா, லாவண்யா

    இசை: 'மெல்லிசை மன்னர்'

    தயாரிப்பு : ஸ்ரீமதி ஆர் .ரமணி (வி.கே.ஆரின் மனைவி) (அலமேலு மங்கா புரொடக்ஷன்ஸ்)

    கதை வசனம்: ஏ.வீரப்பன்

    பாடல்கள்: கண்ணதாசன், வாலி

    ஒளிப்பதிவு: ஜி.ஆர். நாதன்

    இயக்கம்: கே.விஜயன்




    வி.கே.ராமசாமி தன் மனைவி ரமணி பெயரில் தயாரித்த முழு நீள நகைச்சுவை சித்திரம். அத்தனை நகைச்சுவை நடிகர்களும் உண்டு. வி.கே.ஆர். சிவனாக பூமிக்கு வந்து படாத அவஸ்தையெல்லாம் படும் ஜாலி கதை. வி.கே.ஆருக்கு இதெல்லாம் 'ப்பூ' கேரக்டர். மனிதர் உடம்பை அசைக்காமல் சிவன் வேடத்தில் நின்றபடியே வாயாலேயே வலை போட்டு விடுவார். பூசாரியாக நாகேஷ். படத்தில் ராதாரவியும், லாவண்யாவும் ஒரு ஜோடி.



    'புரட்சிக் கலைஞர்' விஜயகுமாருக்கும் (அப்படித்தான் டைட்டிலில் போடுவார்கள்) சுமித்ராவுக்கும் அருமையான ஒரு காதல் பாட்டு.

    பாலாவும், வாணி ஜெயராமும் கலக்கி எடுத்து விடுவார்கள்.

    மிகக் கடினமான, இடைவெளி விடாத, அதிகமான வரிகள். அழாகான தமிழில் வரிகள் கொஞ்சி விளையாடும் சற்றே காமம், மோகம் கொண்டு.

    உதாரணத்திற்கு இரண்டு வரிகள்.

    'உடலெங்கும் உங்கள் பூஜை
    இதுதானே உங்கள் ஆசை'



    விஜயகுமாருக்கும், சிவக்குமாருக்கும், ஜெய் கணேஷுக்கும் பொருத்தமான ஜோடி சுமித்ரா. விஜயகுமார் வழக்கம் போல். ஆனால் ஆள் 'ஜம்'மென்றிருப்பார். குடும்பப் பாங்கான லட்சணம். டீசன்ட்டான லவ் சாங்.

    பாலா அப்படி ஒரு குழைவு. அவருக்கு சரியான ஈடு வாணி. 'மெல்லிசை மன்னரி'ன் இன்னுமொரு அற்புதம்.

    எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல்.




    இப்பாடலை 'பொங்கும் பூம்புனல்' தொடரில் அபூர்வமான பாடல்களை அள்ளித்தரும் 'ரசிக வேந்தர்' என் இனிய நண்பர் ராகவேந்திரன் சாருக்கு அன்புப் பரிசாக அளிக்கிறேன்.

    இனி பாடலின் முழு வரிகள்

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    இதழ் தொட்டு தென்றல் பூஜை
    இடை தொட்டு காமன் பூஜை
    உடலெங்கும் உங்கள் பூஜை
    இதுதானே உங்கள் ஆசை
    மோகம் அழைக்கின்றதே
    நாணம் தடுக்கின்றதே
    ம்ஹூம் நாணம் தடுக்கின்றதே

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    நீர்கொண்ட மேகங்கள் குடை போடவும்
    நிலைகொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
    தேர் கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
    திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ

    கார்கூந்தல் கடல் கண்ட அலையாகவும்,
    கல்யாணப் பூச்செண்டு அசைந்தாடவும்
    தேர்கொண்ட மணிச்சங்கு ஒலி காட்டவும்
    நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ
    நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ

    அங்கம் தொடமால் சங்கம் இலாமல்
    கண்ணில் சுகங்கள் இல்லை
    மன்னன் வராமல் மகராணி என்னும்
    பெண்மை நலங்கள் இல்லை

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
    சிறுமுல்லை மகரந்தப் பொடி தூவுது
    பால்வண்ணம் மடிமீது விளையாடுது
    மழைராகத் தமிழ் வீணை இசைபாடுது

    உறவென்றும் சுகமென்றும் நினையாதது
    ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
    இரவென்றும் பகலென்றும் அறியாமலே
    இதமான சுகம் காண உன்னை நாடுது
    இதமான சுகம் காண உன்னை நாடுது

    தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
    என்றும் மறந்ததில்லை
    அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
    ஆசை இழந்ததில்லை

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

    விழியே இது என்ன ராஜாங்கமோ

    விழியே இது என்ன ராஜாங்கமோ


    Last edited by vasudevan31355; 29th August 2014 at 12:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1478
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏழு சுந்தர ராத்ரிகள் ஏகாந்த சுந்தர ராத்ரி- முழுதும்பார்த்தேன் ராஜேஷ் ஜி நன்னி

    வாசு சார்..புதுமஞ்சள் மேனிச் சிட்டு நான் கேட்டிராத பார்த்திடாத பாடல்.. நல்லாயிட்டு இருக்கு.. நன்றி (ராகவேந்தர் சார் சந்தோஷப் படுவார்) மதுண்ணா க்ருஷ்ணாஜி கார்த்திக் சார்லாம் காணோம்..

  11. #1479
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மதுண்ணா க்ருஷ்ணாஜி கார்த்திக் சார்லாம் காணோம்..
    நான் நாலு நாள் லீவு. டாட்டா பை பை !

  12. Likes chinnakkannan liked this post
  13. #1480
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு இள நங்கை.. ஒரு இள வாலிபன்.. சமர்த்தா லவ் பண்ணிக்கிட்டிருக்காங்க.. என்ன ஆச்சு.

    .பிள்ளையார் சதுர்த்திக்கு லீவ் வந்துச்சா மூணு நாள்..நங்கை வந்து தன்னவன் கிட்ட வாஸ்ஸப்ல மெஸேஜ் விடறா..

    “என்னடா பண்றே.. தட்கல் ல புக் பண்ணிட்டேன் மதுரை தான்.. ட்ரெய்ன் தாம்ப்பா..இதோபோய்ட்டு மூணு நாள்ல வந்துடுவேன்..ஸ்வீட் ஹார்ட் ஃபோன், எஸ்.எம்.எஸ், வாஸ்ஸப்லாம் பண்ணிடாத.. எங்க அப்பாக்குத் தெரிஞ்சா கஷ்டம்.. ஸோ நீ என்ன பண்ற..இருடா செல்லம்..லேட்ட்ஸ்டா உனக்குப் பிடிச்ச சிகப்புச் சுடிதார் போட்டுக்கிட்டு தலையை பஃப்னு வெச்சுக்கிட்டு இருக்கறா மாதிரி ஒரு ஸெல்ஃபி அனுப்பறேன்..வெச்சுக்கோ.. மூணு நாளைக்குத் தாங்கும்..ஓகேயாடா..”

    பையனுக்கு பேஸ்த் அடிச்ச மாதிரி ஆய்டுது..அவனுக்கும் தான் லீவ்.. ரூமுக்கு வர்றான்..டிவி போடறான் த்ரிஷா, நயன் தாரா, தமன்னா,அவன் சித்தப்பாக்குப் பிடிச்ச தேவிகா ..எல்லாமே அவனோட அவளாவே தெரியறாங்க.. ராத்திரி வேற ஆய்டுச்சா, சேன்னு ரிமோட்ட த் தூக்கிப் போட்டுட்டு தான் இருக்கற ஃப்ளாட்டோட மொட்ட மாடிக்கு தன்னோட ஸாம்ஸங்க் நோட் 3 நியோவத் தூக்கிக்கிட்டுப் போறான்..அவளோட பேசிடலாம்னு ஒரு எண்ணம்..பட் அவ்ளோ சொல்லியிருக்காளே.. வாஸ்ஸப்ல இருக்கற அவளோட செல்ஃபி பாக்கறான்..குல்ஃபி சாப்பிட்டா மாதிரி ஜில்னு இருக்கு..அழகு தான் என் ஆளு..அப்படின்னு நெனச்சுட்டு மேல பாத்தா அவன் படற அவஸ்தையைப் பார்த்து சிரிச்சுக்கிட்டிருக்கு நிலா..

    நிலாவப் பாக்கறான் செல்ஃபியப் பாக்கறான்.. நிலால அவளோட முகம்மாதிரி தான் தெரியுது ஆனா அவ இல்லை..சரின்னு பாட்டு பாடிடறான்..அதுவும் பழைய்ய்ய பாட்டு..

    யார் எழுதினது.. பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.. அந்த்க் காலப் பாட்டு..
    *
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே

    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
    *

    ஹப்பாடா இப்பத் தான் அந்த வாலிபனுக்குக் கொஞ்சம் மனசு அமைதியாச்சு.. சரி கீழ போலாம்னு பார்த்தா ஃப்ளாட் மொட்டை மாடில்ல இருக்கற டிஷ் ஆண்ட்ன்னாவப் பாக்காம நடந்து கீழ விழப்பார்க்கறச்சே ஃபோன்.. எடுத்தா அவ.. பிரகாசமாகி ப் பேச ஆரம்பிக்கறான்..!

    *
    ,பட்டுக் கோட்டைக் கல்யாண சுந்தரம் எனக்குப் பிடித்த கவிஞர்..அவர் எழுதியது இந்த ஒருகாதல் பாட்டு தானா தெரியவில்லை..
    *
    அவரைப் பற்றிய தினமணி ரைட் அப் அடுத்த போஸ்ட்டில்…..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •