-
30th August 2014, 12:30 PM
#1531
Senior Member
Veteran Hubber
என் விருப்பம் (6)
அது ஒரு நிர்ப்பந்தத்தில் நடந்த திருமணம். மகாபாரத யுகம் போல பெண்ணை தேர்தலில் பணயப்பொருளாக வைத்து, அதில் கதாநாயகன் ஜெயிக்க, கதாநாயகிக்கு கொஞ்சமும் விருப்பமில்லாமல், ஆனால் தாயின் மாங்கல்யத்தை காப்பாற்ற, இளம்பருவத்திலிருந்து தன் வாழ்க்கை எப்படியெல்லாம் அமைய வேண்டுமென்று கண்டிருந்த கனவுகளை தியாகம் செய்து செய்துகொண்ட திருமணம். ஆனால் நாயகனுக்கோ அவள்மீது கொள்ளைப்பிரியம். அவளை அடைவதற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று தேர்தலில் பணயப்பொருளாக அவளை வென்று மணந்து கொள்கிறான்.
அவன் ஆவலோடு எதிர்பார்த்த முதலிரவு. ஆனால் அவள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத மோசமான முதலிரவு. அவன் அவள்மீது தனக்குள்ள காதலையெல்லாம் முதல்முறையாக விவரமாக சொல்லி வெளிப்படுத்தி, (அருமையான வசனங்கள், ஆனால் இது பாடலை பற்றிய பதிவு என்பதால் விவரிக்கவில்லை) மனைவி என்ற உரிமையில் தொடப்போக, நாயகியின் திடீர் ஆணை "தொடாதீங்க, நீங்க மான ரோஷமுள்ளவராயிருந்தால் என் அனுமதியில்லாமல் என்னைத் தொடக்கூடாது" என்று உத்தரவு போட, ரோஷத்தில் எல்லோரையும் மிஞ்சிய அந்த மானஸ்தன் சத்தியம் செய்கிறான் "நீயாக விரும்பி என்னைக்கு என்னைத்தொடுறியோ அதுவரை உன்னைத்தொட மாட்டேன். இது என் தாய்மீது சத்தியம்". சொல்லிவிட்டு வெளியேற, இந்த அதிர்வலையை எதிர்பாராத நாயகி திகைத்து நிற்க......
எந்தவித அதிரடியும் இல்லாமல் (கதாநாயகனின் நடைக்கேற்ப) அமைதியான, அதே சமயம் இரவின் சூழலை நமக்கு உணர்த்த தவளைகளின் 'கரகர' சத்தத்துடன் முன்னிசை முடிய பாடல் ஆரம்பம்.
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக தொடரும் இடையிசை.
இந்த மண்ணுக்கு தீண்டாமை என்பது புதியதா என்ன?, அதுவும் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த நான் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த உன்னைப்பார்த்து இந்த வார்த்தையைச் சொல்லியிருந்தால் இது சற்று புதுமையாக இருந்திருக்கும். ஆனால், மேல்வர்க்கமான நீ என்னைப்பார்த்து சொல்வது காலம் காலமாக நடப்பதுதானே. அப்படியாவது நீ சொந்தமாக ஏதாவது சொன்னாயா?. ஏற்கெனவே திருநீலகண்டனைப் பார்த்து அவன் மனைவி சொன்ன 'தொடாதே' என்ற வார்த்தையை இரவல் பெற்றுத்தானே என்னிடம் பிரயோகித்துள்ளாய்?.
புதியதல்லவே தீண்டாமையென்பது
புதுமை அல்லவே அதை "நீயும்" சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
ஒரு பாடலில் தாளமும் ராகமும் ஒரே விதத்தில் அமைந்தால் மட்டுமே அந்தப்பாடலை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளும். இரண்டும் வெவ்வேறு விதமாக அமைந்தால் அந்தப்பாடல் மனதுக்கு அன்னியமாகித்தானே போகும். (அடுத்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயதிலிருந்து அனைவரும் அறிந்தது)
தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
தங்கச்சுரங்களில் தங்கத்தைத் தோண்டியெடுப்பவர்கள் எல்லோரும் தங்கத்தை அணிந்து ஜொலிக்கிரார்களா, அவர்கள் வீடுகளில் தாண்டவமாடுவது வறுமையே. கோயிலை எழுப்ப அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து, அது கட்டி முழுமை அடையும்வரை கல்சுமந்து, மண்சுமந்து கோயிலை கட்டுவது நாங்கள். ஆனால் எல்லாம் முடிந்து, நாம் கட்டிய கோயில்தானே என்று நுழைய எத்தனித்தால் எங்கிருந்தோ ஒரு குரல் வரும் 'நுழையாதே' , நீயும் அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பதில் என்ன அதிசயம்?.
தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது
என்னைத்தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது
என்னைத்தொடாதே
நிலவைப்பார்த்து வானம் சொன்னது
என்னைத்தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது
என்னைத்தொடாதே
நடிகர்திலகத்தின் 150-வது வெற்றிக்காவியமான 'சவாலே சமாளி' படத்தின் உயிர்நாடிப்பாடல் இது. கிட்டத்தட்ட கதையின் சாராம்சத்தை உள்ளடக்கியது. மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் மனதைத்தொடும் இசை, பாடகர்திலகத்தின் அலட்டிக்கொள்ளாத குரல், நடிகர்திலகத்தின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான நடிப்பு. (நடிகர்திலகம் பாடலுக்கு பொருத்தமாக வாயசைக்கக் கூடியவர் என்பதால் நிறைய ஸைட் குளோசப் காட்சிகள்). இரவுக்காட்சியை அருமையாக ஒளிவடிவமாக்கியிருக்கும் வின்சென்ட்டின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஆண்குரல் பாடலாக இருந்தாலும் அதற்கு அருமையாக முகபாவம் காட்டியிருக்கும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் அருமையே. 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' இசையரசிக்கு இரண்டாம் முறையாக தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் அருமையான இருவேறுபட்ட பெர்பாமன்ஸில் 'என்னடி மயக்கமா சொல்லடி' பொங்கல்திருவிழாவன்று நடிகர்திலகம் பாடியாடும் 'ஆனைக்கொரு காலம் வந்தா' என அனைத்துப்பாடல்களும் இனிமையே. கூடவே மனதைக்கவரும் தீம் மியூசிக். ஒரு கிராமத்துப் பின்னணி படத்துக்கு இதைவிட என்ன இசையைத்தரவேண்டும்?.
மக்கள் திலகத்தின் பாடலொன்றை இங்கும், மக்கள்திலகம் திரியிலும் பதித்ததுபோல, இப்பாடலையும் நடிகர்திலகத்தின் திரியிலும் பதிக்க விருப்பம்தான். என்ன செய்வது?. "(ஒன்று முதல் பதினொரு பாகம் வரை) ஆலயம் செய்தோம் (இப்போது அங்கே) அனுமதியில்லை" (என் அனுமதியின்றி யாரும் இதை அங்கே மீள்பதிவு செய்யவேண்டாம்)
'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' எப்போதும் என் விருப்பங்களில் ஒன்று...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th August 2014 12:30 PM
# ADS
Circuit advertisement
-
30th August 2014, 12:34 PM
#1532
Senior Member
Senior Hubber
பல வருடங்களுக்கு முன்னால்(88/89 என நினைவு) துபாயில் ஒரு பட்டு ஜவுளிக் கடையில் செல்கையில் உள்ளிருந்த கட்டை குட்டை சிகப்பு நிறம்+வயதானவரைப் பார்த்தேன்..(அப்போ (வும்) நான் இளைஞன்) என் சகோதரி சகோதரி கணவர் உடன் இருந்தார்கள்..அவர் கடையை விட்டுச் சென்றதும் என்னிடம் சொன்னார்கள்..அவர் தான் டி.ஆர்.ராமச்சந்திரன் என்று. அவர் உடன் இருந்தவர் அவரது மகள் என்றும் அவர்கள் ஷார்ஜாவில் இருப்பதாகவும் சொன்னார்கள்..அன்பிலீவபிள்.. கொஞ்சம் டோட்டலாய் மாறிய முகம்..(அன்பே வாவில் கடைசியாய்ப் பார்த்தது) ம்ம் பேசச் சந்தர்ப்பம கிடைக்கவில்லை..
ரைட் அப்பிற்கு நன்றி க்ருஷ்ணா ஜி..
-
30th August 2014, 12:36 PM
#1533
உஷா இப்ப உள்ள போட்டோ கிடைக்க வில்லை சி கே சார்
இவங்க நடிச்ச அத்தைய மாமியா ஸ்டில் ஒன்னு நினைவில் உண்டு
ஜெய் உஷாவோட ஒரு மாதிரி ஒரு இடத்தில சாஞ்சுண்டு
-
30th August 2014, 12:37 PM
#1534
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்
தங்கள் அற்புத ஆய்வுக்கு ஏற்ப முதலில் பாடல்.
Last edited by vasudevan31355; 30th August 2014 at 12:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th August 2014, 12:37 PM
#1535
மங்கம்மா சபதம் - கமல் மாதவி நடிப்பில் சங்கர கணேஷ் இசையில் வெளிவந்தது
சொர்க்கத்தின் வாசல் இங்கே - பாடல் வேறு வடிவில் அதே படத்தில் ஊத்திக்கோ ராசா ராசா என்றும் வந்தது
இந்த டியூன் அப்பட்டமான காப்பி என்பது ஊரறிந்த விஷயம்.
அண்ணா நகர் டவர் மீது ஆடிப்பாடும் சொர்க்கத்தின் வாசல் இங்கேபாடல் இதோ:
http://www.mediafire.com/listen/yz1m...a_Sabatham.mp3
ஊத்திக்கோ ராசா ராசா - கேட்க மட்டும்
http://www.mediafire.com/listen/yytg...a_Sabatham.mp3
-
30th August 2014, 12:38 PM
#1536
கார்த்தி சார்
நடிகர் திலகத்தின் எவர் கிரீன் சாங்
வாசு சார் முந்தி கொண்டு விட்டார்
முந்தி முந்தி வாசுவே
-
30th August 2014, 12:40 PM
#1537
Senior Member
Senior Hubber
கார்த்திக் சார்.. நிலவைப் பார்த்து - நைஸ்..வெகு சின்ன வயதில் பார்த்த போது இந்தப் பாடல் புரியாமலேயே இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருப்பேன்..ந.தி வெகு இயல்பு.. ஜூரம் வந்துவிட்டது என்றதும் பதற்றம்..தொடமுடியாது என்ற ஏக்கம் - வழக்கம்போல வெகு நன்றாக இருக்கும்..
-
30th August 2014, 12:41 PM
#1538
Originally Posted by
sss
மங்கம்மா சபதம் - கமல் மாதவி நடிப்பில் சங்கர கணேஷ் இசையில் வெளிவந்தது
sss sir
சொர்கத்தின் வாசல் பாட்டு வரிகள் எத்தனை எத்தனை மீனிங் சார்
-
30th August 2014, 12:42 PM
#1539
Senior Member
Senior Hubber
உஷா போட்டோவிற்கு வாசு சார் சார்பாக நன்றிகள் ஜோடியாய் மிகவும் ரசித்தது பொன்னூஞ்சல்.. க்ளைமாக்ஸில் தான் ஒரு வழி பண்ணியிருப்பார்கள்..ந.திக்கும் உ.நவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் ஆகியிருக்கும் எனப் பெரியவர்கள் சொல்லுவார்கள்!
-
30th August 2014, 12:45 PM
#1540
Senior Member
Senior Hubber
எஸ்.எஸ்.எஸ். மங்கம்மா சபத்ம் கொஞ்சம் நிறையவ்வே போரடித்த படம்..அதில் ரிலீஃப் என ப் பார்த்தால் இந்தப் பாட்டு ஒன்று தான்.. நன்றி
Bookmarks