Page 175 of 401 FirstFirst ... 75125165173174175176177185225275 ... LastLast
Results 1,741 to 1,750 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1741
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'தம்பி பொண்டாட்டி' படம் எனக்கும் பிடித்ததுதான். பஞ்சு அருணாச்சலம் டைரக்ட் செய்த ஒரே படம். நன்றாகத்தான் செய்திருந்தார். ரஹ்மான், நிழல்கள் ரவி, அவர் மனைவியாக வரும் ரம்யாகிருஷ்ணன் என எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர். சுகன்யா பாத்திரம் மட்டுமே கொஞ்சம் எரிச்சலூட்டும்.

    பஞ்சுவின் மீது எனக்கு அவ்வளவு பிடிப்பு கிடையாது. பொன்னெழில் பூத்தது புதுவானில், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, காதலின் பொன் வீதியில் காலத்து பஞ்சுவைப்பிடிக்கும். ஆனால் 75-க்குப்பின் மாறிப்போனார். வித்தியாசமாக யதார்த்தம் பக்கம் மாறிக்கொண்டிருந்த தமிழர்களின் ரசனையை திரும்பவும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், பாயும்புலி போன்றவை மூலம் மீண்டும் பழைய அடாசுகள் பக்கம் திருப்பியதில் இவர் பங்கு ரொம்ப உண்டு. தவிர, எனக்குப்பிடிக்காத (இங்குள்ள என் நண்பருக்கு பிடித்த) 'ஒருவரை' தேவைக்கதிகமாக பூஸ்ட் செய்து மேலே கொண்டுவந்ததில் இவருடைய பங்கு அதிகம். ஏ.வி.எம்., கவிதாலயா, சத்யா மூவீஸ், பாலாஜி, போன்ற கம்பெனிகளில் 'அவரை' புஷ் பண்ணி நுழைத்ததும் இவர்தான். கிட்டத்தட்ட 'அவரது' பி.ஆர்.ஓ. மாதிரி செயல்பட்டார்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1742
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வசந்த், 'நேர்மை' படத்தில் பேராசிரியர் நடிகர்திலகத்தின் மாணவர்களில் ஒருவராக நடித்திருந்தார். சின்னத்திரை நடிகர்சங்கத் தலைவராகவும் இருந்தார். அவர் நடித்த பல சீரியல்களில் 'அர்ச்சனைப்பூக்கள்' மிகவும் பிடிக்கும். இவ்வளவு சீக்கிரம் மறைவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று...

  4. #1743
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்,

    தாங்கள் பதித்த ராதா, என்ன முதலாளி சௌக்கியமா, தெய்வக்குழந்தைகள், பிள்ளையோ பிள்ளை விளம்பர ஆவணங்கள் அனைத்தும் மிக மிக அருமை. நினைவலைகளை கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.

    ஆவணங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி...

  5. #1744
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    பானுப்ரியாவின் அருமையான ஸ்டில்களுக்கு நன்றி. அவர் நடித்த படங்களில் 'அழகன்' மிகவும் பிடித்த படம். மரகதமணியின் இசையில் ஏழு பாடல்களும் செம ஹிட் மட்டுமல்ல, வெரைட்டியும் கூட. 'சிலருக்கு' பயத்தையே உண்டாக்கினார்.

    அப்படத்தில் அலட்டல் மதுபாலா, அழகான பானுப்ரியா, அமைதியான கீதா எல்லோருமே அருமை. அனைவரையும் தூக்கி சாப்பிட்ட சேட்டன் மம்மூட்டி.

    அழகன், வானமே எல்லை, ஜாதிமல்லி மூன்றும் மரகதமணியின் மூன்று மாஸ்ட்டர் பீஸ்கள்...

  6. Likes chinnakkannan liked this post
  7. #1745
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக் சார்.

    நடிகர் திலகத்தின் 'நீதியின் நிழல்' படத்தில் கூட வசந்த் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார்.

    பஞ்சு அருணாச்சலம் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்தானே பிரபு நடித்த 'மணமகளே வா' எடுத்தது?

    நீங்கள் கூறியபடி 'அழகன்' ஓர் அற்புதன் தான். நாயகிகளும் நன்று. ஆனால் எனக்கென்னவோ மதுபாலாவைப் பிடிக்கவே பிடிக்காது. லாரி மோதின பென்ஸ் கார் மாதிரி ஒடுக்கு ஒடுக்கான மூஞ்சி.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1746
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    பானுப்ரியாவின் அருமையான ஸ்டில்களுக்கு நன்றி. அவர் நடித்த படங்களில் 'அழகன்' மிகவும் பிடித்த படம். மரகதமணியின் இசையில் ஏழு பாடல்களும் செம ஹிட் மட்டுமல்ல, வெரைட்டியும் கூட. 'சிலருக்கு' பயத்தையே உண்டாக்கினார்.

    அழகன், வானமே எல்லை, ஜாதிமல்லி மூன்றும் மரகதமணியின் மூன்று மாஸ்ட்டர் பீஸ்கள்...
    பானுப்ரியா-[பிறப்பு 15.01.1966]-வயது-48.இவர் 1980 முதல் – 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.

    இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).

    பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.

    அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார்.தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் தாயும் சேயும் தனியே வசித்து வருகின்றனர்.



    மெல்ல பேசுங்கள் படத்திற்கு பிறகு ஆராரோ ஆரிரரோ மீள் பிரேவேசம்
    சத்யராஜ் கதாநாயகனாக வைத்து கட்டளை என்று நினைவு சொந்த படம் எடுத்தார் . இவர் தம்பி கோபி நடிகை விந்தியாவை திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து பெற்றார் என்று நினைவு

    Last edited by gkrishna; 3rd September 2014 at 11:39 AM.
    gkrishna

  9. Likes chinnakkannan liked this post
  10. #1747
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (68)

    'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் இன்று ஒரு பழைய பாடல். ஆனால் என்றென்றும் புதுமை பொங்கும் ஒரு பாடல். புதுமைகளுக்கு முன் முயற்சி இந்தப் பாடல். இதற்குப் பின் பல புதுமைப் பாடல்கள் வந்தாலும் 'பர்ஸ்ட் ஈஸ் தி பெஸ்ட்' என்பது போல இதன் வித்த்தியாசமே தனிதான். இந்தப் பாடலை எந்தப் பாடலும் இதுவரை அடிக்க முடியவில்லை.

    அப்படி என்ன இந்தப் பாடலில் விசேஷம் ?

    'எக்கோ' எனப்படும் எதிரொலி ஒலித்த முதல் பாடல்.

    மிக அருமையான இசைக்கருவிகளின் சங்கமத்தில், மிகத் தெளிவான ரிக்கார்டிங்கில் தொடங்கும் பாடல்.

    நாயகி போருக்குச் சென்று வெற்றி வாகை சூடி வர இருக்கும் தன் நாயகனுக்காகக் காத்திருக்கிறாள். மனமெல்லாம் உறசாகம் கரை புரள தன் கண்ணாளனை நினைத்து தனியே பாடி மகிழ்கிறாள்.

    'வெற்றிவாகை சூடி வரும் என் ராஜனோடு பேசி மகிழ்வேனே' என்று ஆனந்தக் கூத்தாடுகிறாள்.

    கன்னி மாடத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் அந்தத் தோட்டத்திலே அவள் பாடிக் கொண்டே வருகிறாள். அப்போது அங்கு ஒரு கிணறு. எதிர்பாராத விதமாக அந்தக் கிணற்று அருகில் அவள் பாடும் போது அவளுடைய பாடல் ஒலி கிணற்றினுள் விழுந்து அவளுடைய குரலே அவளுக்கு எதிரொலியாய்க் கேட்கிறது. 'ராஜன் வருவாரே' என்று பாடி அவள் ஆவலாய்க் கிணற்றைக் கவனிக்க, அதே வரிகள் அமுதமாய் அவள் காதில் வந்து விழுகின்றன. உற்சாகாமாய் பாடும் அந்த யவன சுந்தரி இன்னும் சந்தோஷமாய் குதூகலித்து தான் காதலனைப் பற்றி பாடி அதை தானே எதிரொலியாகக் கேட்டு மகிழ்கிறாள்.


    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'சர்வாதிகாரி' படத்தின் அழகு சுந்தரியாய் அஞ்சலிதேவி. மிக நுணுக்கமான செல்ல சிணுங்கல்களோடு, மிக சுழிப்புகளோடு இளசு, பெரிசு என்று பேதமில்லாமல் அனைவர் தூக்கத்தையும் கெடுக்கிறார்.

    'அன்றலர்ந்த தாமரை மலர் அழகா அல்லது எங்களது அஞ்சலி தேவி அழகா? எங்கள் அஞ்சலிதேவி அழகு எவருக்கு வரும்' என்று எங்கள் வீட்டு பெருசுகள் எல்லாம் இன்றும் புலம்பும். உண்மைதானே! யாரும் மறுக்க முடியாதே! எம்.ஜி.ஆர். இப்படத்தின் நாயகர்.

    எஸ்.தக்ஷனாமூர்த்தி



    லதாவுடன் எஸ்.தக்ஷனாமூர்த்தி



    எஸ்.தக்ஷனாமூர்த்தி அவர்களின் புதுமையான இசை மறக்கவே முடியாது. அந்தக் காலத்திலேயே (1951) அசாத்தியக் கற்பனைவளம். நாயகி பாட, அந்தக் குரல் அப்படியே கிணற்றுக்குள் இருந்து எதிரொலிக்க வேண்டும். முதலில் 'முடியாது' என்று மறுத்த இசையமைப்பாளர் பின் சவாலாக அதை ஏற்று, இன்றுவரை வெல்ல முடியாத சாதனை ஆக்கிக் காட்டிவிட்டார் இந்த எதிரொலிப் பாடலை.



    பி.லீலா மிக அற்புதமாகப் பாடிய பாடல் இது. அவருடைய புகழை எங்கோ கொண்டு நிறுத்திய பாடல்.




    இனி பாடலின் முழு வரிகள்

    கண்ணாளன் வருவார்
    கண் முன்னே நான் காண்பேன்
    (குயில் கூவுது போல அந்த ஒரு வினாடி இசை அருமை)
    ஹோ ஹோ ஓ ஓ... உஉஉ...
    காதல் பொய் பேசி மகிழ்வேனே

    கண்ணாளன் வருவார்
    கண் முன்னே நான் காண்பேன்
    ஹோ ஹோ ஓ ஓ... உஉஉ...
    காதல் பொய் பேசி மகிழ்வேனே

    ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
    (அப்படியே கிணற்றிலிருந்து எதிரொலி)
    ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ

    என் ராஜா
    (எக்கோ)
    என் ராஜா

    வருவாரே
    (எக்கோ)
    வருவாரே

    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
    (எக்கோ)
    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

    ஹோ ஹோ ஹோஹோ ஹோ
    (எக்கோ)
    ஹோ ஹோ ஹோஹோ ஹோ

    (இந்த வரிகள் முடிந்தவுடன் வரும் இசைப் பின்னணியைப் பாருங்கள். மெய் சிலிர்த்துப் போவீர்கள். திரும்பத் திருமப்க் கேட்கத் தூண்டும் இசை)

    ராஜன் வருவாரே!
    (எக்கோ)
    ராஜன் வருவாரே!

    பேசி மகிழ்வேனே
    (எக்கோ)
    பேசி மகிழ்வேனே

    என் காதல் நாதன்
    இன்ப தேவன்
    வாழ்வின் ஜீவன்

    என் காதல் நாதன்
    இன்ப தேவன்
    வாழ்வின் ஜீவன்
    என்னைத் தேடி விரைவினிலே
    ஜெயத்துடனே
    என் ராஜன் வருவாரே

    என்னைத் தேடி விரைவினிலே
    ஜெயத்துடனே
    என் ராஜன் வருவாரே

    என் ராஜா
    (எக்கோ)
    வருவாரே

    ராஜன் வருவாரே!
    (எக்கோ)
    ராஜன் வருவாரே!

    பேசி மகிழ்வேனே
    (எக்கோ)
    பேசி மகிழ்வேனே

    கலந்து உறவாடும்
    கண்களும் கண்களும்
    கன்னமும் கன்னமும்
    கலந்து உறவாடும்

    கலந்து உறவாடும்
    கலந்து உறவாடும்
    கணமும் இணைபிரியாமல்
    கனியும் சுவையும் போல் கலந்தே
    மனம் மகிழ்ந்தே வாழ்வோமே

    கணமும் இணைபிரியாமல்
    கனியும் சுவையும் போல் கலந்தே
    மனம் மகிழ்ந்தே வாழ்வோமே

    வாழ்வோமே! வாழ்வோமே!


    Last edited by vasudevan31355; 3rd September 2014 at 11:53 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  12. #1748
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காட்சி பிழை ஆகஸ்ட் இதழில் திரு முரளி கண்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று

    நிலைக்க முடியாத நாயகர்கள்

    தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகவாவது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். தயாரிப்பாளர்கள், வெற்றிகரமான இயக்குநர்கள், முண்ணனி நடிகர்களின் வாரிசு என்றால் கோடம்பாக்கத்தின் கதவு எளிதாக திறந்து கொள்ளும். அதுவும் முதல் படத்திற்கு மட்டும்தான். அரசியல்வாதி மற்றும் பெரும் பணக்காரர்களின் வாரிசுகளுக்கும் முதல் பட வாய்ப்பு எளிதுதான்.
    தமிழ்சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை கவனித்துப் பார்த்தால், கதாநாயக வாய்ப்பு பெறுவது என்பது எளிதாகிக் கொண்டே வருகிறது. பாடவும் நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் கூடுதலாக முக லட்சணமும் வேண்டும் என்பது பாகவதர் காலகட்ட தகுதிகள். நாடக மேடை அனுபவமும் முகலட்சணமும் இருக்க வேண்டும் என்பது எம்ஜியார்-சிவாஜி காலகட்டம். எல்லிஸ் ஆர் டங்கனிடம் எம்ஜியார் வாய்ப்பு வாங்க கஷ்டப்பட்டார். சிவாஜி கணேசனும் பராசக்தியில் கிடைத்த வாய்ப்புகூட பறிபோகும் நிலைக்குச் சென்று தயாரிப்பாளரின் ஆதரவால் தப்பித்து பின்னர் சகாப்தம் படைத்தவர்.

    முகலட்சணமும் சிகப்பு நிறமும் தகுதியாகப் பார்க்கப்பட்டது ஸ்ரீதர்-பாலசந்தர் காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் இயக்குநர்க்கு பிடித்திருந்தால் போதும் கதாநாயகன் வேடம் கிடைத்துவிடும் என்ற நிலைமை வந்தது. பாரதிராஜாவிற்கு பிந்தைய காலகட்டத்தில்தான் நாயகனாக நடிக்க தகுதி,நிறம் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ரஜினி நாயகன் வாய்ப்பு பெற்றது இதன்பின்னர்தான்.

    தொண்ணூறுகளில் தொலைக்காட்சி முக்கிய ஊடகமாக அறியப்பட்ட நேரத்தில், மாடலாக இருப்பவர்கள் திரையுலகுக்கு வரும் வழி உருவாகியது. புதிய இயக்குநர்கள் சிலர் தங்கள் படங்களுக்கான நடிகர்,நடிகைகளை விளம்பர ஏஜென்ஸிகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும், மாடலிங் ஷோக்கள் மூலமும் தேர்ந்தெடுத்தனர்.

    எனவே 80களில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னால் வரை கூட இயக்குநரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலையே நிலவியது. தன்னுடைய தேவையை விட அதிகமாக பணம் வைத்திருப்பவரே ஒரு படத்தை தயாரிக்க முன்வருவார். சில லட்சியவாதிகள் மட்டும் விதிவிலக்கு. எனவே ஒருவர் இயக்குநர் ஆவதற்கு நிச்சயம் ஒரு பணக்காரரை சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் அவ்வளவு பணத்தை வைத்திருந்தால் நிச்சயம் அவரிடத்தில் ஒரு தெளிவு இருக்கும். மது,மாது,சூது, கூடா நட்பு என பலவற்றிடமிருந்து தப்பித்து அதிகப்படியான பணத்தை பாதுகாத்து வைத்திருப்பவர் ஒரு சமநிலையில் தான் இருப்பார். அவரது பணத்தை ஒரு நிச்சயமில்லாத தொழிலில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க எவ்வளவு திறமை வேண்டும்?. அந்த அளவு திறமை உள்ளவர்களே இயக்குநர் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் படத்திற்கு புது கதாநாயகன் தேடும்போது எவ்வளவு மெனக்கெடுவார்கள்?. ஏனென்றால் படத்தின் வெற்றிதானே அவர்களை திரையுலகில் நிற்க வைக்கும்?

    டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதி மற்றும் குறும்படம் மூலம் வாய்ப்பு பெறும் வசதியால் அதிக அளவு படங்கள் குறைந்த முதலீட்டில் தயாராவதால் கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தொலைக்காட்சி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் முகம் கூட பொதுமக்களின் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்களின் முகம் ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருகிறவர்களால் கூட சில நடிகர்களை அடையாளம் காண முடிவதில்லை.

    இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்தாலே வீதியில் சுதந்திரமாக நடக்க முடியாத நிலை இருந்த நாட்களில் இயக்குநரை திருப்திசெய்து நாயகனாக அறிமுகமானவர்கள், அதிர்ஷ்டவசமாக இயக்குநர்களின் கடைக்கண் பார்வைபட்டு கதாநாயகன் ஆனவர்கள், குக்கிராமங்கள் வரை சென்று மக்கள் மனதில் சேர்ந்த பின்னரும் சோபிக்காமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பார்வையே இந்த கட்டுரை.
    பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன் போன்றோர் தங்கள் படங்களில் பெரும்பாலும் தாங்களே நடித்துக் கொண்டார்கள். பாரதிராஜா, பாலசந்தர், டி ராஜேந்தர், மணிரத்னம் ஆகியோர் அப்படிச் செய்யமுடியவில்லை. வீர தீரம், சிறந்த நடிப்பு தேவைப்படாத தாங்கள் படைத்த பாத்திரங்களுக்கு சில கதநாயகர்களை அறிமுகப்படுத்தினார்கள். டி ராஜேந்தர் சில படங்கள் கழித்து தானே களத்தில் குதித்துவிட்டார்.

    அப்படி பாரதிராஜா அறிமுகப்படுத்திவர்களில் கிழக்கே போகும் ரயில் சுதாகர் பல படங்களில் நாயகனாக தொடர்ந்து நடித்தார். அதில் இரண்டு மூன்று மட்டுமே வெற்றிப்படங்கள். பின்னர் அவர் தனது பூர்வீகமான ஆந்திரத்துக்குச் சென்று காமெடியனாக வெற்றி பெற்றார். நிழல்கள் ரவி, ராஜா ஆகியோர் கதாநாயக வேடத்தில் நடித்தாலும் அவர்களை நாயகனாக யாரும் பார்க்கவில்லை. பாரதிராஜாவின் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் பாண்டியன்.

    பாண்டியன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வரிசையில் வளையல் மற்றும் அழகு பொருட்கள் கடை உரிமையாளராக இருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு மண்வாசனை பட நாயகனானார். அதற்கு முன்னால் ஜாதி சார்ந்த பேச்சு வழக்குகள், சம்பிரதாயங்களை வைத்து படம் எடுத்திராத பாரதிராஜா, காதல் ஓவியம், வாலிபமே வா வா போன்ற படங்களின் தோல்வியை அடுத்து தேவர் இன முறைமாமன், தாய்மாமன் சீர் ஆகிய சம்பிரதாயங்களைச் சரணடைந்து இயக்கிய படம் மண்வாசனை. ஒரு வகையில் பார்த்தால் தேவர் இனத்தை தூக்கிப்பிடித்து வந்த முதல் படம் இது என்றும் சொல்லலாம். (சிவாஜி கணேசனின் பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் ஜாதி சொல்லப்பட்டாலும் சம்பிரதாயங்கள் டீடெயிலாக காட்சிப்படுத்தப் பட்டிருக்காது). படமும் வெற்றி பெற்றது. பாண்டியன் தமிழகம் அறிந்த நடிகராக மாறினார்.
    அதன் பின் மண்சோறு, நேரம் நல்லாயிருக்கு, பொண்ணு பிடிச்சிருக்கு,தலையணை மந்திரம், கடைக்கண் பார்வை, கோயில் யானை, ஆண்களை நம்பாதே போன்ற படங்களில் நடித்தார். இவை எதுவும் கலை ரீதியாகவும், வணிக ரீதியாகவும் எடுபடாத படங்கள். பாரதிராஜாவின் புதுமைப் பெண், பாண்டியராஜனின் ஆண்பாவம், மணிவண்ணனின் முதல் வசந்தம், ராமராஜனின் மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்தார். வெற்றி பெற்ற படங்களில் அவ்வப்போது நடித்திருந்தாலும், நான்கு ஆண்டுகளிலேயே ஊர்க்காவலன், குரு சிஷ்யன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்களில் துணை நடிகர் போல நடிக்க வேண்டியிருந்தது. பின்னர் எம்ஜிஆர் நகரில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடிக்க வேண்டி வந்தது.

    மீண்டும் பாரதிராஜா நாடோடி தென்றலில் ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்தார். பின்னர் கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன்களில் ஒருவராக நல்ல வேடம் கொடுத்தார். ஆனால் அவரால் எதிலும் பிரகாசிக்க முடியவில்லை. அடுத்த சில ஆண்டுகள் கழித்து குரு தனபால் இயக்கிய பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக கூட நடிக்க நேர்ந்தது. கடைசியாக அவரது வாழ்க்கையிலேயே ஆண்பாவம் மூலம் பெரிய ஹிட் கொடுத்த பாண்டியராஜனின் கை வந்த கலை யில் நடித்தார். பின்னர் தீராத குடிப்பழக்கத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

    பாண்டியனின் சினிமா வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். அது இந்த நடிகரால் தான் இந்தப் படம் ஓடியது என்று ஒருபடத்திலாவதுதான் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நடிகனுக்கு இங்கே மரியாதை. அப்படி நிரூபிக்காவிட்டால் எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும், ஒரு சில சறுக்கலிலேயே காணாமல் போக நேரிடும். நமக்கு என்ன நடிக்க வரும் என்பதை ஒருமுறை நிரூபித்து விட்டால் போதும், நமக்காக இயக்குநர்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள், நாம் தொடர்ந்து பீல்டில் நிலைக்கலாம்.
    தமிழகம் முழுக்க அறிமுகமாகி இருந்தாலும், வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், சிலருக்காவது, நடிகனின் மீது அபிமானம் வர வேண்டும். நடிகனுக்கு அழகு,ஸ்டைல் இதையெல்லாம் விட நல்ல ஆண்மையான குரல் இருக்க வேண்டும். அந்த குரலே அவர்களுக்கு ரசிகர்களைச் சேர்க்கும். துரதிஷ்டவசமாக பாண்டியன் குரலில் ஆளுமை இல்லை. தன் கடைசி காலம் வரை மாடுலேசனை மாற்றாமல் ஒரே மாதிரி பேசிவந்தார். அதுவும் ரசிக்க முடியாத குரலில். இப்போது விமலும் அப்படித்தான் பேசி வருகிறார். ரேவதி,சீதா, ரம்யா கிருஷ்ணன்,இளவரசி என இவருடன் கதாநாயகியாக நடிகைகள் எல்லாம் இன்றும் வெள்ளித்திரை/சின்னத்திரையில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சுரேஷ்



    பன்னீர் புஷ்பங்களில் பள்ளி மாணவனாக அறிமுகமாகிய சுரேஷ், அடுத்த ஆண்டிலேயே சில வெற்றிப்படங்களில் நடித்தார். அதில் முக்கியமானது இளஞ்சோடிகள். இராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக்கும் சுரேஷும் இணைந்து நடித்த இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். ஆனால் அதற்கடுத்து கோழி கூவுது. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் இரண்டாம், மூன்றாம் நாயகனாகவும், ராம நாராயணன் இயக்கிய உரிமை போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்தார். பின் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தில் நதியா உடன் இணைந்து நடித்தார். அப்போதைய முண்ணனி நாயகிகளான ரேவதி, நதியா உடன் சில படங்களில் நடித்தார். நதியாவுக்கு ஏற்ற ஜோடி எனவும் சிலாகிக்கப்பட்டார். சில ஆண்டுகள் தான் ஆளே காணவில்லை. பின் புது வசந்தம் படத்தில் சிறிய நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். 94ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தில் சிறிய வேடம். இப்போது தெலுங்கு திரையுலகில் சில வேடங்களில் நடித்து வருகிறார். காதல் சொல்ல வந்தேன், தலைவா ஆகிய படங்களிலும் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டு ஷோக்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.

    பொதுவாகவே தமிழர்களுக்கு சிவப்பான நாயகனைப் பிடிக்காது என்று சொல்வார்கள். எம்ஜியார் கூட கறுப்பு வெள்ளை காலத்தில் அறிமுகமாகி மக்களின் அபிமானத்தைப் பெற்றதால் தப்பித்தார். கமல்ஹாசன் கஜகர்ணம் போட்டாலும் பெருவாரியான மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் தான் இது மாறியுள்ளது. முதல் சில ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாத அஜீத் இப்போது மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால் 2000 வரையிலும் நல்ல சிகப்பான, பர்சனாலிட்டி உள்ளவர்கள் சாக்லேட் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மனம் கவர் நாயகனாக சினிமாவை அதிகம் பார்க்கும் இளவயது ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சுரேஷுக்கு நல்ல பர்சனாலிட்டி, குரலும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெரைட்டியான வேடங்கள் செய்யவில்லை. நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை என்பது அவரின் சரிவுக்கு காரணமாய் அமைந்து விட்டது.
    gkrishna

  13. Thanks chinnakkannan thanked for this post
  14. #1749
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆனால் எனக்கென்னவோ மதுபாலாவைப் பிடிக்கவே பிடிக்காது. லாரி மோதின பென்ஸ் கார் மாதிரி ஒடுக்கு ஒடுக்கான மூஞ்சி.//நெடு நெடுவென உயரம்..கொஞ்சம் ஷார்ப் மூக்கு..ஜென் டில் மேனில் வரும் உசிலம்பட்டிப் பெண்குட்டி (ஷாகுல் ஹமீது..சோகமான விஷயம் சடனாக இறந்தது)யில் வரும் ஜென் டில் லேடி.. ஹிந்திக்குப் போய்க் கொஞ்சம் படங்கள் கொடுத்து பின் ஓய்வு பெற்று ரீ எண்ட்ரி இன் வாயை மூடிப் பேசவும்..வாசு சார்..அந்த இன்றைய ஸ்டில் இருந்தால் பாருங்க்ள்..கொஞ்சம் கூட மாற்றமே இல்லாத தோற்றம்..ப்ளஸ் கூடுதல் அழகுடன் இருப்பார்..

  15. #1750
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பானுப்ப்ரியா தயாரித்த சொந்த ப்படம் காவியத் தலைவன்..ஆங்க்.. மென்மையாய் நடிக்க முயன்றிருந்த படம்..படம் தோல்வி என நினைக்கிறேன்..கட்டளை பற்றித் தெரியாது..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •