-
5th September 2014, 11:52 AM
#11
Junior Member
Diamond Hubber

ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்
எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
-----நன்றி ;- அண்ணன் குணா அமுதன் .
Last edited by saileshbasu; 5th September 2014 at 12:57 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2014 11:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks