-
6th September 2014, 05:30 PM
#11
Junior Member
Devoted Hubber
மேகாவில் புத்தம் புது காலை பாடலை எப்படி படமாக்க போகிறார்கள் என்ற குறுகுறுப்பு ஒரு வருடமாகவே இருந்தது.
நாயகியின் சகோதரனனுக்கு திருமணம். அங்கே புகை படம் எடுக்கும் ஆளாய் நாயகன். திருமண வரவேற்ப்பு விழாவில் இந்த பாடலை ஒரு வாத்திய குழுவினர் பாட, சந்தோஷமாய் உறவினர்கள் உலாவும் பின்புலத்தின் மத்தியில், நாயகியும் அவர் தோழிகளும் அழகாய் நடனமிடுகிறார்கள். இடை இடையில் நாயகனும் நாயகியும் நோக்கி கொள்ள, திருமண அரங்கின் ஜொலிஜொலிப்பு சூழ்நிலைக்கு அழகூட்ட , பாடலின் முடிவில் நாயகன் நடனமாதுகளுக்கு மருதானியிடுகிறார், பாடலும் முடிகிறது.
கொசுறாக, இந்த பாடலின் முடிவில் மருதானியிட்டுகொண்ட நாயகி அதை கழுவிக்கொண்டு, தண்ணீர் நிறைந்த ஒரு வெண்கல பாத்திரத்தில் கை விரிக்க ராஜா சார் கோரஸ் குயில்களை கொண்டு 15 நொடிகள் சொக்க வைப்பதாக படம் பார்த்த நண்பன் கைபேசியில் வெறுப்பேற்றியது வேறு விஷயம்.
ஒரு வழியாய் படம் வெளிவந்து இப்போது பாடல்கள் அனைத்தும் யூடியூபில் ஒலியும் ஒளியுமாய் ஏற்றி இருக்கிறார்கள்..படம் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பாடல்களை நல்லவிதமாய் எடுத்திருக்கிறார்கள். முகிலோ மேகமோ பாடல் டைட்டில் கார்ட் போடும் போது வருகிறதாம். அதிசயமாய் யுவன் இந்த பாடலை நன்றாய் பாடி இருந்தும், மியுசிக் சேனல்களில் பார்ப்பது கஷ்டம் தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2014 05:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks