-
7th September 2014, 06:40 AM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajaramsgi
அகிலன் சொன்ன கருத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும், சில விஷயங்கள் புரிபடவில்லை. இவர் மீது ராஜா சார் தரப்பு ஏன் காவல் துறையில் புகார் செய்தது? எக்கோ போன்று இவரும் தவறேதும் செய்து விட்டாரா?
இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்று சொன்ன அந்த மேதா விலாசி யார்? அப்படி சொன்னவரை நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அகிலன்? சட்டப்படி அவருக்கு சாட்டை அடி குடுத்திருக்க வேண்டாமா? சட்டையை பிடித்து இழுத்து முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டாமா?
அகிலனுக்கும் ராஜா சாருக்கும் எப்படி தொடர்பு ஏற்ப்பட்டது, பின்னர் அகிலன் பொருளாதார ரீதியாக சறுக்கிய போதெல்லாம், ராஜா சார் எப்படி அவருக்கு உதவி செய்து இந்த தொழிலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என்று வெகு நாட்களுக்கு முன்னரே அகிலன்ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை வைத்து தான் நானும் ஆப் ஸ்டோரில் அகி பேனர் மூலமாய் வெளிவந்த ராஜா சாரின் பாடல்களை பல நூறு பவுண்டுகள் கொடுத்து பதிவிறக்கம் செய்தேன். என்னை போன்று இன்னும் எத்தனை பேரோ?
ராஜா சார் இல்லை என்றால், தான் இன்று ஒன்றுமே இல்லை என்கிற ரீதியில் இருந்த அந்த கட்டுரைக்கும் இப்போது அவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த ப்ளாக் கட்டுரையை என்னால் இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், இசை இன்பம் பகுதியில் நானும் இசைஞானியும் என்று அவர் எழுதி உள்ள 3 பாகங்களை படிக்க, அகிலன் மீது எனக்கு மரியாதை குறைந்து விட்டது. கால்புர்ணர்ச்சி ஓங்கி வருகிறதோ இவருக்கு என்று என்ன தோன்றுகிறது.
http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html
I think this is the one you say.
ராஜா நம்பும் நபர்கள் எல்லாம் அவரை ஏதோ ஒரு நாள் ஏமாற்றித்தான் இருக்கிறார்கள். நாம் நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவை விடுப்போம்.
Isai ellaigal kadanthathu engum nirainthathu
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
7th September 2014 06:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks