Page 207 of 401 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2061
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மன்மதனுக்கு வேறு வேலையில்லை போல ..எப்பப்பாரு அம்பு எய்யறது தானா..ம்ம்.. பொல்லாதவன் படத்தில் எஸ்பிபி வாணிஜெயராம் இன் பாடல் எனக்குப் பிடிக்கும்..

    அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா அம்மம்மா
    ஏதேதோ சொன்னானம்மா

    ஒண்ணோடு ஒண்ணாக
    கண்ணோடு கண்ணாக

    அந்த ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக..ன்னு இழுக்கறது நன்றாக இருக்கும்..

    நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
    மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

    மேகங்கள் இல்லாத வானில்லையே
    நீயின்றி எப்போதும் நானில்லையே

    **
    இங்கு வந்திருக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2062
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதுக்குள்ளே மறந்து போச்சா? ஆபீஸ்ல வொர்க் அதிகமோ// ஆமாம்..இப்ப லஞ்ச்..அதுக்குள்ற எட்டிப்பார்த்தேன்..ஆமா இந்த ரூபிணின்னு ஒருத்தங்க இருந்தாங்களே..அவங்க பாட்டெல்லாம் போட்டாச்சா (இத்துடன் இன்றைய வெடி வைப்பு இனிதே நிறைவேறியது!)

  4. #2063
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    இதோ உங்க பாட்டு. (பாட்டில் நிறைய சிட்டுக்கள். முற்றல்களும் கூட)

    'மீரா பாடிய பாடலைக் கேட்க கண்ணன் வரவிலையோ
    சின்னக் கண்ணன் வரவிலையோ'

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2064
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொம்ப தாங்க்ஸ் வாசு சார்.. அதுவும் அந்த சுபா திக் திக் திக்குன்னு திக்கும்போது அகலக் கண் ஸ்ரீவித்யா டபக்குன்னு ஒக்காந்துக்கினு சேர்ந்து பாடறது அழகு..மீரா பாடின பாடலுக்கு சின்னக் கண்ணன் கிடையாது..பெரிய கண்ணனே வருவாரிலலை..கதைப்படி (மீராகதைப்படி)

    (

    சி.சி.வ.ப நினைவுக்குவரும்..ஒன்றும் புரியவில்லை ஓவ்வொரு நாளும் மாறுகின்ற உலகம் தெரியவில்லை..கனவினிலே தோன்றும் காட்சிகள் கோடி..)

  6. #2065
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம். (1)

    பி.லீலா அவர்கள் ஓர் அற்புதமான பாடகி. வித்தியாசமான வலிமையான குரல் வளம் மிக்கவர். இவர் குரலில் எவருக்கும் இருக்காத ஒரு வசீகர காந்த சக்தி உண்டு. முதலவர் ஜெயலலிதா அவர்களுக்கு இவரது குரல் ரொம்பப் பிடிக்குமாம்.

    நம் வாசலுக்கு இவர் வழங்கிய பாடல்கள் ஏராளம். பாளை போல் சிரிப்பும், பக்குவமான குரலும் கொண்ட இவர் பாடிய பாடல் ஒன்று.

    'மிஸ்ஸியம்மா' திரைப்படத்தில். எஸ்.ராஜேஷ்வர ராவின் இசையில்.

    குளிர்தரும் நிலவிடம் தன்னை யாரோ காதலிப்பது போன்ற உணர்வு இருப்பதாக 'இது என்ன மாயம்' என்று காதல் உணர்வு மேலிட சாவித்திரி ஜெமினியை நினைத்து பாடும் அதியற்புத பாடல்.

    மாயமே நான் அறியேன்...ஓ
    தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
    மாயமே நான் அறியேன்...ஓ
    தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
    மாயமே நான் அறியேன்

    அழகு நிலாவே உனது மஹிமையை
    அழகு நிலாவே உனது மஹிமையை
    அறிந்திருந்தாலும் அனுபவியேனே
    அறிந்திருந்தாலும் அனுபவியேனே
    மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
    மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
    மறைமுகமாகவே நான் அறிவேனே

    மாயமே நான் அறியேன்...ஓ
    தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
    மாயமே நான் அறியேன்

    கண்ணில் கலிக்கமிடும் கதிரலையாலே
    கண்ணில் கலிக்கமிடும் கதிரலையாலே
    கரைந்திட உள்ளமே கனிந்தேனே
    கரைந்திட உள்ளமே கனிந்தேனே
    அன்பையே கோரி அருகினில் யாரோ
    அன்பையே கோரி அருகினில் யாரோ
    அழைப்பது போலே நான் உணர்ந்தேனே

    மாயமே நான் அறியேன்...ஓ
    தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
    மாயமே நான் அறியேன்

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks chinnakkannan, Russellmai thanked for this post
  8. #2066
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-1.

    இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.

    நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.

    நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.

    இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.

    தொடர்ந்து ஆராய்வோம்.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 11th September 2014 at 06:02 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks sss thanked for this post
    Likes gkrishna, sss liked this post
  10. #2067
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாயமே நானறியேன் எனக்கு , என் அன்னைக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.. என் அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தது புகையாக நினைவு..(அவர் மறைந்து கிட்டத் தட்ட க் கால் நூற்றாண்டுக்குக் கிட்ட ஆகிவிட்டது) மிக்க நன்றி வாசுசார்..மாலை மதுரம் புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்

    என்னது..கோபால் சார் எம்.எஸ்.வி பத்தி எழுதறாரா.. நைஸ்..

  11. #2068
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    மாயமே நானறியேன் ரொம்பவுமே மனதை வருடும் பாட்டு. லீலாவுக்கு அழுத்தமான குரல் என்றாலும் மென்மையான பெண்மையின் வாசம் சுற்றிலும் வீசியபடியே இருக்கும். லீலா .. நிலவு என்றதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது.

    வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
    வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன்
    நிலவே நிலவே வா



    ( ரெண்டு பாட்டிலுமே ஜெமினிதான் ஹீரோ என்பது கூடுதல் விஷயம் )

  12. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #2069
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    லீலா .. நிலவு என்றதும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வந்தது.
    madhu: Don't give chinnakkaNNan ideas. He will write about 'nila' songs taking hundred pages!
    I am sure he will include 'nilaa kaayudhu neram nalla neram....'
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  14. Likes madhu, chinnakkannan liked this post
  15. #2070
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட்மார்னிங் ஆல்

    குட்மார்னிங்க் ராஜ்ராஜ் சார்.. எவ்ளோ நல்லா தெரிஞ்சுக்கிட்டிருக்கீங்க..ஆனா இங்கே நிறையப் பெரிய எழுத்தாளர்கள் இருக்காங்க..வாசுசார், கிருஷ்ணாஜி, கோபால்சார் கார்த்திக் சார்..ராஜேஷ்ஜி அண்ட் மதுண்ணா.. எனக்கு சுமாரா

    பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
    கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
    கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
    வட்டநிலாச் சுட்ட வடு

    அப்படின்னு தான் எழுத வரும்( ஈற்றடி கொடுத்தது கண்ணதாசன் ‘தென்றல்” பத்திரிகையில வச்ச போட்டியில்-அ.காலத்தில்) - நா இப்போ எழுதிப் பார்த்தேன்

    மதுண்ணா நிலாப் பாட்டுக்கு நன்றி

  16. Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •