Page 256 of 401 FirstFirst ... 156206246254255256257258266306356 ... LastLast
Results 2,551 to 2,560 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2551
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks vaasu sir


    இன்றைய பாடல்கள் உள்ளத்தைத் தொடவில்லை என இளையராஜா பேசினார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கம்பன் மணி மண்டபத்தில், கவியரசர் கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவில் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி இளையராஜா பேசியதாவது:

    நான் பாட்டு பாடுபவன், பேச்சாளன் கிடையாது. காரைக்குடி சிறப்பு வாய்ந்த மண். இங்குள்ள வீதியில் ஜீவானந்தம் முன்னே செல்ல ஜெயகாந்தன், எம்.ஏ. சீனிவாசன், டி.கே.பாலச்சந்திரன், ரகுநாதன், சிவகாமசுந்தரி, பொன்னி வளவன், தா.பாண்டியன் போன்ற தலைவர்கள் ஊர்வலமாகச் செல்ல அவர்களோடு நான் நடந்து போயிருக்கிறேன். அக்காலங்களில் கவியரசர் கண்ணதாசனும், ஜெயகாந்தனும்தான் எங்கள் சூப்பர் ஸ்டார்கள்.

    கண்ணதாசனுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே இன்னொரு கவிஞன் கிடையாது. சூழலுக்குத் தகுந்தவாறு உடனுக்குடன் பாடல் எழுதும் வல்லமை பெற்றவர் கவியரசர் மட்டுமே. எனது படத்துக்கு முதலில் பாடல் எழுதுகிறார் எனக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    அனுபவங்கள் மூலம் பட்டுப்பட்டு தெளிவு ஏற்பட்டு பாடினால்தான் பாட்டு. அந்த அனுபவத்தை பாடல் வரிகளில் வெளிக் கொணர்ந்ததால்தான் கண்ணதாசனின் படைப்புகள் காலத்தை வென்றன. ஆனால், இன்றைய பாடல்கள் எதுவும் உள்ளத்தை தொடவில்லை. அக்காலத்தில், நான் பள்ளிக்கு நடந்து சென்றபோது ஒலிப்பெருக்கியில் ஒலித்த கண்ணதாசனின், மாலைப்பொழுதின் மயக்கத்திலே… எனத்தொடங்கும் பாடல் எங்களை ஈர்த்தது. ஏதோ ஒரு சூழ்நிலைக்கு அவர் எழுதிய பாடல் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொருந்தியது.

    காதுகேளாத இசைமேதை பீத்தோவன் இசைத்த இசைதான், இன்றளவும் உலகப் புகழ் பெற்றது. அவரது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. நான் சாதனை எதுவும் செய்தவன் இல்லை. மனிதனாகப் பிறந்ததையே பாவமாக நினைக்கிறேன். அதனால் தான் திருவண்ணாமலையாரை சரணடைந்துள்ளேன்.

    சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்தபோது, இசைக்கருவிகளுடன் இசைத்து காட்டியபோதும் எங்களுக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை. ஆனால் மேஜையில் தாளம் போட்டு பாட்டுப்பாடி காட்டியபோது, பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். பஞ்சு அருணாசலம் எந்தக் கணக்கில் என்னை அறிமுகப்படுத்தினார் எனத் தெரியாது. எனக்கு பெற்றோர் இட்ட பெயர் ஞானதேசிகன், பள்ளியில் ராசய்யா எனச் சேர்த்தனர். ஆனால், பஞ்சு அருணாசலம்தான் எனக்கு இளையராஜா என்ற பெயரையும், இசைஞானி என்ற பட்டத்தையும் வழங்கினார்.

    அந்த வகையில் கம்பன், கண்ணதாசன் வாழ்ந்த மண், எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் வாழ்ந்த இந்த மண்ணில் வாழ்வதுதான் எனக்குப் பெருமை. அதனால்தான், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா என்ற அனுபவத்தை என்னால் எழுதமுடிந்தது, என்றார்.

    Thanks to Tamil Hindu

    one comment on this topic

    கவிப்பேரரசு வைரமுத்துவை "காதல் ஓவியம்" படப் பாடல்கள் பிரபலமானபோது, ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜா அவரை ஆறு கண்ணதாசனுக்கு இணையானவர் என்று வாயாரப் புகழ்ந்தாரே.. அது வெறும் முகஸ்துதி வார்த்தைகளா? முரண்பாடான கருத்துக்களை பெரிய மனிதர்கள் சொல்லும்போது "மலையளவு புகழ்ந்து உடன் வலிக்கும் வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வமிருகம்" என்ற கவியரசின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகிறது. by thirunavukkarasu
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2552
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    இன்னைக்கு பத்து பக்கம் பக்காவா பறந்துடுச்சே. சினா கானாவுக்கு ஹோம் வொர்க் அதிகமாயிடுமே. நம்ம வெடி வச்சு பெண்டு நிமித்துராரு இல்ல. அனுபவிக்கட்டும். அனுபவி கண்ணா அனுபவி
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan liked this post
  6. #2553
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    கோவர்த்தனன் லிஸ்ட்க்கு தேங்க்ஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2554
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கோபு சார்,

    இடைவிடாத தங்கள் 'லைக்'குகளுக்கு என் மனமார்ந்த நன்றி! உங்கள் உற்சாகப்படுத்தும் தன்மை மேலும் எங்களை ஊக்குவிக்கிறது. ஒரே ஒரு குறை.நீங்கள் இங்கு அதிகம் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டும். நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks Russellmai thanked for this post
  9. #2555
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Another 'kai':

    kaiyile vaanginen paiyile podalai kaasu pona idam theriyalai

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #2556
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெங்கிராம் சார்,

    இரு பறவைகள் பாடல் அலசல் அமர்க்களம். அதுவும்

    இசைக் கண்ணாடியில் நிறப்பிரிகை நடத்திய ராஜா-கவியரசர்-ஜென்சி.

    வரிகளை நிரம்பவே ரசித்தேன். இது போல நிறையத் தாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks venkkiram thanked for this post
  12. #2557
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜ் ராஜ் சார்

    வாருங்கள். உங்கள் பங்களிப்புகளை நிறையத் தாருங்கள். இப்போதுதான் உங்களைப் பற்றி நானும், கிருஷ்ணா சாரும் கை பேசியில் பேசி மகிழ்ந்தோம்.
    தங்கள் மெல்லிய நகைச்சுவை திரியின் பெரிய பலமாக வேண்டும். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2558
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சினா கானாவுக்கு ஹோம் வொர்க் அதிகமாயிடுமே//ஹையா இன்னிக்கு ஹோம் வொர்க் கம்மி தான்

    வேதா பாடல்கள் லிஸ்டிற்கு நன்றி எஸ்வி சார்.
    .
    இருபறவைகள் மலை முழுவதும் இப்போது கேட்டேன் இந்தப் பாடலில் ஓ.கே.. //இந்த க் கீச் வாய்ஸ் தான் ஜென்ஸி// கொஞ்சம் ஓவராகத் தான் எழுதிவிட்டேன் ஸாரி.. ஆனால் என் வாழ்விலே.. பொறுத்த வரை கொஞ்சம் கீச்சாகத் தான் இருக்கும்..

    அழகே உனக்கு குணமிரண்டு இந்தப் பாட்டுஇப்போ தான் கேக்கறேன் நன்றி வாசு சார்

    இந்தக் கை ப் பாட்டுன்னவுடனே நினைவுக்கு வந்தது அக்கக்கோ கை கை மலர்க்கை..அம்மம்மோ கை மேல் கை வை பாட்டுத்தான் நினைவுக்கு வந்து பின்னால் பக்கங்களுக்குள்ள வந்தா மதுண்ணா போட்டுட்டார்.. அதனாலென்ன என்னை மாதிரி நிறைய இளைஞர்களும் இருக்கறதால – நானும் – வை ராஜா வை வலது கையை வை எனவுமொரு லேட்டஸ்ட் பாடல் இருக்குன்னு அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்! அப்புறம் கையாலே எனைத் தொட்டால் போதும் உயிரே உனக்காக – மைக் மோகன் + நைல் நதியா..

  14. #2559
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சில மலையாளப் பாடல்கள் நினைவுக்கு வருது. தமிழில் சட்டுனு ஞாபகம் வரலீங்கோ..
    her name is Ambili & not Ambuli

  15. #2560
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    [QUOTE=madhu;1165046
    பணம் பெண் பாசம் படத்தில் முத்துராமன், வடிவுக்கரசி, விஜயன், சரிதா நடிக்க ( ஒரு வீடியோ பாட்டு கூட சிக்கவில்லை )
    "லக்ஷ்மி வந்தாள்", "கலைமாமணியே","அன்போடும் பண்போடும்","அழகிய முகம் முழுமை நிலா ( படத்தில் பார்த்ததாக நினைவில்லை ) ஆகிய பாடல்கள் இருந்தன.

    என்னைக்காவது வலைத் தளத்தில் மாட்டிக்காமல் போகாது. [/QUOTE]

    இதோ மாட்டிகிச்சி.....

    பணம் பெண் பாசம்
    பாடல்: அன்போடும் பண்போடும்
    பின்னணி: பி.சுசீலா
    -----------------------------------------------------
    Song: Anbodum Panpodum
    Singer: P.Suseela

    http://www.mediafire.com/?157qza636gqd6a5


    பாடல்: அழகிய முகம் முழுமைநிலா
    பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
    --------------------------------------------------------------
    Song: Azhagiya Mugam Muzhumainilaa
    Singer: Vanijeyaram chorus

    http://www.mediafire.com/?vosb4hdhnyb6e6z


    பாடல்: கலைமாமணியே...சுவைமாங்கனியே
    பின்னணி: பி.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
    ----------------------------------------------------------------------------
    Song: Kalaimaamaniye...Suvaimaanganiye
    Singers: P.Jeyachandiran & Vanijeyaram

    http://www.mediafire.com/?48rbq4a3r64h58h


    பாடல்: லக்ஷ்மி வந்தாள்..மகாராணிபோல்
    பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா
    -----------------------------------------------------------------------------------------
    Song: Lakshmi Vanthaal..Maharanipol
    Singers: S.P.Balasuvramaniam & S.P.Sailaja

    http://www.mediafire.com/?3grtchy09r39lyo

  16. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •