-
18th September 2014, 04:01 AM
#2561
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sss
இதோ மாட்டிகிச்சி.....
நன்றி sss ji..
இதன் ஆடியோ பாடல்கள் வலைத் தளத்தில் கிடைக்குது. நான் குறிப்பிட்டது வீடியோ பாடல்களை.. ( நான் சரியாகக் குறிப்பிடவில்லை. தவறு என்னுடையதே )
Last edited by madhu; 18th September 2014 at 04:24 AM.
-
18th September 2014 04:01 AM
# ADS
Circuit advertisement
-
18th September 2014, 04:22 AM
#2562
Senior Member
Diamond Hubber
அனேகமாக நாயகிகள்தான் உடைக் குறைப்பு செய்து பாட்டுக்கு ஆடுவாங்க...
சில நாயகர்களை சட்டை போடாமல் காட்டுவதும் உண்டு.
கமல்ஹாசன் ஒரு முறை தன்னை "பொம்பளை ஜெயமாலினி" ஆக்கி விடுவார்களோ
என்று பயந்ததாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் கமல் கூட இருந்தும் கூட இந்தப் பாட்டில் சிவகுமாரை உள்ளாடையுடன்
ஆட விட்டவருக்கு எத்தனை தைரியம் ?
படம் : தங்கத்திலே வைரம்
சுசீலா, சசிரேகா
சிவகுமார், ஜெயசித்ரா, கமல், ஸ்ரீப்ரியா
அந்தப் பக்கம் ....
-
18th September 2014, 04:38 AM
#2563
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
வாருங்கள். உங்கள் பங்களிப்புகளை நிறையத் தாருங்கள்.
Thanks vasu! I will show up once in a while and make some noise,pleasant noise that is !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th September 2014, 07:35 AM
#2564
Senior Member
Diamond Hubber
மதுஜி,
கமல் இருக்கும் போது சிவக்குமாரை ஆடை குறைப்பு செய்து அழகு பார்த்த அந்த இயக்குனரை மன்னித்து விடுவோம். பாடலுக்கு நன்றி!
இங்கே ஸ்ரீபிரியா கோழை சிவக்குமாருக்கு தைரியமூட்டி அவரை 'ஆண் பிள்ளை சிங்கமா'க மாற்ற பாடும் ஒரு பாடல். பெரும்பாலும் யாரும் கேட்டிராத பாடல்.
மயக்கம் குழப்பம் நேரும்போது போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்கத் துணிந்தால்
ஆண் பிள்ளை சிங்கம்
வா திரும்பி வா
சுசீலா அவர்களின் பின்னல். ஸ்ரீபிரியாவின் இளமை. சிவகுமாரின் குழப்ப சோகம். எல்லோரும் கேமராவைத் தூக்கிக் கொண்டு ஓடும் அப்போதைய அழகான சாத்தனூர். பாஸ்ட் டிராக் பாடல். கொஞ்சம் வித்தியாசம் உணரலாம்.
Last edited by vasudevan31355; 18th September 2014 at 07:58 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th September 2014, 07:57 AM
#2565
Senior Member
Diamond Hubber
இன்னொரு அம்சமான வண்டிப் பாடல்
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் விழுந்து
எடக்கு பேசி நின்றதை
எண்ணியே இனிக்குதா
நாகரீகமான ஜெமினி, அஞ்சலிதேவி. (இருவரும் கொள்ளை அழகு) அஞ்சலி போட்டிருக்கும் அந்த நெக்லஸ் சான்சே இல்லை. வீட்டுக்காரம்மாவுடன் இப்பாடலைப் பார்த்தால் தொலைந்தோம் சி.க.
இளம் தண்டு போன்ற இனிய குரலில் சுசீலாம்மா பிளஸ் ஏ.எம்.ராஜா
நினைப்பதற்கு மேலாக சிறப்பாக பாடி மகுடி முன்னே நாகம் போலே நம்மை வசியமாக்கி இப்பாடலில் நம்மைப் பைத்தியமாக்கி விடுகிறார்கள். பேக் புரஜக்ஷன் காட்சிகள் அதிகம். பாடலில் அதைவிட இனிமை அதிகம்.
அதுவும் சுசீலா இனிமையோடு கொஞ்சும்
'எனையும் தாங்காமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என் உள்ளம் மறக்குமா'
வரிகளின் சுகம் உச்சி வெயிலில் வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு சில்லென்று ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கையில் ஆறாவது ஏழாவது முடக்கு முழுங்கும்போது கிடைக்குமே ஒரு சுகம்
அது போல ஒரு சுகம் கிடைக்கும்.
Last edited by vasudevan31355; 18th September 2014 at 08:01 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th September 2014, 08:11 AM
#2566
Senior Member
Diamond Hubber
ஆம்பிளை சிங்கம் பாட்டு .... அதிகமாக ஒலிபரப்பப் பட்டதிலை. அனேகமாக "கண்ணடி கையடி பட்டாதானே" பாடலோ "காலம் பல காத்திருந்தோம்" பாடலோதான் கேட்டிருக்கிறேன். இது படத்தில் பார்த்ததோடு சரி.. வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு "காசை சேத்துக்கோ" என்று ஒண்ணு இருப்பதாக நினைவு.
-
18th September 2014, 08:17 AM
#2567
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி, மதுண்ணா காலை வணக்கம்
-
18th September 2014, 08:47 AM
#2568
Junior Member
Platinum Hubber
CAN ANYONE GUESS THIS ACTRESS ?
-
18th September 2014, 08:50 AM
#2569
Junior Member
Platinum Hubber
1950's FIRST TAMIL ''DREAM GIRL'' - T.R. RAJA KUMARI
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
18th September 2014, 08:51 AM
#2570
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks