-
19th September 2014, 10:45 AM
#2691
sorry to all from dinamani
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தனயார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.
-
19th September 2014 10:45 AM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 10:48 AM
#2692
Junior Member
Platinum Hubber
-
19th September 2014, 10:52 AM
#2693
Senior Member
Senior Hubber
வாங்க வாங்க ராஜ் ராஜ் சார் க்ருஷ்ணா ஜி..
ராஜ் ராஜ் சார்..ஆமாம் ராக் அண்ட் ரோல் விட்டுட்டேன். இப்பப் பாடறது உண்டா. பாபனாசம் சிவன் மியூசிக் போட்டிருக்காரா என்ன எனக்குத் தெரியாதே.
மைதிலி என்னைக் காதலி போடல்லாம் இல்லை என நினைக்கிறேன் க்ருஷ்ணா ஜி!
புண்ணியபூமி பற்றிய கதைச் சுருக்கத்திற்கு நன்றி வாசு சார் நான் பார்த்ததில்லை..ஊருக்குப் போய் டிவிடி வாங்கிப் பார்க்கிறேன்.
சந்திர பாபுவைப் பொறுத்த வரை நல்ல நடிகர் நெடு நாள் வாழ்ந்து நாகேஷைப் போல் பேரும் புகழும் பெற்றிருக்க வேண்டியவர்..
நாகேஷ்..மூன்றெழுத்தில் எத்தனை உணர்ச்சிகள் முகபாவங்கள் எவ்வளவு நகைச்சுவை.ரியல் லைஃபில் எப்படி என எனக்குத் தெரியாது..ஆனால் ஒரு ரசிகனாக எனக்கு அவரைப் பிடிக்கும்..அவரும் சந்திரபாபுவும் சேர்ந்து ஒரு படத்தில் லூட்டி அடிப்பார்கள் (போலீஸ்காரன் மகள் இல்லை) என்ன படம் என மறந்து விட்டது.சாது மிரண்டால்?
நாகேஷ் நடனம்.. கன்னி நதியோரம் மின்னி விளையாடும்.. இளமையில்
நாகேஷ் நடனம் வித் பிருந்தா நம்மவரில் ஒரு மியூசிக்கிற்கு இருவரும் ஆடும் அழகே அழகு..அதுவும் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட ஒரு தகப்பனின் மன நிலைதுக்கம் தொண்டையடைக்க கமல் என்ன சார் தேடறீங்க அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி நாகேஷ் சொல்றேன்..சொல்றேன் ம்ம் எனத் தேடி ஒரு தலையணையை எடுத்து இறந்த மகள் தலைக்கடியில் வைத்துதலகாணி இல்லாம தூங்க மாட்டா அவளுக்குத் தலைவலிக்கும் எனப் புலம்பியபடி. நான்கொஞ்சம் தூங்கட்டா எனக் கமலிடம் கேட்கும் கையறு நிலை..பின் மயானத்தில் எரியூட்டிய பிறகு பார்த்தால் தனியாக மகளுடன் ஆடுவதாகக் கற்பனை செய்து ஆடும் நடனம்.மிக உருக்க்கம்
சர்வர் சுந்தரத்தில் கே.ஆர்.விஜயாவிற்காக ஏங்கிய வேடம்.. இறுதிப் படமான தசாவதாரத்தில் கே.ஆர்.விஜயாவின் கணவராக. ம்ம் சில கனவுகள் பலிப்பதற்குப் பலவருடங்கள் ஆகின்றன..
Last edited by chinnakkannan; 19th September 2014 at 10:55 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 10:54 AM
#2694
Senior Member
Senior Hubber
very sad news krishnaji.
RIP அவருக்குச் சின்ன வயதோல்லியோ
-
19th September 2014, 10:57 AM
#2695
Senior Member
Veteran Hubber
Mandolin Srinivas
May his soul rest in peace.
I remember attending his concert for the first time when he was a teenager..
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th September 2014, 10:58 AM
#2696
Senior Member
Diamond Hubber
துயராமான செய்தி. நல்ல இசைக் கலைஞனை நாடு இழந்தது.
-
19th September 2014, 11:00 AM
#2697
Senior Member
Diamond Hubber
எஸ்வி சார்
அற்புத அரிய புகைப்படங்களுக்கு நன்றி!
-
19th September 2014, 11:01 AM
#2698
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
அவருக்குச் சின்ன வயதோல்லியோ
About 45.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th September 2014, 11:03 AM
#2699
Senior Member
Diamond Hubber
ராஜ் ராஜ் சார்,
தங்களது பல்வேறுபட்ட திறமைகளையும், அதே சமயம் தங்கள் தன்னடக்கத்தையும் நேற்றைய பதிவுகளில் படித்து உணர முடிந்தது. தங்கள் கல்கண்டு கதை, எம்ஜிஆர் அவர்களின் ஆட்டோகிராப், பேராசிரியர் தொழில், பாடும் திறமை, கம்ப்யூட்டர் வடிவமைப்பு என்ற பல்வேறு திறமைகளுக்கு என் வந்தனங்கள். தொடர்க தங்கள் தொண்டு.
Last edited by vasudevan31355; 19th September 2014 at 11:08 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th September 2014, 11:05 AM
#2700
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
யாரவது வடிவேலு பாணியில் 'எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு' அப்படின்னு சொல்லுவாங்களா ?
யாராவது என்ன யாராவது? போடல... போடல... அதே ஆள்தான் இப்படி கூவுது.
Bookmarks