-
19th September 2014, 01:04 PM
#2721

ceekay sir
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
'வானில் முழு மதியை கண்டேன் '
'வெண்ணிலா முகம் மங்கலம் தரும் '
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014 01:04 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 01:07 PM
#2722
Senior Member
Senior Hubber
//உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
'வானில் முழு மதியை கண்டேன் '
'வெண்ணிலா முகம் மங்கலம் தரும் ' // இவை இரண்டையும் செலக்ட்செய்து வைத்திருந்தேன்.. விட்டுவிட்டது.. வெண்ணிலா முகம் நல்லபாட்டு..உ. நா பா வெண்ணிலா வேளையில் துள்ளல். வானில் முழுமதில வெண்ணிலா வரலையே
ஆமா எதப் பார்த்து வாசு சார் பயந்துட்டார்.எனக்குப் புரியலை
-
19th September 2014, 01:09 PM
#2723
Senior Member
Diamond Hubber
பௌர்ணமி நிலவில் என்று ஒரு படம்.. விஜயன் நடித்தது... ஆங்கில "ssssssnake" படம் போல விஜயனின் நாக்கு பாம்பாக மாறுவது போல போஸ்டர் அடிச்சிருந்தாங்க.
அதிலே "முழு நிலவு காயும் நேரம்... தாழை மடல் பூவின் வாசனை.. மனதில் ஒரு காதல் வேதனை" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாட்டு ஒன்று உண்டு. வீடியோவை நினைக்காவிட்டாலும்.. ஆடியோ கூட எங்கேயும் கிடைக்கவில்லை.
யாராவது உதவுங்க ப்ளீஸ்...
( இன்னும் பழைய ரிக்வெஸ்ட் ரெண்டு pending இருக்குது .... )
-
19th September 2014, 01:10 PM
#2724
Senior Member
Diamond Hubber
'மாரியாத்தா காளியாத்தா' எனக்கா இல்ல அருணா இராணி குளிக்கறதப் பார்க்காம இந்தப் பக்கம் திரும்பிகிட்ட நம்ம சினா கானாவுககா கிருஷ்ணா சார்?
மகமாயி... வாழ்க்கையிலேயே அண்டப் புளுக இன்னைக்குதான் கேள்விப்படறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 01:16 PM
#2725
Senior Member
Senior Hubber
//மகமாயி... வாழ்க்கையிலேயே அண்டப் புளுக இன்னைக்குதான் கேள்விப்படறேன். //
kannaa unnai yaarumE namba maattEngaraagaLE.unmaiyaich chonnaa!
-
19th September 2014, 01:17 PM
#2726
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
வானில் முழுமதில வெண்ணிலா வரலையே
முழுமதின்னா வெண்ணிலாதானே ... ( அன்று வந்ததும் இதே நிலா பாட்டில் மட்டும் வெண்ணிலா வந்துதான்னு எதிர்க் கேள்வி கேட்க மாட்டேன் )
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்
வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே
வெண்ணிலா ஜோதியை வீசுதே
வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
என்றெல்லாம் பழைய பாடல்களும்
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என்று புதுப்பாடல்களும் ப்ராஜக்ட்டுக்கு வெயிட்டிங் சிக்கா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th September 2014, 01:19 PM
#2727
Senior Member
Senior Hubber
//புதுப்பாடல்களும் ப்ராஜக்ட்டுக்கு வெயிட்டிங் சிக்கா // கன் டின்யூ பண்ணுகிறேன்..வி.போ பாடல்களை.மதுண்ணா
-
19th September 2014, 01:43 PM
#2728

Originally Posted by
madhu
பௌர்ணமி நிலவில் என்று ஒரு படம்.. விஜயன் நடித்தது... ஆங்கில "ssssssnake" படம் போல விஜயனின் நாக்கு பாம்பாக மாறுவது போல போஸ்டர் அடிச்சிருந்தாங்க.
அதிலே "முழு நிலவு காயும் நேரம்... தாழை மடல் பூவின் வாசனை.. மனதில் ஒரு காதல் வேதனை" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாட்டு ஒன்று உண்டு. வீடியோவை நினைக்காவிட்டாலும்.. ஆடியோ கூட எங்கேயும் கிடைக்கவில்லை.
யாராவது உதவுங்க ப்ளீஸ்...
( இன்னும் பழைய ரிக்வெஸ்ட் ரெண்டு pending இருக்குது .... )
மது சார்
இது காஜா படம் என்று நினைவு கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ்
விஜயன் கண் நீயா ஸ்ரீப்ரிய போன்று பாம்பு கண்ணு .
கதாநாயகி நினைவில் இல்லை
கங்கை அமரன் இசை இல்லையோ
-
19th September 2014, 04:35 PM
#2729
ரோஜாவின் ராஜா படம்.சிவாஜியும் வாணிஸ்ரீயும் காதலர்கள். சிவாஜியின் நண்பர் ஏவிஎம் ராஜன். பெண்பார்க்கப் போன இடத்தில் தன் காதலியையே நண்பனுக்குப் பெண்பார்க்க வந்திருப்பது நாயகனுக்குத் தெரிகிறது. பெண்ணைப் பாடச்சொல்லிக்கேட்பது அந்தக்காலத்துப் பழக்கம்.தன் நிலையையே பாடுகிறாள் நாயகி. சீதையின் சுயம்வரத்தையே உருவகித்துப் பாடுகிறாள்.
இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரையொருவர் பார்த்து இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்பது வான்மீகியில் இல்லாத காட்சி. கம்பனின் கற்பனை. அதையே களமாக்கிப் பாடுகிறபோது கம்பன் கூட சொல்லாத ஒரு காட்சியைத் தன் கற்பனையில் உருவாக்கித்தருகிறார் கண்ணதாசன்.
ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்-
ராஜாராமன் நினைத்திருந்தான்-அவள்
சுயம்வரம் காண மன்னவர் பலரும்
மிதிலைக்கு வந்திருந்தார்....மிதிலைக்கு வந்திருந்தார் என்பது பல்லவி.
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்-இரு
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனைத் தேடிநின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்
கொதிக்கின்ற மூச்சும் மாலையில் விழுந்து மணியும் கருகியதே-அவள்
கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
இதுவரையில், பெண் இராமாயணத்தைப் பாடுவது போல்தான் தெரிகிறது. சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரியாது.அடுத்த சரணம் ஆரம்பமாகிறது.
வந்திருப்பவனே மாப்பிள்ளை என்று பேசி முடிவுசெய்தால் என்ன செய்வது? சபையில் தன் மனவோட்டத்தை அவள் மறைக்க முயல்கிறாள். முடிகிறதா??
நெஞ்சை நினைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை-அவள்
மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம்-ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம்-அவள் சிந்தை அவனிடம்
இதுவரை சீதையின் நிலையையும் நாயகியின் நிலையையும் சேர்த்தாற்போல் பாடுகிறார் கவிஞர்.. அடுத்து அவர் பாடுகிற கற்பனைதான் கம்பனில் கூட இல்லாதது.
மன்னவரெல்லாம் சுயம்வரம்நாடி மண்டபம் வந்துவிட்டார்-வேறு
மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கிவிட்டாள் என்கிறார் கவிஞர்.
கம்பனைப் பொறுத்தவரை சுயம்வரத்திற்கு வந்தமற்றவர்களால் அந்த வில்லைஅசைக்கக்கூட முடியவில்லை. விசுவாமித்ரர்,இராமனை, சுயம்வரத்திற்கு வந்ததாகவே ஜனகனிடம் அறிமுகப்படுத்தவில்லை. இங்கு நடக்கும் விருந்தை வேடிக்கை பார்க்கத்தான் வந்தார்கள். உன் வில்லையும் ஒரு கை பார்ப்பார்கள் என்று கிண்டலாகச்சொல்கிறார் விசுவாமித்ரர்."விருந்து காணிய வந்தார்-உன் வில்லும் காண்பார்" என்பது கம்பன் வாக்கு.
ஆனால் காதலன் முன்னிலையிலேயே வேறொருவன் பெண்பார்க்க வந்ததை,
"வேறு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்" என்று கவிஞர் பாடும் உத்தி காட்சிக்குப் புதிய கனத்தையே கூட்டி விடுகிறது.


நன்றி - மரபின் மைந்தன்
Last edited by gkrishna; 19th September 2014 at 04:38 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th September 2014, 04:45 PM
#2730
Junior Member
Regular Hubber
21-9-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9-00 மணிக்கு விஜய்
தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்
கோபு
Bookmarks