Are you serious ? Rendu idly oru vadai pondra tharakuraivana vasanangalai pesuvar nam thalaivar ippadathil !
by Irene Hastings
முழு வெண்ணிலவில் கூட சிறுசிறு களங்கங்கள் தென்படத்தானே செய்கின்றன! தரத்தின் உருவகமான நடிகப்பேரரசரின் சாதனை சுவடுகளில் சில ......தரமற்ற சோதனை திருஷ்டி'வடு'க்களும் உண்டு என்பதை வேதனையுடன் உணர்ந்து மருகுகிறோம்!.
Duty conscious NT ought to have avoided such cheap commercial oriented situations instead of having fallen a prey or becoming a victim of circumstance like a slip of a mammoth pachyderm!
We have learnt to become swans...taking in only the good feels rather than the bad peels!
Last edited by sivajisenthil; 19th September 2014 at 12:30 PM.
திருச்சியில் வருகிற அக்டோபர் 5ம் தேதி அன்று ஞாயிறு நடிகர் திலகம் பிற்ந்தநாள் விழா சீறும் சிறப்புமாக சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் ஸ்ரீரங்கம் sn கல்யாண மண்டபத்தில் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி பக்தன் திரு.வசந்தகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். தமிழகம் முழுவதிலிருந்தும் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாபெரும் விழாவிற்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் ஸ்ரீரங்கத்தில் 75 அடி நீள் சுவர்விளம்பரம் செய்யப்பட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாகஉள்ளது.
அடுத்து வருகிற அக்டோபர் 12ம் தேதி ஞாயிறு அன்று திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் இயக்கத்தினர் சார்பில் சிவாஜி பிறந்ததின விழா தமிழ் சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடை பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.மருது மோகன் மற்றும் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு.b.கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இவ்விழா சிறக்க சிவாஜி மக்கள் இயக்கத்தினர் திருச்சியில் சுமார் 11 (பதினொன்று) இடங்களில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். திருச்சியில் செல்லும் இடமெல்லாம் ஒரே சிவாஜி பெய்ராக கண்ணில் படுகிறது என மக்கள் வியக்கின்றனர்.
ஆட்சி பலம் இன்றி கட்சி பலம் இன்றி எந்த பலனும் எதிர் பார்க்காமல் சிவாஜி என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் மயங்கி சிவாஜி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த மகா கலைஞனுக்கு திருச்சி மாநகரில் நலத்திட்ட விழா காண இருக்கிறார்கள்.
இந்த இரு அமைப்புகள் நடத்த இருக்கும் தலைவரின் பிறந்த நாள் விழா சிறக்க நாம் அனைவரும் வாழ்த்துவோம்
Bookmarks