-
21st September 2014, 02:54 PM
#2811
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
//ராஜா தேசிங்கு// இது எம் ஜி ஆர் படம் தானே எஸ்.வி சார்..சமீபத்தில் ஒரு பாட்டு க்கேட்டேன் மறந்து போய்டுச்சு..எஸ் எஸ் ஆர் பத்மினி - ராஜா தேசிங்கு என்று போட்டதாக நினைவு..
-
21st September 2014 02:54 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2014, 02:59 PM
#2812
Senior Member
Senior Hubber
-
21st September 2014, 03:03 PM
#2813
Senior Member
Senior Hubber
சோலைமலை ராணி
தங்கம் மனசு தங்கம்
தங்கரத்தினம்
தந்தைக்குப்பின் தமையன்
திலகம்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
சவுக்கடி சந்திரகாந்தா
இதெல்லாம் கேள்வி ப் படாத படங்கள்.. இந்த தங்கரத்தினம் மட்டும் - ஒன்மேல கொள்ள ஆச உத்தமியே ரத்தினமே சத்தியமாச் சொல்லுறேண்டி தங்கரத்தினமே - இந்த்ப்பாடல் இடம்பெற்ற படமா..
-
21st September 2014, 03:04 PM
#2814
Senior Member
Diamond Hubber
கொஞ்ச நாள் முன்னாடி இந்தப் பாட்டைப் பற்றி இங்கே பேசப்பட்டது. இன்னைக்கு வசமா வீடியோ சிக்கிக்கிச்சு.
படம் : ராமாயி வயசுக்கு வந்துட்டா
ஜெயச்சந்திரன், ஜானகி
நாலு வகை பூவில் மலர் கோட்டை
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st September 2014, 03:05 PM
#2815
Senior Member
Senior Hubber
மேனகா நடிச்ச சாவித்ரில கூட ஒரு நல்ல பாட்டு இருக்கே..மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை..அதுவா..
-
21st September 2014, 03:13 PM
#2816
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
மதுண்ணாவ்.. தாங்க்ஸ்.. வனமேவும்ராஜ குமாரா..பாட்டு அப்படியே வரிவராமல் மனதைக் குடைந்து கொண்டிருந்தது..அப்படியே அந்த டினா முனிம் அமோல் பலேகர்..தன்ன ஹம்மரதும் ஹ்ம் தும்பம்..டகடக் ..டக்க கரோ என்பது போல் ஒரு பாட்டு அதுவும் எடுத்து விடுங்கோ..

-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st September 2014, 03:15 PM
#2817
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
மேனகா நடிச்ச சாவித்ரில கூட ஒரு நல்ல பாட்டு இருக்கே..மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை..அதுவா..
இதுவா ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st September 2014, 04:09 PM
#2818
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (76)
'இன்றைய ஸ்பெஷலி'ல் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்றொரு படத்திலிருந்து அப்போது ஹிட்டடித்து, இப்போது கேட்க இயலாமல் போன ஒரு பாடலைத் திரும்பக் கேட்டு இன்புறலாம்.

மலேஷியா வாசுதேவன், சுசீலா குரல்களில் ஒலிக்கும் இனிமையான பாடல்தான். சுமித்ராவும், விஜயகுமாரும் ஜோடி சேர்ந்து களித்துப் பாடும் டூயட்.
இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏதோ இனம் புரியாத மெல்லிய சுகம் நம்முள் படர்வதை உணர முடிகிறது.
இளையராஜாவின் ஆரம்ப கால அட்டகாசங்களில் இதுவும் ஒரு பாடல்.
கம்பீரமாக ஒலிக்கும் மலேஷியாவின் குரல். அதிஇனிமையாக ஒலிக்கும் சுசீலா அம்மாவின் குரல். இசைக்கருவிகள் மிக அழகாக உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன. முக்கியமாக புல்லாங்குழல் இப்பாடலில் அற்புத பங்கு வகிக்கிறது.
விஜயகுமாருடன் இணை சேர்ந்தால் சுமித்ராவுக்கு அப்படி என்ன உற்சாகமோ!
இனி பாடலின் வரிகள்.
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேனே
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
பொங்கி வரும் அலை பூச்சரம் சூட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போய் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
மலர்க்கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம்
வா இப்போது
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நானும் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வது போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும்
நான் உன்னோடு
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னைக்
காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமை இல்லை
இனிமேல் பிரிவே இல்லை
நாம் ஒன்றானோம்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேனே
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
Last edited by vasudevan31355; 21st September 2014 at 04:28 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
21st September 2014, 04:36 PM
#2819

Originally Posted by
vasudevan31355
இன்றைய ஸ்பெஷல் (76)
'இன்றைய ஸ்பெஷலி'ல் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்றொரு படத்திலிருந்து அப்போது ஹிட்டடித்து, இப்போது கேட்க இயலாமல் போன ஒரு பாடலைத் திரும்பக் கேட்டு இன்புறலாம்.
குட் எவனிங் ஆல்
வீட்டில் இருக்கும் போது சிஸ்டம் கிடைக்க பெரும் அக்க போர் அதனால் தான் பதிவு போட முடியவில்லை . ஆனாலும் நினைவு கூர்ந்த அனைவர்க்கும் நன்றி
வாசு சார்
முகத்தில் முகம் பார்க்கலாம் 'இளசுவின் ஆரம்ப கால அட்டகாசம் ' என்ன ஒரு அருமையான வார்த்தை .உண்மையில் அட்டகாசம் போங்கள் பாடலும் தான்
மது சார்
ராமாயி வயசுக்கு வந்துட்டா பாடலை நினைவு செய்ததற்கு நன்றி
1980 களில் தமில் நாட்டில் தேர்தல் நேரம் 77 தேர்தல் கூட்டணி மாறி விட்டது . அப்போது இந்த படம் அரசியில் வியாதிகள் மன்னிக்கவும் வாதிகள் மேடையில் பலமாக அடிபட்டது. 'ராமாயி வயசுக்கு வந்துட்டா தாலிக்கு தங்கம் எங்கே - அப்படின்னு ஒரு வசனம் .பதில் 'இப்போது தானே வயசுக்கு வந்துருக்கா .கல்யாணம் போது பார்க்கலாம் ' இப்ப அவள் கிழவியாகி செத்து போயிருப்பா ஆளும் கட்சி எதிர கட்சி யாராவது தங்கம் கொடுதாங்களானு தெரியவில்லை
-
21st September 2014, 04:38 PM
#2820
சி கே சார் /மது சார்
மேனகாவின் நல்ல டூயட்
நெற்றிக்கண் 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ' மொட்டையின் ஆரம்ப கால அட்டகாசம் . அதே மாதிரி 'பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே ' பாடகர் திலகம் நடிகர் திலகம் கலக்கும் அமரனின் அற்புதம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks