-
22nd September 2014, 05:01 AM
#11
Senior Member
Diamond Hubber
இயக்குநர் ஸ்ரீதர் ஒரு புதிய படத்துக்காகப் பாடலொன்றைப் பதிவு செய்ய கவிஞர் தஞ்சை ராமையாதாஸிடம் வந்தார், பாட்டுச் சூழலைச் சொன்னார்.
உடனடியாக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய வரி ‘நம்பினா நம்புங்க, நம்பாக்காட்டி போங்க.’
அந்த வரிகள் கதைக்குப் பொருத்தமாக இருப்பினும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை ‘முதல் பாட்டு இப்பதான் பதிவு செய்யறோம், இப்படி எழுதினா நல்லா இருக்காது’ என்றார்.
’சரி, மாற்றிக் கொடுக்கறேன்’ என்றார் தஞ்சை ராமையா தாஸ், ‘ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா.. இது ஓகேயா?’
அவர் தமாஷாகதான் சொன்னார், ஆனால் ஸ்ரீதருக்கு அது பிடித்துவிட்டது, ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்றார்.
’யாருக்குத் தெரியும்?’ என்றார் தஞ்சை ராமையாதாஸ், ‘கதைப்படி இது குறவர்கள் பாடுறது, அவங்க மொழி உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது,சும்மா எழுதறதுதான்.’
’அர்த்தம் இல்லாட்டியும், கேட்க சுகமா இருக்கு, தைரியமாப் பதிவு செய்ங்க, நல்ல வரவேற்பைப் பெறும்.’
அவர் சொன்னது அப்படியே பலித்தது. பாட்டு சூப்பர் ஹிட்.
( இணையத்தில் படித்தது )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014 05:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks