Page 309 of 401 FirstFirst ... 209259299307308309310311319359 ... LastLast
Results 3,081 to 3,090 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3081
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    இன்னும் பல படங்கள் உள்ளன .வெளியிடலாம வாசு சார்
    போதும் கிருஷ்ணா சார்! இதற்கே பயந்து பயந்துதான் போட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3082
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    புரிந்து கொண்டேன் . ஏற்கனவே மந்திரிக்கணும் அப்படின்னு சொன்னீங்க நடையை மாத்து - இந்த பாட்டு கன்னி பருவத்திலே படத்தில் தானே வாசு சார் மலேசிய வாசு தேவன் பாடல்
    gkrishna

  4. #3083
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சர் நீங்கள் சொன்ன 'பாபி' காட்சி உங்களுக்காகவே

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #3084
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    புரிந்து கொண்டேன் . ஏற்கனவே மந்திரிக்கணும் அப்படின்னு சொன்னீங்க நடையை மாத்து - இந்த பாட்டு கன்னி பருவத்திலே படத்தில் தானே வாசு சார் மலேசிய வாசு தேவன் பாடல்
    அசையுது ஒன்னப் போல நாத்து
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3085
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமையான நிழல் படம் பிப்பா . சுவா (வாசு) சார்
    gkrishna

  8. #3086
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (78)

    இன்றைய ஸ்பெஷல் பாடலில் 'புன்னகை பொங்குதே!

    பரணி பிக்சர்ஸ் 'இப்படியும் ஒரு பெண்' படத்தின் சூப்பர் ஹிட் பாடல். பாலாவும், வசந்தாவும் புரியும் குரல் ஜாலங்கள். வசந்தாவின் கிறங்கடிக்கும் அந்த வானம்பாடிக் குரல். பானுமதி ராமகிருஷ்ணாவின் இசையில் எப்போதுமே மறக்க முடியாத பாடலாகிவிட்டது.

    'சரிகமப பாட்டு பாடுங்க... பாட்டில் உள்ள படங்களையே கேட்டுக் கொள்ளுங்க' என்ற அற்புதமான பானுமதி பாடிய பாடல் ஒன்று உண்டு.

    அழகான இளமையான சிவக்குமாருக்கும், குமாரி பத்மினிக்கும் கிடைத்த இனிமையான பாடல். அப்போதெல்லாம் சிவக்குமார் என்றால் அவருக்கு நிறையப் படங்களில் குமாரி பத்மினி ஜோடியாக இருப்பார்.
    (ராஜ ராஜ சோழன், கண்காட்சி, திருமலை தென்குமரி என்று நிறைய சொல்லலாம். பெரும்பாலும் ஏ.பி.என்.படங்கள்.) அதே போல நடிகர் திலகத்திற்கு தங்கையா... 'கூப்பிடு குமாரி பத்மினியை' என்பார்கள். (தர்மம் எங்கே, தாய்)

    சிவக்குமாருக்கு நல்ல ஜோடிப் பொருத்தம் இவர்.








    இனி பாடலின் வரிகள்.



    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஆஹா ஆஹா ஆஹா
    ஹேஹேஹே ஹேஹேஹே ஹேஹேஹே

    பொங்குதே புன்னகை
    பொங்குதே புன்னகை
    புள்ளி இட்ட கலைமானை
    அள்ளி இட்ட விழியோரம்
    பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

    போதுமா புன்னகை
    பொட்டு வைத்த முகத்தோடு
    கட்டி வைத்த இதழ் மீது
    புது வண்ணக் கோலம் போதுமா
    போதுமா புன்னகை

    (சாக்ஸ் ஜாலம்)

    மணமகள் வைதேகி நடை பார்க்கிறேன்

    தசரத ரகுராமன் முகம் பார்க்கிறேன்

    திருக் கல்யாணமே

    சுப வைபோகமே

    அது இல்லாவிடில்

    கண்கள் மழை மேகமே

    இந்த ரகுராமன் மனமெங்கும் ஒரு ராகமே


    பொங்குதே புன்னகை

    போதுமா புன்னகை


    மழைக்காலம் வரும் போது மழை வந்தது

    மணக்கோலம் வருமென்று மனம் சொன்னது

    அன்பு நிலையானது

    நெஞ்சில் சிலையானது

    கலையான நம் சொந்தம் கலையாதது


    பொங்குதே புன்னகை

    போதுமா புன்னகை

    புள்ளி இட்ட கலைமானை
    அள்ளி இட்ட விழியோரம்
    பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

    பொங்குதே புன்னகை

    போதுமா புன்னகை


    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Russellmai thanked for this post
  10. #3087
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ’ மெயின் சாயர் நஹின்’--பாட்டின் அர்த்தம்

    நான் ஒரு கவிஞன் இல்லை ஆனால்
    உன்னை எப்போது பார்தேனோ அப்பவே கவிஞன் ஆகிவிட்டேன்.
    gkrishna

  11. #3088
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    thanks to ravi sir

    Bobby படம் தமிழ் நாட்டைப் படுத்திய பாடு

    1973-74லில் தமிழ் நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதலில் கடவுள் வாழ்த்தாக வினாயகனே வினை (சில சமயம் பாதியிலேயே ரிக்கார்ட்பிளேட்டை புடுங்கி விடுவார்கள்) போட்டுவிட்டு அடுத்து அவசரமாக பாகர் சே செய்க்கோ அந்தர்..... ஹம் தும் ஏக் கம்ரே மேன் பந்த் ஹோ இதற்கடுத்து எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கும் மே ஷாயார் தோ நஹி ஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்துடன் ஆரம்பிக்கும்.



    பாட்டைப் போட்டுவிட்டு சவுண்ட் சர்வீஸ்காரர் இடுப்பில் கைவைத்து எல்லோரையும் ஒரு முறைப் பார்த்து புன்னகைப்பார்.ஜனங்கள் பதிலுக்குப் புல்லரிப்பார்கள்.

    செந்தமிழ் மாநாடு கொண்டாடிய தமிழ் நாடு புல்லரித்து,புளாங்கிதம் அடைந்து இரும்பூது எய்தது Bobbyயின் பாடல்களைக் கேட்டு.படத்தையும் பார்த்து. இந்தியாவே புரட்டியது?

    நானும்பள்ளிமாணவனாக புல்லரித்தேன்.எங்கள் வீட்டு வேலைகாரியும் ஹம் செய்துக்கொண்டே பாத்திரம் தேய்ப்பார்.

    பாட்டின் வரிகள்/வசனங்கள் யாருக்காவது புரிந்திருக்குமா?

    அட Bobbyகளா..!



    Bobby என்ற பெயர் ஜெர்மனி மூலம் என்று யூகிக்கிறேன்.

    பாடல்களில் அக்கார்டியன்(Accordian) இசைக்கருவி நாதங்கள் நிறைய இருக்கும். (இது நம்மூர் ஹாண்டி digitalized ஹார்மோனியம் தான்) காரணம் படத்தின் நாயகி கோவா ஆங்கிலோ இந்திய பெண்.பெயர் Bobby Braganza.

    ஏன் Bobby படுத்தியது?



    காரணம் பிரஷ்னஸ்.

    கே.வி.மகாதேவன்/ விஸ்வனாதன் போன்றவர்களின் தேய்பிறை இசை அலுத்துப்போனவர்களுக்கு இதன் இசை பிடிததுப் போனது. அப்போதே கல்லூரி மாணவர்கள் இந்தி இசையைக் கேட்டு காலரைத் தூக்கி விட்டுகொள்வார்கள். தமிழ்ப் பாடல்கள் கேட்டால்அவமானமாக நினைத்தார்கள்.மன்சாயே கீத்,பினாகா கீத் மாலா, பூல் குலே குல்ஷன்... போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

    ஆனால இது...?

    இளசு/தளிர் வயசு காதல்.ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா.இருவரும் பிஞ்சு தக்காளிப் போல இளசுகள்.(ரிஷிகபூரை டிம்பிள் கபாடியா முதன் முதலாக சந்திக்கும் இடம் மனதைக் கவரும் இடம்) சுண்டினால ரத்தச்சிவப்பு பஞ்சாபி வெள்ளைத் தோல் நாயகர்கள்.ரிஷிகபூர் சட்டையை மீறி தெரியும் புசு புசு முடி.கலர் படம்.ரிச் இசை.ரிச்சான கலர்.ரிச் லொகேஷன்ஷேன்.

    மிக மிக மிக முக்கியமாக டிம்பிள் சீனுக்கு சீன் அணிந்த கவர்ச்சி உடைகள்.அதற்காகவே அவர் கோவா ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகப் படத்தில் படைக்கப்பட்டார்.படம் முடிந்ததும் அய்யோ அம்மா என்று பல இளைஞர்கள் அலறிக்கொண்டு வெளியே வந்தார்கள்.


    தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் பெரிதாக இருக்க வேண்டும் என்று ராஜ்கபூர் விரும்புவாராம்.ஜீனத் அமனும் (சத்தியம் சிவம் சுந்தரம்) அவர் கண்டுப்பிடிப்பு.

    இதன் பின்னணி இசையும் ஒரு காரணம்.ஆட்டுக்கார அலமேலு படத்தில் சங்கர் கணேஷ் சுட்டு அடித்திருப்பார்.Mujhe Kuch Kehna Hai என்ற பாடல் எஸ்.ஏ.ராஜ்குமார் சுட்டு ஒரு படத்தில் போட்டிருப்பார்.ஆனால் இப்போது யோசித்தால் டிபிக்கல் இந்தி இசை.

    இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.ராஜ்கபூரின் பெரிய தயாரிப்பு.இதில் பாடும் ஷைலேந்திரா சிங் புது முகம்.அருமையான குரல்.எனக்குப் பிடித்தப் பாடல்கள் மூன்று.

    கதை?

    ஒரு சாதாரண காதல் கதை.முதல் பார்வைக் காதல் கதை.ஒரு ஏழை பெண்ணுக்கும் பணக்கார இளைஞனுக்கும் மலரும் காதல்.வீட்டில் எதிர்ப்பு.கடைசியில் சேர்வார்கள்.

    சென்னை மிட்லெண்ட் தியேட்டரில் ஓடு ஓடு என்று மராத்தான் ஓட்டம் ஓடியது.இத்ன் லாபத்தில்தான் லியோ மினி தியேட்டர் கட்டினதாக சொல்வார்கள்.படுத்திய படுத்தலில் குமுதம் இதன் கதையை தொடராக வெளியிட்டது. இதன் பாதிப்பில் லஸ் கார்னரில் ஒரு துணிக் கடையின் பெயர் Bobby.சட்டைக்கு Bobby காலர் (நாய் காது டைப்) அப்போது பேஷன்.ரிஷிகபூரின் ஹேர்ஸ்டைலை முக்கியமாக கிருதாவை வரவழைக்க முயன்று தோல்வி அடைந்தேன்.

    சுஜாதா மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம் புத்தகத்தில் (பின்னாளில் படித்தது) ஒரு கவிதையை சுட்டி இருந்தார்.அது.....

    கார்டு கவர்களில்
    இந்தி எழுத்தை
    நன்றாய் அடித்து
    மசியால் மெழுகி
    அஞ்சல் செய்யும்
    தனித்தமிழ் அன்பர்
    பாபி பார்த்ததும்
    இருடிக் கபூரும்
    இடிம்பிள் கபாடியாவும்
    (ரகரமும் டகரமும் மொழி
    முதல் வாரா)
    அருமையாக நடித்தனர்...
    என எழுதுகிறராம்

    ரிஷிகபூரின் அடுத்தப் படம் ரபூ சக்கர்.கதாநாயகி நீட்டு சிங்.ஓடவில்லை.காரணம் பாபியின் ஹேங் ஓவர் தெளியாமல் இருந்ததுதான்.

    இதற்கு பிறகும் இந்திப்பட மோகம் மூணு நாலு வருஷம் இருந்தது.

    அப்போது மத்தியான வேளைகளில் தமிழ்(மலையாள?) டீக்கடைகளில் ட்ரான்சிஸ்டரில் இரைச்சலுடன் காற்றில் அலைந்துவரும் லதா மங்கேஷ்கரின் பாட்டு காதில் இன்னும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது.
    gkrishna

  12. Likes chinnakkannan, Russellmai liked this post
  13. #3089
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    1970 - 80 ல் ஹிந்தி பாட்டு கேட்டுகொன்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா. 1990ல் இருந்து ஹிந்தி பாட்டு கேட்டுகொன்டிருந்த வட இந்தியர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ஏ ஆர் ரெஹ்மான்

    இன்னும் கொஞ்ச நேரத்தில் மேல கூறியது மாதிரி ஒரு பதிவு வரலாம்
    gkrishna

  14. #3090
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    என்னது குழந்தைங்கள்ளாம் டிம்பிள் டிம்பிள் லிட்டில்ஸ்டார் பாடிக்கிட்டு இருக்கு நா ராத்திரி வந்து ஹோம் ஒர்க் பண்றேன்.. நெறய மீட்டிங்க்ஸ் இருக்கு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •