-
27th September 2014, 10:57 AM
#3261
Senior Member
Senior Hubber
//இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டைத் திரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது //
தாங்க்ஸ் வாசுசார்..படம் வெளியான புதிதில் பாட்டு மட்டும் கேட்டிருப்பதாக நினைவு..விஜயகாந்த் சுதா சந்திரன் ஜோடி பார்க்கையில் இட்லிக்கு ஆலுகோபி தொட்டுக்கொண்டு சாப்பிடும் காம்பினேஷன்போல் இருக்கிறது!
பாடல் நன்று
-
27th September 2014 10:57 AM
# ADS
Circuit advertisement
-
27th September 2014, 11:05 AM
#3262
Junior Member
Newbie Hubber
-
27th September 2014, 11:12 AM
#3263
Senior Member
Seasoned Hubber
Well said.. Vasu... Gopal's minor minus-points look major to others ... If this is overcome... that will be a great boon to him...
நல்ல எழுத்தாளர்..நல்ல மனிதர்... நல்ல முன்கோபியும் கூட...
சிலருக்கு முன்கோபம் பலமாக இருக்கும்.. அதுவே பலவீனமாகவும் இருக்கும்.. கோபால் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்...
வாருங்கள் கோபால் சார்...
தங்களுடைய பொருளில் குற்றமில்லை.. சொல்லில் தான் குற்றமிருக்கிறது.. இது மன்னிக்கப்பட வேண்டியது தான் என்றாலும் களையப்படவும் வேண்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th September 2014, 11:45 AM
#3264
Senior Member
Diamond Hubber
c.k.sir,
Is it alu gopi?
-
27th September 2014, 11:56 AM
#3265
Senior Member
Senior Hubber
தலைவிக்குக் காதல் தலைவனுடன்.. இங்கு தோழிக்கும் காதல் இன்னொருவருடன்.. தலைவிக்கோ தன் காதலில் சிறிது சந்தேகம் தான்..முழுதாய்க்காதல் வயப்பட்டு விட்டோமா என்று..தோழி அப்படியில்லை..முழுதும் மயங்கியவள் தன்காதலனிடம்.. தலைவியின் மயக்கத்தைப் பார்த்துப் பாடுகிறாள்..
படத்தில் பாடுபவர்கள் தேவிகா வசந்தா.. அவர்களுக்காகப் பாடியவர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா..
பாடல் முழுக்க குறும்பு கொப்பளிக்கும் இரு யெளவன யுவதிகள் காதலில் விழுந்த தன்மையை அழகாகப் பறைசாற்றும்..அழகான கவிஞர் மாயவ நாதனின் வரிகளுக்கு தேவிகையும் வசுவும் பாடுவது இன்னும் அழகு.. ஓஓ ஓஒ என பிசுசீலாவின் ஹம்மிங்கிற்கு தேவிகா துள்ளாட்டம் போட்டு அங்கிட்டிருந்து இங்கிட்டு ஆற்றங்கரையோரம் ஓடி வருவது இன்னும் அழகு..
படம் இதயத்தில் நீ..படம் பற்றி பாடல் வரிகளுக்கு அப்புறம்
/
சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்தக் கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைத்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ..
தென்றல் அழைத்துவரத் தங்கத் தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே இடம்
தந்த என் மன்னவரே
கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ
இந்தப் பட்டு உடலினை தொட்டணைக்கும்கலைக் கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றிவருபவரோ
-நீ கற்றுக் கொடுத்ததை ஒத்திகைபார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் முற்றும் தெரிந்தவரோ
வண்ணக்கருவிழி தன்னில் ஒருவிழி என்று அழைப்பவரோ பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்பெயர் சொல்லித் துடிப்பதுவோ
ஒளி மின்னிவரும் இரு கண்ணசைவில் கவி மன்னவன் என்பதுவோ
இல்லை தன்னைக் கொடுததென்னை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புதுமலரே
அவர் நெஞ்சம் மலரணையே
மனம் எங்கும் நிறைந்தவரே…
*
ஆனந்தன் வக்கீல் (ஜெமினி) பூங்காவில் வழக்கின் பாய்ண்டிற்காக கூர்மையாக யோசித்துக் கொண்டிருக்கையில் அங்கு தனது பின்பக்க பெஞ்சில் அமர்ந்திருந்த யுவதியின் கூந்தல் தன் மேல் விழ அதைக் கடித்து பாயிண்டிற்கு யோசிக்கிறான்..அந்த யுவதிபடிக்கும் புத்தகம் நீச்சல் கலை..அதில் இருக்கும் ஒரு பாய்ண்ட் அவன் வழக்குக்கு ஒன்றிப்போக யோசனையில் பின்னலைப் பிடித்திழுக்க..
அவ்வளவு தான்..சேல்விழிகள் சிங்கமாய்ச் சீறுகின்றன.. ஹேய் மிஸ்டர் என இவன் வழக்கம் போல அசடு லிட்டர்கணக்கில் வழிந்து சாரி சொல்லி வீட்டுக்கு அவன் இதயத்தில் அவளுடைய முக வரியை எடுத்துச் செல்கிறான்..
மறு நாள்..அதே பார்க் அதே அவள்..அதே இவன்.. அவளிடமே காதல் சொல்வது எப்படி எனக் கேட்கிறான்..அவளும் புதியவள்..இளையவள் காதல் பற்றிய சேதிகளுக்கு..எனில் ஏற்கெனவே காதல்வயப்பட்டிருந்த தோழியிடம் கேட்க தோழியின் சைகையைத் தப்புத்தப்பாகப் புரிந்து அவனுக்கு பதில் கூறுகிறாள் காதல் என்றால் தலை பிச்சுக்க வைக்கும் எட்ஸெட்ரா..
அவன் குழம்பிச் செல்ல தோழி வருகிறாள்..
என்னடி இப்படிப் பண்ணிட்ட
நான் எந்து செய்யு..ஆயாள் இவிட வரும்போது என் நாக்குக் குழறுதடி.கண்கள் புறாச்சிறகாய் படபடக்குது.. இதயம் பக்பக்கெனத் துடிக்குதடி..
சரி சரி அவர் வந்தா சொல்லிடு.. நீ பேசின பேச்சில் அவர் போயே போய்விட்டார்..
அது தான் இல்லையே.. என பின்பக்கமிருந்து தொபீரெனக் குதித்து வருகிறான் காளை..கன்னியின் சித்திரப் பூவிழி கறுப்பு வெள்ளையாயினும் சிவந்து தலை நாணத்தால் குனிகிறது..
அதற்கடுத்த காட்சி தான் இந்த சித்திரப் பூவிழிப் பாடல்..
*
இன்னும் இருக்கும் சில பாடல்கள்
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே – வாலியின் இரண்டாவது பாடல் என நினைவு
பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா – இதுவும் வாலி தான் என நினைக்கிறேன்.. பிபிஎஸ்..
உறவு என்றொரு சொல்லிருந்தால் – பிசுசீலா..
*
பட ஆரம்பக் காதல் காட்சிகளில் தேவிகா வெகு அழகாய்த் தெரிவார்..அதுவும் தங்கவேலிடமும் ஜெமினியிடமும் வடக்கத்திய நங்கையாக, பின் ஹோனலூலுவில் இருந்து வந்த மங்கையாக தமிழைப் பொடித்து ப் பொடித்துப் பேசும் அழகே அழகு..
அப்பாவாக நடிக்கும் எம்.ஆர்.ராதாவிடம் பாசத்தைக் கொட்டும் பாங்கு.. ஜெமினியிடம் காத,ல் மோதல் குமுறல் என கொஞ்சம் நன்னாயிட்டே நடித்திருப்பார்..
ஜெமினி அஸ் யூஸ்வல்..இருபத்தைந்துவயது வாலிபன் என்பது டூமச் தான் இருந்தாலும் இளமை துள்ளும் வாலிபன்கேரக்டருக்குப் பொருத்தம் ..
எம் ஆர்.ராதா..குணச்சித்ரம் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்றால் கோபாலகிருஷ்ண முதலியாராய் வரும்கிழவனார் (யார் எனத் தெரியவில்லை) இன்னொரு சர்ப்ரைஸ்.
எம் ஆர் ராதா பழிவாங்கும் நெஞ்சத்துடன் தேவிகாவிடம் பழக, தேவிகா அப்பாவெனப் பாசமழை பொழிய தடுமாறும் இடத்தில் வெகு நன்றாய்ச் செய்திருப்பார்..கடைசியில் இறக்க விட்டிருக்க வேண்டாம்..
நல்லபடம்.. ஒன்றுமே எழுதாமல் ஜஸ்ட் ஜல்லி மட்டும் அடிக்கிறேன் என மனதுக்குள் ஒருகுறு குறுப்பு..எனில் நேற்றிரவு டிவிடி போட்டு முழுப்படமும் பார்த்து எழுதுகிறேன்!!
தங்கவேல் நாகேஷ் சரோஜா நகைச்சுவை அவ்வளவாக சிரிக்க வைக்கவில்லை.ஆனால் தங்கவேல் தேவிகாவிடம் ஆரம்பத்தில் பேசும் வசனம் பக்கெனச் சிரிக்கும் வகை..
படம் முடிந்த பின்னும் மனதில் ஓடிய பாடல் தான் சித்திரப் பூவிழி வாசலிலே.. அந்தப்பாட்டும் படத்தில் பாடியவரையும் மறக்க முடியுமா என்ன..!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th September 2014, 12:00 PM
#3266
Senior Member
Senior Hubber
அதே தான் வாசு சார்..கோபி என்றால் காலிஃப்ளவர் – ஹிந்தியில்.. காலிஃபிளவர் இருப்பதாலேயே கொஞ்சம் வித்யாச சுவை இருக்கும்.. பட்டர் நானிற்குத் தான்பொருந்தும்.. இங்கு சில ஹோட்டல்களில் பரோட்டாவுடன் தருவார்கள்..பொருத்தமாய் இராது
aaloo என்றால் உருளைக்கிழங்கு எனத் தெரியும்தானே
-
27th September 2014, 12:07 PM
#3267
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்,
'சித்திரப் பூவிழி வாசலிலே' பாடல் பிடிக்காதார் யாருமுண்டோ?! அருமை உங்கள் ஆய்வு. பாடலோடு 'இதயத்தில் நீ' படத்தையும் அலசி பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! படம் என்னவோ சுமார்தான். ஆனால் பாடல்கள் அமரத்துவம் பெற்றவை. அருமை! பாராட்டுக்கள். இதோ பாடல்.
இந்தப் பாடலுக்கு 'யூ டியூபி' ல் கவிஞரின் மகள் விஷாலி கண்ணதாசன் பின்னூட்டம் அளித்திருப்பதைப் பாருங்கள்.
Last edited by vasudevan31355; 27th September 2014 at 12:09 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th September 2014, 12:08 PM
#3268
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
aaloo என்றால் உருளைக்கிழங்கு எனத் தெரியும்தானே
நன்றி! இந்த லொள்ளூ இல்லைனா எங்க சி.க.இல்லையே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th September 2014, 12:20 PM
#3269
அனைவருக்கும் அருமை காலை/மதிய வணக்கம்
வாசு சார்
நடிகை நளினா பற்றிய மேல் அதிக தகவல்களுக்கு நன்றி .அதை தொடர்ந்த மது சார்,ராஜேஷ் சார் அவர்களுக்கும் நன்றி
இன்றைய ஸ்பெஷல் 80 களில் வந்த மெல்லிசை மன்னரின் இனிய பாடல் எஸ் எ சந்திரசேகரன் இந்த கால கட்டத்தில் நிறைய படங்கள் கொடுத்தார் வீ வீ creation என்ற banner என்று நினைவு.அவர்களது சொந்த தயாரிப்பு. இசை மெல்லிசை மன்னர் அல்லது ஷங்கர் கணேஷ் இருப்பார்கள். ஆனால் SAC இன் முதல் படமான் அவள் ஒரு பச்சை குழந்தை இசை இளையராஜா. பிறகு நான் சிகப்பு மனிதன் (ரஜினி பாக்யராஜ் ) படத்தில் தான் இளையராஜா சேர்ந்தார் என்று நினைவு .நல்ல பாடல் ஒன்றை நினைவு படுத்தியதற்கு நன்றி
-
27th September 2014, 12:22 PM
#3270
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 8
'நீ நாடாளும் ராணியாய் இருந்தால் எனக்கென்ன?... என்னை சிறையில் போட்டாலென்ன?... உன்னைப் பற்றி புகழ்ந்து நான் கவி புனைய மாட்டேன். வேண்டுமானால் இப்படிப் பாடுகிறேன்'
'ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த
நாகரக ராணி'
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks