Page 357 of 401 FirstFirst ... 257307347355356357358359367 ... LastLast
Results 3,561 to 3,570 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3561
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugal bandhi -2

    Brindhaavanamum Nandhakumaaranum .....from Missiammaa (Tamil) (1955)




    Brindhaavan kaa Krishna Kanhaiyaa........... from Miss Mary (Hindi) (1957)





    This pair we always sing. Some Telugu singers also participate with version from Missamma!

    .................
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3562
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா,



    உங்களின் சுறுசுறுப்பை ரசிக்கும் கணங்களில் ஒரு ஆதங்கம் மேலிடுகிறது.இவ்வளவு ரசனையும்,அறிவும் ,ஓரளவு எழுதும் ஆர்வமும் கொண்ட ஒருவர் ,வெறி பிடித்தது போல ஒரு நாளுக்கு 20 cut paste போட்டு சாதிக்க நினைப்பது எதை? பல நண்பர்கள் சொன்ன கருத்தும் இதே.



    cut paste என்பது நாம் சொல்ல நினைத்ததை இன்னொருவர் சொல்லி விட்டார் என்றால், reinventing the wheel என்பதை விட்டு ,அதை நீங்கள் பிரசுரிக்கலாம்.தவறில்லை.



    ஆனால் எல்லா விஷயங்களிலும் இதை செய்தால்,நாம் எதை குறிப்பிட விரும்புகிறோம் என்பதே குழப்பமாகி விடும். முக்கால் வாசி நபர்கள்,அளவு மீறி தன் மாமன் ,மச்சான்,அப்பா இவர்களை பற்றி தப்பும் தவறுமாக அளவு மீறி புகழ்ந்து வெளியிடும் குப்பைகள் .பேதி போல இணையமெங்கும். வாந்தியோ,பேதியோ எடுப்பதென்றால் சொந்தமாகவாவது பண்ணுவோமே? இன்னொருவன் எங்கேயோ கழிந்து தொலைத்ததை அள்ளி வந்து ,பாவம் ,நம் திரி வாசகர்களுக்கு தர வேண்டுமா?(சமீபத்தில் கண்ணதாசனின் பெண் ,சித்திர பூவிழி வாசலிலே ,கவிஞர் கண்ணதாசன் பாட்டு என்று குறித்திருந்தார்.)



    சொந்தமாக எழுதுவது என்றால் 100% உங்கள் கருத்து,உங்கள் விஷயங்களாக இருக்க வேண்டியது இல்லை.உங்களுக்கு உடன்பாடுள்ள ஒத்த கருத்துக்கள்,புதிய செய்திகள், இவற்றை உங்கள் சொந்த பதிவில் வேண்டிய அளவு உபயோகித்து பகிரலாமே?உங்களுக்கு நான் உட்பட 5 நண்பர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதையே நேரடியாகவோ,பூடகமாகவோ தெரிவித்தும் உணர மறுத்ததும் இன்றி,திரியை நிம்மதியாக படிக்க விடாத அளவுக்கு சனி,ஞாயிறுகளில் வெறி தாண்டவம் ஆடியுள்ளீர்கள்.சம்பந்தமே இல்லாமல் நரிக்குறவன் வாந்தி போல .



    அத்தோடு நில்லாமல் பாட்டை திரும்ப எழுதுவது, இன்னும் விபரீதம் ஆஆ ஆஆஆ ஆஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஅ என்று ஒரு பக்கம். (ஹம்மிங் என்றோ,ஆலாபனை என்றோ,பிர்கா என்றோ குறித்து விடலாமே?



    உங்கள் மேல் மதிப்பு கொண்டவன் (பொய் இல்லை)என்ற வகையில், உங்களை வேண்டி விரும்பி கேட்பது ,200 பதிவுகளும் cut paste ஆக போடுவதை விட ,ஒரு சொந்த பதிவு ,வாரம் ஒன்றானாலும் நீங்கள் உங்கள் அறிவை பிரயோகித்து,மற்ற தகவல்களை உபயோகித்து போட்டால், நான்தான் உங்கள் முதல் ரசிகன்.
    Last edited by Gopal.s; 30th September 2014 at 09:29 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3563
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் கிருஷ்ணா ஆரம்பித்த திரி முடியும் தருவாயை எட்டியுள்ளது. முதல் திரிக்கு பலமாய் இருந்தவர்,தான் ஆரம்பித்த திரிக்கு ,மிக பலவீனமாக cut paste பண்ணி ,வரும் நபர்களுக்கு நேரமின்மை,ஆர்வமின்மை வர செய்து விட்டார். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அளவுக்கு மீறி நஞ்சையே கொடுத்தால்?



    சிந்திப்பவர்களுக்கு மதிப்பளிக்காத எதுவும் உன்னதம் எய்தாது.



    இந்த திரியில் நான்,கார்த்திக்(ரசிக மணி),வாசு(என்ன உழைப்பு) ,புதுமை சித்தர் சின்னகண்ணன்(இவர் கொஞ்சம் எல்லாவற்றையும் படித்தால் நலம்.கேட்டதையே கேட்பார்),magic மதுஜி ,இசையரசி தாஸ் ராஜேஷ்,ராகவேந்தர்(ஆஹா),எஸ்வி (ஆவணங்கள்),வெங்கி(அற்புதமான பதிவர்)முடிந்த அளவு செய்ததை, யாரும் கவனிக்க விடாமல் distract செய்தது cut paste கிருஷ்ணாதான்.இதை அவர் தவிர்த்து நேரத்தையும்,ஆர்வத்தையும் சொந்த பதிவுகளில் செலவிட வேண்டும்.இது என் வேண்டுகோள்.



    அடுத்த திரியை தொடங்க திரு ராஜேஷ் அவர்களை வேண்டுகிறேன். இத்திரிக்கு தினமும் வருகை தந்து பன்மொழி களம் அமைத்தவர். என் இசை தெய்வம் சுசீலா தாசர். திரிக்கு இளமை முலாம் பூசியவர். அவரை முன் மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3564
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (82)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் சிட்டாடலின் 'காதல் படுத்தும் பாடு' திரைப்படத்திலிருந்து ஓர் அருமையான டூயட் பாடல். அதிகம் விளம்பரம் இல்லாத பாடல்.



    படம்: 'காதல் படுத்தும் பாடு'

    நடிகர்கள்: ஜெயசங்கர், வாணிஸ்ரீ, தங்கவேலு, ஆதித்யன்,சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெயந்தி, பண்டரிபாய், முத்துலஷ்மி

    ஒளிப்பதிவு பி.பி.லூகஸ்

    இசை: டி.ஆர்.பாப்பா

    பாடல்கள்: மாயவநாதன், ஆத்மநாபன், ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம்

    கதை கலைஞானம்

    வசனம்: பனசை மணியன் கலைஞானம்

    தயாரிப்பு: டொமினிக் ஜோசப்

    டைரக்ஷன் : ஜோசப் தளியத் Jr.


    ஜெயசங்கரை அறிமுகப்படுத்திய (இரவும் பகலும்) ஜோசப் தளியத் படம் இது.

    படத்தின் ஆரம்பத்தில் நம்ம மணிரத்னத்தைத் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு அற்புதமான டான்ஸ். இருட்டில் படமாக்கியிருப்பார்கள். பின்னணி இசையை அற்புதமாக அளித்திருப்பார் டி.ஆர்.பாப்பா.



    'என்னடா பாட்டெல்லாம் ரொம்ப சூப்பாரா இருக்கே' ன்னு பாத்தா நம்ம 'பாப்பா மியூசிக்'. இனிமையான இனிமை. ஜெயந்தி பாடும் 'மேலாடை காற்றாட' பாடல் ஒன்று போதும் இந்த படத்திற்கு. அதுவல்லாமல் 'வெள்ளிநிலா வானத்திலே வந்து போகுதடா' என்ற இசைக்குயிலின் அற்புதமான பாடலும் உண்டு இந்த சுமார் ரகப் படத்திற்கு. பாடல் எழுதியவர்கள் எல்லாம் நம் கோபால் சாருக்குப் பிடித்த ஜாம்பவான்கள்.

    வழக்கமான ஜெய், வாணிஸ்ரீ நடிப்பு. வழக்கமான வெளிப்புற பூங்காக்களில் படப்பிடிப்பு. பாடகர் திலகமும் சுசீலாவும் அலட்டிக் கொள்ளாமல் அசர வைப்பார்கள் நம்மை. அழகான தமிழ் வரிகள்.

    நாயகியின் வயதை 'ஈரொம்போது பதினெட்டு' என்பான் நாயகன் நம் பேச்சு வழக்கு கணக்கு வாய்பாடு மாதிரி. (2 x 9=18) நாயகியின் வயசை இப்படி நாயகன் உரைக்கிறான். அவளும் இவருக்கு வயது மூவெட்டு என்பாள். (3 x 8=24) நல்ல கற்பனை.

    'உன்னிடம் மார்பில் இடம் உண்டா
    இந்தக் கன்னியைத் தாங்க மனமுண்டா'

    வரிகள் தூள்.




    இனி பாடலின் வரிகள்.

    இவளொரு அழகிய பூஞ்சிட்டு
    வயசு ஈரொம்போது பதினெட்டு
    உடலது பனி விழும் மலர் மொட்டு
    பேசும் ஒவ்வொரு சொல்லும்
    தேன் சொட்டு

    இவளொரு அழகிய பூஞ்சிட்டு
    வயசு ஈரொம்போது பதினெட்டு

    இவருக்கு வயசு மூவெட்டு
    பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
    விழியது கூரிய வாள்வெட்டு
    நான் விளையாடும் மார்பு பூந்தட்டு

    இவருக்கு வயசு மூவெட்டு
    பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு

    சித்திரப் பூவடி சாமந்தி
    இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
    சித்திரப் பூவடி சாமந்தி
    இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
    நெற்றியிலே துண்டு நிலவேந்தி
    இங்கு நெருங்குதமா அல்லி பூச்செண்டு

    தாமரைப் பூமுகம் சிவப்பேற
    இங்கு தள்ளாடும் கால்
    கொஞ்சம் இளைப்பாற
    தாமரைப் பூமுகம் சிவப்பேற
    இங்கு தள்ளாடும் கால்
    கொஞ்சம் இளைப்பாற
    உன்னிடம் மார்பில் இடம் உண்டா
    இந்தக் கன்னியைத் தாங்க மனமுண்டா
    கன்னியைத் தாங்க மனமுண்டா

    இவளொரு அழகிய பூஞ்சிட்டு
    வயசு ஈரம்போது பதினெட்டு
    இவருக்கு வயசு மூவெட்டு
    பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு

    முத்தமிழ்க் கவிதை பின்னட்டும்

    இங்கு மூவகை கனியும் சிந்தட்டும்

    முத்தமிழ்க் கவிதை பின்னட்டும்

    இங்கு மூவகை கனியும் சிந்தட்டும்

    இளமையும் இனிமையும் இணைக்கட்டும்
    இந்த இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்
    இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்

    (இருவரும் ஹம்மிங்)


    Last edited by vasudevan31355; 30th September 2014 at 11:12 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai, madhu liked this post
  7. #3565
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாரே வா வாசு ஜி..

    தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்..

    அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )

    "காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல் தர்மம் கலங்குதம்மா" பாட்டு ரொம்பவும் பிடிக்கும்.

  8. #3566
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி! வாங்கோ வாங்கோ. உங்களைத்தான் எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டிருந்த உங்களுக்கு விருப்பமான 'நானும் ஒரு பெண்' படத்தின் இடம்பெறாத சுசீலா பாடலான

    'கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
    உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்'

    பாடலை அளித்திருந்தேன். கேட்டு ரசித்தீர்களா?
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3567
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாரே வா வாசு ஜி..

    தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்..

    அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )

    "காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல் தர்மம் கலங்குதம்மா" பாட்டு ரொம்பவும் பிடிக்கும்.
    நல்லவேளை, இப்போது 6 வயது வித்யாசமென்றால் ,பெண்களும் பெற்றோர்களும் reject செய்து விடுகின்றனர். இப்போது +/- 2 தான் Target .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #3568
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாரே வா வாசு ஜி..

    தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்..

    அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )
    ஆமாம் மதுஜி. அது 'துண்டு' தான். 'என்னடா உதைக்கிறதே? என்று பார்த்தேன். அழகாக சொல்லி நிம்மதிப் படுத்தி விட்டீர்கள். திருத்தியும் விடுகிறேன்.
    Last edited by vasudevan31355; 30th September 2014 at 01:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3569
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன கிருஷ்ணா,



    ஆளையே காணோம்? கார்டு பஞ்ச் பண்ணி விட்டு வந்து விடுவீர்களே?



    என்னை திட்ட யாரையாவது PM அனுப்ப சொல்லி ,cut paste பண்ணி போட waiting ஆ???
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3570
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கண்ணழகுக்கு நன்றி வாசுஜி.. ஏற்கனவே பதிந்த பதிவுகள் சில சரியாக பதியப்படாமல் போய்விட்டன. ( நன்றி : சென்னை சிடியின் எலெக்டிரிசிடி )

    வி. குமாரின் இசையில் பியானோ எப்போதும் தேனைப் பொழியும் என்பது தெரிந்ததே.. அந்தத் தேனில் கரும்புச் சாறைக் கலப்பது போல ஜேசுதாஸின் குரல் இணைய அது போதாதென்று அமுதத்தைக் கலக்க எண்ணி சுசீலாவின் குரலையும் ஒன்றாக்கி இந்தப் பாடலை உருவாக்கினார்களோ ? கொஞ்சம் "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலில் சாயல் நல்லாவே இருந்தாலும் இனிமைக்கு குறைவில்லை.

    படம் : மங்கல நாயகி
    ஜேசுதாஸ், சுசீலா
    சரத்பாபு, கே.ஆர். விஜயா
    கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •