Page 358 of 401 FirstFirst ... 258308348356357358359360368 ... LastLast
Results 3,571 to 3,580 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3571
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சூப்பர் மதுஜி! 'கண்களால் நான் வரைந்தேன்' காதுகளால் கேட்டு ரசித்தேன் பலமுறை. அருமையான பாடல்.

    இதே போல 'கண்ணாமூச்சி' படத்தில் இதே குமாரின் பியானோ இசையில்
    ஒலிக்கும் இன்னொரு பாடல்

    'பொன்னை நான் பார்த்ததில்லை
    பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
    பூவை நான் கண்டதில்லை
    பூவையைக் கண்டதுண்டு'

    வரிகள் சரியா? ரொம்ப நாள் ஆச்சு. குமாரின் பியானோ என்று நீங்கள் பதிந்ததால் இப்போது ஞாபகம் வந்தது.

    மதுஜி! வீடியோவில சத்தமே வரலியே! வீடியோவின் ஆடியோ பிராபளமா?

    Last edited by vasudevan31355; 30th September 2014 at 07:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3572
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி,

    நீங்கள் கேட்டிருந்த இன்னொரு பாடல். ஏ.எம்.ராஜா, ஆண்டாள் பாடிய பாடல் "வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி மகிழ்வோம்". இது 'கள்வனின் காதலி' என்ற நாடகத்தின் பாடலாமே! அப்படியா மதுஜி!?

    http://www.mediafire.com/download/r7...in+Kathali.mp3
    Last edited by vasudevan31355; 30th September 2014 at 01:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks madhu thanked for this post
  5. #3573
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இப்போது பக்கத்தை வேகமாய் ஓட்டுவது என்ற ஒரு வியாதி எல்லா திரிகளையும் தொற்றியுள்ளது. குறைந்த காலத்தில் நிறைய பதிவுகள். இது ஆரோக்யமானதல்ல.

    கஷ்டப்பட்டு போட படும் அசல் பதிவுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் ஹிந்தி வீடியோ போட்டு மூடுகிறார் சித்தூர் வாசுதேவன். இன்னொரு வகையில் மூடுகிறார் கிருஷ்ணா.

    நான் எல்லோருடனும் உரையாடும் போது ,எல்லோரும் வருந்துவது ,எங்கே சார் படிக்க முடியுது ,எங்கே இருக்குன்னே கண்டு பிடிக்க முடியறதில்லே,என்று. இப்படி பண்ணினால் உழைத்து ஆராய்ந்து பதிவுகள் போடும் எனக்கு,வாசுவிற்கு,கார்த்திக்கிற்கு என்ன interest வரும்? எங்கள் பதிவுகளை பார்த்த பிறகு சிறிதாவது தாமதித்து நேரம் கொடுக்க வேண்டாமா?நாங்கள் எப்போதாவதுதானே போடுகிறோம்?ஏன் இப்படி செய்கிறார்கள்? அவ்வளவு முன்னுரை கொடுத்து செய்த பிறகும் சித்தூர் வாசுதேவனும்,கிருஷ்ணாவும் படுத்தி எடுத்தால்,எங்கேயிருந்து ஒரிஜினல் பதிவுகள் வரும்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #3574
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுஜி! வீடியோவில சத்தமே வரலியே! வீடியோவின் ஆடியோ பிராபளமா?
    தெரியவில்லையே வாசுஜி ! இப்போது கூட கிளிக் செய்து பாட்டு கேட்டேனே.. எனக்குக் கேட்கிறதே ? volume போதவில்லையோ ?

    கோபால் ஜி.. உங்க inbox நிரம்பி விட்டதாம். கவனிங்க ப்ளீஸ்.

  7. #3575
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுஜி,

    நீங்கள் கேட்டிருந்த இன்னொரு பாடல். ஏ.எம்.ராஜா, ஆண்டாள் பாடிய பாடல் "வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி மகிழ்வோம்". இது 'கள்வனின் காதலி' என்ற நாடகத்தின் பாடலாமே! அப்படியா மதுஜி!?
    எனக்கு இந்தப் பாடலைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. முன் காலத்தில் வாரத்தில் குறைந்தது மூன்று, நான்கு முறை இந்தப் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்டதுண்டு. ஆனால் படத்தின் பெயரை அவர்கள் சொன்னதே இல்லை. அதனால்தான் குழப்பம். இதே பாடல்தான். ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும். ( வருஷம் போயாச்சு.. பாட்டுக்கும் வயசாச்சு.. அதான் ஸ்லோவா ஆயிடிச்சு போல இருக்கு என்று சிக்கா வந்து சொல்ல சான்ஸ் இருக்கு )

    இனிமேல் கேட்கவே வாய்ப்பு இல்லை என்று நினைத்த பாடலை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த வாசு-ஜிக்கு ஒரு பெர்ர்ரிய "ஓ" !!!

  8. #3576
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்

    'மணமாலை' (1958) என்ற படம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    அதில் மிக இளமையான குரல்களில், பாடகர் திலகமும், இசை சாம்ராஜ்ய ராணியும் பாடும் கேஷுவலான பாடல்.

    'நடக்காது ஜம்பம் பலிக்காது
    என்னை ஏமாற்றி ஓடவே முடியாது'

    'நடக்காது ஜம்பம் பலிக்காது
    என்னைத் தொடவே உம்மாலே முடியாது'

    'எட்டப் பழத்துக்கே வீணா
    வந்து கொட்டாவி போடவே வேணாம்'

    ஆஹா! என்ன ஒரு குரல் ஜாலம்! நடக்காது என்று இருவரும் எவ்வளவு ஆணித்தரமகப் பாடுகிறார்கள்!

    வேதா இந்தியில் இருந்து திருடிய இசையாய் இருந்தாலும் பாடகர்களால் மிகச் சிறப்பு பெறுகிறது இப்பாடல்.

    (ஆமாம்! பாடலைத் தரவேற்றிய மணிவண்ணன் பாடலின் வீடியோ கிடைக்காமல் நடிகர் திலகம், பத்மினி நடித்த 'பணம்' படத்தின் ஸ்டில்லை வீடியோவாக தந்துள்ளாரே! ஜெமினி, சாவித்திரி நடித்த படமல்லவா இது?! ஜெமினி, சாவித்திரி ஸ்டில்லுக்கு அவ்வளவு பஞ்சமா என்ன )



    1957-இல் வெளிவந்த 'Naya Daur' (1957) இந்திப் படத்தில் 'Ude Jab Jab Zulfe' என்ற புகழ் பெற்ற பாடலைத்தான் மேலே கொடுத்துள்ள பாடலை வேதா சற்று மாற்றித் தந்துள்ளார். ஆஷாவும், ராபியும் இந்த அற்புத பாடலுக்கு இசை அமைத்தவர். ஓ.பி, நய்யர். திலீப் குமாரும், வைஜந்தியும் அமர்க்களமான டான்ஸ். (திலீப் 'கங்கா ஜமுனா'வை ஞாபகப்படுத்துகிறார்).

    Last edited by vasudevan31355; 30th September 2014 at 08:48 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #3577
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    உடே ஜப் ஜப் பாடலின் தமிழ் வடிவம்

    http://www.4shared.com/mp3/G875rLKh/...html?locale=en

  11. #3578
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    உடே ஜப் ஜப் பாடலின் தமிழ் வடிவம்
    தமிழ் காணொளி இங்கே


  12. #3579
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் .அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .

  13. Likes Russellmai liked this post
  14. #3580
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    தமிழ் காணொளி இங்கே

    madhunna arumai.. i was searching but couldnt find... neenga thaan boodha kannadi pottundu paapeengale kidaikkama poguma

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •