Page 392 of 401 FirstFirst ... 292342382390391392393394 ... LastLast
Results 3,911 to 3,920 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3911
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி. பி.எம்.பாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3912
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வணக்கம் ராஜேஷ்ஜி. பி.எம்.பாருங்கள்.
    பதில் அனுப்பியுள்ளேன்

  4. #3913
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்

    ராஜேஷ் சார்!

    நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் வரும் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' பாடல் என் உயிரோடு கலந்த பாடலாகும். கொம்பேறி ஒரு கிளையில் நிலாமல் மரத்துதுக்கு மரம் தாவும் குரங்கின் மனநிலை தானே மனிதனுக்கும். சில குரங்குகள் ரொம்ப விஷமத்தனம் செய்யும். அதனால்தான்


    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை இது

    உருவ அமைப்பைக் காணும் போது
    ஓரறிவு ஈரறிவுயிரென மாறி மாறி மாறிடாத குரங்கு

    என்று பாடலோ!

    அற்புதம்ஜி. குரங்குகளைப் பற்றி பாடி ஆடும்போது அதுவும் ராகினி, பத்மினி, சட்டாம்பிள்ளை மூவருக்கும் சர்வ சாதரணமாக ஈடு கொடுத்து நடிகர் திலகம் அலட்சியமாக கேலி பரத நடனம் ஆடும் அழகே அழகு. (இது போல எத்தனை குரங்குகளைப் பார்த்தவர் அவர்!)

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai thanked for this post
  6. #3914
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். சிவாஜி செய்யும் சேஷ்டைகள் அமர்க்களம்
    லீலா, கோமளா மற்றும் டி.எம்.எஸ் ஜொலிக்கும் பாடல்

  7. #3915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    பதில் அனுப்பியுள்ளேன்
    பார்த்து விட்டேன் ராஜேஷ்ஜி! மிக்க நன்றி!

    ஒரு நல்ல அமைதியான நம் இசையரசியின் பாடல் ஒன்றை போடுங்கள் ஜி. நெடுநாள் பாரம் இறக்கி வைத்தது போன்று இருக்கிறது. அமைதியாக அந்த இசைக்குயிலின் பாடலை ரசித்துக் கொண்டே உறங்கச் செல்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3916
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுஜி!

    நீங்கள் கேட்ட 'குங்குமம் பிறந்தது மரத்திலா' ஹீரோயின் யாரென்று நாளை சொல்ல முயற்சிக்கிறேன். நேற்று வெளியூர் சென்று விட்டதால் உடன் பதில் தர முடியவில்லை.

    தவிர ரொம்ப தேங்க்ஸ் மதுஜி! அற்புத கிடைத்தற்கரிய பாடல்களை கொடுத்து இன்ப களிப்படையச் செய்து விட்டர்கள். நிஜமாகவே சூப்பர். என் செல்லில் நீங்கள் தந்த பாடல்கள் நிரம்பி என்னுடைய தோழர்களையும் சந்தோஷப்படுத்தி வருகின்றன.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks madhu thanked for this post
  10. #3917
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி! சின்னக் கண்ணன்ஜி

    பதிவுகள் அருமை. நாளை விளக்கமாக எழுதுகிறேன். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3918
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி
    நீங்கள் உறங்க இதோ இசையரசியின் குரல்


  12. Likes raagadevan liked this post
  13. #3919
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.

    இப்போது மதுர கானங்கள் திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

    அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்

    நெய்வேலி வாசுதேவன்.
    மையத்தில் நாம் பதியும் ஒவ்வொரு பதிவும் நினைவில் இருப்பதில்லை. சிகப்பு நிறத்தில் தடித்த எழுத்துக்களால் ஒருவர் பெரியதொரு குற்றச்சாட்டாக வைக்கும் அளவுக்கா நம் பதிவு கடந்த காலத்தில் அமைந்துவிட்டது என கொஞ்ச நேரம் சிவாஜி திரிகளில் நேரம் செழவழித்து அப்படிப் பட்ட ஒரு பதிவு ஒருவேளை இதுவாக இருக்க கூடும் என நினைத்து இங்கே எல்லோர் பார்வைக்கும் அதை மீண்டும் வைக்கிறேன்.

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1092251

    அப்போதுள்ள சூழ்நிலையில் அங்கே பதிவுகள் யார் யாரால் எப்படியெல்லாம் பதிவு செய்யப்பட்டன என்பதை என்னால் உறுதிபட சொல்லமுடியல இப்போது. ஏனெனில் சில பதிவுகள் அழிக்கப் பட்டுள்ளன என்பதையும் சிலரது பதிவுகள் சொல்கின்றது. சரி..விஷயத்திற்கு வருவோம்.. சக ஹப்பர் ஹானஸ்ட் ராஜ் சிவாஜி திரியில் தனது அறிமுகப் பதிவாக (அப்படித்தான் நினைக்கிறென்.. ஆனால் மௌனமாக வாசித்துக் கொண்டிருந்ததின் அடிப்படையில்) சிவாஜி திரி போகும் போக்காக அவர் நினைப்பதை பதிவிடுகிறார். அதற்கு நான் வழிமொழிகிறேன். அதே வேளையில் திரு சின்னக் கண்ணன் அவர்கள் மீதான கருத்துத் தாக்குதலை கண்டிக்கிறேன். யாரையும் குறிப்பிட்டு நான் சுட்டிக் காட்டவும் இல்லை. ஹானஸ்ட் ராஜைப் போலவே நானும் எனது பார்வையை வைக்கிறேன். அவ்வளவுதான். இது எப்படி வாசுதேவன் அய்யாவை பாதித்தது எனத் தெரியல. விந்தையாக இருக்கு. வாசுதேவன் அய்யா அங்கே எழுதுவதை நிறுத்த நான் காரணம் என்பதையே திரு ஆர்.கே.எஸ்ஸும் சொல்லியிருக்கிறார் இப்போது. சிவாஜி பற்றிய பல்லாயிரக் கணக்கான பதிவுக் குவியல்களில் மிஞ்சிப் போனால் என் சார்பில் பத்து பதினைந்து பதிவுகளே அடங்கும். அப்படியிருக்க என் பதிவிற்காகவா அப்போது நான்காயிரம் பதிவினை கடந்த ஒரு சீனியர் எங்கே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்? அதுவும் யார் யார் என சுட்டிக்காட்டாதத ஒரு பொத்தம் பொதுவான அபிப்ராயத்தின் அடிப்படையில் அமைந்த எனது பதிவில். அதுவும் சக பதிவர் ஹானஸ்ட் ராஜ் சொல்வதை வழிமொழியும் பதிவே என்னுடையது. விந்தையாக இருக்கு. எனிவே.. சிகப்பு எழுத்தில் தடித்த எழுத்துக்களில் குற்றம் சாட்டப்பட வேண்டிய அளவில் எனது அந்த பதிவு பொறுப்பாகாது என்பதே எனது பார்வை. என்னடா! கடைசிப் பதிவு எனச் சொல்லிவிட்டு இன்னொன்று பதிகிறானே என நீங்கள் நினைக்கக் கூடும். இது ஒரு தன்னிலை விளக்கம். அவ்வளவுதான்.
    Last edited by venkkiram; 7th October 2014 at 11:27 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  14. #3920
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெங்கிராம் அய்யா!

    ஒரு குடம் பாலுக்கு ஒரு விஷத்துளி போதும். ஒரே சூட்டுக் கோலால் ஒருவினாடி கால் தொடையில் இழுத்தால் அது மாறாத வடுவாகும். ரணமாகும். அதுதான் உங்களுடைய விவகாரம் உள்ளடக்கிய விஷ வார்த்தை பதிவுகள். அது வெளியே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்களே உணர்ந்து உயிர் வலியை உணரமுடியும். இதை சாமர்த்தியம் என்று நான் நினைக்கவில்லை. 'வைத்தி'தனம் என்றுதான் இதற்கு பெயர்.

    கபட நாடகம் ஏன் ஆடுகிறீர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவி போல. இதற்கெல்லாம் ஏமாந்த காலம் மலையேறி விட்டது. நான் இதுவரை பொறுமை காத்து வந்தது தவறோ என்று நினைக்கிறேன். நான் மனம் நொந்து வருத்தப்பட்டதால் உங்களுடைய அந்த மறைமிக hurt பதிவு மாடரேட்டர்களால் நீக்கப்பட்டுள்ளது. அதைக் கூட சமீபத்தில்தான் நான் பார்த்து தெரிந்து கொண்டேன். எந்த உழைப்பை நீங்கள் மதித்தீர்கள்? உங்களுக்கு மிதித்துதானே பழக்கம்? அடுத்தவரை நோக வைப்பதில்தானே உங்களுக்கு ஆனந்தம்? ஆயிரமாயிரம் பதிவுகளை யார் அம்சமாக அள்ளித்தந்து கலந்து கொண்டாலும் அங்கு வரமாட்டீர்கள். 'வாழ்த்துக்கல்' என்று யாரோ வாழ்த்து அட்டையில் தெரியாமல் போட்டால் 'என்னய்யாஇது' குற்றம் கண்டுபிடிக்க நக்கலடித்தபடி பறந்தோடி வருவீர்கள். உங்கள் நியாங்கள் தர்மங்கள் வாழ்க. உங்கள் மீது திடீரென என்றெல்லாம் நான் குற்றம் சுமத்தவில்லை. அது முன்னமேயே சக பதிவாளர்களுக்கும் தெரியும். ஆனால் நாகரிகம் கருதி என்னைப் போலவே அவர்களும் மௌனம் காத்தார்கள். உங்களுக்கு வர இருந்த கண்டனப் பதிவுகளையும் என் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் நிறுத்தியும் வைத்தார்கள். இறுதில் என்னையே கண்டனப் பதிவு போடும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள் திருமத் திரும்ப உங்கள் மனம் புண்படுத்தும் பதிவுகளை நீங்கள் தொடர்ந்ததால்.

    சரி வேண்டாம் என்று விலகி வந்தும் இங்கும் வந்து உங்கள் குசும்பு வேலையை நீங்கள் தொடர்ந்ததால்தான் இனியும் சும்மா இருந்தால் ஏப்பம் விட்டு விடுவீர்கள் என்றுதான் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது என் தவறல்ல. இதிலும் கண்டுகொள்ளாமல் ஊமையாகி விடுவார்கள் என்று நீங்கள் தப்புக் கணக்கு போட்டிருந்தால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை.

    ஏமாளி எப்போதும் ஏமாளியாகவே இருப்பான் என்று நினைத்தால் அவன்தான் முழு கோமாளி.

    உங்கள் அப்பாவி நடிப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடலாம். இனியாவது அடுத்தவரை நீங்கள் நோக வைக்காமல் இருக்க நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அது ஒன்றுதான் சிறந்த வழி
    Last edited by vasudevan31355; 8th October 2014 at 07:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •