Page 82 of 400 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #811
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Quote Originally Posted by esvee View Post
    'எங்கள் தங்கம்' படத்தில் 'கதாகாலட்சேப' பாடல் காட்சி ஒன்று உண்டு. கவிஞர் வாலி எழுதிய அந்தப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உச்சிக்குடுமியுள்ள பாகவதர்போல், "நம்ம பகுத்தறிவு பதையே"... என்று பாடித் தொடங்குவார்.

    'சந்திர மண்டல விஜயம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கதாகாலட்சேபம் முழுவதும், நிலவில் மனிதன் கால் வைத்த நிகழ்வு பற்றியே அமைந்ததாகும்.

    டி. எம்.எஸ்., எம்.ஜி.ஆருக்காக பாடிய அந்த பாடலில் நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் பற்றி, "ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா... வா... உனது காலை எடுத்து வைத்து வா வா..." என்ற வரிகள் சாரதா படத்தில் வரும் "மணமகளே மணமகளே வா வா..." என்ற பாடல் டியூனில் வருவது போல், வேறு சில தமிழ்ப்பட பாடல்களும் கதம்பமாக இடம் பெற்றிருக்கும்.

    அப்படி சிவாஜி நடித்த 'இருமலர்கள்' படத்தில் வரும் "மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்" என்ற வரிகளை எம்.ஜி.ஆர்., "மன்னிக்க வேண்டுகிறேன் செய்த தவறுக்கு வருந்துகிறேன்" என்று அதே டியூனில் பாடுவது போல் வரும்.

    படத்தின் இசைத்தட்டில் "போகாதே... போகாதே... என் கணவா... பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்ற 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' பாடல் வரிகளை எம்.ஜி.ஆர்., "போகாதே போகாதே நரசிம்மா- பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்று பாடுவது போல் இடம் பெற்றது. ஆனால் படத்தில் பெறவில்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #812
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    thanks sailesh sir

  4. #813
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    not an idea we will submit the evidence

    Quote Originally Posted by RavikiranSurya View Post

  5. #814
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    போன நூற்றாண்டின் எவர்க்ரீன் டூயட் பாடல்

  6. #815
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மணி ஸ்ரீகாந்தன்

    "எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"

    தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா

    தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

    அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
    முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

    ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

    வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    "தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

    திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

    இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

    அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

    அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

    ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

    எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

    விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

    சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

    சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

    எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

    எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

  7. #816
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடல் கடந்தாலும் நீங்கள் தான் மக்களின் நிரந்தர கதா நாயகன்

  9. #818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #819
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரியில் தனக்குத் தானே மானியம் விட்டுக் கொள்ளும் அறிவாளி (உபயம் :திரு.ஆர்.கே.எஸ்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

    நடிகர் ஆனந்தன் கூட 3 திரைப்படங்களில் காதல் காட்சிகள், நடனம், சண்டை என்று அசத்தியுள்ளதால் அவர் முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள்? முதல்வராவதற்கு இவையெல்லாம்தான் தகுதிகள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருப்பது வேடிக்கை. அவை மட்டுமே தகுதி என்றிருந்தால் நடிகர் ஆனந்தனையும் மக்கள் முதல்வராக்கியிருப்பார்களே? இதை நினைவுபடுத்த வேண்டி இருப்பதற்காக வருந்துகிறேன். ஆனந்தனை விட திறமையாளரான திரு.சிவாஜி கணேசன் அவர்களை (இப்போது திருப்தியா?) எம்.எல்.ஏ.வாக கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே?

    இருந்தாலும் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்பதுதானே ஜனநாயகம்? அந்த வகையில் ஆனந்தன் என்ன? அவரைப் போல ஆடல், பாடல், சண்டை போன்ற திறமைகள் இல்லாத நீங்களே கூட (மன்னிக்க வேண்டும். உங்களுக்கு ஒருவேளை அந்த திறமைகள் இருக்கலாம். எனக்கு தெரியாததால் கூறுகிறேன். இருந்தால் தெரியப்படுத்துங்கள். மகிழ்கிறோம்) முதல்வராகலாம். ஆனால், உங்களையெல்லாம் விட்டு விட்டு புரட்சித் தலைவரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்களே ஏன்? வெறும் நடிகர், பன்முகத் திறமையாளர் என்ற வட்டங்களையெல்லாம் தாண்டி, ஏழைகளின் துயர் துடைக்க நீ்ண்ட அவர் கரங்களை பலப்படுத்த மக்கள் முடிவு செய்ததுதான் காரணம்.

    ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை சிறப்பாக செய்பவன் சிறந்த நடிகன். இல்லாவிட்டால் சிறந்த நடிகன் இல்லை. இதுதான் பொதுவான அளவுகோல். இதில் ஒரு சில பாத்திரங்களோடு அந்த நடிகர்களின் திறமைகள் சுருங்கிவிடும் என்றெல்லாம் கூறுவதில் அர்த்தமில்லை. தருமி, வைத்தியாக வாழ்ந்த நாகேஷ், தவில் வித்வானாக விளங்கிய முத்துராக்கு, தொழுநோய் பாதித்து துயருற்றவரை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய எம்.ஆர்.ராதா (நவராத்திரி படத்தில் தொழுநோயாளி வேடத்துக்கு அண்ணன் ராதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று சிவாஜி கணேசன் அவர்களே கூறியிருக்கிறார்) ஆகியோர் செய்த பாத்திரங்களை வேறு யாராவது செய்ய முடியுமா? காதலிக்க நேரமில்லையில் பாலையா, நாகேஷ் போன்று யாரும் நடிக்க முடியாது என்று ரவிச்சந்திரன் திரியில் ஒருவர் எழுதினால் அதை நீங்கள் மீள்பதிவு செய்கிறீர்கள். அதையே நான் கூறினால் கோபப்படுகிறீர்கள். திரிக்கு ஒரு கொள்கையா?

    நீங்கள் கூறுவதுபோல எங்களிடமும் ஏகப்பட்ட சர்ச்சைப் பதிவுகள், ஆதாரங்கள் உண்டு. கலைத்துறை, அரசியல் ஆகிய இரண்டிலும். அவற்றை இங்கே விளக்கினால் சிலரது மனம் புண்படும். மேலும், உங்கள் மீது உள்ள கோபத்தில் மறைந்து விட்ட ஒரு கலைஞனை கறைப்படுத்த வேண்டுமா? என்று யோசிக்கிறோம்.

    சில நேரங்களில் என் எழுத்தில் ஒரு பளிச் தெரிவதாக கூறுகிறீர்கள். வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் நான் பதிவிட்டதை படித்தபோது உங்களுக்கு அது பளிச் என்று தெரிந்திருக்கலாம். மற்றபடி எங்கள் சகோதரர்கள் யாரும் எழுத்தில் இளைத்தவர்கள் அல்ல. உங்கள் திரியில் சாரதா, கார்த்திக், கல்நாயக் என்று பல பெயர்களில் வருபர்கள் ஒருவரா? பலரா? என்ற சந்தேகம் நண்பர் ஆர்.கே.எஸ்.சுக்கு உண்டு. அதை அவர் கேட்டும் இருக்கிறார். சமீபத்தில் கூட கொல்கத்தாவில் வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமதாஸ் என்ற பெயரில் ஒருவர் வந்தாரே; அதுபோல, ஒரே ஐடியில் பலர் வரும் வழக்கம் எங்களுக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக உணர்வுபூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் திரியில் எல்லாரிடம் நான் இருப்பேன். என்னிடம் எல்லாரும் இருப்பார்கள். காரணம், எங்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

    களமாடப் புகும் முன் மாற்றான் வலிமையையும் திறமையும் அறிந்து கொள்வது தலைவரின் பாணி. அதைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். அந்த வகையில் உங்கள் திரியை ஊன்றி படித்தபோது உங்கள் எழுத்துக்களையும் கவனிக்க நேர்ந்தது. அப்படி படிக்க நேர்ந்த போது திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் பேசும் ‘ரெண்டு இட்லி ஒரு வடை’ வசனத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘நிலவிலும் களங்கம் உண்டு என்பதைப் போல அவர் இப்படி பேசிவிட்டாரே என்று நினைத்து மருகுகிறோம்’ என்று கூறிய திரு. சிவாஜி செந்தில் அவர்கள் போன்ற பண்பாளர்கள், கண்ணியவான்கள் தென்பட்டார்கள். நீங்களும் சில சமயங்களில் நன்றாகவே எழுதுகிறீர்கள். நாடோடி மன்னன் படத்தைப் பற்றிய உங்கள் சுருக்கமான விமர்சனம் அருமை. ‘மாற்று முகாம் என்ன? மாற்று முகம் கூட அறியாதவன் நான்’ என்று எழுதிய தாங்கள் நாடோடி மன்னனை மட்டும் ஒளிந்து கொண்டு பார்த்திருப்பீர்கள் போலிருக்கிறது. அதற்கே இவ்வளவு ஞானம்.

    எனக்கு முன்கூட்டியே வரவேற்பளிக்கிறோம் என்று நீங்கள் கூறியதற்கு நன்றி. ஆனால், தலைவரின் ரசிகனாக இருந்து பின்னர் அதைத் தாண்டி அந்த மனிதப் புனிதரிடம் நான் கொண்டுள்ள அன்பும் பக்தியும் விசுவாசமும் என்றென்றும் மாறாதவை. நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்ததைப் போல உங்களுக்கும் எங்கள் திரிக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம் என்றால், ‘அடுத்தவன் கழிந்ததை, வாந்தியெடுத்ததை, விடாய் காலம்’ என்று நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தடுக்கின்றன. மக்கள் திலகம் திரிக்கென்று ஒரு மாண்பு உண்டு என்பதால் உங்களை அழைக்க முடியவில்லை.

    திரு.ராகவேந்திரா அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களைப் பார்த்து ஊர் இரண்டு பட்டால்... என்கிறீர்கள். ஆனால், என்னை நீங்கள் அழைப்பதை பார்க்கும்போது ஊர் இரண்டுபட வேண்டும் என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையல்ல; சீனத்துப் பெருஞ்சுவர் நாங்கள்.

    இறுதியாக கூறுகிறேன். கேலி கிண்டல்களால் உங்கள் அறிவும், திறமையும், எழுத்துக்களும் பின்னுக்குத் தள்ளப்படுகிறதே? அதை நீங்கள் கவனிக்கவில்லையா? எவ்வளவுதான் அறிவும் திறமையும் இருந்தாலும் ஆணவம் அவற்றை அழித்து விடும். இன்று கூட உயர் பொதுமக்களின் பிரதிகள் நாம் என்று கூறியுள்ளீர்கள். அறிவும், திறமையும் ஒரு சாதிக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமானது அல்ல நண்பரே.

    எந்த இடத்தில் எந்த நேரத்தில் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது அதிகம் படித்த உங்களுக்கு தெரியாமல் போனது விந்தைதான். கடவுள் பெயராக இருந்தாலும் அதை எங்கு சொல்ல வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. திருமண வீட்டில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் என்னதான் கடவுள் பெயராக இருந்தாலும் திருப்பதியில் கோஷம் போடுகிற மாதிரி கைகளை உயரக் குவித்து ‘‘கோவிந்தா...... கோ........விந்தா’’ என்று கூவினால் ஒட்டுமொத்த கூட்டமும் அந்த நபரை அடிக்கத்தான் வரும். அந்த நபரின் நிலையில் இருக்கும் தங்களைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.

    உங்களுக்கு அறிவுரையாக அல்ல. ஆலோசனையாக கூறுகிறேன். அய்யா பெரியார் பாணி அவருக்குத்தான் சரிப்படும். அவர் பாணியில் கைம்பெண்களை ‘முண்டச்சிகள்’ என்று கூறாமல் பேரறிஞர் அண்ணா பாணியில் ‘வாழ்விழந்த வனிதா மணிகள்’ என்று கூறிப் பழகுங்கள். உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால் மகிழ்ச்சி. ஆனாலும் நம்பிக்கை இல்லை. அப்படி மாறிவிட்டால்தான் நீங்கள் கோபால் இல்லையே. ஹூம்.... இருந்தாலும் all the best.

    ஏழைகள், நலிந்தோர், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் எங்கள் தலைவர் அன்பும் பாசமும் அதிகம் காட்டுவார். அவர் வழிவந்தவர்கள் நாங்கள். அந்த அடிப்படையில் விசாரிக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன் நீங்கள் போட்ட பதிவில் குறிப்பிட்ட நினைவு. கடல் கடந்து வாழும் உங்களுக்கு பணிவிடை செய்யும் அந்த மலாய் வேலைக்காரியை நான் விசாரித்ததாக சொல்லுங்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

    பின்குறிப்பு: தங்கள் தரப்பில் இருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக் கொண்ட திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களின் நேர்மைக்கு மீண்டும் ஒரு சிறப்பு நன்றி.

  11. #820
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •