-
12th October 2014, 06:40 AM
#101
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . நீங்கள் துவக்கிய இந்த கீற்று கொட்டகை - திரி கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . இன்றைய தலை முறையினர் தெரிந்த கொள்ள வேண்டிய பல அபூர்வ தகவல்கள் இணயத்தில் கிடைப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
டூரிங் டாக்கீஸில் பார்த்திட்ட அந்த இனிமையான நாட்கள் -படங்கள் - அனுபவங்கள் நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு .
மறந்தே போய் விட்ட ஒரு சரித்திர சான்றை நீங்கள் நினைவு படுத்தி ,அதை திரியில் புதிய உத்வேகத்துடன் அழைத்து செல்ல காரணமான உங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றி .
எம்.ஜி.ஆர்.கூட திருமலை டாக்கீஸுக்கு வந்தாரே... சிவாஜி தன்னோட பட ரிலீஸ் அன்னிக்கு இங்க வந்தாரே...’ என தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை இந்த தியேட்டருடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள் 70 வயதைக் கடந்த செங்கல்பட்டு ரசிகர்கள். 'திருமலை டூரிங் டாக்கீஸ்’- சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ். 'காஞ்சி முருகன் - சென்னை கெயிட்டி - செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம்.

இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு, திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். 1940-ல் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக பொன்விழாவைக் கொண்டாட சில மாதங்களே இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிறுத்திக்கொண்டது இந்தத் திரை அரங்கம். இங்கு இறுதியாகத் திரையிடப்பட்ட படம் 'வாழ்வே மாயம்’!
''அது ஒரு பொற்காலம். 1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூணே முக்காலணா டிக்கெட். அதே வசதியைக்கொண்ட திருமலையில் ரெண்டணாதான். பி.யு.சின்னப்பா வோட 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளோட 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’னு அந்தக் கால சூப்பர் ஹிட் திரைப்படங்களை முட்டி மோதி பார்த்தது இன்னமும் நினைவில் இருக்கு. டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம்.
ஜாவர் சீதாராமன் போலீஸா நடிச்ச 'அந்த நாள்’ படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தேன். தன் மகன்களில் ஒருத்தரான கிட்டப்பாவை இதுக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார் திருமலை நாயுடு. அப்பவே புரொஜக்டரை இத்தாலியில் இருந்து வரவழைச்சார்!'' என பழைய நினைவுகளில் மூழ்கிய காவலர் கணேசன், ''ஏதோ இன்னிக்குத்தான் நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் பண்றாங்கனு நினைப்பீங்க. பாகவதரோட 'திருநீலகண்டர்’ படத்துக்கு அந்த நாள்லயே அப்படி நடந்திருக்கு. 'நீலகருணாகரணே...’னு பாகவதர் பாடிட்டு வர்ற காட்சிகளில் எல்லாம் விசில் சத்தம் காதைப் பிளக்கும். இப்பவும் தியேட்டரைக் கடந்து போகும்போது அன்னிக்குப் பார்த்த படப் பாட்டு எல்லாம் மனசுல காட்சியா ஓடும்'' என்று சோகமாகிறார்.
இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம். கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் ஸ்ரீதர் படித்து இருக்கிறார். பின்னாளில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.
தியேட்டர் வாசலில் பழக் கடை நடத்தி வந்த சந்திரசேகர், ''ஓஹோனு இருந்த இந்த தியேட்டரை வெளியாட்கள் லீஸுக்கு எடுத்து நடத்தினாங்க. அவங்களும் கட்டுப்படி ஆகலைனு விட்டுட்டாங்க. 'மாட்டுக்கார வேலன்’ படம் வந்தப்ப இங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை நின்னுச்சு. 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் பூஜை போட்டுத்தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு'' என்கிறார்.
தியேட்டரின் தற்போதைய நிலை குறித்து சினிமா விநியோகஸ்தரும் நாயுடுவின் பேரன்களில் ஒருவருமான நந்தகுமார், சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்... ''திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் எங்கள் தாத்தாவுடன் நட்பில் இருந்தார்கள். நாகேஷ் எப்பப் படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை மிஞ்சுதுய்யா. என்ன வித்தை பண்றீங்க?’னு கேட்பாராம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும் சென்னையில் இருக்கும்போது எப்போதாவது படம் பார்க்க வருவார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஸ்ரீதரோட எல்லாப் படங்களையும் நாங்க ரிலீஸ் செய்தோம். ஸ்ரீதர் எங்க சித்தப்பாவின் நண்பர். அவர் கல்யாணம்கூட எங்க தாத்தா தலைமையில்தான் நடந்தது. பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயானு ஏகப்பட்ட பேர் இங்க வந்து இருக்காங்க. 1979-ல் தாத்தா இறந்த பிறகு தியேட்டரை அப்பா கோவிந்தராஜன், சித்தப்பாக்கள் புருஷோத்தமன், கிட்டப்பா எடுத்து நடத்தினாங்க.
தியேட்டரை மூடினப்ப குறைந்தபட்ச கட்டணம் 65 பைசாதான். பெஞ்ச் டிக்கெட் 1.75 பைசாதான். இப்ப தியேட்டரின் பழம்பெருமையும் கட்டடமும்தான் மிஞ்சி இருக்கு. இருந்தாலும் தியேட்டரை மீண்டும் திறக்க முயற்சி எடுத்துட்டு இருக்கோம். திருமலை டாக்கீஸ் மறுபடியும் செங்கல்பட்டின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறும்னு நம்புறேன்!'' என்கிறார் நந்தகுமார்.
- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2014 06:40 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2014, 06:53 AM
#102
Junior Member
Platinum Hubber
எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.
புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!
இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.
மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.
ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.
courtesy - net
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2014, 07:54 AM
#103
Senior Member
Seasoned Hubber
வினோத் சார்
செங்கல்பட்டு தேனி மாவட்டம் என டூரிங் டாக்கீஸ்களைப் பற்றிய ஒரு மினி டூரே அழைத்துச் சென்று நினைவுகளையும் அந்த நாட்களுக்கு கொண்டு சென்று விட்டீர்கள். சூப்பர் சார்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2014, 07:59 AM
#104
Senior Member
Seasoned Hubber
சி.க. சார்
பசுபதிகோயில் நான் போயிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான கோயில் உண்டு. அந்த வகையில் ஒரு முறை அந்தக் கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இன்றும் அந்த கும்பகோணம் தஞ்சாவூர் பாதை ரம்மியமாகத் தான் காட்சியளிக்கிறது. அந்த சாலை சற்றே குறுகலாகத் தான் இருக்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயில். தாங்கள் சொல்லும் அந்த டூரிங் டாக்கீஸ் அந்த குறுகிய தெரு வழியாகத் தான் போக வேண்டும் என நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரையில் நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் அந்த தெருவில் கோயிலுக்கு சற்று முன்னர் வலது புறத்தில் மிகப் பெரிய பரப்பிலான இடத்தில் ஒரு கட்டிடம் பழைய தோற்றத்தில் இருந்தது. ஒரு வேளை ஏதேனும் கம்பெனி இயங்கிக் கொண்டிருக்கலாம். தாங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்டிடம் தான் தாங்கள் சொன்ன டூரிங் டாக்கீஸாக இருக்கலாம்.
அந்த பிரபாகரனை அதற்குப் பிறகு பார்த்தீர்களா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2014, 08:02 AM
#105
Senior Member
Seasoned Hubber
ராமமூர்த்தி சார்
வேலூர் அண்ணா கலையரங்கம் நிழற்படங்கள் அருமை...
அது முனிசிபாலிட்டியினுடையதா அல்லது தனியாருடையதா..
தற்போது கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவா...
ஏனெனில் பல பிரபல கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவதைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் படித்ததாக நினைவு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2014, 08:11 AM
#106
Senior Member
Seasoned Hubber
சென்னை அம்பத்தூர் லூகாஸ் டிவிஎஸ் பின்புறம் கிட்டத்தட்ட இரண்டு கிமீ. அல்லது அதற்கும் மேலான தூரம் நடந்து சென்றால் மன்னூர்பேட்டை பகுதி வரும். அங்கே ராணி என்றொரு கீற்றுக் கொட்டகை இருந்தது. இதைப் பற்றி நான் முன்பே நடிகர் திலகம் திரியில் குறிப்பிட்டுள்ளேன். நாங்கள் திருவல்லிக்கேணியிலிருந்து செல்வோம். அபூர்வமான நாங்கள் பார்க்காத நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை அந்தக் கீற்றுக் கொட்டகை ஏற்படுத்தித் தந்தது. காவேரி இல்லற ஜோதி அவள் யார் போன்ற அபூர்வமான படங்களை அந்த டெண்ட் கொட்டகையில் தான் நாங்கள் பார்ப்போம். எங்கள் நண்பர்கள் குழுவில் - அனைவருமே சிவாஜி ரசிகர்கள் - ஒருவர் அந்தக் கொட்ட்கையில் ஓடும் நடிகர் திலகம் படத்தைப் பற்றிய தகவலைச் சொல்லி விடுவார். எந்த பழைய படமென்றாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான், அதிக பட்சம் ஒரு வாரம் ... என்ற வகையில் சுழற்சி முறையில் தான் திரையிடுவார்கள் - எனவே உடனே நாங்கள் மறுநாளே எப்பாடு பட்டாவது அப்படத்தைப் பார்க்க சென்று விடுவோம். தகவல் சொன்ன நண்பருக்கு அந்த ஏரியா அத்துப்படி என்பதால் அவர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக கிளம்புவோம் -- வீட்டில் திட்டு வாங்காமலா கட்டாயம் உண்டு - அப்போதெல்லாம் நேரடி பஸ்வசதி இல்லை இரண்டு அல்லது மூன்று பஸ் மாறி செல்வோம். படம் இரவு 1 மணிக்கு முடியும் அங்கிருந்து நடந்தே பேருந்து நிறுத்தத்திற்கு வருவோம்.. டீக்கடை கூட இருக்காது... வெளியூர் பஸ் மட்டுமே வரும். அதில் ஏறி சென்ட்ரல் வந்து அங்கிருந்து நடந்தே திருவல்லிக்கேணி வருவோம்...
இரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் சென்றால் வீட்டில் கதவு திறக்கும் பிரச்சினை என்பதால் நண்பன் வீட்டில் பொழுதைக் கழித்து விட்டு காலை 5 மணிக்கு எழுந்து வீட்டுக்குச் சென்று அரைகுறைத் தூக்கம் முடித்து அன்றாட கடமைகளுக்கு ஆயத்தமாவோம்.
மறுநாளைய விவாதம் முழுவதும் முதல் நாள் பார்த்த படத்தைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியுமே இருக்கும்..
இப்படிப்பட்ட சுவையான மறக்க முடியாத அனுபவங்களை இன்றைய தலைமுறை பெரிதும் மிஸ் பண்ணுகிறது...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2014, 08:33 AM
#107
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
டூரிங் டாக்கிஸ் அதாவது கீற்றுக் கொட்டகை என்ற இந்தத் திரியில் சிவாஜி புகழ் பாடும் இந்தக் கட்டுரையைப் பதிந்ததற்கு நீங்கள் என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும். ஏனென்றால் சிவாஜி புகழ் பாடி விடும் திரியாக இந்த திரி போய் விடக் கூடாதே என்ற கவலையில் சிலர் சாப்பிடாமல் கூட கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிவாஜி பற்றிய பதிவுகள் வந்தால் சலிப்பு வேறு தட்டி விடும். சிவாஜி பற்றி முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு முன் நாம் எம்மாத்திரம்?
அதனால்தான் பயமாய் இருக்கிறது. இந்த வீணாய்ப் போன சிவாஜி பதிவுக்கும், கீற்றுக் கொட்டகைக்கும் என்ன சம்பந்தம் என்ற அறிவார்ந்த கேள்விகள் வேறு வரும். பாவம். நீங்கள் திரியை ஆரம்பித்தவர் என்று அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வேறு வரும். இந்தப் பாவமெல்லாம் எனக்குத் தேவையா?
இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு சிறு அறிவை வைத்து ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்துதான் இந்த பதிவை பயந்து பயந்து இங்கே இடுகை செய்கிறேன். இந்த கட்டுரையின் ஆசிரியர் திரு. மானா பாஸ்கரன் சிவாஜி என்ற நடிகரின் 'பாபு' படத்தை தன் தந்தையுடன் மணவாளம்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள 'லஷ்மி டாக்கீஸ்' என்ற கொட்டகையில் பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
அதனால்தான் இந்த பதிவு கீற்றுக் கொட்டகை திரியில் இட தகுதி மற்றும் பொருத்தம் வாய்ந்தது என்ற எனக்குத் தெரிந்த சிற்றறிவில் இதைப் பதிவிட்டுள்ளேன். (அந்த லஷ்மி டாக்கீஸ் கீற்றுக் கொட்டகையாக இருக்க, அப்புறம் தியேட்டர் பில்டிங் ஆக இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அது வேறு கீற்றுக் கொட்டகை திரியில் சிமெண்ட் கட்டிட திரையரங்கைப் பற்றி எப்படிப் போடலாம் என்று கேள்வி வருமோ என்று வேறு இன்னொரு பயம். 'அஞ்சி அஞ்சிச் சாவார்' கதைதான் என் கதை)
திரிக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவை நீக்கி விடுங்கள். ஏனென்றால் நான் சீனியர் ஹப்பர் என்றாலும் திரி தொடங்கியவர் எவரும் பதிவுகளை நீக்கிவிடலாம் என்ற 'மகா உண்மை' தெரிந்தவன். ரெண்டாவது எனக்கு என் பதிவுகளை இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஹப்பராக இருந்தும் டெலிட் வேறு செய்யத் தெரியாது. என்ன பண்ணித் தொலைய! எனக்கு இருக்கும் மூளை அவ்வளவுதான். நான் ஒண்ணுமே தெரியாத பச்சைப் பாப்பா வேறா? எனவே பிடிக்கவில்லை என்றாலோ, ரூல்ஸ் மீறி இருந்தாலோ, சம்பந்தம் இல்லை என்றாலோ நீங்கள் இந்தப் பதிவை எடுத்து விடலாம்.
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள திரு.மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.
'நான் சிவாஜி கட்சி'

Last edited by vasudevan31355; 12th October 2014 at 09:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2014, 08:53 AM
#108
Junior Member
Seasoned Hubber
Mr Raghavendra Sir,
As far as I am concerned the Anna Kalaiyarangam in Vellore is under the control of Vellore Corporation. But I do not
know whether it is correct or not and they used to screen films when I was in Chittoor.
-
12th October 2014, 09:46 AM
#109
Junior Member
Newbie Hubber
கீற்று கொட்டகை.
என்னை போல பாக்கியம் செய்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. உலகத்தில் எவ்வளவு உன்னதங்கள்,இன்பங்கள்,வித வித அனுபவங்கள் உண்டோ அத்தனையும் அடைந்திருக்கிறேன்.
1950 களில் பட்டதாரி அன்னை(உயர்நிலை பள்ளி ஆசிரியை), பொறியியலாளரான தந்தை. ஆனாலும் எங்கள் மேல் எதையும் திணிக்காத முற்போக்கான ,பிள்ளைகளுக்கு நண்பர்களாக மட்டுமே இருந்த (60 களில் இது லட்சத்தில் ஒருவருக்கு கூட வாய்க்காது)உன்னத பெற்றோர்கள். ஜவகர் பள்ளி ஆங்கில கல்வி தவிர்த்து, நான் நண்பர்களுடன் என்.எல்.சி பள்ளியில்தான் படிப்பேன் என்றதும் மறுக்காமல் என்னை அனுமதித்த பெற்றோர். பத்தே வயதில் என் தேர்வுக்கு மதிப்பளித்தவர்கள்.நெய்வேலியில்,என்.எல்.சி பள்ளிகளில் கிட்டத்தட்ட 8 வயதில் மூத்த சக மாணவர்கள். அதிகாரிகள்,
மேற்பார்வையாளர்கள்,தொழிலாளர்கள்,நிரந்தரமற்ற பணியாளர்கள்,கூலிகள் அத்தனை மாணவர்களும் அருகருகே ,ஒரு நகர சூழலில்.பெற்றோர்களோ ,சாதி,மத,அந்தஸ்து வித்யாசம்
பாராத முற்போக்காளர்கள்.
இவர்கள் எல்லோருடனும் நட்பு பேணும் பாக்கியம். திடீர் குப்பம்,
தெற்கு மேலூர் என்று ராயப்பன்,மீனாட்சி சுந்தரம்,ராஜு,ராமசந்திரன் என்று குடிசை வீட்டு நண்பர்கள்.இவர்களுடன் தை பூசம்,பங்குனி உத்திரம்,இலவச சினிமாக்கள்,கண்காட்சிகள்,பொருட்காட்சிகள்,தொடர ்ந்த சைக்கிள் சுற்றுக்கள்,ரெகார்ட் டான்ஸ் ,கீற்று கொட்டகை என்று சுற்றியிருக்கிறேன்.
சொரத்தூர் ஜோதி,முத்தாண்டி குப்பம் (பெயர் மறந்து விட்டேன்),ஆடுதுறை ஆர்சியே,திருபுவனம் சாந்தி,திருவிடை மருதூர் ஸ்ரீதரன்,குத்தாலம் (பெயர்?)என்பவை கிட்டத்தட்ட பழைய படங்கள் அனைத்தும் நான் பார்க்க உதவியவை. சேர்,பேக் bench போக வசதியிருந்தும் (தரை- 25 காசு, பெஞ்ச் 35 காசு,back bench 60 காசு, மடக்கு சேர் 90 காசு) , தரையில் மற்ற நண்பர்களுடன் அமர்ந்து படங்களை ருசிப்பேன். (நாலு இண்டர்வல் .நடு நடுவில் ரீல் மாற்றம்,ரீல் அறுந்து போதல்).சமயத்தில் ரீல் வந்து சேராது. மாற்று படம் போட படும்.கார்பன் நெருக்கி வைக்காமல் அவ்வப்போது இருட்டு . ஆனாலும் என்னை நான் வெளியிட்டு ,சுதந்திரமாக படத்தை அனுபவிக்கலாம். கத்தலாம்.கை தட்டலாம்.விசிலடிக்கலாம்.குதிக்கலாம். நண்பர்களுடன் பேசலாம்.என்ன ஒரு அனுபவம்?ஆனாலும் வெற்றிலை எச்சில்கள் ,சில சமயம் சிறு நீர் நாற்றம் படுத்தியதால் ,பெற்றோர் எனக்கு கொடுத்த 1.50 ஐ, நண்பர்களுக்கு பேக் பெஞ்ச் டிக்கெட் வாங்கி (25 காசு அவர்கள் மீதி என் பங்கு) upgrade செய்து விடுவேன். (அவர்களையும் சிவாஜி ரசிகர்களாக upgrade செய்து விடுவேன்)
நான் சைட் அடித்த பெண் நண்பிகள் ,டைப் ரைட்டிங் வகுப்புகள் சேர்ந்த போது ,கூட சேரும் சபலம் வந்தாலும் சேராமல் விட்டது ,கம்ப்யூட்டர் காலத்தில் வேகமாக டைப் பண்ணும் வித்தையை வளர்த்து உதவியிருக்கும்.
கண்ணா மணி,ஸ்ரீதர்,சாமா என்ற திருவிடைமருதூர் ,திருபுவனம் கீற்று நண்பர்கள் எங்கிருக்கிறார்களோ?நெய்வேலி நண்பர்கள் தேடுவது சுலபம். சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்.மெயின் பஜார் கடை வியாபாரி. corporation worker .கோயில் அர்ச்சகர் .U .S .A ,australia என்று எங்காவது பீராய்ந்து தேற்றி விடலாம். ஒருவர் கிடைத்தால் அவர் மூலம் இன்னும் 5 பேர். திருவிடை மருதூர் நண்பர்களைத்தான் காணவே முடிவதில்லை.
நன்றி. என் பெற்றோர்களே. வீட்டுக்கு வரும் துப்பரவு தொழிலாளிக்கு அதே டம்ளர் தண்ணீர். மூத்தவராக இருந்தால் யாராக இருந்தாலும் அவர் என்று சொல்லும் மரியாதை .என்று என்னை செதுக்கியதற்கு.(ஆனாலும் எனக்கு efficiency குறைந்த ஏனோ தானோ நபர்களை அவர்கள் எந்த தொழில் எந்த நிலை கொண்டவரானாலும் பிடிக்காது.)
நன்றி நெய்வேலி. நன்றி என் நண்பர்கள்.
இன்னும் கூட எனக்கு அனைத்து தரப்பிலும் என்னை நன்கு புரிந்த உயிர் நண்பர்கள் உண்டு. படிப்பு,பணம்,அந்தஸ்து,உலக அனுபவம் இவை என் தலைக்கேறாமல் என்னை தரையில் வைத்திருப்பவை ,என் கீற்று கொட்டகை அனுபவங்களே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2014, 01:03 PM
#110
Senior Member
Diamond Hubber
கோ,
கலக்குகிறீர்கள். என்ஜாய் செய்து படித்தேன். நெய்வேலி ஒரு சுவர்க்க பூமிதான். நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கலாம். அதனால்தான் கொஞ்சம் சிரமமில்லாமல் பதிவுகளும் இட முடிகிறது.
நீங்கள் குறிப்பிட நினைக்கும் டூரிங் செடுத்தான்குப்பம் அன்னை என்று நினைக்கிறேன். முத்தாண்டி குப்பத்துக்கு செடுத்தான்குப்பம் தாண்டித்தான் போக வேண்டும்.
நெய்வேலி என்று டைப் செய்து உங்கள் உயிர் நண்பர் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் என்ன அர்த்தம்.? 'என்னை' என்று அர்த்தம்.
Last edited by vasudevan31355; 12th October 2014 at 01:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks