Page 32 of 397 FirstFirst ... 2230313233344282132 ... LastLast
Results 311 to 320 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #311
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    உன் சபதம் எனக்கும் பல நினைவுகளை கிளறியது. 1971 தமிழ் வருட பிறப்பில் என்னுடைய முழு கவனமும் சுமதி என் சுந்தரி,ப்ராப்தம் மீதே.இரண்டையும் கும்பகோணத்தில் பார்த்ததோடு அல்லாமல்,சுமதியை நாலு தரம் repeat பண்ணி கொண்டிருந்தேன். திருவிடை மருதூர் நண்பன் ஸ்ரீதர் சபதம் பற்றி குறிப்பிட்டான்.(தொடுவதென்ன, போட்டு வைத்த முகமோவிற்கு சமமாக பிரபலமாகி கொண்டிருந்தது.)கே..ஆர்.விஜயா என்பதால் ஒரு தயக்கம் இருந்தது.ஸ்ரீதர் ,ராஜாவில் பார்த்ததோடு அல்லாமல் ,எனக்கு முழு கதை சீன் பை சீன் விவரித்து சொன்னான். அவனையும் அழைத்து கொண்டு (காசு நான்தான்)போனேன்.பிடித்திருந்தது.திரும்ப வரும் போது ஆரிய பவனில் சோன் பாப்பிடி,மெது பக்கோடா,முறுகல் தோசை என்று வெட்டினோம்.

    உங்கள் பதிவு, அந்த மெது பக்கோடா சுவையை நாக்கில் ஏற்றியது.பிரமாதம்.

    மகனே நீ வாழ்க பாடல் ரொம்ப வித்யாசமானது.எனது பிடித்தம் மட்டுமே என்று ப்ரத்யேகம் என்று நினைத்தது உங்களுக்கும் பிடித்தது தற்செயல் அல்ல.எண்ணத்தால் இந்த சகோதரத்துவம் நமக்குள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

    சின்னகண்ணன்- சமீபத்தில் உன் எழுத்தில் இளமையும் ,சொல்லோடு இணைந்த ஜொள்ளும் ரொம்ப துள்ளுகிறதே?என்ன சமாசாரம்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #312
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  4. Thanks Gopal.s thanked for this post
  5. #313
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    SPECIAL SONG DEDICATION TO GOPAL


  6. #314
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று.

    Chitti Babu (October 13, 1936 February 9, 1996) was a renowned classical musician from India, and arguably one of the greatest Veena artistes, in the Carnatic Music genre of South India, who became a legend in his own lifetime

    1948-ல் லைலா மஜ்னு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.நாகேஸ்வர ராவ் பானுமதி நடித்த லைலா மஜ்னு என்ற படத்தில் (ஸி.ஆர். சுப்பராமன் இசையில் அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் இது!) இளம் மஜ்னுவாக நடித்திருந்தார்,

    சிங்கிதம் சீனிவாச ராவின் திக்கற்ற பார்வதி (1974) படத்துக்கு இசையமைத்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் சிட்டிபாபுவின் வீணை இசை தனி முத்திரையைப் பதித்தது.

    எழுத்தாளர் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நாவல் சினிமாவாக்கப்பட்டபோது அதற்கு இசை அமைத்தார். பாடல் இல்லாமல் பின்னணி இசையை மட்டும் கொண்ட அந்த படம் விருது பெற்றது.

    என்னைப் பொறுத்தவரை MUSIC என்பது இன்பமான விஷயம். அதில் M-யை நீக்கிவிட்டால் U SICK (துன்பத்தில் நீங்கள்) என்று அடிக்கடி சொல்வார்.

    ஒரு வீணை இசைக் கலைஞனின் கதையான 'kalai koil' இப் படத்தில் பிரபல வீணை இசைக் கலைஞர் சிட்டிபாபு அருமையாக வீணை வாசித்திருந்தார்.



    புகழ் பெற்ற வீணை கலைஞர் சிட்டி பாபு மனைவி சுதக்சினா தேவியும் வீணை கலைஞர் .இவர்களின் மகன் 2006 ஆம் ஆண்டு ''சித்திரம் பேசுதடி'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான சுந்தர் சி பாபு அவர்கள் ,

    சுந்தர் சி பாபு தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வித்தியாசமான எளிய இசை இவர் அடையாளம். நாடோடிகள் படத்தில் பின்னணி இசையில் அசத்தி இருப்பார். '' வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் '' மூலம் வித்தியாசமான கானா பாடல் பாணியை அறிமுகப்படுத்தினார்.

    ஹிட் படங்கள் :

    சித்திரம் பேசுதடி , பஞ்சாமிர்தம் , அஞ்சாதே , நாடோடிகள் , தூங்கா நகரம் , போராளி ....


    தேவியர் இருவர் பாட்டு, ஸ்ரீ எனப்படும் ராகத்தைத் தழுவி அமைக்கப் பட்ட மெட்டு.சுசீலாவின் இசைப் பயணத்தில் ஒரு மைல் கல் இந்தப் பாட்டு. அவரின் தேன்குரலோடு வீணையும் தபலாவும் போட்டி போடும் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.திரை படத்தில் முத்துராமன் வீணை வாசிக்க ,ராஜஸ்ரீ நடனமாட சுசீலாவின் பிசிறு தட்டாத சுருதி விலகாத ஆலாபனையும் ,கண்ணதாசனின் கவித்துவமான வரிகளும் சேர்ந்து மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை

    gkrishna

  7. #315
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி

    மகனே நீ வாழ்க பாடல் மிகப்பிரமாதம்.. அருமை அருமை ... நன்றி நன்றி

  8. #316
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,







    மூவாயிரம் பதிவுகள் கடந்து பீடுநடை போடுவதற்கு என் வாழ்த்துக்கள்.

    எங்களுடைய ஆயிரமாயிரம் பதிவுகள் உங்களுடைய 'நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்' 'ஸ்கூல் ஆப் ஆக்டிங்'கின் ஒரு ஓரத்தை கூட தொட முடியாது. இயலாது. பதிவுகளின் தரம் உயர வேண்டும் என்று உங்களைத் தரம் தாழ்த்திக் கொண்ட உயர் தியாகியாகவே எனக்கு நீங்கள் தென்படுகிறீர்கள்.

    இறுமார்ந்த நட்பு நம்முடையது உங்களுடைய இறுமாப்பைப் போலவே. இந்த 3000-ல் உங்கள் தனி மனித போராட்டம் நல்லதோ கெட்டதோ பிரம்மிக்க வைக்கக் கூடியது உங்களுடைய ஈடுஇணையில்லா பதிவுகளின் பிரம்மிப்பைப் போலவே.

    என் நெஞ்சம் நிறைந்த நண்பரான உங்களுக்கு அதே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    'சபத'த்துக்கும் நன்றி! மகனே நீ வாழ்க! நிஜ வாழ்த்து. பொய்யுரை அல்ல.
    Last edited by vasudevan31355; 13th October 2014 at 11:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellcaj liked this post
  10. #317
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி

    மகனே நீ வாழ்க பாடல் மிகப்பிரமாதம்.. அருமை அருமை ... நன்றி நன்றி
    Thanks Rajeshji.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #318
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!

    'கனிமுத்துப் பாப்பா' ஜோதிகண்ணா விளக்கம் அருமை. நன்றியோ நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #319
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    சிட்டிபாபுவின் பிறந்த நாளை ஞாபகப்படுத்தி அவருக்கு சிறப்பான புகழாரம் சூட்டியதற்கு நன்றி! சிட்டிபாபுவைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #320
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    உங்களுக்காக.

    இளம் வயது பாலகனாக வீணை 'மாஸ்டர்' சிட்டிபாபு 'லைலா மஜ்னு' தெலுங்குப் படத்தில். (என்ன ஒரு அழகு) அப்போது அவருக்கு வயது 13. இந்தப் படம் 1949-ல் வெளியான படம். 'ஹிந்து'வும் சிட்டிபாபு பெயரைக் குறிப்பிட்டிருக்கிறது தனது விமர்சனத்தில்.





    Last edited by vasudevan31355; 14th October 2014 at 05:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellcaj, Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •