Page 47 of 397 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #461
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கவிதாலயா பாலசந்தர் திடீரென்று நாடக பாசம் கொண்டு பண்ணிய படங்கள்// இல்லையே கோபால் சார்..அவரது ஆரம்ப கால நாடகம் எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த் தானே படங்களாக உருவெடுத்தன.. பின் ரொம்ப இடைவெளி என வேண்டுமானல் சொல்லலாம்..தண்ணீர் தண்ணீரும் கோமல் ஸ்வாமி நாதனின் நாடகம் தானே..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கலாகேந்திரா பாலச்சந்தர் கவிதாலயா பாலச்சந்தர் ஆக மாற்றம் எந்த படத்தில். கலாகேந்திரா லோகோ திருவள்ளுவர் மெல்லிசை மன்னர் குரலில் குறள் மேல் ஸ்தாயியில் 'அகர முதல எழுத்தெல்லாம் '
    கவிதாலயா லோகோ திருவள்ளுவர் இளையராஜா குரலில் பேஸ் வாய்ஸ் 'அகர முதல எழுத்தெல்லாம் ' .
    திருவள்ளுவர் சிலை திரும்பும் போதே பர பரனு இருக்கும்
    gkrishna

  4. #463
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    இந்த வாரம் குமுதம் படித்தீர்களா ? நீங்கள் வெளியிட்ட வரப்ரசாதம் படத்தை பற்றி இளையராஜாவிடம் கி போர்டு வாசித்த விஜி மனுவேல் பேட்டி வெளி வந்து உள்ளது . இந்த வரப்ரசாதம் படத்திற்கு இசை கோவர்த்தனம் .இளையராஜா பின்னணி இசை என்று சொல்லி உள்ளார் .மிகவும் அருமையாக பின்னணி இசை இருக்கும் என்று சொல்லி உள்ளார்.படம் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தி விட்டது அவர் பேட்டி ..இதை பார்த்து விட்டு தான் பஞ்சு அன்னக்கிளி சான்ஸ் கொடுத்தார். .பாம் க்ரோவ் ஹோட்டல் தான் அவர்கள் வாசஸ்தலம் என்றெல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார்
    gkrishna

  5. #464
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Krishna: You wanted songs in Kapi. Here is one I like:

    enna dhavam seidhanai yasodhaa engum nirai para brahmam.........

    This is a composition by Papanasam Sivan rendered in Carnatic concerts these days.
    திரு ராஜ்ராஜ் சார்

    நன்றி காபி ராகத்தில் இடம் பெற்ற என்ன தவம் செய்தனை யசோதா பாடலை நினைவு கூர்ந்ததற்கு. பார்த்திபன் கனவு 2003 ஸ்ரீகாந்த் சினேகா நடித்து வெளிவந்த படத்தில் இந்த பாடலை இசை அமைப்பாளர் வித்யா சாகர் சற்று வித்யாசமாக கையாண்டு 'ஆலங்குயில் கூவுகையில்' என்ற பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்

    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #465
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (95)



    'இன்றைய ஸ்பெஷலி'ல் தன் குரலால் எல்லோரையும் மயக்கிக் கட்டிப் போடும் ஜிக்கியின் பாடல். 'முதலாளி' படத்தில் எம்.என்.ராஜம் டி.கே.ராமச்சந்திரனுடன் ஆடிப் பாடும் மனம் சொக்க வைக்கும் பாடல்.

    அன்றைய எல்.ஆர்.ஈஸ்வரி ஜிக்கிதானே! ஒவ்வொரு முறையும் 'யௌவன ராணிதா....ன்' என்று முடிப்பது சுகமோ சுகம். அருமையாக எழுதப்பட்ட பாடல்.

    'பித்தனைப் போல் மறுத்துரைத்தால்
    உருமாறி அவனையும் வெற்றி காண்பேனே'

    என்ற திமிர்த்தனமான நம்பிக்கையுடன் ஒலிக்கும் வரிகள்.


    ராஜம் வழக்கம் போல ஆடிப் பாடி மயக்கும் கட்டழகி அந்தக்கால வில்லன்களுக்கு. நமக்கல்ல. இது மாதிரி ராஜத்துக்கு நிறையப் பாடல்கள் உண்டு. (ரத்தக் கண்ணீர், பாக்கியவதி, திருடாதே, பெண்ணின் பெருமை)

    கள்ளத்தனத்திலும், வில்லத்தனத்திலும் டி.கே.ராமச்சந்திரன் எப்போதுமே டாப்.

    'இலட்சிய நடிகர்' கதாநாயகனாக நடிக்க தேவிகா நாயகி.

    'ஏரிக்கரையின் மேலே' ஏகத்துக்கும் எகிறி ஹிட்டடித்ததால் 'யௌவன ராணி' சுருண்டுவிட்டாள் அற்புதமான அழகிருந்தும் கூட. அதான் நாமிருக்கிறோமே அவளைத் தூக்கி நிறுத்த. முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் அப்போதய ஒரு பெரிய ஹிட்தான். 'திரை இசைத் திலகம்' இசை. ஆரம்ப இசை அமர்க்களம். ஜிக்கி செய்யும் அமர்க்களம் அதிகம். 'யௌவன ராணிதான்' பாடல் முடிந்தவுடன் ராஜம் ராமச்சந்திரனிடம் கேட்பார் 'பாட்டு எப்படி?' என்று. அதற்கு ராமச்சந்திரன் சொல்வார். "இன்பத் தேனாமிரத்ம்". உண்மையும் அதுதானே!


    இனி பாடலின் வரிகள்



    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
    யௌவன ராணிதான்

    அழகென்னும் போதையூட்டி
    அறிவென்னும் ஜாலம் காட்டி
    அழகென்னும் போதையூட்டி
    அறிவென்னும் ஜாலம் காட்டி
    விழி அம்பு பாணம் பூட்டி வெல்லுவேன்
    எல்லோரையும் வெல்லுவேன்

    நா....ன்

    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
    யௌவன ராணிதான்

    கோடானுகோடி வெள்ளிக் கூட்டத்தில் நிலவாக
    வாடாத வாலிபனைக் கண்டேன்
    கோடானுகோடி வெள்ளிக் கூட்டத்தில் நிலவாக
    வாடாத வாலிபனைக் கண்டேன்
    காதல் கொண்டேன்

    நா....ன்

    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
    யௌவன ராணிதான்

    எத்தனையோ நாளாக எதிர்பார்த்த இன்பமெல்லாம்
    இன்று பெறுவேனே
    பித்தனைப் போல் மறுத்துரைத்தால்
    உருமாறி அவனையும் வெற்றி காண்பேனே

    ஆ.......

    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
    யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
    என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.

    யௌவன ராணிதான்


    Last edited by vasudevan31355; 16th October 2014 at 12:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai, gkrishna, chinnakkannan liked this post
  9. #466
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    ...

    வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில்

    அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..

    முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..

    இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

    அப்புறம்..

    ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.

    மிக அருமையான நினைவலைகள் ராகவேந்தர் சார்

    இந்த கால கட்டங்களில் அப்போது எல்லாம் வால்வ் செட் ரேடியோ தான். திருநெல்வேலியில் சென்னை a மட்டும் தான் எடுக்கும் (mw) .விவித் பாரதி சுத்தமாக வராது . கூட படித்த ஒரு நண்பன் விஸ்வநாதன் என்று பெயர் கொஞ்சம் வசதி ஜாஸ்தி.பெரிய வீடு. வேறு யாரும் அல்ல பழைய நடிகர் எஸ் ஜி கிட்டப்ப்பவின் முதல் சம்சாரம் கிட்டம்மா பாட்டியின் நேர் வழி பேரன். அவன் வீட்டில் இங்கிலாந்த் பிலிப்ஸ் என்று ஒரு ரேடியோ இருக்கும். அவன் அப்பா ஸ்டேட் பாங்க மேனேஜர் வரதராஜன்.பயங்கர கண்டிப்பான பேர்வழி. சினிமா பாட்டு மூச் பேச்சே எடுக்கபடாது.சரி மனுஷன் கர்நாடக கச்சேரியாவது கேட்பாரானு பார்த்தால் அதுவும் கிடையாது. தானும் செய்ய மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் கேஸ் இந்த ரேடியோவை பெரிய சைஸ் உஷா தையல் மெஷின் மேல் மூடும் கேஸ் போல் மூடி வைத்து இருப்பார். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை அன்று சந்தன பொட்டு குங்கும பொட்டு வைப்பதோடு சரி.மற்ற நாள் எல்லாம் மூடி இருக்கும். அவனிடம் எப்படியாவது அடி போட்டு ஒரு நாள் 8 மணி விவித் பாரதி பாடல் கேட்க நாங்க 2, 3 பேர் அவனை கெஞ்சி கூத்தாடி வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் திறந்தால் பவர் கார்ட் எலி கடித்து சின்னா பின்னமாகி ரேடியோ சோலி காலி.இங்கிலாந்த் செட் என்பதால் ரிப்பேர் செய்யவும் வழி இல்லை

    இப்ப எல்லாம் fm ரேடியோ 10 சேனல் இருக்கு செல் போன் இல். எங்கே கேட்க ? ரேடியோ ஜாக்கிகளின் கொட்டம் தாங்கலை

    அது சரி இப்ப விவித் பாரதி வருகிறதா ? நான் அப்பப்ப fm கோல்ட் கேட்கிறேன் .அதிலும் பழைய பாடல்கள் நிறைய போடுவதில்லை
    Last edited by gkrishna; 16th October 2014 at 01:07 PM.
    gkrishna

  10. #467
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்

    இந்த வாரம் குமுதம் படித்தீர்களா ? நீங்கள் வெளியிட்ட வரப்ரசாதம் படத்தை பற்றி இளையராஜாவிடம் கி போர்டு வாசித்த விஜி மனுவேல் பேட்டி வெளி வந்து உள்ளது . இந்த வரப்ரசாதம் படத்திற்கு இசை கோவர்த்தனம் .இளையராஜா பின்னணி இசை என்று சொல்லி உள்ளார் .மிகவும் அருமையாக பின்னணி இசை இருக்கும் என்று சொல்லி உள்ளார்.படம் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தி விட்டது அவர் பேட்டி ..இதை பார்த்து விட்டு தான் பஞ்சு அன்னக்கிளி சான்ஸ் கொடுத்தார். .பாம் க்ரோவ் ஹோட்டல் தான் அவர்கள் வாசஸ்தலம் என்றெல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார்
    நன்றி கிருஷ்ணா சார்! குமுதம் இன்னும் பார்க்கல்ல. ஆனா 'வரப்ரசாதம்' சந்தோஷமான நியூஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #468
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கலாகேந்திரா பாலச்சந்தர் கவிதாலயா பாலச்சந்தர் ஆக மாற்றம் எந்த படத்தில். கலாகேந்திரா லோகோ திருவள்ளுவர் மெல்லிசை மன்னர் குரலில் குறள் மேல் ஸ்தாயியில் 'அகர முதல எழுத்தெல்லாம் '
    கவிதாலயா லோகோ திருவள்ளுவர் இளையராஜா குரலில் பேஸ் வாய்ஸ் 'அகர முதல எழுத்தெல்லாம் ' .
    திருவள்ளுவர் சிலை திரும்பும் போதே பர பரனு இருக்கும்
    அழகாக வித்தியாசத்தை பிரிந்து கொண்டீர்கள் கிருஷ்ணா. .கவிதாலயா உருவெடுத்தது 1981 இல் நெற்றிக்கண் படத்திலிருந்தே. சின்ன கண்ணன், சீனியர்கள் சீனியர்கள்தான்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #469
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சின்ன கண்ணன், சீனியர்கள் சீனியர்கள்தான்.// அது ட்ரூ தான்..பட் நாம பேசியது நாடகபாசம் ஆஃப் பாலச்சந்தர் தானேயொழிய எந்தக் கம்பெனின்னு இல்லையே..இடையில் எந்த வருடம் என நினைவில்லை ஒரு நாடகம் வேறு எழுதினார் குமுதத்தில்..விவாகரத்து கிட்டு பட்டு ஸ்டைல்..என..மனோரமா என நினைவு.. அவருடைய பெளர்ணமி, அப்புறம் ஒரு கூடை பாசம் - மேடை நாடகம் எந்த வருடம் போட்டார் எனத் தெரியாது. அதன் டி.வி.டி பார்த்திருக்கிறேன்..

    அவருடைய ஃபேவரிட் ரீசண்ட் ஆக்ட்ரஸ் இன் டி.வி சீரியல்ஸ் என்று வேண்டுமானல் சொல்லலாம்.. ரேணுகா..( சீரியலில் காதல்பகடையில் கலக்கி ப்ரேமியாய் உருவெடுத்தவர்..கொஞ்சம் ஓவர் டோஸான நடிப்பு..படுத்தவும் செய்வார்..(அயனில் சூர்யாவின் அம்மா) அவர் தான் இரண்டு நாடகங்களிலும் கதானாயகி.

    பெளர்ணமி கொஞ்சம் போர் தான் .. திரைப்பட டச் வைத்து ரோஜா கதை போல் இருக்கும்..

    ஆனால் ஒரு கூடை பாசம் கொஞ்சம் பரவாயில்லை.. நன்றாகவே இருந்தது..பாலச்சந்தரும் ஒரு சிறு வேஷம் செய்திருப்பார்..அண்ட் வசனங்களை எப்படி மறக்காமல் அனைவரும் நடித்தார்கள் என இப்போதும் ஆச்சர்யமே எனக்கு

  13. #470
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாடகத்திலிருந்து திரைக்கு வந்த படங்கள் எனும் போது முதலில் நினைவுக்கு வருவது ஞான ஒளி..அது கல்கியில் தொடர்கதையாக வந்து பைண்ட் செய்யப் பட்ட புத்தகமாய்ப் பலவருடம் முன் படித்திருக்கிறேன். அஃப் கோர்ஸ் ஞான ஒளி வந்த பிறகு தான்.. ஒரு ஆச்சர்யம் என்னவெனில் நடு நடுவில் நாடக் ஸ்டில்ஸூம் நாடக வசனங்களுடன் போட்டிருப்பார்கள்.. மேஜர் ந.தியை அப்படியே ரிஸெம்பிள் பண்ணுவார்..(லாரன்ஸ் காரெக்டருக்கு வீர ராகவன் என நினைவு)

    குடும்பம் ஒரு கதம்பம், அவள் சுமங்கலி தான் - நாடகமாய்ப் பார்த்திருக்கிறேன்.. பின் திரையில்

    கீழ் வானம் சிவக்கும் - அதுவும் முதலில் நாடகம் அப்புறம் சினிமா..

    பரீட்சைக்கு நேரமாச்சு..அதுவும் முதலில் நாடகம் அப்புறம் சினிமா.. (இந்த நாடகங்கள் எல்லாம் பார்த்தது மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில்..)

    சமீபத்தில் பரீட்சைக்கு நேரமாச்சு வை மறுபடியும் அரங்கேற்றியிருக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.. ந.தியின் ரோல் அவர்..அவர் நடித்த ரோல் வேறு யாரோ..

    சோவின் நாடகங்கள் பார்த்ததில்லை.. அவருடைய நாடகங்களில் படமான திரைப்படங்கள் உண்மையே உன்விலை என்ன , யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக்.. உ உ எவில் முத்துராமனின் ஃபாதர் ரோல் அண்ட் வி.கே.ஆரின் ஏன்னு கேளு நன்றாக இருக்கும்..திடுமென வரும் இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது (மதுண்ணா சமீபத்தில் போட்டார் போன பாக எண்டில்) வெகு அழகிய பாடல்..

    மெளலியின் சில நாடகங்களும் ல.சு. ஹாலில் பார்த்திருக்கிறேன்.. அதில் ஒன்று (பெயர் நினைவிலில்லை) மற்றவை நேரில் என்று படமானது.. இன்னொரு மறக்க முடியாத நாடகம் அவன் அவள் அது.. வெகு நல்ல நாடகம்..ஒரு ஹாஸ்பிடலையே கண் முன் கொண்டுவந்து காட்டியிருப்பார்கள்.. இதை ஏன் அவர் படமாக ஆக்கவில்லை எனத் தெரியவில்லை..அது மறக்காததற்கு இன்னுமொரு காரணம் 6 மணி நாடகம் என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்குத் தான் நாடகமே போட்டார்கள்..அந்த அது க்கான அர்த்தம் ஆதரவு என்று..(அவன் அவள் அது என்ற திரைப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •