-
25th October 2014, 08:50 AM
#11
Senior Member
Diamond Hubber
எல்லோரும் பார்க்கவேண்டிய ஒரு காணொளி(முதல் 32 நிமிடங்கள்). யூகிசேதுவின் நேர்காணலில் எஸ்.எஸ்.ஆர். எந்த வருடத்தில் இது நிகழ்ந்தது, அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு வயது என்ன எனத் தெரிந்து கொள்ள ஆசை.
நிதானத்துடனும் நினைவாற்றலுடனும் பலதரப்பட்ட அரிதான விஷயங்களை சுவையான வகையில் நகைச்சுவையோடு அசை போடுகிறார். தங்குதடையின்றி நாடக வசனத்தை பேசிக் காட்டுகிறார். பாடல் வரிகளை சந்தம் கலையாமல் பாடிக் காட்டுகிறார். சக நடிகர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய விஷயங்களையும் பகிர்ந்துகொண்டது கூடுதல் சிறப்பு.
எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ளும் குணத்தால் இவ்வளவு காலங்கள் மனதை இளமையாக வைத்திருக்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறது இக்காணொளி.
- எஸ்.எஸ்.ஆருக்கான திரி ஏதேனும் இருக்கிறதா என மையத்தில் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே. அதனால் இங்கேயே பதிவு செய்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th October 2014 08:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks