-
25th October 2014, 09:06 PM
#761
Senior Member
Senior Hubber
//போனஸா நான் தந்த ஒத்தெல்லோ ஸ்டில் எப்படி வாசு சார்..//
பூங்காற்று பத்தி முன்னாடி பார்த்தோம்.. இங்க ஒரு டூயட்..
பூவாடைக் காற்று தனனனா
வந்து ஆடை தீண்டுமே தனனனா..
மோகன் ராதா..கோபுரங்கள் சாய்வதில்லை..
http://www.youtube.com/watch?feature...&v=zC6jzVNb9UA
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2014 09:06 PM
# ADS
Circuit advertisement
-
25th October 2014, 09:10 PM
#762
Senior Member
Senior Hubber
வாடைக்காற்றுக்காக தேடினா இந்தப் பாட்டு சிக்கிச்சு.. நானே இதை இப்பத் தான் பார்க்கிறேன் கேட்கிறேன்.. பார்க்கையிலே லேசா வெயில் வந்துச்சு!
எஸ்.வி சேகர் ரூபிணி இன் வீட்ல எலி வெளியில புலி..
வாடைக் காற்று அம்மம்மா
ஆனாலும் நானும் பெண்ணம்மா
பார்த்து பார்த்து கண்ணம்மா
சூடாச்சு நெஞ்சும் உள்ளந்தான்..
http://www.youtube.com/watch?feature...&v=9PvIXTQLlwM
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2014, 09:12 PM
#763
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
முரளி சார் புகைபடத்ததை பார்க்கமுடியவில்லை
முரளி சார் இணைத்திருந்த போட்டோ...

நன்றி முரளி சார்..
வாசு சார்,
மேலே படத்தில் உள்ள டாக்டர் முத்துக்குமரன் அவர்களும், அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் சிவாஜி மன்ற தலைவராகவும் இருந்த டாக்டர் முத்துக்குமரனும் ஒருவர் தானா...அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாரல்லவா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2014, 09:18 PM
#764
Senior Member
Senior Hubber
//மாமா வீட்டுக் கல்யாணத்திலே
ஊர்கோலம் விட்டது போல// இது ஒரு துள்ளல் என்றால் அமைதியான மானஸ மதி வரு.. அது மென்மையான பாட்டு.. தாங்க்ஸ் வாசு சார்..
-
26th October 2014, 01:43 AM
#765
Senior Member
Veteran Hubber
More Kapi
From Sri Purandhara Dasaru(Kannada)(1967)
JagadodharaNa ...........by Purandaradhasa in Kapi:
Looks like DeepaavaLi feast was heavy for most!
No crowd here!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
26th October 2014, 05:29 AM
#766
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு வாசு சார் , திரு சின்ன கண்ணன் சார்
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி .

Last edited by esvee; 26th October 2014 at 05:35 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th October 2014, 09:36 AM
#767
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 5)

'ஆளுக்கொரு ஆசை'
என்னடா இப்படி ஒரு படமா என்கிறீர்களா? 1977-ல் முத்துராமன், ஜெயசித்ரா, அபர்ணா ஆகியோர் நடித்த வண்ணப் படம். நாயகன் முத்துராமன் எதற்கெடுத்தாலும் பட்ஜெட் போடும் கஞ்சக் கருமி. அவர் ஜோடி ஜெயசித்ரா. இளையராஜா இசை. மனுஷர் வாங்கு வாங்குவென்று வெளுத்து வாங்கியிருப்பார் பாடல்களில். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை இயற்றி இருந்தார்.
அபர்ணா வாணிஜெயராம் குரலில் பாடும்,
'மஞ்சள் அரைக்கும் போது
மதிலேறிப் பார்த்த மச்சான்
பாடலும்,
ஜானகி பாடும்
'வாழ்வென்னும் சொர்க்கத்தில்
உந்தன் பக்கத்தில்'
பாடலும் ஜோரான ஜோர்.
இரண்டிலும் ராஜாவின் ஆளுமை கொடி கட்டும்.
இப்போது தொடருக்காக இந்தப் படத்திலிருந்து இன்று இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.
முதலாவது.
இந்தப் படத்தில் பாடகர் திலகத்தை வைத்து மிக அழகான ஒரு பாடலைத் தந்திருப்பார் ராஜா.
'கணக்குப் பார்த்து காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது'
'நடுத்தரக் குடும்பத்துக்கு
பட்ஜெட் காலி இல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால்
எந்நாளும் தொல்லை'
டி.எம்.எஸ்.அனுபவித்துப் பாடியிருப்பார். மிக எளிமையான இசை. இந்தப் பாடல் ரொம்ப சுகமான சுகமாக இருக்கும். எனக்கு மிக மிக பிடித்த பாடல் இது. எல்லா செலவுகளையும் காதலி தலையிலேயே கட்டுவார் முத்துராமன். பாடல் அழகாகப் படமாக்கப் பட்டிருக்கும். ஜெயசித்ரா வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தில் கொஞ்சம் பூசினாற்போல் அழகாகவே தெரிவார். முத்துராமன் காதலிக்காக 'பொக்கே' வாங்கிக் கொண்டு பின்னால் கைகட்டி நிற்க 'பொக்கே' பூக்களை ஒரு ஆடு வந்து மேய்ந்துவிட, அது தெரியாமல் முத்துராமன் ஜெயசித்ராவிடம் பூக்கள் இல்லாத 'பொக்கே'யைத் தருவது நல்ல நகைச்சுவை.
Last edited by vasudevan31355; 26th October 2014 at 09:02 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2014, 09:39 AM
#768
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 6)

'ஆளுக்கொரு ஆசை'
இப்போது தொடரில் அடுத்த பாடலாக நாம் பார்க்க இருப்பது அதே 'ஆளுக்கொரு ஆசை' திரைப்படத்திலிருந்து ராஜாவின் அருமையான அரிதான டூயட். பாடல் முத்துராமனுக்கும், ஜெயசித்ராவுக்கும். ஜேசுதாஸும், சுசீலாவும் பின்னி எடுத்திருப்பார்கள். அதுவும் சுசீலா சுகமாகப் பாடுவார்.
பாடலின் டியூன் மிக அருமை. முதல் சரணம் தொடங்கு முன் டிரம்பெட் நடத்துமே ராஜாங்கம்.
'காதல் வரச்சொல்ல
கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ
யாரைத் தடுக்கிறது'
எனும் சுசீலா பாடும் சரண வரிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக அழகாக மெட்டுப் போட்டுத் தந்திருப்பார் இளையராஜா. . அதே போல ஜேசுதாஸ் பாடும் போதும். தென்றலாய் உள்ளம் வருடும் இசை. இந்தப் பாடலை நன்கு கவனித்தீர்களானால் ஒன்று நன்றாகப் புலப்படும். பின்னால் ராஜா இசையமைத்த 'முதல் இரவு' (1979) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்' பாடலின் சங்கதிகள் அனைத்தும் இந்தப் பாடலில் இருப்பதை உணரமுடியும். 'ஊ ஊ உ உ உ ஊ .... என்று 'முதல் இரவு' படப் பாடல் ஆரம்பிக்குமே அதே போல இந்தப் பாடலும் ஆரம்பத்தில் அப்படியே துவங்கும் சிறிய வித்தியாசங்களோடு. 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்' பாடல் ஜெயச்சந்திரன், சுசீலா பாடியது. என்ன இன்னும் இந்தப் பாடலை அனுபவத்தின் மூலம் மிகவும் மெருகேற்றித் தந்திருப்பார் ராஜா.
ஆனால் 'இதய மழையில் நனைந்த கிளிகள்' கொஞ்சமும் குறைவில்லாத அற்புத பாடல். அனேகமாக பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இப்போது கேட்டுப் பாருங்கள். அருமையை அட்டகாசமாக உடனே உணர்வீர்கள்.
இப்போது பெய்யும் இந்த மழையில் ராஜாவின் முத்தான 'இதய மழையில், மற்றும் 'கணக்குப் பார்த்து' இரண்டு இன்னிசை மழையையும் அனுபவித்து கேட்டு மகிழுங்கள். நாளை வேறு நல்ல பாடலோடு வருகிறேன்.
நிறைகுறைகளை கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Last edited by vasudevan31355; 26th October 2014 at 09:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2014, 10:05 AM
#769
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ராஜ்ராஜ் சார் எஸ்வி சார் வாசு சார்..
ஜகதோ தாரணா காபி ராகப் பாடல் காபி குடித்துக் கொண்டே கேட்டேன் ராஜ்ராஜ் சார்.. நைஸ்.. யெஸ்.. தீபாவளி மயக்கம் இருக்குமாயிருக்கும்..!
கல்யாண வளையோசை கொண்டு – ஆஹா ஜகதோ தாரணாவிற்கு அப்புறம் கேட்ட பாடல்.. ..தாங்க்ஸ் எஸ்வி சார்..(பர்த்டே பார்ட்டி எப்படி இருந்தது)
இதய மழை நனைந்த கிளிகள் பாட்டு கேட்டிருக்கிறேன் வாசுசார்..ஸோ ஸோ ஸாங்க் தான்..ஆறு ஜெ.சி நாலு ஜெ.சி யும் கஷ்டம் தான் ஆறு முத்து ராமன் நாலுமுத்துராமன் இன்னும் படுத்த்ல்..(அந்தக்கால காமெரா விளையாட்டு) கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது.. வும் சுமார் ரகம் தான்.. டி.எம்.எஸ் பாட்டெல்லாம் மனம் பாடுவது போலப் போடப்படாது.. அவர் பாடுவதை வாயசைத்துப் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்..ஆ..னா..ல் முத்துராமனுக்கு டி.எம்..எஸ் வாய்ஸ் பொருந்தாது.. தாங்க்ஸ் வாசு சார்..தெரியாத பாடல் சொன்னதற்கு..பின் குறிப்பு: ஆளுக்கொரு ஆசை பார்த்ததில்லை..!
Last edited by chinnakkannan; 26th October 2014 at 09:18 PM.
-
26th October 2014, 11:36 AM
#770
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்,
மேலே படத்தில் உள்ள டாக்டர் முத்துக்குமரன் அவர்களும், அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் சிவாஜி மன்ற தலைவராகவும் இருந்த டாக்டர் முத்துக்குமரனும் ஒருவர் தானா...அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தாரல்லவா...
முரளி சார்/ ராகவேந்திரன் சார்
கடலூர் பல் மருத்துவர் முத்துக்குமரன் வேறு. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முத்துக் குமரன் வேறு. நான் ஒரு தடவை பல் மருத்துவர் முத்துக்குமரனைச் சந்தித்திருக்கிறேன் மருத்துவ விஷயமாக. ஆனால் அவர் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்று தெரியாது. அவன் மகன் மருத்துவர் என்றும் சொல்லியிருந்தீர்கள். அவரும் நடிகர் திலகத்தின் தீவிர அபிமானி என்பதில் மிக்க சந்தோஷம். நான் நெய்வேலியிலேயே 22 வருடங்கள் தங்கி விட்டதால் கடலூர் அப்டேட்டில் இல்லை. நான் கடலூர் செல்லும் போது கண்டிப்பாக டாக்டரைச் சந்திக்க முயற்சி செய்கிறேன்.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி. முத்துக்குமரன் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அவ்வளவு குளோஸ். நடிகர் திலகம் எப்போது கடலூர் வழியாகச் சென்றாலும் தன் நண்பர் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்டார். முத்துக்குமரனின் மகன் மகி என்னும் மகேந்திரன் எனக்கு மிக நெருங்கிய நண்பர். 'இளையதிலகம்' பிரபுவும், மகியும் மிக நெருக்கம். என்னை பிரபுவிடம் சொல்லி அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தென் ஆற்காடு மாவட்டத்தின் அகில இந்திய பிரபு மன்ற செயலாளராக என்னை அப்போது பிரபு நியமித்ததே மகி என்ற இந்த மகேந்திரனால்தான்.
நடிகர் திலகம் முத்துக்குமரன் எம்.பி.அவர்களின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பாதுகாப்பு வளையம் அளிக்கும் பொறுப்பை மகி என்னிடம்தான் ஒப்படைப்பார். நானும், எனது நண்பர்களும் நடிகர் திலகத்தை பத்திரமாக எம்.பி. வீட்டுக்குள் ஒன்றாகக் கைகோர்த்தபடி சுற்றி நின்று அழைத்துச் செல்லுவோம். ஹாலில் உள்ள சோபாவில் முதலில் நடிகர் திலகம் அமருவார். எம்.பியும் நடிகர் திலகமும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வைத்த கண் வாங்காமல் நடிகர் திலகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எப்படியோ சேதி கேள்விப்பட்டு எம்.பி. வீட்டின் முன் திரளாகக் கூடி விடுவார்கள். இதில் பெண்கள் அதிகம் வருவார்கள். இதற்கே நடிகர்திலகம் ரகசியமாகத்தான் வருவார். பெண்கள் 'அதோ பாருடி சிவாஜி' என்று ஜன்னல் வழியே ஆச்சர்யத்துடன் எட்டிப் பார்த்து பேசிக் கொள்வார்கள். நான் நடிகர் திலகத்திடம் சென்று "அண்ணா! உங்களைப் பார்க்க தாய்மார்கள் வந்தருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அவர்களைப் பார்க்க வேண்டும்" என்று பவ்யமாகச் சொல்வேன். நடிகர் திலகமும் எழுந்து வந்து தாய்மார்களுக்கு வணக்கம் சொல்லி விட்டுப் போவார். தேர்தல் நேரங்களில் இந்திரா காங்கிரஸ் சார்பில் முத்துக்குமரன் போட்டியிடும் போதெல்லாம் அவருக்காக பிரச்சாரத்துக்காக வேண்டி நடிகர் திலகம் வந்துவிடுவார். அது மட்டுமில்லை. யார் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்றாலும் (பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் போன்றவர்கள்) அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் நடிகர் திலகம் முதலில் வருவது முத்துக்குமரன் எம்.பி..வீட்டுக்குத்தான்.
அப்படி ஒரு தடவை கடலூர் வரும்போது தன் தந்தையார் பற்றி நடிகர் திலகம் எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
"உங்க ஊர் பக்கத்திலிருக்கும் நெல்லிக்குப்பத்தில்தான் அப்பா வெள்ளைக்காரன் காலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் டைனமைட் வைத்து ரயிலைத் தகர்க்க முயற்சி செய்து கைதானார்'
என்று அவருடைய பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
பின் ஹாலுக்கு இடப்புறம் இருக்கும் டைனிங் ஹாலில் அமர்ந்து எம்.பியுடன் சாப்பிடுவார் நடிகர் திலகம். எம்.பி.யின். மனைவி, மகன் மகி இருவரும் விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைத்து வைத்து நடிகர் திலகத்திற்கு பரிமாறுவார்கள். நான் நடிகர் திலகத்திற்கு அருந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பேன். என்னுடைய நண்பன் வில்வராயநத்தம் ரவியும் என்னுடனேயே இருப்பான். எங்கள் இருவரை மட்டுமே டைனிங் ஹாலில் இருக்க சொல்லுவார் மகி. மற்ற நண்பர்கள் இதைக் கண்டு ரொம்ப பொறாமை கொள்வார்கள். நடிகர் திலகம் செம ஜாலியாக நகைச்சுவையுடன் பேசியபடி சாப்பிடும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்போம். கையில் சாப்பாட்டைப் பிசைந்து எடுத்து, நண்பன் முத்துக்குமரனின் வாயில் ஊட்டியபடியே "சாப்பிடு எம்.பி சாப்பிடு" என்று நையாண்டி நக்கலோடு அவர் பண்ணும் சேட்டைகளைப் பார்க்க வேண்டுமே!
'சொஜ்ஜி' என்று நான் செல்லமாக அழைக்கும் என் நண்பன் கணபதிராமன் ஒருமுறை ஒரு வேலை செய்துவிட்டான். ஒருமுறை நடிகர் திலகம் இவ்வாறு கடலூர் வந்த வேளையில் வாசலில் அவர் விட்டிருந்த வெள்ளை நிற காலணியை நைஸாக சுட்டுவிட்டான். நான் அதை தற்செயலாகப் பார்த்து விட்டு, அவனை சத்தம் போட்டு விட்டு, அந்தக் காலணிகளை பத்திரமாக ஒரு துணிப் பைக்குள் போட்டுக்கொண்டு கையிலேயே வைத்துக் கொண்டேன். அவனுக்கோ செம கடுப்பு. "ராமர் பாதுகை மாதிரி நடிகர் திலகத்தின் காலணியை என் வீட்டின் பூஜை அறையில் வைத்து தினம் தினம் பூஜை செய்ய நினைத்திருந்தேனே ! கெடுத்துத் தொலைத்தாயே" என்று என் மேல் எரிந்து விழுந்தான். (இன்றுவரை அதை சொல்லி சொல்லி என்னைத் திட்டுவான். போனில் பேசினாலும் இதே புலம்பல்தான்)
பின் நடிகர் திலகம் கிளம்புவதற்கு முன்னால் அவரது காலணியை வாசலில் வைத்தேன். வெளியே அவர் வரும் போது ஒரு வெள்ளை கதர் துண்டை அவருக்கு அணிவிக்க அவரை நிறுத்தினேன். "என்ன?" என்று செல்லமாக முறைத்தவருக்கு துண்டைப் போட்டேன்.
"வழக்கமா மாலையைப் போட்டு இம்சை பண்ணுவே! இப்போ என்ன துண்டு!" என்றார் அவர்க்கே உரிய நக்கலான நகைச்சுவையோடு.
மாலையில் கண்ட தண்ணீரையும் தெளித்து வைத்து வியாபாரிகள் விற்பதால் அதை நடிகர் திலகத்திற்கு போடும் போது அவருக்கு அலர்ஜியாகி சளி, தும்மல், ஜலதோஷம் என்று அவர் அவதிப்படுவதாக நடிகர் திலகத்தின் உதவியாளர் குருமூர்த்தி ஒருமுறை எங்களிடம் 'அன்னை இல்லம்' போகும் போது சொல்லியிருந்தார். அப்போது நான் வாங்கிக் கொண்டு சென்ற மாலையை 'நடிகர் திலகத்திற்கு போட்டே தருவேன்' என்று அடம் பிடித்தேன். "யாராவது ஒருவர் மட்டும் மாலை போடுங்கள்.... மற்றவர்கள் போட வேண்டாம்... அவருக்கு அல்ர்ஜியாகும்" என்று உதவியாளர் கேட்டுக் கொண்டதின் பேரில் அனைத்து நண்பர்களின் வயிற்றெரிச்சலுடன் நான்தான் நடிகர் திலகத்திற்கு முதல் மாலை அணிவித்தேன். (ஒவ்வொரு முறையும் அன்னை இல்லம் போகும் போது முதல் மாலை என்னுடையதுதான்). அன்று முதல் நிலைமையை புரிந்து கொண்டு நடிகர் திலகத்திற்கு மாலை அணிவிப்பதை நிறுத்தி கதர் துண்டையே அனைவரும் அவருக்கு அணிவிக்க ஆரம்பித்தோம். இப்போது புரிகிறதா நடிகர் திலகம் ஏன் அந்த கேள்வியை என்னிடம் கேட்டார் என்று!
இது போன்ற நடிகர் திலகத்திற்கு சேவை செய்யும் பெரும் பாக்கியம் சில சமயங்கள் எனக்குக் கிடைத்தது நான் செய்த புண்ணியம்தான் என்று சொல்ல வேண்டும். அதில் குறிப்பிட்ட ஒன்றைத்தான் இங்கு சொல்லியிருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.
நன்றி முரளி சார். ராகவேந்திரன் சார். பழைய நினைவலைகளை கிண்டிக் கிளறி விட்டீர்கள். நடிகர் திலகத்துடன் நான் இருந்த சில மணித்துளிகள், அவருடனான என்னுடைய சில அனுபவங்கள் என் நெஞ்சில் இப்போது நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. என் கம்ப்யூட்டர் அறையில் எனக்கு முன்னால் பளீரென நெற்றியில் திருநீறுடன் கள்ளம் கபடமில்லாமல் குழந்தை போல சிரித்துக் கொண்டிருக்கும் என் இதய தெய்வத்தின் படத்தை பார்த்தபடியே, மனதுக்குள் பூஜித்தபடியே, கண்களில் கண்ணீருடன் இந்தப் பதிவைப் பதிந்து தற்சமயம் முடிக்கிறேன்.
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks