Page 92 of 397 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

    பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். நேதாஜி என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.

    சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், வாலியான ரகசியம் இதுதான்.

    சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ஆண்டவனே என்பார். சிவாஜிக்கோ இவர் வாத்தியார். வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.

    விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.

    காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.

    வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே என்பார் பெருமையாக.

    தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

    கோபம் அதிகம். பாரதவிலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம் என்றார் சூடாக!

    15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். வடைமாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

    பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் உள்ள வரை வாலியின் பாடல்கள் ஒலிக்கும் : இளையராஜா பெருமிதம்

    சென்னை : ''கவிஞர் வாலி மறைந்தாலும், இந்த உலகம் உள்ள வரை, அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்,'' என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

    வாலி பதிப்பகம் சார்பில், கவிஞர் வாலியின், 83வது பிறந்த தினம், சென்னையில் கொண்டாடப்பட்டது. பிறந்த தினத்தை முன்னிட்டு, சினிமா பாடலாசிரியர் காமராசன், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோருக்கு, வாலி விருதுகள் வழங்கப்பட்டன.
    மக்கள் மனதில் விருது வழங்கிய, இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: தமிழ் சினிமா எண்ணற்ற பாடலாசிரியர்களை பார்த்துள்ளது. இதில், நிலைத்து நிற்பவர்கள் சிலர் தான். அதுவும், மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் மிக சொற்பம். அந்த வரிசையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றவர்கள் உள்ளனர். என்றும் இளமை துள்ளலுடன், திரை பாடல்களை தந்தவர் வாலி. அவர் மறைந்து விட்டாலும், இந்த உலகம் உள்ளவரை, வாலியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி, கமல் என, தமிழ் மக்கள் மத்தியில் என்றும் கதாநாயகர்களாக இருப்பவர்களுக்கு எல்லாம், வாலி பாடல் எழுதியுள்ளார். அவர்களுக்கு, எழுதிய பாடல்களைத் தொகுத்து, நுால்களாக வாலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சிக்கு உரியது.
    இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், நடிகர் விவேக், பாடலாசிரியர் பழனி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றன

  4. Likes rajeshkrv liked this post
  5. #913
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 11)



    'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் சிவக்குமாருக்கும், சுமித்ராவுக்குமான காதல் டூயட். அப்போது இப்பாடலை வித்தியாசமான ஒரு பாடலாக உணர முடிந்தது.

    ஜெயச்சந்திரனும், வாணிஜெயராமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.

    'நானனானனானனானனா' என்று வாணி அருமையாக ஹம்மிங்குடன் ஆரம்பிக்க, 'சிம் சிம்ஜும்' கூடவே ஆண்குரல் ஒலிக்க, கடற்கரையில் காதலர்கள் பாடும் கானம்.

    பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில்.

    'பூந்தென்றலே!
    நல்ல நேரம் காலம் சேரும்
    பழகிய பலன் உருவாகும்
    பாடி வா பாடி வா'

    சிவக்குமாரும் குள்ளம். சுமித்ராவும் குள்ளம். ஜோடியும் ஜோர்.

    'பாலில் நெய்த இளமேனி
    பருவம் விளையாடும்
    பொன் மேடை மேனியெங்கும்
    நாதம் உருவாகும்'

    அமர்க்களமான சிந்தனை.

    வாணியின் குரல் மயக்கம் தரும்.

    பாடலின் முடிவில் ஆண்குரல் 'பூந்தென்றலே' என்று ஒலிக்க கூடவே 'லல்லல்லலாலலால... லல்லல்லலாலலால' என்று வாணிஜெயராம் பல தடவை ஹம்மிங் கொடுத்துக் கொண்டே வருவது இப்பாடலுக்கு சிகரம் வைத்தாற்போன்ற அழகு.


    Last edited by vasudevan31355; 31st October 2014 at 06:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes kalnayak, chinnakkannan, Russellmai liked this post
  7. #914
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்

    பாடகர் திலகம் நடித்து பாடும் அற்புத பாடல்.

    'கல்லும் கனியாகும்' படத்தில். மீசையும், தாடியுமாக வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கும் டி.எம்.எஸ். ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அங்கிருக்கும் குழந்தை அவரை பாடச் சொல்லி வற்புறுத்த, பாடகர் திலகம் சோகமே உருவாக பாட மறுத்து பின் இணங்க, அங்கிருக்கும் அகந்தை குமபல் அவரை நையாண்டி செய்து கை கொட்டி சிரிக்க, பாடகர் திலகம் கொட்டாங்கச்சி வயலின் இசைத்து பஞ்சடைந்த கண்களுடன் அழுதபடியே பாடும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.

    நாடி நரம்புகளெல்லாம் புகுந்து நம் மனதை கலங்கடிக்கும் பாடல். சரண வரிகளைக் கேட்டு கலங்காத மனம் இருக்கவே முடியாது.

    டி.எம்.எஸ் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடல்.

    கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல் நெஞ்சில் நிலையாக நிற்கும் பாடல்.

    எங்கே நான் வாழ்ந்தாலும்
    என்னுயிரோ பாடலிலே
    பாட்டெல்லாம் உனக்காக
    பாடுகிறேன் என்னுயிரே

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes kalnayak, chinnakkannan, Russellmai liked this post
  9. #915
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் வாசகாஸ்..! எப்படி இருக்கேள்… ரெடியா இருக்கேளா.. கம் ஸிட் ஆன் மை டைம் மெஷின்..

    எங்கிட்டுப் போ’றோமா எண்பத்தொம்பதாம் வருஷம் போகணும்.. யெஸ் யெஸ்..வெய்ட் வெய்ட்.. இந்த ரெயில்வே ஸ்டேஷன் தான்..பேரென்ன.. ஓ.கே..அவ்வளவா சரியாத் தெரியலை..லொகேஷன் பெட்வீன் நெல்லை அண்ட் நாகர் கோவில்..ஓ.கே..

    ஸ்டேஷன்ல இருக்கற ஒரு ட்ரெயின்ல ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க பெண்மணி இருக்காங்க..பார்த்தீங்களா..யா.. வெளில யாரையோ பார்த்துக்கிட்டிருக்காங்க.. அவங்க புருஷன் தான்..

    பார்த்துட்டாஙக.. ஜன்னல் வழியா வெளியில இருக்கற புருஷன் கிட்டக்க “ என்னங்க தேடியது போதும்.. உள்ள வாங்க”

    “கொஞ்சம் இரும்மா..அந்தப் பையனோ ஒண்ணும் தெரியாத பையன்..பஸ்ஸ வேற மிஸ் பண்ணிட்டான்..கொஞ்சம் இரு தேடிப்பார்க்கறேன்..”

    அந்த வயதான புருஷன் தேடித்தேடி அலைபாய்ந்தவண்ணம் இருக்க ட்ரெயினுக்கும் விதிக்கும் பொறுக்கவில்லை.. பாங்க்க் என்றுகத்தி மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்க இங்கே ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்மணி என்னங்க வாங்க ஏறுங்க என க் கத்த அந்தப் புருஷனும் வேக வேகமாக ஓடி வேகம் பிடித்திருந்த வண்டியில் ஏ…றி…த் தொ..ற்..றி…

    இல்லை…

    தொற்றமுடியவில்லை.. வழுக்கி தொபீலென தண்டவாளத்திலேயே விழுந்து வழுக்கி ரயில் சக்கரத்தால் உள்ளிழுக்கப் பட்டு ……… ஒரு ஆ ஆ ஆ..அலறல் மட்டும்…

    பார்த்த கேட்ட பெண்மணியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன..யாரோ செய்ன் அழுத்த ட்ரெய்ன் மெல்ல மெல்ல நின்றது..

    (ஏங்க்க இப்படி பேஸ்த் அடிச்சுக்கினு டைம்மெஷின்ல உக்காந்த்திருக்கீங்க…ஆரம்பத்திலேயே முடிவுன்னா.. சரி சரி.. வாங்க கொஞ்சம் இன்னும் பின்னால போலாம்..)

    யெஸ்..

    வருடம் 1955..

    நமஸ்கார மண்டி

    நமஸ்காரா…

    சொன்ன ஆண்மகனுக்குள் சிலிர்த்தது.. மூன்று வருடங்களாய் மனதிற்குள் பாடி வரும் குரல்..குரலுக்குச் சொந்தக் காரியும்.. அவளுடனேயே பாட வேண்டிய வாய்ப்பு..

    சொல்லி விடலாமா..

    இசையமைப்பாளர் வந்து விட…”ரிகர்சல் பண்ணிப் பாத்துக்குங்கப்பா”

    இருவரும் பாடிப் பார்த்துக் கொள்ள…ரெடி..டேக்..

    ஒரு நிமிஷம் ..என்றான் பாடகன் பாடகியிடம்.. உங்களோட பாடற பேப்பர்ல சில வரிகள் இல்லை போலிருக்கே…

    பதினெட்டு வயது இளம் பாடகிக்குத் திகைப்பு.. குற்றமா என் பேப்பரிலா யார் சொன்னது..பதின்மூன்று வயதில் பாட வந்தவள்யா நான்.. பாடிய இரு பாடல்க்ளும் ஹிட்டாக்கும்.. அதன்பிறகு ஏகப்பட்ட பாடல்கள்..ம்ம் சரி இருக்கட்டும்…பாட வேண்டிய பாடல் தான் மனதிற்குள் மனனம் ஆகி விட்டதே..மைக் பிடித்தால் மழையென வெளியிலிருப்பவர்களின் செவிகளில் விழுந்து விடுமே..இவன் யாரு.. தெலுகு தான் .. இவனும் மியூசிக் டைரக்டர் தான்..அதற்காக..

    என்ன சொல்றீங்க… சற்றே கோபமாய்க் கேட்டது வீணை..

    இந்தாங்க இந்தப் பேப்பர்ல் அது இருக்கு…

    கொஞ்சம் தயங்கி பின் வாங்கிப் பார்த்த விழிகளில் சற்றே வியப்பு பின் அகன்று வெட்கம்…

    “உங்களைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன்.. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா..” என்ற வரிகள் பேப்பரில் அதுவும் தெலுங்கில்..

    சற்றே மயில் அஞ்சனக் கண்களை எதிரிலிருந்தவனிடம் வீசியது.. அழகாய்த் தான் இருக்கிறான்.. ஒரே துறை.. நன்றாகவும் சம்பாதிக்கிறான் என இசை அமைப்பாளர் சொல்லியிருக்கிறார்.. நானும் பாடகி தான்.. பொருத்தம் தான்..சமர்த்து அழகாய்க் கேட்டிருக்கிறதே காதலை காகிதத்தில்..

    நீளமான மெளனத்தை, மெளனத்தில் தெறித்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை பாடகனால்..

    என்னங்க வரிகள் நினைவுக்கு வந்துடுச்சா..

    களுங்க்… கண்ணாடிக் கிண்ணத்தில் ஐஸ்கட்டியின் மோதல்…அவளின் சிரிப்பு..

    உங்களோட அப்பா பெயர் என்ன…

    அவனிடம் மறுபடி திகைப்பு.. எதற்கு அப்பாவைப் பற்றி விசாரணை..

    :அப்பா பேரு மன்மத ராஜூ அம்மா பேரு லட்சம்மா..”

    ஓஹோ மன்மத ராஜகுமாரனா நீங்க” மறுபடியும் களுங்க்.. பார்த்த விழிகளில் வெட்கம்… ஸர்ப்ரைஸாகக் கேள்வி கேட்காமல் குடியேறிய காதல்..மயக்கம்..

    அவனுக்கும் சிரிப்பு..ராஜகுமாரன் தான்..ஆனால் நானும் ராஜா தான்.. ஏமல மன்மத ராஜூலு ராஜா.. ஏ.எம்.ராஜா க்ருஷ்ணா..

    ம்ஹூம்.. உதடு சுழித்தது தேவதை.. “கால் மி அஸ் ஜிக்கி.. உங்கள் ஜிக்கி..”

    அப்புறம் என்ன சில பல சந்திப்புகள்

    ஒரு சந்திப்பில்…

    “ராஜா”

    ”செப்பு”

    சொப்புவாய் செப்பியது…” உங்களைப் பற்றிச் சொல்லுங்க்ளேன்..”

    “அடிப்பாவி.. இவ்ளோ லேட்டாவா.. அடியேன் பிறந்தது ரேணுகாபுரம் படித்தது பச்சையப்பா..இசைப்போட்டியில் பரிசுகள் ஹெச்.எம்.வி இரண்டுபாடல்கள் இசைக்கக்கேட்டு வாங்கி வானொலியில் போட்டு அவை பிரபலம்....பின் சினிமாவில் எஸ் எஸ் வாசனுடன் அறிமுகம்.. சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்னு பாட்டு ஃபேமஸ்.. பெற்ற தாய்படத்தில் ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு என்று பி.சுசீலாவுடன் பாடிய பாடல் ஹிட்.. பி.சுசீலாவிற்கு அது தான் முதல் பாடல்.. பின்….

    பேசும் யாழே பெண்மானே என உனைக் கண்டேன் …அப்பொழுதே நான் நீ என இருந்தது நாம் என்றானது.. ஆக்கியது ..விதி தான்.. பின்.. பல பாடல்கள் மு.க சு ஓகேயா..”

    “ஓகே தான் என்றது கிளி.. பின் 1958 இல் திருமணம்…

    கல்யாணப் பரிசு ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியது.. எவ்வளவு பாடல்கள்.. அத்தனையும் இனிமை…

    (யோவ் டைம் மெஷின்.. அம்பத்தஞ்சுலயே நின்னுட்டுக் கதை சொல்ற..அட்லீஸ்ட் எங்கிட்டாவது கூட்டுக்கிட்டுப் போப்பா….58ல் கல்யாணச் சாப்பாட்டுல என்னெல்லாம் ஐட்டம் இருக்கும்..அதுவும் தெலுங்கு கல்யாணத்துல..

    மக்கள்ஸ் ஸாரி.. பசிச்சதுன்னா குட் டே காஜூ பிஸ்கட்ஸ் சீட் அடில இருக்கு எடுத்துக்கோங்க..வித்யாசமா வேணும்னா குச்சி ரொட்டி குருவி மிட்டாய் அடுத்த ப்ரேக்ல வாங்கித் தர்றேன்! இப்ப கல்யாணமில்லை.. ரெகார்டிங்க் ஸ்”டூடியோ…)

    “ராஜா.. ராஜா..சொல்றதைக் கேளுங்க.. இதோ எல்லாப் பாடல்களூம் அற்புதமா வந்திருக்கு இந்தப் படத்துல.. ஒரே ஒரு பாட்டுல வரில கவிஞர் கொஞ்சம் நீளமா ஒரு வார்த்தை கொடுத்திருக்கார்.. கொஞ்சம் அதுக்கு ஒரே ஒரு தடவை மாறுதல் செஞ்சுடுங்களேன்”

    “ஸ்ரீதர் அண்ணா.. என்னோட முதல் படம் கல்யாணப் பரிசு மியூசிக் டைரக்டரா..உங்களுக்கும் அது தான் முதல்..அதுலருந்து நாம நிறைய படத்துல ஒர்க் பண்ணியிருக்கோம்..உங்களுக்கே தெரியும்..ஐ. நெவர் காம்ப்ரமைஸ் ஆன் மை ஒர்க்.. ட்யூனே நல்லா இல்லைன்னா சொல்லுங்க முழுக்க மாத்தறேன்..பட்..ம்ஹூம் நோ..”

    “ராஜா.. நீ ஒண்ணும் இசைக்கு ராஜா இல்லை.. மியூசிக்ங்கறது தெய்வம்.. அது உனக்கு வசப்பட்டிருக்கு ஆனா அதோட கூட கர்வம் அதுவும் உன் வசம்.. ரெண்டுல ஒண்ணு தான் ஒருத்தர் கிட்ட நிரந்தரமா இருக்கும் புரிஞ்சுக்கோ..”

    “அண்ணா ஒங்க மேல மரியாதை நிறைய இருக்கு..அதுக்காக நீங்க இப்படி எல்லாம் திட்டப்படாது.. “

    “அப்படித்தான் சொல்வேன்..இப்ப மாத்தறியா இல்லையா..”

    “ம்ஹூம்..குரு..ஐம் சாரி டு ஸே திஸ்.. இனி உங்க படங்களுக்கு இசை அமைக்க மாட்டேன் இந்தப்படத்துக்கும் தான்..” ராஜா வேகமாக வெளியேறினார்..

    //அச்சோ..இப்படிக் கோச்சுண்டுட்டாரே.. ஆமா என்ன படம் இது..டைம் மெஷின்..

    தேன் நிலவு..

    அப்புறம் படம் எப்படி முடிஞ்சுது வேற மியூசிக் டைரக்டரா..இருக்காதே டைட்டில்ல ஏ.எம்.ராஜா தான் வருதே..”

    “இல்லை அப்புறம் எம்.ஜி.ஆர் தான் சமாதானப் படுத்தி முழுப்படத்துக்கும் இசையமைக்க வைத்தாராம் ஏ.எம்.ராஜாவை..” /

    அப்புறம்..

    அப்புறம் என்ன..காலம் மாறிண்டே இருந்துச்சா ராஜாவுக்கு வாய்ப்புகள் குறைந்தது..மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தேன் பால் பலா தடவி பாட்டுகள் தர.. அவை ஃபேமஸ் ஆகி சக்கைப் போடு போட ஏ.எம்.ராஜா விற்கு மலையாள உலகம் அழைத்தது.. அங்கும் பல பாடல்கள்.. அதற்கப்புறம் மெல்லிசைக் குழு என ஆக இருந்தார்..

    இந்த வி.குமார் தான் அவரை மறுபடியும் அழைத்து முத்தாரமே என் ஊடல் என்னவோ என ரங்கராட்டினம் படத்தில் பாடவைக்க சங்கர் கணேஷ் செந்தாமரையே செந்தேன்மழையே பொன்னோவியமே கண்ணே வருக என ப் பாடவும் இசையமைக்கவும் புகுந்த வீட்டில் வைத்தார்…

    “எதுக்கு சங்கர் கணேஷ் அவரோட மாமியார் வீட்டில ஏ.எம் ராஜாவை வைக்கணும்”

    “ஓ..புகுந்த வீடுங்கறதுபடத்தோட பேருங்க.. அதுக்கப்புறம் சில படங்கள் இசையும் அமைத்தார்..சில பாடல்களும் பாடினார்.. அப்புறம் தான்..

    அப்புறம் தான் 89ன் விபத்து ஒரு சிறந்த இசையமைப்பாளரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது..

    ஜிக்கி..

    வாங்க.. 2004க்குப் போவோம்..ஆனா டைம் மெஷின்ல இருந்து இறங்க வேண்டாம்..)

    2004 ஜூலை..

    பிள்ள வாளு கஜபதி கிருஷ்ண வேணி என்ற முழுப்பெயர் கொண்ட ஜிக்கியம்மாவா இது..அறுபத்தேழு வயது தான்..ஆனால் ஹாஸ்பிடலில்..

    (என்ன டைம் மெஷின் இது..

    ஆமாம்..ஒரு வலைப்பக்கம் ஜிக்கி புற்று நோயால் கொஞ்சம் சிரமப்பட்டு நம்மை விட்டு மறைந்தார் எனச் சொல்கிறது.ம்ம் அவரும் நல்ல பாடகி..இருவருக்கும் ஆறு குழந்தைகள்..எவ்வளவு பையன் எவ்வளவு பெண் என்ற விபரம் தெரியவில்லை..

    சரி சரி வாங்க..2014க்கு ப் போலாம்)

    ஆக ஏ.எம் ராஜா ஜிக்கி மறைந்தாலும அவரது/அவர்களது பாடல்கள் மனதை விட்டு நீங்காதவை.. எனக்குப் பிடித்த சில பாடல்கள்..

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு ஏ.எம்.ராஜா பி.சுசீலா

    காவேரி ஓரம் கவிசொன்ன காதல் – ஏ.எம். ராஜா இசை பி.சுசீலாம்மா

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

    தென்றல் உறங்கிய போதும்..

    கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் – வாகீச்வரி ராகம்

    காலையும் நீயே மாலையும் நீயே ஹம்ஸத் வனி

    கண்ணும் கண்ணும் கலந்து – வ.கோ.வா.. ஜிக்கி சுசீலா..

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் – ஜிக்கி

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே…

    இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. எனில் ஒரு நல்ல இசையமைப்பாளர் + நல்ல பாடகி யை நினைவு கூர்ந்த திருப்தியில் இதை முடிக்கட்டா…

    ஓ நோ வீடியோஸ் ரெண்டே ரெண்டு பாட்டு.. ஓகே..

    காவேரி ஓரம் கவி சொன்ன காதல்..



    (ஒன்னைய அடிக்கணும்டா..

    ஏன் மன்ச்சு..ஓரளவு சுமாரா எழுத ட்ரை பண்ணியிருக்கேன் தானே..

    சும்மா இப்படிக் கதை அடிக்காதே.. நான் சொல்லவந்தது என்னன்னாக்க ஏ.எம். ராஜா இசையமைச்சதத் தான் முதல்ல போடணுமா..என்ன..அவர் பாட்டுப் போடலாம்ல..எல்லாம் ஸெல்ஃபிஷ் தனம்..

    செல்பி தெரியும் அது என்ன ஸெல்ஃபிஷ்தனம் ஓ சுய நலமா இதுல என்ன அப்படி இருக்கு..

    தேவிகா பாட்டைப் போட்டுட்டியே..

    சர்ரோ தானே பாடுது. தேவிகா ஆடறாங்க தானே...எப்பவும் குத்தம் சொல்லிண்டே இருக்காத.. இப்ப அடுத்த பாட்டு)

    தேன் உண்டும் வண்டு..



    அப்புறம் வரட்டா..

    (எழுத உதவியவை..விக்கிப் பீடியா, வண்ணத்திரை பாட்டுச்சாலை .3.11.14 இன்னும் சில வலைப்பக்கங்கள் + சி.க வின் மசாலா! )

  10. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  11. #916
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்

    'பாபுஜி தீரே சல்னா'

    கியா சாங்! கீதா தத்தின் காந்தமாய் இழுக்கும் குரலில் 'Aar Paar' (1954) படத்தில் ஷகீலா ஆடும் மேற்கத்திய பாணி கிளப் நடனம். ஓ.பி.நய்யாரின் மனம் மயக்கும் இசையில்.

    கீதா தத்துக்கே முழு கிரடிட்டும் போய் சேரும்.

    சலிப்பு என்பதே ஏற்படச் செய்ய முடியாத சாகாவரம் பெற்ற பாடல்.

    Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna....

    Kyon Ho Khoye Hue, Sar Jhukaaye, Jaise Jaate Ho Sab Kuchh Lutaaye
    Yeh Toh Babuji Pehla Qadam Hai, Nazar Aate Hain Apne Paraaye
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna....

    Yeh Mohabbat Hai O Bhole Bhale, Kar Na Dil Ko Ghamon Ke Hawaale
    Kaam Ulfat Ka Naazuk Bahut Hai, Aake Hothon Pe Tootenge Pyaale
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna....

    Ho Gayi Hai Kisi Se Jo An-Ban, Thaam Le Doosra Koi Daaman
    Zindgaani Ki Raahein Ajab Hain, Ho Akela Toh Laakhon Hain Dushman
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna, Pyaar Mein Zara Sambhalna
    Haan Bade Dhokhe Hain, Bade Dhokhe Hain Iss Raah Mein
    Babuji Dheere Chalna!

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks kalnayak thanked for this post
  13. #917
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..அதான் நேத்திக்கே சொன்னேனே.. பூந்தென்றலே பாட் மட்டும் நினைவுக்கு வரலை..வீடியோவிற்கும் ரைட் அப்பிற்கும் ஒரு ஓ… பாடகர் திலகம் பாட்டுக்கும் நன்றி..

  14. #918
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையாங்க்.. பாபுஜி தீரே சல்னா எனக்கும் பிடிக்குமே இப்போ தான் பார்க்கிறேன் பாடலை.... தாங்க்ஸ் அகெய்ன்.. கீதா தத் இப்பத் தான் கேள்விப் படறேன்.. வேறென்ன பாடல்கள்..

  15. #919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஹையாங்க்.. பாபுஜி தீரே சல்னா எனக்கும் பிடிக்குமே இப்போ தான் பார்க்கிறேன் பாடலை.... தாங்க்ஸ் அகெய்ன்.. கீதா தத் இப்பத் தான் கேள்விப் படறேன்.. வேறென்ன பாடல்கள்..


    அற்புதங்கள் கொட்டிக் கிடக்கு சி.க.சார். ஒவ்வொன்னாத் தாரேன். தேங்க்ஸ்ங்கோ. உங்க பதிவை இன்னும் படிக்கல்ல. படிச்சுட்டு சொல்லுதேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post
  17. #920
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கீதா தத் கொஞ்சம் ஈ.வி.சரோஜா சாயலில் இருப்பார். சி.க சார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •