-
7th November 2014, 11:24 PM
#11
Senior Member
Seasoned Hubber
நண்பர் sss என்ற சுந்தரபாண்டியன் அவர்களின் மீள்பதிவுகள் நண்பர் மருத்துவர் சாந்தாராம் அவர்கள் வேறோர் இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள். மருத்துவர் சாந்தாராம் சென்னையின் மிகச் சிறந்த மருத்துவர்களுள் ஒருவர். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பின் பால் ஈடுபாடு கொண்டவர், மிகவும் ரசிப்பவர். அடியேனுக்கும் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கும் சிறந்த நண்பர் மருத்துவர் சாந்தாராம் அவர்கள். தமிழ்த்திரையுலகின் பல்வேறு துறைகளில் விற்பன்னர்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து எழுதி வருபவர். நம்முடைய மற்றோர் ஹப்பரும் யூட்யூப் இணைய தளத்தில் ஏராளமான பழைய பாடல்களின் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளவருமான பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி அவர்களுக்கும் உற்ற நண்பராவார் சாந்தாராம் அவர்கள்.
திரு சாந்தாராம் அவர்களின் எழுத்து நடை படிப்போரை எளிதில் கவரும் தன்மையுடையவை. நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய அவருடைய அருமையான தொகுப்புகளை இங்கே பகிர்ந்து கொண்ட திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ளும் இதே நேரத்தில் நம்முடைய மருத்துவர் சாந்தாராம் அவர்களையும் இம்மய்யத்தில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழ்த்திரையுலகைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
வாருங்கள் மருத்துவர் சார். இம் மய்யத்தில் தங்கள் பங்களிப்பினை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th November 2014 11:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks