-
8th November 2014, 12:04 PM
#11
Junior Member
Veteran Hubber
நம் திரியின் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர்தான் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் முதல் இடத்தில் இருந்தவர். திரையுலக வசூலிலும் சரி அரசியல் வெற்றியிலும் சரி இவரது இடத்தை நிரப்ப இதுவரை ஒருவரில்லை. அப்படிப்பட்ட நமது மக்கள் திலகம் அவர்கள் தனது மனித நேயத்தினால் மனிதப் புனிதராகி உலகத் தமிழரின் உள்ளங்களில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தன்னிகரில்லா நம் தலைவரை, எங்கள் இதய தெய்வத்தை யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும், மற்றொரு திரியில் கூறப்படும் கருத்துகளுக்கு இங்கே விளக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரிகளின் தரம். அந்த தரத்தை இங்கே பதிவிட்டு நம் திரியின் வேகத்தையும், புனிதத்தையும் கெடுத்து விடவேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th November 2014 12:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks