-
18th November 2014, 07:21 PM
#1361
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மதுர கானம் திரிக்கு வருகை தந்த உங்களுக்கு நன்றி . உங்களுக்கு பிடித்தமான பாடல்களை உங்களுக்கே உரிய நடையில் பதிவிடவும் .
-
18th November 2014 07:21 PM
# ADS
Circuit advertisement
-
18th November 2014, 07:48 PM
#1362
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு. எஸ்.வி. சார்,
இங்கே பலருக்கும் பிடித்த இசையரசி சுசிலாவின் குரலில் எனக்கும் மயக்கம் உண்டு. மக்கள் திலகம் நடித்த நீதிக்குப் பின் பாசம் திரைக் காவியத்தில் இசையரசி பி.சுசிலாவின் தேவகானக் குரலில் கவியரசரின் எழிலார்ந்த வார்த்தைகளில் மாமா மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் இடம் பெற்ற வாங்க வாங்க கோபாலய்யா... வழக்கு என்ன கேளுங்கய்யா பாடல் என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல். பல்லாண்டு வாழ்க படத்தில் மாசி மாசக் கடையிலே மச்சான் வந்தாரு.. பாடலும் சற்று இதே சாயலில் இருக்கும். அதற்கும் மாமாதான் இசை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color]
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th November 2014, 09:14 PM
#1363
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு,
இங்கே இப்போது பலரும் விவாதித்துக் கொண்டிருக்கும் அவள் அப்படித்தான் படத்தின் இயக்குநர் சி.ருத்ரைய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
18th November 2014, 09:39 PM
#1364
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Stella_Rock
Mr. Rajesh,
Thanks for rendering suprb songs of Deva sir.
I think you are coming year-by-year from his beginning.
Deva sir composed very beautiful songs with melody, but everyone branded him as 'Gana Deva' which is a wrong phrase.
Your rendition breaks that talk and bringing his wonderful melodies.
I am waiting when you will come for 1996 songs particularly the one and only Kaadhal Kottai, in which all songs are superb and variety.
The composing of the title song of kaadhal kottai 'Kaalamellaam kaadhal vaazhga' will take me out of the world whenever I here the song.
thanks again
regards
stl
ஸ்டெல்லா உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆம் ஆண்டின் வரிசையில் தான் அவரது பாடல்களை தொகுத்துக்கொண்டிருக்கிறேன்
-
19th November 2014, 08:42 AM
#1365
Senior Member
Diamond Hubber
கலைவேந்தன் சார்!
நிஜமாகவே இன்ப அதிர்ச்சி. கிருஷ்ணா சார் சொன்னது போல் மிக்க சந்தோஷமாய் இருக்கிறது. நிஜமாகவே மதுர கானங்களில் தங்களை எதிர்பார்க்கவே இல்லை.
உங்களை மதுர கானங்கள் திரிக்கு அன்போடு வருக வருக என வரவேற்கிறேன்.
தங்கள் எழுத்து வளம் எல்லோரும் அறிந்தது. அதனால் மதுர கானங்கள் திரியில் தங்கள் பொன்னான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சுசீலா அம்மா அவர்கள் பாடிய 'வாங்க வாங்க கோபாலய்யா... வழக்கு என்ன கேளுங்கய்யா... தங்களைப் போல எனக்கும் பிடித்த பாடல். நிச்சயமாக இது ஒரு சம்பிரதாய வரவேற்பல்ல. மனமகிழ்ச்சி கொண்ட வரவேற்பு.
அருமையான தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும்
அன்பன்
வாசுதேவன்.
-
19th November 2014, 08:53 AM
#1366
Senior Member
Diamond Hubber
-
19th November 2014, 09:03 AM
#1367
Senior Member
Diamond Hubber
கலைவேந்தன் சார்,
நீங்கள் இங்கு வந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள் திரியின் சமீபத்திய 'டாக்'கான 'அவள் அப்படித்தான்' இயக்குனர் ருத்ரய்யா காலமானார் என்ற செய்தி நெஞ்சி இடியாய் இறங்கியது.
அபூர்வ குறிஞ்சி மலரான அந்த இயக்குனர் இயக்கியது இரண்டு படங்கள்தான். ஆனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் திரைப்பட கலா ரசிகர்கள் நெஞ்சில் 'அவள் அப்படித்தான்' இயக்கம் மூலம் அந்த உன்னத மகா கலைஞன் என்றென்றும் வாழ்வான் என்பது மட்டும் உறுதி.
அந்த மகா கலைஞனின் மறைவுக்கு என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
-
19th November 2014, 09:17 AM
#1368

Originally Posted by
vasudevan31355
கலைவேந்தன் சார்,
நீங்கள் இங்கு வந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்குள் திரியின் சமீபத்திய 'டாக்'கான 'அவள் அப்படித்தான்' இயக்குனர் ருத்ரய்யா காலமானார் என்ற செய்தி நெஞ்சி இடியாய் இறங்கியது.
அபூர்வ குறிஞ்சி மலரான அந்த இயக்குனர் இயக்கியது இரண்டு படங்கள்தான். ஆனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் திரைப்பட கலா ரசிகர்கள் நெஞ்சில் 'அவள் அப்படித்தான்' இயக்கம் மூலம் அந்த உன்னத மகா கலைஞன் என்றென்றும் வாழ்வான் என்பது மட்டும் உறுதி.
அந்த மகா கலைஞனின் மறைவுக்கு என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
அன்பு கலை சார்/வாசு சார்
கடந்த இரண்டு மூன்று தினங்களாக 'அவள் அப்படிதான்' திரை படம் பற்றி ஏதாவது ஒரு பதிவு நமது திரியில் இடம் பெற்று வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அதன் இயக்குனர் திரு. ருத்ரையா நேற்று இரவு காலமானார் என்ற செய்தி மிகவும் வருததற்குரியது. Rip
இன்று காலை பேப்பர் இல் இந்த செய்தி படித்து விட்டு திரு வாசு அவர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள அழைத்த போது திரு கலை அவர்களால் நேற்று இரவே நமது திரியில் பதிவிட பட்டு உள்ளது என்று கேட்டு ஒரு புறம் ருத்ரையா மரணம் துயர கடலில் ஆழ்த்தினாலும் அதை நம்மோடு பகிர்ந்து கொண்ட திரு கலை அவர்களின் கண்ணியத்தை நினைத்து மகிழ்ச்சியும் அடைகிறோம்.
திரு. ருத்ரையா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறை ஆற்றலை வேண்டுகிறேன்
கிருஷ்ணா
-
19th November 2014, 09:21 AM
#1369
இன்றைய தினமணி நாள் இதழ்
திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான்' படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980-ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த "கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ருத்ரையாவுக்கு ஒரு மகள் உள்ளார். ருத்ரையாவின் இறுதிச்சடங்குகள் புதன்கிழமை (நவ.19) சென்னையில் நடைபெறுகிறது.
-
19th November 2014, 09:26 AM
#1370
நேற்றைய இரவு செய்தி (ஸ்க்ரீன் வலைபூவில் இ

தமிழ்த் திரையுலகம் மறந்து போன மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ருத்ரையா சற்று முன்னர் சென்னை, தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணடைந்தார்.
நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு ருத்ரையா என்ற இயக்குனரை என்றுமே மறக்க முடியாது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்த அவள் அப்படித்தான் (1978), சந்திரஹாசன், நந்தகுமார், கிருஷ்ணகுமாரி நடித்த கிராமத்து அத்தியாயம் (1980) ஆகிய படங்களை இயக்கியவர்.
அதன் பின் ஏனோ அவர் மேற்கொண்டு தமிழ்ப் படங்களை இயக்கவில்லை. தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கியதா அல்லது அவராகவே ஒதுங்கினாரா என்பது தெரியவில்லை. ருத்ரையாவின் இரண்டாவது படமான கிராமத்து அத்தியாயம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்ததால் அவரால் தொடர்ந்து படங்களை இயக்க முடியாமல் போனது என்றும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் கூட இயக்குனர் பார்த்திபன் அவருடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீட்டுக்கு அவரை அழைத்ததாகவும், ஆனால் அவர் விரும்பவில்லை என்றும் கூறியதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
பத்து வருடங்கள் முன் வரை கூட ருத்ரையா மீண்டும் படங்களை இயக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. 1978-லேயே முற்போக்கான அவள் அப்படித்தான் படத்தை இயக்கியவர் அவர். பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த ருத்ரையா அப்போது வளர்ந்து வந்த முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை இயக்கினார்.
1978 தீபாவளி அன்று அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் இன்றும் நினைவில் நிற்கக் கூடிய ஒரு படைப்பாக அவள் அப்படித்தான் படம் இருந்து வருகிறது. படம் வெளிவந்த போது படத்திற்கு வரவேற்பே இல்லாமல் இருந்தது.
அந்த சமயத்தில் இந்தியத் திரையுலகின் திரைப்பட மேதையான மிருணாள் சென் சென்னைக்கு வந்திருந்தார். யதேச்சையாக அவள் அப்படித்தான் படத்தைப் பார்த்தவர் ஒரு அருமையான திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். அதன் பின்தான் பத்திரிகைகள் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா ஆகியோரின் பேட்டிகளை வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பிறகுதான் படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியது.
சிஎன்என் ஐபிஎன் டெலிவிஷன் இந்தியாவின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக அவள் அப்படித்தான் படத்தைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியுள்ளது.
தமிழில் எத்தனை ஆயிரம் படங்கள் வெளிவந்தாலும் அவள் அப்படித்தான் படமும், அப்படத்தை இயக்கிய ருத்ரய்யாவும் என்றுமே போற்றுதலுக்குரியவர்கள்தான்.
ஒரு சினிமா ரசிகனாக அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks